பகிடிவதை தொடர்பில் கல்வி அமைச்சின் புதிய தீர்மானம்:
irumbuthirai
August 25, 2021
பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் இடம்பெறுகின்ற பகிடிவதை (Ragging) மற்றும் வன்முறைச் சம்பவங்கள் குறித்து பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யக்கூடிய வகையில் சட்ட திருத்தங்களை மேற்கொள்வதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
பல்கலைக்கழக அதிகாரிகளால், பொலிஸாரிடம் முறைப்பாடு செய்து சட்டத்தை அமல்படுத்த முடியாத நிலை
இதுவரை காலமும் இருந்ததாக கல்வி அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
இதன்படி, கல்வி நிறுவனங்களில் பகிடிவதை மற்றும் பிற வன்முறை சம்பவங்களை தடை செய்வதற்கான சட்ட திருத்தங்கள் மேற்கொள்ளப்பட உள்ளன.
பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் தலைமை நிர்வாக அதிகாரி அல்லது அவரது பிரதிநிதி பாதிக்கப்பட்ட மாணவர்கள் சார்பாக பொலிசாரிடம் முறைப்பாடு செய்ய முடியுமான வகையில் சட்டங்கள் திருத்தப்படும், என்று கல்வி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
Source: அரசாங்க தகவல் திணைக்களம்.
பகிடிவதை தொடர்பில் கல்வி அமைச்சின் புதிய தீர்மானம்:
Reviewed by irumbuthirai
on
August 25, 2021
Rating: