மூன்றாவது தடுப்பூசியை ஆரம்பித்த முதலாவது நாடு
irumbuthirai
August 13, 2021
கொரோனாவுக்காக 3வது தடுப்பூசியை வழங்குவது தொடர்பில் உலகில் சில நாடுகள் ஆலோசித்து வரும் நிலையில் இஸ்ரேல் அதனை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்துள்ளது.
இன்று(13) முதல் இஸ்ரேலில் 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மூன்றாவது தடுப்பூசி வழங்கும்
திட்டம் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
கொரோனாவை சிறப்பாக கட்டுப்படுத்திய நாடுகளில் ஒன்றாக இஸ்ரேல் காணப்பட்டது. ஆனால் அங்கு டெல்டா தீவிரமாக பரவும் நிலையில் இந்தத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை இந்த மூன்றாவது தடுப்பூசி வழங்கும் திட்டமானது சிறந்த பயனை தரும் என இஸ்ரேலிய பிரதமர் நவ்ராலி பென்னற் தெரிவித்துள்ளார்.
மூன்றாவது தடுப்பூசியை ஆரம்பித்த முதலாவது நாடு
Reviewed by irumbuthirai
on
August 13, 2021
Rating: