வீடுகளிலுள்ள கொரோனா தொற்றாளர்களுக்கான வழிகாட்டல்கள்:
irumbuthirai
August 15, 2021
தீவிர அறிகுறிகள் இல்லாத கொரோனா தொற்றாளர்களை வீடுகளில் வைத்து பராமரிக்கும் திட்டம் தற்போது நாடு பூராவும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில் வீடுகளில் வைத்து பராமரிக்கப்படும் கொரோனா தொற்றாளர்கள் தொடர்பிலான சுகாதார வழிகாட்டல்கள் அடங்கிய ஆலோசனைகள் சிலவற்றை விசேட வைத்தியர் ரஞ்சித் பட்டுவன்துடாவ வழங்கியுள்ளார்.
- சிறந்த காற்றோட்டம் இருக்கும் வகையில் ஜன்னல்களை திறந்து வைக்க வேண்டும். அப்பொழுது வீட்டிலுள்ள ஏனையவர்களுக்கும் தொற்றுவது குறைக்கப்படும். உரியவருக்கும் விரைவில் குணம் கிடைக்கும்.
- உடல் சோர்வடையும் வகையிலான செயற்பாடுகளை தவிர்க்க வேண்டும். ஏனெனில் அவ்வாறான செயற்பாடுகளால் உடலில் ஒட்சிசன் அளவு குறையும்.
- வழமையான உணவுகளுக்கு மேலதிகமாக பழங்களையும் எடுத்துக் கொள்ள வேண்டும்.
- அதிகமாக நீர் அருந்த வேண்டும்.
- சாதாரண காய்ச்சல் உள்ளிட்ட நோய் நிலைமைகளுக்கு மேலதிகமாக தீவிர நோய் நிலைமைகள் அவதானிக்கப்பட்டால் உடனடியாக வைத்தியரின் ஆலோசனையை பெற வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
வீடுகளிலுள்ள கொரோனா தொற்றாளர்களுக்கான வழிகாட்டல்கள்:
Reviewed by irumbuthirai
on
August 15, 2021
Rating: