மாணவர்களுக்கான Vision FM வானொலி சேவை: இன்று முதல் ஆரம்பம்!
irumbuthirai
August 16, 2021
மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்காக விஷன் எப்எம் (Vision FM) என்ற பெயரிலான புதிய வானொலி சேவையை இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தினால் இன்று (16) திங்கட்கிழமை முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
நாளாந்தம் அதிகாலை 4 மணி முதல் இரவு 12 மணி வரை 20 மணித்தியால சேவையை இது வழங்கும்.
மேலும் பாடத்திட்டம் சார்ந்த கற்பித்தல் 65% மும் பாடத்திட்டம் சாராத கற்பித்தல் 35% மும் இடம்பெறும்.
குறித்த வானொலி சேவையை இலங்கை பூராவும் 102.1 FM மற்றும் 102.3 FM அலைவரிசைகளில் கேட்கலாம்.
இது மாத்திரமன்றி Peo TV அலைவரிசை ஊடாக 6 கல்விச் சேவைகள் எதிர்வரும் தினங்களில் ஆரம்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மாணவர்களுக்கான Vision FM வானொலி சேவை: இன்று முதல் ஆரம்பம்!
Reviewed by irumbuthirai
on
August 16, 2021
Rating: