G.C.E.(A/L) Examinations - 2020 (New Syllabus) - Marking Schemes / உயர்தர பரீட்சையின் (புதிய பாடத்திட்டம்) பாடங்களுக்கான புள்ளிவழங்கும் திட்டம் - 2020

August 17, 2021

2020 இல் புதிய பாடத்திட்டத்திற்கமைவாக நடைபெற்ற க.பொ.த. (உ.தர) பரீட்சையின் வினாத்தாள்கள் விடைகள் மற்றும் புள்ளிவழங்கும் திட்டம் என்பவற்றை இங்கு தருகிறோம்.

Islam    sinhala    Tamil                                   

Agricultural Science  Sinhala   Tamil

Japanese   Sinhala

German   English

Geography   English   Sinhala   Tamil

Business statistics   Sinhala

English   English

Buddhism    Sinhala

Civil Technology   sinhala   Tamil

Physics    English   Sinhala   Tamil

Combined Mathematics-I    English   Sinhala   Tamil

Dancing (Indigenous - Kandyan)    Sinhala

Hindi    Sinhala

Hinduism   Tamil

Accounting   English   Sinhala   Tamil

Electrical , Eletronic and Information Technology   Sinhala   Tamil

Mechanical Technology   Sinhala   Tamil

Arabic   Tamil

Engineering Technology   Sinhala   Tamil

Agro Technology   Sinhala Tamil

Biology   English   Sinhala   Tamil

Home Economics   Sinhala   Tamil

History   Sinhala

Information & Communication Technology   English   Sinhala   Tamil

Russian   English

Chinese   Sinhala

History of Europe   Sinhala   Tamil

Sanskrit   Sinhala

Bio Systems Technology   Sinhala   Tamil

Communication & Media Studies   Sinhala

Chemistry   English   Sinhala   Tamil

Mathematics-ii   English   Sinhala   Tamil

French   English

Economics   English   Sinhala   Tamil

Art   English   Sinhala   Tamil

Science for Technology   English   Sinhala   Tamil

Food Technology   Sinhala   Tamil

History of India   Sinhala   Tamil


குறிப்பு:- இது விடைத்தாள் திருத்தும் பரீட்சகர்களுக்கு உதவியாக தயாரிக்கப்பட்டதாகும். பிரதம பரீட்சகர்களின் கூட்டத்தில் சில வேளகளில் சில விடயங்கள் மாற்றங்களிற்கு உட்பட்டிருக்கலாம்.







G.C.E.(A/L) Examinations - 2020 (New Syllabus) - Marking Schemes / உயர்தர பரீட்சையின் (புதிய பாடத்திட்டம்) பாடங்களுக்கான புள்ளிவழங்கும் திட்டம் - 2020 G.C.E.(A/L) Examinations - 2020 (New Syllabus) - Marking Schemes / உயர்தர பரீட்சையின் (புதிய பாடத்திட்டம்) பாடங்களுக்கான புள்ளிவழங்கும் திட்டம் - 2020 Reviewed by irumbuthirai on August 17, 2021 Rating: 5

பாலூட்டும் தாய்மார்கள் தடுப்பூசி பெறலாமா ?

August 17, 2021

பாலூட்டும் தாய்மார்கள் தடுப்பூசியை பெற்றுக் கொள்வதில் எந்த பிரச்சினையும் இல்லை. அவர்களும் தடுப்பூசியை பெறலாம். இதனால் தாய்க்கும் பிள்ளைக்கும் எந்தவொரு பாதிப்பும் ஏற்படாது என குடும்ப நல சுகாதார பிரிவின் விசேட வைத்தியர் சித்திரமாலி டீ சில்வா தெரிவித்துள்ளார். 

மேலும் தடுப்பூசியை பெற்றுக் கொண்டவர்கள் தாம் தடுப்பூசி பெற்றுக் கொண்ட உடனேயும் குழந்தைக்கு பாலூட்ட முடியும். அதிலும் எந்த பிரச்சினையும் இல்லை. இது மாத்திரமன்றி 
தாய் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டாலும் சுகாதார பாதுகாப்பு விதிமுறைகளுக்கு அமைய குழந்தைகளுக்கு பாலூட்ட முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.
பாலூட்டும் தாய்மார்கள் தடுப்பூசி பெறலாமா ? பாலூட்டும் தாய்மார்கள் தடுப்பூசி பெறலாமா ? Reviewed by irumbuthirai on August 17, 2021 Rating: 5

கர்ப்பிணிகளுக்கான தடுப்பூசி வாரம் அறிவிப்பு!

August 17, 2021

கர்ப்பிணி தாய்மார்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கும் வகையில் அவர்களுக்கான தடுப்பூசி வாரம் அரசினால் அறிவிக்கப்பட்டுள்ளது. 

இம்மாதம் 23 - 31 வரை கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி செலுத்தும் வாரமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

கர்ப்பிணிகள் தாம் வசிக்கும் இடத்திற்கு அருகிலுள்ள தடுப்பூசி செலுத்தும் மையத்திற்கு அல்லது சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்திற்கு சென்று தடுப்பூசியை பெறலாம். 

எவ்வாறாயினும் 23ஆம் திகதி வரை காத்திருக்காமல் தமக்கு அருகிலுள்ள தடுப்பூசி செலுத்தும் மையத்திற்கு சென்று தடுப்பூசியை பெற்றுக் கொள்ளுமாறும் ஆனால் 
நெரிசல் நிலைக்கு மத்தியில் சென்று தடுப்பூசியை பெற முயற்சிக்க வேண்டாம் எனவும் குடும்பநல சுகாதார பிரிவின் விசேட வைத்தியர் சித்திரமாலி டீ சில்வா தெரிவித்துள்ளார்.
கர்ப்பிணிகளுக்கான தடுப்பூசி வாரம் அறிவிப்பு! கர்ப்பிணிகளுக்கான தடுப்பூசி வாரம் அறிவிப்பு! Reviewed by irumbuthirai on August 17, 2021 Rating: 5

Bachelor of Software Engineering (Open University of Sri Lanka)

August 17, 2021

The Bachelor of Software Engineering Honours (BSEHons) programme aims to produce quality, skillful graduates in this rapidly developing discipline, which covers one of the major fields of computing according to the ACM/IEEE curriculum guidelines. 

For those who aspire to become software architects, software engineers, system analysts, and QA engineers this programme would be of immense value. 

Selection Test dates are 11th September 2021 (2.00 pm – 3.30 pm online) 

Course Duraton: 04 years. 

Click the link below for Full details & Online Application
Bachelor of Software Engineering (Open University of Sri Lanka) Bachelor of Software Engineering (Open University of Sri Lanka) Reviewed by irumbuthirai on August 17, 2021 Rating: 5

இப்படி நடக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. ஆனால் பதிலடி கடுமையாக இருக்கும் - ஜோ பைடன்

August 17, 2021

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலை தாலிபான்கள் கைப்பற்றியது தொடர்பாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கருத்து வெளியிட்டுள்ளார். 

இப்படி நடக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. இவ்வளவு வேகமாக தலிபான்கள் தலைநகரை கைப்பற்றுவார்கள் என்று நினைக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார். 

எவ்வாறாயினும் ஆப்கானில் இருந்து படைகளை விலக்கிக் கொள்ளும் விவகாரத்தில் தாம் உறுதியாக இருப்பதாக தெரிவித்துள்ளார். ஒரு போர் ஐந்து ஜனாதிபதிகள் 
வரை தொடரக்கூடாது என அவர் தெரிவித்துள்ளார். 

ஜனநாயகத்தை மேம்படுத்துவது, தேசத்தைக் கட்டமைப்பது என்பதெல்லாம் தங்களது போரின் நோக்கமல்ல என்று கூறிய அவர், அமெரிக்க மண்ணில் பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்படுவதைத் தடுப்பது மட்டும்தான் தங்களது நோக்கம் என்று அவர் மேலும் தெரிவித்தார். 

இதேவேளை தற்போது ஆப்கானில் எஞ்சியுள்ள அமெரிக்க படைகள் மீது தலிபான்கள் தாக்குதல் நடத்தினால் பதிலடி கடுமையாக இருக்கும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இப்படி நடக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. ஆனால் பதிலடி கடுமையாக இருக்கும் - ஜோ பைடன் இப்படி நடக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. ஆனால் பதிலடி கடுமையாக இருக்கும் - ஜோ பைடன் Reviewed by irumbuthirai on August 17, 2021 Rating: 5

பதவி விலகினார் மலேசிய பிரதமர்! நடந்தது என்ன?

August 16, 2021

மலேசிய பிரதமர் முஹிதீன் யாசின் தலைமையிலான அரசாங்கத்திலிருந்து பிரதான கட்சி ஒன்று விலகியதன் காரணமாக அரசாங்கம் பெரும்பான்மையை இழந்தது. 

இதனால் பிரதமர் உட்பட அரசாங்கம் பதவி விலகுவதாக அறிவித்துள்ளது. பிரதமர் தனது பதவி விலகளை மலேசிய மன்னருக்கு அறிவித்துள்ளார். 
முஹிதீன் யாசின் வெறும் 17 மாதங்கள் மாத்திரமே பதவியில் இருந்தார். 

கொரோனா பெருந்தொற்று தீவிரத்தை தடுக்கத் தவறியது, சர்ச்சைக்குரிய ஊழல் புகார்கள், கூட்டணி கட்சியின் அழுத்தம் என பல முனைகளிலும் அவரது அரசு நெருக்கடியை சந்தித்தது. 17 மாதங்களுமே அவருக்கு நெருக்கடியாகவே இருந்தது. 

மலேசியாவில் கொரோனா தாக்கம் காரணமாக இதுவரை 12,510 பேர் இறந்துள்ளதாகவும் அங்கு நிலைமையை சமாளிக்க முடியாத நிலைக்கு 
அரசு இயந்திரங்கள் தள்ளப்பட்டதற்குக் காரணம் மொஹிதின் யாசினின் தவறான ஆளுகை என்றும் பரவலாக குற்றம்சாட்டப்பட்டது. 

இதனிடையே பிரதமரின் பதவி விலகலை ஏற்றுக்கொண்ட மாமன்னர் அடுத்த அரசாங்கம் அமையும் வரை காபந்து அரசாக செயல்படுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.
பதவி விலகினார் மலேசிய பிரதமர்! நடந்தது என்ன? பதவி விலகினார் மலேசிய பிரதமர்! நடந்தது என்ன? Reviewed by irumbuthirai on August 16, 2021 Rating: 5

போர் முடிந்துவிட்டது! தலிபான்கள் அறிவிப்பு! (முழுமையான அப்டேட்)

August 16, 2021

போர் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டதாகவும் ஆப்கானில் தாம் வெற்றி பெற்றுவிட்டதாகவும் தலிபான்கள் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளனர். 

அமெரிக்க தலைமையிலான கூட்டுப்படைகள் விமானநிலையத்தை மாத்திரம் தமது கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். 

இதனிடையே நாட்டை விட்டு வெளியேறுபவர்கள் விமான நிலையத்தில் கூடியதால் அங்கு சன நெரிசல் அதிகமாகி நெருக்கடியான சூழல் ஏற்பட்டது. எந்த நாட்டிற்காவது சென்று விட வேண்டும் 
என்ற எண்ணத்துடன் பலர் நிறுத்திவைக்கப்பட்டிருந்த விமானத்தில் பேருந்தில் ஏறுவது போல் முண்டியடித்துக்கொண்டு ஏறினர். 

சிறிது நேரத்தில் அமெரிக்க தலைமையிலான கூட்டுப்படைகள் விமான நிலையத்திலுள்ள நெருக்கடியான நிலையை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். இதனிடையே நடைபெற்ற துப்பாக்கி பிரயோகங்களின் போது இதுவரையில் சுமார் 5 பொதுமக்கள் இறந்ததாகவும் ஆனால் அவர்கள் யாருடைய துப்பாக்கிப் பிரயோகத்தில் இறந்தார்கள் என்பது சரியாக தெரியவரவில்லை எனவும் அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. 

