தீவிரமடையும் கொரோனா: இந்தியாவிலிருந்து ஒவ்வொரு வாரமும் ஒட்சிசன் இறக்குமதி!
irumbuthirai
August 14, 2021
இந்தியாவிலிருந்து ஒவ்வொரு கிழமையும் 100 மெட்ரிக் தொன் ஒட்சிசன் இறக்குமதி செய்யப்படவுள்ளதாக, சுகாதார அமைச்சின் செயலாளர் தெரிவித்தார்.
சுகாதார அமைச்சில் இன்றையதினம் (14) இடம்பெற்ற சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதற்கான கொள்வனவு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், இவ்வாறு இறக்குமதி செய்யப்படும் ஒட்சிசனின்
அளவை தேவைக்கேற்ப அதிகரிக்கவும் திட்டமிட்டுள்ளதாகவும் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை நாட்டில் நாளாந்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 3000 ஐ அதிகரித்து செல்கின்றமை குறிப்படத்தக்கது
தீவிரமடையும் கொரோனா: இந்தியாவிலிருந்து ஒவ்வொரு வாரமும் ஒட்சிசன் இறக்குமதி!
Reviewed by irumbuthirai
on
August 14, 2021
Rating: