மேலும் நீடிக்கப்பட்டது ஊரடங்கு: வெளியான அறிவிப்பு

August 27, 2021

தற்போது நடைமுறையில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு மேலும் நீடிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். 
 
ஜனாதிபதி தலைமையில் இன்று நடைபெற்ற கூட்டத்தின் போதே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக அவர் தெரிவித்தார். 
 
அந்தவகையில் தற்போது நடைமுறையிலுள்ள 
 
ஊரடங்கு செப்டம்பர் 6ஆம் திகதி அதிகாலை 4 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். 
 
ஊரடங்கானது ஏற்கனவே இம்மாதம் 30 ஆம் திகதி அதிகாலை 04 மணிவரை போடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் நீடிக்கப்பட்டது ஊரடங்கு: வெளியான அறிவிப்பு மேலும் நீடிக்கப்பட்டது ஊரடங்கு: வெளியான அறிவிப்பு Reviewed by irumbuthirai on August 27, 2021 Rating: 5

காபூல் இரட்டைத் தாக்குதல்: நடந்தது என்ன?

August 27, 2021

காபூல் விமான நிலையம் அருகில் இன்றைய தினம் இரட்டை தாக்குதல் நடந்துள்ளது. 

முதலாவது தாக்குதல் விமான நிலையத்தின் அப்பி வாயில் பகுதியில் நடந்துள்ளது. மற்றொன்று அந்த வாயில் பகுதியில் இருந்து சில அடி 
தூரத்தில் இருக்கும் பேரன் விடுதி அருகேயும் நடத்தப்பட்டுள்ளது. 

இந்த பகுதிகள்தான் வெளிநாட்டு பயணிகள் அதேபோன்று மேற்கு நாடுகளுக்கு அகதிகளாகச் செல்பவர்களுக்கு காத்திருக்க ஒதுக்கப்பட்ட பகுதிகளாகும். 

இந்தத் தாக்குதல்கள் இன்று மாலை 5:45 மணியளவில் இடம்பெற்றுள்ளது. 

இதில் இதுவரை 13 பேர் மரணித்திருக்கலாம் எனவும் 50க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்திருக்கலாம் எனவும் தலிபான் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. 

இந்தத் தற்கொலைத் தாக்குதல்களுக்கு காரணம் ISIS அமைப்பு என சந்தேகிக்கப்படுகிறது. 

தாக்குதல் இடம்பெற்ற 90 நிமிடங்களுக்குள் சுமார் 60 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக நகரிலுள்ள முக்கிய மருத்துவமனையின் தகவல் தெரிவிக்கிறது. 

தமது நாட்டு வீரர்களும் இதில் கொல்லப்பட்டுள்ளனர் என அமெரிக்காவின் பென்டகன் அறிவித்துள்ளது. 

தமது நாட்டைச் சேர்ந்த எந்த வீரர்களும் கொல்லப்படவில்லை என இங்கிலாந்து அறிவித்துள்ளது. 

ஆப்கானிய வான்பரப்பில் தமது விமானங்கள் 25,000 அடிக்கு கீழே பறக்கக் கூடாது என இங்கிலாந்து உத்தரவு பிறப்பித்துள்ளது. 

அமெரிக்க படைகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் இந்த தாக்குதல் நடந்துள்ளது என தலிபான் குற்றம்சாட்டியுள்ளது.
காபூல் இரட்டைத் தாக்குதல்: நடந்தது என்ன? காபூல் இரட்டைத் தாக்குதல்: நடந்தது என்ன? Reviewed by irumbuthirai on August 27, 2021 Rating: 5

கல்விச் செயற்பாடுகள் தொடர்பான செயலணிக்கு நியமிக்கப்பட்ட உறுப்பினர்கள் (விசேட வர்த்தமானி இணைப்பு)

August 26, 2021

கல்விச் செயற்பாடுகள் தொடர்பான செயலணிக்கு புதிய உறுப்பினர்களை ஜனாதிபதி கோதாபய ராஜபக்ஷ நியமித்துள்ளார். 

இது தொடர்பான அதிவிசேட வர்த்தமானியும் வெளியிடப்பட்டுள்ளது. 

கல்வி அமைச்சின் செயலாளர் கபில பெரேரா மற்றும் பல்கலைக்கழக உபவேந்தர்கள் உட்பட 31 பேர் இந்த செயலணிக்கு நியமிக்கப்பட்டுள்ளனர். 

குறித்த வர்த்தமானியை கீழே காணலாம்.



கல்விச் செயற்பாடுகள் தொடர்பான செயலணிக்கு நியமிக்கப்பட்ட உறுப்பினர்கள் (விசேட வர்த்தமானி இணைப்பு) கல்விச் செயற்பாடுகள் தொடர்பான செயலணிக்கு நியமிக்கப்பட்ட உறுப்பினர்கள் (விசேட வர்த்தமானி இணைப்பு)  Reviewed by irumbuthirai on August 26, 2021 Rating: 5

தடுப்பூசிகளின் செயற்திறன் தொடர்பில் வெளியான ஆய்வு

August 26, 2021

தடுப்பூசிகள் தொடர்பில் பொதுவாகவே உலகளாவிய ரீதியில் பல ஆய்வுகள் நடத்தப்படுகின்றன. அந்த ஆய்வுகள் எல்லாமே ஒரு விடயத்தை உறுதிப்படுத்துகின்றன. அதாவது தடுப்பூசிகள் நூற்றுக்கு நூறு வீதம் செயற்திறன் மிக்கதாக இல்லாவிட்டாலும் நோய் தீவிரத்தன்மை ஏற்படுவது மற்றும் மரணம் ஏற்படுவது அதனால் குறைக்கப்படுவதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 

இந்த நிலையில் இலங்கையில் பயன்படுத்தப்படும் தடுப்பூசிகளில் 4 தடுப்பூசிகள் தொடர்பான ஆய்வின் முடிவுகளை ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பேராசிரியை நீலிகா மளவிகே தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.  அதாவது,
50 வயதிற்கு மேற்பட்டவர்களில் சைனோபாம் தடுப்பூசி பெற்றவர்களை விட 8 மடங்கு அதிகமாக எந்த தடுப்பூசியும் பெறாதவர்கள் மரணிக்கின்றனர். 

50 வயதிற்கு குறைந்தவர்களிலே சைனோபாம் தடுப்பூசி பெற்றவர்களை விட 3.8 மடங்கு அதிகமாக தடுப்பூசி பெறாதவர்கள் மரணிக்கின்றனர். 

மேலும் பைஸர், ஸ்புட்னிக் வீ மற்றும் அஸ்ராசெனகா தடுப்பூசிகளை பெற்ற 50 வயதிற்கு மேற்பட்டவர்களில் இதுவரை மரணம் நிகழவில்லை என பதிவிட்டுள்ளார்
தடுப்பூசிகளின் செயற்திறன் தொடர்பில் வெளியான ஆய்வு தடுப்பூசிகளின் செயற்திறன் தொடர்பில் வெளியான ஆய்வு Reviewed by irumbuthirai on August 26, 2021 Rating: 5

கல்வி அமைச்சருடன் பேச்சுவார்த்தை: தொழிற்சங்கங்கள் கோரிக்கை!

August 26, 2021


அமைச்சரவை உப குழுவின் பரிந்துரைகள் தொடர்பில் கல்வி அமைச்சு அவதானிப்புகள் மற்றும்  ஆலோசனைகளை முன்வைப்பதற்கு முன்னர் அமைச்சர் தங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என அதிபர் ஆசிரியர் தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பான தீர்மானம் நேற்றைய தினம் இடம்பெற்ற தொழிற்சங்கங்களின் கலந்துரையாடலின் போது மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின்,

நாம் சுபோதினி அறிக்கையை நடைமுறைப்படுத்தவே கூறுகிறோம். இதுவரை பல பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுவிட்டன ஆனால் தீர்வு கிடைக்கவில்லை. அமைச்சரவை உப குழு தனது பரிந்துரைகளை அரசாங்கத்திடம் முன்வைத்துள்ளது இது தொடர்பில் கல்வி அமைச்சர் ஒரேயடியாக தனது தீர்மானத்தை அறிவிப்பதற்கு முன் எம்மோடு கலந்துரையாட வேண்டும் என அவர் தெரிவித்தார்.


கல்வி அமைச்சருடன் பேச்சுவார்த்தை: தொழிற்சங்கங்கள் கோரிக்கை! கல்வி அமைச்சருடன் பேச்சுவார்த்தை: தொழிற்சங்கங்கள் கோரிக்கை! Reviewed by irumbuthirai on August 26, 2021 Rating: 5

அதிபர் ஆசிரியர் சம்பள முரண்பாடு: அமைச்சரவை உப குழுவால் முன்வைக்கப்பட்ட யோசனைகள்:

August 26, 2021

அதிபர் ஆசிரியர்களின் சம்பள முரண்பாடு தொடர்பில் நீதியான தீர்வொன்றை பெற்றுக்கொடுக்க நடவடிக்கையெடுக்க வேண்டுமென அது தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள அமைச்சரவை உப குழு அதன் அறிக்கையில் அரசாங்கத்திற்கு பரிந்துரை செய்துள்ளது. 

தற்போதைய சூழ்நிலையில் நாட்டின் பொருளாதாரத்திற்கு ஏற்பட்டுள்ள சவால்களை கருத்திற்கொண்டு எதிர்வரும் வரவு செலவுத்திட்டத்தில் அதனை நடைமுறைபடுத்துவதற்கு பொருத்தமான தீர்வொன்றைப் பெற்றுக் கொடுக்கும் வகையில் அக்குழு பரிந்துரை செய்துள்ளது. 

ஆசிரியர்கள், அதிபர்கள், ஆசிரிய ஆலோசகர்கள் மற்றும் கல்வி நிர்வாக சேவை ஆகியவற்றை இணைந்த சேவையாக கொண்டுவருவதற்கு அமைச்சரவை உப குழு தமது அறிக்கையில் யோசனைகளை முன்வைத்துள்ளது. அதன் முதல் தீர்வாக ஆசிரியர் மற்றும் அதிபர்கள் சேவைகளை முறைமைப்படுத்துவதை எதிர்வரும் நவம்பர் மாதம் 20ஆம் திகதிக்கு முன்பதாக வர்த்தமானியில் வெளியிடுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் அக்குழு தமது பரிந்துரையில் தெரிவித்துள்ளது. 

அதேவேளை ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் சம்பள முரண்பாடு தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள அமைச்சரவை உப குழுவின் அறிக்கை கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில் அது தொடர்பில் அடுத்த வாரம் அமைச்சரவையில் கலந்துரையாடலுக்கு உட்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

மேற்படி அமைச்சரவை உப குழுவில் அமைச்சர்களான டளஸ் அழகப்பெரும,விமல் வீரவன்ச, பிரசன்ன ரணதுங்க, மஹிந்த அமரவீர ஆகியோர் அங்கம் வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
Source: thinakaran.
அதிபர் ஆசிரியர் சம்பள முரண்பாடு: அமைச்சரவை உப குழுவால் முன்வைக்கப்பட்ட யோசனைகள்: அதிபர் ஆசிரியர் சம்பள முரண்பாடு: அமைச்சரவை உப குழுவால் முன்வைக்கப்பட்ட யோசனைகள்: Reviewed by irumbuthirai on August 26, 2021 Rating: 5

பகிடிவதை தொடர்பில் கல்வி அமைச்சின் புதிய தீர்மானம்:

August 25, 2021

பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் இடம்பெறுகின்ற பகிடிவதை (Ragging) மற்றும் வன்முறைச் சம்பவங்கள் குறித்து பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யக்கூடிய வகையில் சட்ட திருத்தங்களை மேற்கொள்வதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. 

பல்கலைக்கழக அதிகாரிகளால், பொலிஸாரிடம் முறைப்பாடு செய்து சட்டத்தை அமல்படுத்த முடியாத நிலை 
இதுவரை காலமும் இருந்ததாக கல்வி அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. 

இதன்படி, கல்வி நிறுவனங்களில் பகிடிவதை மற்றும் பிற வன்முறை சம்பவங்களை தடை செய்வதற்கான சட்ட திருத்தங்கள் மேற்கொள்ளப்பட உள்ளன. 

பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் தலைமை நிர்வாக அதிகாரி அல்லது அவரது பிரதிநிதி பாதிக்கப்பட்ட மாணவர்கள் சார்பாக பொலிசாரிடம் முறைப்பாடு செய்ய முடியுமான வகையில் சட்டங்கள் திருத்தப்படும், என்று கல்வி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
Source: அரசாங்க தகவல் திணைக்களம்.
பகிடிவதை தொடர்பில் கல்வி அமைச்சின் புதிய தீர்மானம்: பகிடிவதை தொடர்பில் கல்வி அமைச்சின் புதிய தீர்மானம்: Reviewed by irumbuthirai on August 25, 2021 Rating: 5

வெளிநாட்டில் படித்த மாணவர்கள் இலங்கை பல்கலைக்கழகங்களில் பட்டப் படிப்பை மேற்கொள்ளல் (முழு விபரம் இணைப்பு)

August 24, 2021

வெளிநாட்டில் படித்த மாணவர்கள் இலங்கையில் உள்ள பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பை மேற்கொள்வதற்கான அறிவித்தலை இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. 

குறித்த மாணவர்கள் இலங்கையில் உள்ள உயர்தர பரீட்சைக்கு சமமான ஒரு தகைமையை வெளிநாட்டில் பெற்றிருக்க வேண்டும்.

இது தொடர்பாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவால் வெளியிடப்பட்ட கையேட்டு புத்தகத்தை கீழே உள்ள லிங்கில் பார்க்கலாம்.
வெளிநாட்டில் படித்த மாணவர்கள் இலங்கை பல்கலைக்கழகங்களில் பட்டப் படிப்பை மேற்கொள்ளல் (முழு விபரம் இணைப்பு) வெளிநாட்டில் படித்த மாணவர்கள் இலங்கை பல்கலைக்கழகங்களில் பட்டப் படிப்பை மேற்கொள்ளல் (முழு விபரம் இணைப்பு) Reviewed by irumbuthirai on August 24, 2021 Rating: 5

சிறுவர்களுக்கு ஏற்படும் மேலும் இரு புதிய நோய்கள் இலங்கையில் கண்டுபிடிப்பு!

August 24, 2021

கொரோனா தொற்று ஏற்பட்ட சிறுவர்களுக்கு ஏற்படும் மேலும் இரு புதிய நோய்கள் தொடர்பில் இலங்கையில் கண்டறியப்பட்டுள்ளது. 

சைலண்ட் ஹைபொக்ஸியா மற்றும் மெ-சிந்தமெடிக் நிமோனியா என்றழைக்கப்படும் இரு நோய்களே இவ்வாறு கண்டறியப்பட்டுள்ளதாக லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர். 

பெரும்பாலும் வயது முதிர்ந்தவர்களிடையே காணப்படும் இந்த நோய் நிலைமை தற்போது கொரோனா பாதிக்கப்பட்ட சிறுவர்களிடமும் ஏற்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது. 

இந்த நோய் நிலைமையினால் உடலிலுள்ள 
ஒட்சிசனின் அளவு மிகவும் குறைந்த மட்டத்திற்கு செல்வதாக தெரிவிக்கப்படுகிறது. 

 
சில வேளைகளில் சுவாசிப்பதற்கு கஷ்டம் இல்லாத சிறுவர்களும் நடமாடும் பொழுது ஒட்சிசன் குறைந்த மட்டத்திற்கு செல்லும். 

மேலும் சாதாரண நிலையில் ஒட்சிசனின் அளவு சாதாரண மட்டத்தில் இருந்த போதிலும் நடமாடும் சந்தர்ப்பத்தில் அதன் அளவு குறையும். இது மோசமான நிலைமையாகும் என குறித்த வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவுக்கு பொறுப்பான விசேட வைத்தியர் நளின் சி கித்துல்வத்த தெரிவித்தார். 

எனவே முடியும் என்றால் ஒரு நாளைக்கு இரண்டு தடவைகள் குருதியிலுள்ள ஒட்சிசனின் அளவை பரிசோதிப்பது சிறந்ததாகும் என அவர் மேலும் தெரிவித்தார்.
சிறுவர்களுக்கு ஏற்படும் மேலும் இரு புதிய நோய்கள் இலங்கையில் கண்டுபிடிப்பு! சிறுவர்களுக்கு ஏற்படும் மேலும் இரு புதிய நோய்கள் இலங்கையில் கண்டுபிடிப்பு! Reviewed by irumbuthirai on August 24, 2021 Rating: 5

கொரோனா வைரஸிலிருந்து பாதுகாப்பு பெற எவற்றை உண்ண வேண்டும்?

August 24, 2021

கொரோனா வைரஸிலிருந்து பாதுகாத்துக்கொள்ள நல்ல ஊட்டச்சத்துள்ள உணவுகளை உட்கொள்வது மிக முக்கியம் என்று சுகாதார தறையினர் சுட்டிக்காட்டுகின்றனர். 

அதாவது கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள், உணவில் அதிகமாக கீரை வகைகள் மற்றும் பழங்களைச் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று விசேட வைத்தியர் ரணில் ஜயவர்தன கூறினார். 

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், 
இந்த வைரசுக்கு குறிப்பிட்ட மருந்து எதுவும் இல்லை. எனவே, பொதுமக்களுக்கான ஒரே தீர்வு அவர்களின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்துக்கொள்வது தான் என்றும் தெரிவித்தார். 

இது மாத்திரமன்றி தற்போதைய சூழ்நிலை, மக்களின் மன ஆரோக்கியத்தை பாதிக்க வழிவகுக்கும் என்பதனால், அனைவரும் காலை, மதிய மற்றும் இரவு உணவுகளை தவறாமல் சாப்பிடுவது முக்கியம் என்றும் அவர் கூறினார். 

அத்துடன், மாச்சத்து, உயிர்சத்து உணவுகள் நம் உணவில் பிரதானமாக இருக்க வேண்டும். நோய் எதிர்ப்பு சக்திக்கு விட்டமின் சி மிகவும் முக்கியமானது. அவை மரக்கறிகள் மற்றும் பழங்களிலிருந்து கிடைக்கின்றன. 

நாளொன்றிற்கு குறைந்தது 3 வகையான மரக்கறிகள் சாப்பிடுவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். மற்றும் புரதம் உடலுக்கு மிகவும் அவசியமான ஒன்றாகும். 

பிஸ்கட், கேக் அல்லது இனிப்புகள் போன்றவற்றின் சத்துக்கள் மிகவும் மோசமானவை. அன்றாட வாழ்வில் பழங்கள், பால் மற்றும் தானிய வகை உணவுகளை எடுத்துக்கொள்வது மிகவும் சிறந்தது என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
Source: அரசாங்க தகவல் திணைக்களம்.
கொரோனா வைரஸிலிருந்து பாதுகாப்பு பெற எவற்றை உண்ண வேண்டும்? கொரோனா வைரஸிலிருந்து பாதுகாப்பு பெற எவற்றை உண்ண வேண்டும்? Reviewed by irumbuthirai on August 24, 2021 Rating: 5

கொரோனா தொற்றாளர்கள் ஒரு நாளைக்கு எவ்வளவு தண்ணீர் குடிக்கலாம்?

August 24, 2021

கொவிட் வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் ஒரு நாளைக்கு 02 லீட்டருக்கும் அதிகமான நீரை பருக வேண்டும் என்பதாக கொழும்பு மருத்துவ பீடத்தின் பேராசிரியரும் விசேட வைத்தியருமான ரணில் ஜயவர்த்தன கூறுகிறார். 

நேற்று (23) சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொற்றாளர்களின் உடலிலிருந்து அதிகமான நீர் வெளியேறுவதால் உடலில் நீரிழப்பு dehydration நிலை ஏற்படும். இந்த அனர்த்த நிலையை தவிர்க்க கூடுதலாக நீரை பருக வேண்டும் என அவர் தெரிவித்தார்.
Source: அரசாங்க தகவல் திணைக்களம்.
கொரோனா தொற்றாளர்கள் ஒரு நாளைக்கு எவ்வளவு தண்ணீர் குடிக்கலாம்? கொரோனா தொற்றாளர்கள் ஒரு நாளைக்கு எவ்வளவு தண்ணீர் குடிக்கலாம்? Reviewed by irumbuthirai on August 24, 2021 Rating: 5

23-08-2021 அன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்ட தீர்மானங்கள்

August 24, 2021

23-08-2021 அன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது எடுக்கப்பட்ட தீர்மானங்களை இங்கு தருகிறோம். 
இதில், 
பல முக்கிய தீர்மானங்கள் அடங்கியுள்ளன. 

இதன் முழு வடிவத்தைப் பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க.


முன்னைய அமைச்சரவை கூட்டத்திற்கு செல்ல...
23-08-2021 அன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்ட தீர்மானங்கள் 23-08-2021 அன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்ட தீர்மானங்கள் Reviewed by irumbuthirai on August 24, 2021 Rating: 5

Selection Test Results - 2021 (University of Kelaniya)

August 24, 2021

Selection Test Results - 2021 (University of Kelaniya) 

களனி பல்கலைக்கழகத்தினால் நடாத்தப்பட்ட தெரிவுப் பரீட்சையின் பெறுபேறுகள் வெளியாகியுள்ளன. 

பின்வரும் கற்கை நெறிகளுக்கான தெரிவுப் பரீட்சை:
B. Sc (Hons) in Management & Information Technology (MIT)
B. Sc (Hons) in Speach & Hearing Science.
BBB (Hons) in Financial Engineering.
BA (Hons) in Translation Studies.
B. Sc (Hons) in Sports Science.
B. A (Hons) in Film & Television. 

கீழே உள்ள லிங்கில் சென்று உங்களது உயர்தரப்பரீட்சை சுட்டெண்ணை வழங்கி பார்வையிடலாம்.

Selection Test Results - 2021 (University of Kelaniya) Selection Test Results - 2021 (University of Kelaniya) Reviewed by irumbuthirai on August 24, 2021 Rating: 5
Powered by Blogger.