ஆப்கான் முழுவதும் தலிபான்களின் கட்டுப்பாட்டில் வந்ததன் பிறகு இன்று முதலாவது நாள் காலை பொழுதில் வீதிகள் வெறிச்சோடி காணப்பட்டது. ஆங்காங்கே தலிபான்கள் பாரம்பரிய உடையுடன் கையில் ஆயுதங்களோடு நின்று கொண்டிருந்தனர். 
காபூல் நகரத்தில் சில கல்வி நிலையங்கள் திறக்கப்பட்டிருந்தன. அவற்றுக்கு மாணவர்கள் செல்வதையும் பார்க்க முடிந்தது. மாணவிகளும் செல்லும் புகைப்படம் சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது. பெண்கள் கல்வி கற்க தடை விதிக்க மாட்டோம் என நேற்றைய தினம் தலிபான் செய்தி தொடர்பாளர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 

இதேவேளை காபூல் நகரில் சாதாரண பொதுமக்கள் தங்களுடைய பாதுகாப்புக்காக வைத்திருந்த ஆயுதங்களை பெற்றுக் கொள்ளும் நடவடிக்கைகளில் தற்போது தலிபான்கள் ஈடுபட்டுள்ளனர். தங்களுடைய சொந்த பாதுகாப்புக்கு 
இனி அந்த ஆயுதங்கள் தேவையில்லை. அவர்கள் இனி பாதுகாப்புடன் இருப்பர். நாங்கள் சாதாரண மக்களுக்கு தீங்கு விளைவிக்க இங்கு வரவில்லை என தலிபான்கள் தெரிவித்ததாக பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது. 

ஆப்கானுடன் நட்பையும் கூட்டுறவையும் ஆழப்படுத்த சீனா தயாராக இருப்பதாக சீன அரசு செய்தித் தொடர்பாளர் ஒருவர் ஏ.எஃப்.பி. செய்தி முகமையிடம் கூறியுள்ளார். 

தற்போதைய ஆப்கானை பாகிஸ்தான் அங்கீகரித்துள்ள நிலையில் தலிபான்களின் நடவடிக்கையை பொருத்தே தமது முடிவு அமையும் என ரஷ்யா அறிவித்துள்ளது. 

உலக உணவுத் திட்டத்தின் கூற்றுப்படி தாலிபன்கள் கைப்பற்றிய எல்லை சந்திப்புகளில் 500 டன் உணவுப் பொருள்கள் காத்திருக்கின்றன. இந்த உதவிப் பொருகளின் விநியோகம் உடனடியாக மீண்டும் தொடங்கவேண்டும்" என்கிறார் ஐ.நா.வுக்கான அமெரிக்கத் தூதர் லிண்டா தாமஸ். 

ஆப்கானிஸ்தானில் 30 ஆண்டுகள் பணியாற்றியுள்ளோம். தொடர்ந்தும் அங்கு பணியாற்ற தயாராக இருக்கிறோம் என சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் ஆப்கன் தூதுக்குழுவின் தலைவர் எலோய் ஃபில்லியன் தெரிவித்துள்ளார்.
போர் முடிந்துவிட்டது! தலிபான்கள் அறிவிப்பு! (முழுமையான அப்டேட்) போர் முடிந்துவிட்டது! தலிபான்கள் அறிவிப்பு! (முழுமையான அப்டேட்) Reviewed by irumbuthirai on August 16, 2021 Rating: 5

மாணவர்களுக்கான Vision FM வானொலி சேவை: இன்று முதல் ஆரம்பம்!

August 16, 2021

மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்காக விஷன் எப்எம் (Vision FM) என்ற பெயரிலான புதிய வானொலி சேவையை இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தினால் இன்று (16) திங்கட்கிழமை முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 

நாளாந்தம் அதிகாலை 4 மணி முதல் இரவு 12 மணி வரை 20 மணித்தியால சேவையை இது வழங்கும். 
மேலும் பாடத்திட்டம் சார்ந்த கற்பித்தல் 65% மும் பாடத்திட்டம் சாராத கற்பித்தல் 35% மும் இடம்பெறும். 

குறித்த வானொலி சேவையை இலங்கை பூராவும் 102.1 FM மற்றும் 102.3 FM அலைவரிசைகளில் கேட்கலாம்.

இது மாத்திரமன்றி Peo TV அலைவரிசை ஊடாக 6 கல்விச் சேவைகள் எதிர்வரும் தினங்களில் ஆரம்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மாணவர்களுக்கான Vision FM வானொலி சேவை: இன்று முதல் ஆரம்பம்! மாணவர்களுக்கான Vision FM வானொலி சேவை: இன்று முதல் ஆரம்பம்! Reviewed by irumbuthirai on August 16, 2021 Rating: 5

இரவில் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்படுவதற்கான காரணம்

August 16, 2021

இரவு நேரங்களில் களியாட்ட நிகழ்வுகளை நடத்துவதன் காரணமாக இரவு நேரங்களில் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக நிதி, மூலதனச் சந்தை மற்றும் அரச தொழில் முயற்சி மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார். 

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

இதேவேளை இன்று (16) முதல் மறு அறிவித்தல் வரை தினமும் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை ஊரடங்கு அமுல்படுத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
இரவில் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்படுவதற்கான காரணம் இரவில் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்படுவதற்கான காரணம் Reviewed by irumbuthirai on August 16, 2021 Rating: 5

அமைச்சரவையில் இடம்பெற்ற மற்றங்கள் இதோ..

August 16, 2021

அமைச்சரவையில் இன்று செய்யப்பட்ட மாற்றங்கள் இதோ... 
பேராசிரியர் ஜி எல் பீரிஸ் - வெளிநாட்டு அமைச்சு 

டலஸ் அழகப்பெரும - ஊடகம் 

தினேஷ் குணவர்தன - கல்வி 

கெஹெலிய ரம்புக்வெல்ல - சுகாதாரம் 

பவித்ரா வன்னியாராச்சி - போக்குவரத்து 

காமினி லொக்குகே - மின்சாரம் மற்றும் சக்தி

மேலும் நாமல் ராஜபக்ச தனக்குள் அமைச்சுப் பதவிகளுக்கு மேலதிகமாக அபிவிருத்தி இணைப்பு பணிகள் கண்காணிப்பு அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளார். 

இதேவேளை இன்று புதிதாக மாற்றப்பட்ட அமைச்சர்கள் ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டனர்.
அமைச்சரவையில் இடம்பெற்ற மற்றங்கள் இதோ.. அமைச்சரவையில் இடம்பெற்ற மற்றங்கள் இதோ.. Reviewed by irumbuthirai on August 16, 2021 Rating: 5

ஜனாதிபதி மாளிகையை கைப்பற்றிய தலிபான்கள்! நாட்டை விட்டு வெளியேறிய ஜனாதிபதி!! (முழுமையான அப்டேட்)

August 15, 2021

ஆப்கிஸ்தானில் தலிபான்கள் தலைநகரம் காபுல் மற்றும் ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி மாளிகை முழுவதும் கைப்பற்றியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 

அமெரிக்கப் படை நாட்டை விட்டு வெளியேறியதும் இந்த தாக்குதல்களை தொடங்கிய தலிபான்கள் வெறும் 10 நாட்களுக்குள் தலைநகருக்குள் நுழைந்து ஜனாதிபதி 
மாளிகையையும் கைப்பற்றியுள்ளனர்.

ஜனாதிபதி மாளிகையை கைப்பற்றுவதற்கு முன்னர் ஜனாதிபதி அஷ்ரஃப் கனி நாட்டை விட்டு வெளியேறி தஜிகிஸ்தானுக்கு தப்பிச் சென்றுள்ளார். 

உப ஜனாதிபதி அம்ருல்லா சாலே மற்றும் மூத்த தலைவர்களும் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர். 

மேலும் காபூலில் இயங்கி வந்த அமெரிக்க தூதரகமும் தற்காலிகமாக விமான நிலையத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. விமான நிலைய பாதுகாப்பை தற்போது நேட்டோ படை மற்றும் எஞ்சிய அமெரிக்க துருப்புகள் கவனித்து வருகின்றனர். 
நாட்டை விட்டு வெளியேறும் தமது திட்டத்தில் எந்த மாற்றமும் இல்லை என அமெரிக்க உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். மேலும் அமெரிக்கர்களை பாதுகாப்பாக வெளியேற்றும் பணியில் தலிபான்கள் தலையிட்டால் மாத்திரமே நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார். 

ஏற்கனவே பல மாகாணங்களின் ஆளுநர்களும் தமது அதிகாரங்களை தலிபான்களிடம் ஒப்படைத்துவிட்டனர். 

இதனிடையே காபூலில் உள்ள சிறைச்சாலைக்கு அதிரடியாக நுழைந்த தலிபான்கள் தமது சக போராளிகளை விடுதலை செய்துள்ளனர். 

தலைநகரில் உள்ள ராணுவ சோதனைச் சாவடிகளில் இராணுவத்தினர் பின் வாங்கிச் சென்றதாகவும் தலைநகருக்குள் கொள்ளை மற்றும் சூரையாடல்கள் நடைபெறக் கூடாது என்பதற்காக தமது போராளிகளை தலைநகருக்குள் அனுப்பியதாகவும் தலிபான் செய்தி தொடர்பாளர் தெரிவித்தார். 

மேலும் பொதுமக்களுக்கு எந்த தீங்கும் விளைவிக்க கூடாது எனவும் அவர்கள் விரும்பியவாறு தமது 
உடமைகளோடு வெளியேறிச் செல்ல அனுமதிக்க வேண்டும் எனவும் தலிபான்களுக்கு உயர்பீடம் கட்டளை பிறப்பித்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. 

பிந்திக் கிடைத்த செய்திகளின்படி காபூல் விமான நிலையத்தில் விமானங்கள் வருகை மற்றும் புறப்படுகை என்பன இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் ராணுவ விமானங்கள் மாத்திரமே தற்பொழுது செயல்பட முடியும் எனவும் நேட்டோ அறிவித்துள்ளது.
ஜனாதிபதி மாளிகையை கைப்பற்றிய தலிபான்கள்! நாட்டை விட்டு வெளியேறிய ஜனாதிபதி!! (முழுமையான அப்டேட்) ஜனாதிபதி மாளிகையை கைப்பற்றிய தலிபான்கள்! நாட்டை விட்டு வெளியேறிய ஜனாதிபதி!! (முழுமையான அப்டேட்) Reviewed by irumbuthirai on August 15, 2021 Rating: 5

மீண்டும் நாடுபூராகவும் ஊரடங்கு உத்தரவு

August 15, 2021

நாளை முதல் ஒவ்வொரு நாளும் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை ஊரடங்கு உத்தரவு நாடுபூராகவும் பிறப்பிக்கப்படும் என இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார். 

மறு அறிவித்தல் வரை இந்த ஊரடங்கு உத்தரவு 
தினமும் செயல்படுத்தப்படும் என தெரிவித்துள்ளார். 

எவ்வாறாயினும் அத்தியாவசிய சேவைகளை முன்னெடுப்பதற்கு இடமளிக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
மீண்டும் நாடுபூராகவும் ஊரடங்கு உத்தரவு மீண்டும் நாடுபூராகவும் ஊரடங்கு உத்தரவு Reviewed by irumbuthirai on August 15, 2021 Rating: 5

சிறுவர்களுக்கு தடுப்பூசி வழங்கல் தொடர்பில் பிரதமரின் அறிவிப்பு!

August 15, 2021

12 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு கட்டங்கட்டமாக கொவிட் தடுப்பூசி வழங்கப்படும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

தென் மாகாணத்திற்கான COVID -19 சிறுவர் சிகிச்சை பிரிவு ஹம்பாந்தோட்டை வைத்தியசாலையில் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. இன்று(15) இதன் அங்குரார்ப்பண நிகழ்வில் காணொளி தொழில்நுட்பத்தின் ஊடாக பிரதமர் கலந்து கொண்டு உரையாற்றும்போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். 

சிறுவர்களுக்கு தடுப்பூசி வழங்கப்படும்போது பல்வேறுப்பட்ட நோய்களுக்குள்ளாகியுள்ள சிறுவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என பிரதமர் மேலும் தெரிவித்தார்.
சிறுவர்களுக்கு தடுப்பூசி வழங்கல் தொடர்பில் பிரதமரின் அறிவிப்பு! சிறுவர்களுக்கு தடுப்பூசி வழங்கல் தொடர்பில் பிரதமரின் அறிவிப்பு! Reviewed by irumbuthirai on August 15, 2021 Rating: 5
Powered by Blogger.