இதுவரை எம்முடன் பேசவில்லை - அதிபர் ஆசிரியர் சங்கங்கள்
irumbuthirai
August 11, 2021
கொரோனா பரவலைக் கருத்திற் கொண்டு அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் நாடு பூராகவும் ஏற்பாடு செய்திருந்த ஆர்ப்பாட்டங்கள் மற்றும் பேரணிகள் தற்போது முழுவதுமாக நிறுத்தப்பட்டுள்ளன.
எவ்வாறாயினும் இணைய வழி (Online) கல்வி பணிப்பகிஸ்கரிப்பு ஆரம்பிக்கப்பட்டு இன்றுடன் 30 நாட்கள் நிறைவடைகின்றன.
அரசாங்கத்துடன் முன்னெடுத்த பலதரப்பட்ட கலந்துரையாடல்கள் பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்த நிலையில் கடந்த
அமைச்சரவைக் கூட்டத்தின்போது இதற்காக
04 அமைச்சர்களைக் கொண்ட அமைச்சரவை இணைக் குழு ஒன்று நியமிக்கப்பட்டது.
இதனிடையே கடந்த திங்கட்கிழமை நியமிக்கப்பட்ட இந்த இணைக் குழு இதுவரை தம்முடன் எந்த பேச்சுவார்த்தையிலும் ஈடுபடவில்லை என அதிபர் - ஆசிரியர் சங்கங்கள் குற்றம் சுமத்தியுள்ளன.
இதேவேளை குறித்த குழுவின் அறிக்கை எதிர்வரும் திங்கட்கிழமை இடம்பெறும் அடுத்த அமைச்சரவை கூட்டத்தின்போது சமர்ப்பிக்கப்படும் என ஏற்கனவே அரசாங்கம் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதுவரை எம்முடன் பேசவில்லை - அதிபர் ஆசிரியர் சங்கங்கள்
Reviewed by irumbuthirai
on
August 11, 2021
Rating: