உலகில் முதன் முறையாக மூன்று பிறழ்வுகளுடனான தொற்றாளர் இலங்கையில்...
irumbuthirai
August 20, 2021
இந்த நிலையில் டெல்டா திரிபின் மூன்று பிறழ்வுகளைக் கொண்ட தொற்றாளர் இலங்கையில்
கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் உலகில் இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டது இதுவே முதன் முறை எனவும் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை எதிர்ப்பு சக்தி ஆய்வு மற்றும் மரபணு விஞ்ஞான பிரிவு வைத்தியர் சந்திம ஜீவந்திர தெரிவித்துள்ளார்.
இதில் ஒரு பிறழ்வு இலங்கையில் முதன் முறையாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் ஏனைய இரண்டும் ஏற்கனவே வெளிநாடுகளில் காணப்பட்டவையாகும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
கொழும்பைச் சேர்ந்த பெண் ஒருவருக்கே இவ்வாறு மூன்று பிறழ்வுகளுடனான தொற்று ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
உலகில் முதன் முறையாக மூன்று பிறழ்வுகளுடனான தொற்றாளர் இலங்கையில்...
Reviewed by irumbuthirai
on
August 20, 2021
Rating: