கர்ப்பிணிகளுக்கான தடுப்பூசி வாரம் அறிவிப்பு!
irumbuthirai
August 17, 2021
கர்ப்பிணி தாய்மார்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கும் வகையில் அவர்களுக்கான தடுப்பூசி வாரம் அரசினால் அறிவிக்கப்பட்டுள்ளது.
இம்மாதம் 23 - 31 வரை கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி செலுத்தும் வாரமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கர்ப்பிணிகள் தாம் வசிக்கும் இடத்திற்கு அருகிலுள்ள தடுப்பூசி செலுத்தும் மையத்திற்கு அல்லது சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்திற்கு சென்று தடுப்பூசியை பெறலாம்.
எவ்வாறாயினும் 23ஆம் திகதி வரை காத்திருக்காமல் தமக்கு அருகிலுள்ள தடுப்பூசி செலுத்தும் மையத்திற்கு சென்று தடுப்பூசியை பெற்றுக் கொள்ளுமாறும் ஆனால்
நெரிசல் நிலைக்கு மத்தியில் சென்று தடுப்பூசியை பெற முயற்சிக்க வேண்டாம் எனவும் குடும்பநல சுகாதார பிரிவின் விசேட வைத்தியர் சித்திரமாலி டீ சில்வா தெரிவித்துள்ளார்.
கர்ப்பிணிகளுக்கான தடுப்பூசி வாரம் அறிவிப்பு!
Reviewed by irumbuthirai
on
August 17, 2021
Rating: