பட்டதாரி பயிலுனர்களுக்கான அறிவித்தல்!

August 30, 2021
 

பட்டதாரி பயிலுனர்களின் தகவல்களை Online முறையில் பெற்றுக் கொள்ளல். 

 
மேற்படி விடயம் தொடர்பான மற்றுமொரு அறிவித்தல் 27-08-2021 திகதி இடப்பட்டு அரசு சேவைகள் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது. 
 
இது தொடர்பில் 11-08-2021 மற்றும் 20-08-2021 போன்ற திகதிகளில் வெளியிடப்பட்ட கடிதத்திற்கு மேலதிகமாக இது வெளியிடப்படுகிறது. 
 
பட்டதாரி பயிலுனர்கள் தமது பயிற்சி நிலையத்தை உள்ளீடு செய்யும் போது பின்வரும் விடயங்களை கருத்தில் கொள்ள வேண்டும். 
 
தேசிய பாடசாலைகளில் பயிற்சி பெறுகிறவர்களின் பயிற்சி பெறும் சேவை நிலையம் கல்வி அமைச்சு என உள்ளீடு செய்ய வேண்டும். 
 
மாகாண பாடசாலைகளில் பயிற்சி பெறுகிறவர்கள் அந்தந்த மாகாணத்தை பயிற்சி நிலையமாக குறிப்பிட வேண்டும். 
 
அரசாங்க சார்பு நிறுவனம் ஒன்றில் அல்லது அரசாங்க செயற்திட்டம் ஒன்றில் பயிற்சி பெறுகிறவர்கள் பயிற்சி பெறுகின்ற சேவை நிலையம் அந்த நிறுவனத்திற்கு உரிய அமைச்சு ஆகும். 
 
குறிப்பு: ஏற்கனவே தகவல்களை உள்ளீடு செய்த பட்டதாரி பயிலுனர்கள் மேற்படி விடயங்கள் தொடர்பில் வேறு தகவல்களை உள்ளீடு செய்திருந்தால் அவற்றில் திருத்தங்கள் செய்வதற்கு பின்னர் சந்தர்ப்பம் வழங்கப்படும். 

Quick links for login:
 
 
தொழில்நுட்ப காரணங்களுக்காக தரவுகளை உள்ளீடு செய்ய முடியாமல் போன பட்டதாரிகளுக்கு மாத்திரமே மீண்டும் தரவுகளை உள்ளீடு செய்வதற்கு சந்தர்ப்பம் வழங்க முடியும் என்பதனால் தமக்குரிய தினத்திலேயே தரவுகளை உள்ளீடு செய்ய இயன்றவரை முயற்சிக்கவும்.
 
இது தொடர்பான முழுமையான தகவல்களை பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க:


இது தொடர்பில் இதற்கு முன்னர் வெளிவந்த இரு அறிவித்தல்களையும்  பார்வையிட...
 

பட்டதாரி பயிலுனர்களுக்கான அறிவித்தல்! பட்டதாரி பயிலுனர்களுக்கான அறிவித்தல்! Reviewed by irumbuthirai on August 30, 2021 Rating: 5

Diploma in Early Childhood Care & Development -2021 (University of Peradeniya)

August 30, 2021
 

Diploma in Early Childhood Care & Development -2021 (University of Peradeniya) 
 
Duration: 01 year. 
 
Medium: English / Sinhala. 
 
Closing date: 22-09-2021. 
 
See the details below.

 source: Sunday Observer.
Diploma in Early Childhood Care & Development -2021 (University of Peradeniya) Diploma in Early Childhood Care & Development -2021 (University of Peradeniya) Reviewed by irumbuthirai on August 30, 2021 Rating: 5

27-08-2021 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்)

August 30, 2021
 

27-08-2021 அன்று வெளியான அரச வர்த்தமானியை தமிழ், ஆங்கிலம், சிங்களம் ஆகிய மொழிகளில் இங்கு தருகிறோம். 

Official Government Gazette released on 27-08-2021.

இதில் பல முக்கிய அறிவித்தல்கள் காணப்படுகின்றன. கீழே  உள்ள உரிய லிங்கை கிளிக் செய்து உரிய மொழியில் முழுமையாக பார்வையிடுக.

தமிழில் பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க.

 

Tamil 

ஆங்கிலத்தில் பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க.

English  

சிங்களத்தில் பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க.

Sinhala 


முன்னைய வர்த்தமானி அறிவித்தலுக்கு செல்ல...

https://www.irumbuthirainews.com/2021/08/20-08-2021.html?m=1

27-08-2021 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) 27-08-2021 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) Reviewed by irumbuthirai on August 30, 2021 Rating: 5

குடும்ப உறுப்பினருக்கு மனநலப் பிரச்சனைகள் இருப்பதை எப்படி கண்டு பிடிப்பது?

August 30, 2021
 

வாழ்க்கையில் எல்லோருக்கும் பிரச்னைகளும் தேவைகளும் உண்டு. ஆனால் இவை எல்லை தாண்டிப் போகும்போது அது நம் வாழ்வை பாதிக்கிறது. 
 
அதை சரியான நேரத்தில் நாம் கவனிக்க வேண்டும். மனதில் ஏற்படும் குழப்பத்தைத் தயங்காமல் ஆலோசகரிடமோ மனநல மருத்துவரிடமோ தெரிவிக்க வேண்டும். 
 
எல்லா நேரத்திலும் மருத்துவர் மருந்து தர மாட்டார். ஆரம்ப கட்டப் பிரச்னைகளாக இருந்தால் ஆலோசனை மூலமாகவும் நடத்தையை 
 
மாற்றிகொள்வதன் மூலமாகவும் அதிலிருந்து மீண்டுவிடலாம். சரியான நேரத்தில் மனநல பாதிப்பைக் கண்டறிந்தால் விரைவிலேயே நலம் பெறலாம். உதவி பெறாமல் தட்டிக்கழிக்கும்போது அது மனநலத்தை இன்னும் ஆழமாக பாதிக்கிறது. 
 
அப்படிப்பட்ட சூழ்நிலையில் நலம் பெறுவதற்குக் கூடுதல் முயற்சியும் நேரமும் தேவைப்படும். சரியான நேரத்தில் சிகிச்சை எடுத்துக்கொள்ளவேண்டியது அவசியம். அதுவே மனநலத்துக்கான முதல் படி. 
 
"குடும்ப உறுப்பினர்களின் அன்றாட செயல்பாடுகளை கவனிக்க வேண்டும், அதைப் பொறுத்து மனநல உதவி தேவையா இல்லையா என்பதை முடிவெடுக்கலாம்" என்கிறார் மனநல மருத்துவர் ராஜேந்திர பார்வே. 
 
"தினசரி வேலைகள், வெளியிலிருக்கும் வேலைகள், குளிப்பது, கழிவறைக்குச் செல்வது போன்றவற்றில் பிரச்னை இருந்தால் அதை கவனிக்கவேண்டும். அதுவே அறிகுறி அல்ல, அதைக் கூடுதலாகக் கவனிக்கவேண்டும். 
 
அன்றாட வாழ்வின் மகிழ்ச்சியை அவர்கள் இழந்துவிட்டார்களா? இயந்திரத்தைப் போல நடந்துகொள்கிறார்களா? பசி, உடல் கழிவை வெளியேற்றுதல், தூக்கம், பாலியல் செயல்பாடு ஆகியவற்றில் தொந்தரவு இருக்கிறதா?, எல்லாவற்றையும் கவனிக்க வேண்டும்" என்கிறார். 
 

எப்படி உரையாடுவது? 


நம் குடும்பத்தில் ஒருவருக்கு இதுபோன்ற பிரச்னைகள் இருந்தால் நாம் அவர்களுடன் பேசலாம், கேள்வி கேட்கலாம், ஆனால் அதைப் பேசும்போது அக்கறையாகவும் அன்பாகவும் இருக்கவேண்டும். 
 
இந்தப் பிரச்னைகளுக்குப் பின்னால் உள்ள காரணம் என்ன? பிரச்னைகள் தீவிரமாக இருக்கின்றனவா? இவை எப்போதாவது வருகின்றவா அடிக்கடி வருகின்றவா? எவ்வளவு நாட்களுக்கு ஒரு முறை வருகின்றன? போன்ற கேள்விகளைக் கேட்டு குடும்பத்தினரின் மனநலத்தைப் புரிந்துகொள்ளலாம். 
 
ஆனால் இவற்றை எடுத்த எடுப்பில் போட்டு உடைத்துவிட முடியாது. சம்பந்தப்பட்டவரின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து நடந்துகொள்ள வேண்டும். இதற்கு எதிர்மறையாகவும் பதில் வரலாம், எல்லாம் நன்றாக இருக்கிறது என்று அவர்கள் சொல்லலாம். அந்த சூழலில் பொறுமையாக இருந்து அவர்களைக் கூடுதல் அக்கறையோடு கவனித்துக் கொள்ள வேண்டும். 
 
குடும்ப உறுப்பினர்களில் ஒருவருக்கு அடிக்கடி மனத்தொய்வு, பதற்றம், கோபம், பொறாமை போன்றவை வரும்போது அவர்களுக்கு நாம் உதவி செய்ய சில முயற்சிகள் எடுக்க வேண்டும். 
 
 

தவறான நம்பிக்கைகளிலிருந்து எப்படி விடுபடுவது? 

 
பொதுவாக எந்த மனநலப் பிரச்னையையும் "பைத்தியம் பிடிப்பது" என்றோ மனத்தொய்வு என்றோ மக்கள் நினைப்பார்கள். ஆனால் தடுக்க முடியாத எண்ண ஓட்டம், பதற்றம், ஓசிடி, மனத்தொய்வு போன்ற பல பிரச்னைகளும் வரலாம். 
 
மனநல மருத்துவரையோ ஆலோசகரையோ சந்தித்தாலே அவர்களுக்கு மனநோய் வந்துவிட்டது என்ற தவறான புரிதலில் இருந்து நாம் விடுபடவேண்டும். இதுபோன்ற எண்ணங்களோடு வீட்டிலும் விவாதிக்ககூடாது. 
 
மின் அதிர்ச்சி சிகிச்சை மூலமாக மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கிறார்கள் என்பதும் ஒரு தவறான புரிதல். இது 'Electro Conclusive Therapy' (ECT) என்று அழைக்கப்படுகிறது. நோயுற்ற எல்லாருக்கும் இது தேவைப்படுவதில்லை. இந்த சிகிச்சையைப் பெறுபவர்கள்கூட வீட்டுக்குத் திரும்பிவிடலாம். இது அனைவருக்கும் தரப்படுவதும் இல்லை. 
 

மனநலப் பிரச்னைகள் குறித்து தெரிந்தபின்பு என்ன செய்வது? 

 
நமக்கு மனநலப் பிரச்னை இருப்பது தெரிந்தபின்னும்கூட நாமாக எதுவும் செய்யக்கூடாது. மனநல மருத்துவர்கள், ஆலோசர்களிடம் பேசவேண்டும். மனநல பாதிப்பு எப்படிப்பட்டது என்று அவர்கள்தான் முடிவு செய்வார்கள். 
 
இணையத்தில் அறிகுறிகளைத் தேடி நாமாக நோயை முடிவு செய்து மருந்துகள் எடுத்துக்கொள்வது ஆபத்தானது. "கூகுளில் தேடக்கூடாது. உங்களது எல்லா அறிகுறிகளையும் கேட்டபின்பே மருத்துவர்கள் சிகிச்சையை முடிவு செய்வார்கள். 
 
யாருக்கு மருந்து தேவை, யாருக்கு ஆலோசனை தேவை, யாருக்கு இரண்டுமே தேவை என்பதையெல்லாம் முடிவெடுக்க ஒரு முறை உள்ளது. கூகுளால் இதை செய்ய முடியாது" என்கிறார் மருத்துவர் ராஜேந்திர பார்வே. 
 

குடும்பம் மற்றும் ஆதரவுக் குழுக்கள் 

"யாராக இருந்தாலும் அவர்கள் மனநலம் சீராவதற்குக் குடும்பத்தின் பங்களிப்பு முக்கியம்" என்கிறார் பொதுநலக் கழகத்தைச் சேர்ந்த ஆலோசகர் வைதேஹி பிடே. 
 
"ஆலோசகர், மருத்துவர்களின் உதவியோடு மனநலத்தை சரிசெய்வது இயல்புதான். மருந்துகளை எடுத்தால்தான் எல்லாம் சரியாகும் என்றும் மருந்துகள் எடுத்தால் அதுவே பழகிவிடும் என்றும் ஒரு தவறான நம்பிக்கை உள்ளது. அதிலிருந்து மக்கள் விடுபடவேண்டும். 
 
மருத்துவர்கள் சம்பந்தப்பட்டவர்களிடம் பேசி, சோதனைகள் செய்த பிறகு சிகிச்சை பற்றி முடிவெடுப்பார்கள். குடும்பத்தினருடன் ஆதரவுக் குழுக்களும் மனநலம் மேம்பட உதவுகின்றன. 
 
தன்னைப் போலவே பலருக்குப் பிரச்னை இருக்கிறது, அதிலிருந்து அவர்கள் மீண்டிருக்கிறார்கள் என்பதை நோயுற்றவர் 
 
உணர்வார். தாங்கள் மட்டும் தனியாக இல்லை, மற்றவர்களுக்கும் இந்தப் பிரச்னை இருக்கிறது என்ற உணர்வே அவர்களுக்கு ஆறுதலைத் தரும்" என்கிறார். 
 
 

தவிர்க்க வேண்டியவை 

குடும்ப உறுப்பினர்களுக்கு இந்த பாதிப்பு இருந்தால் சில விஷயங்களைத் தவிர்க்க வேண்டும். 
 
முதலில் குற்றம் சொல்லி பழி போடக்கூடாது. விதியைக் காரணம் காட்டக்கூடாது, நேரம் சரியில்லை, போன ஜென்மப் பாவம் என்றெல்லாம் சொல்லக்கூடாது. தீர்க்கமுடியாத ஒரு பரம்பரை வியாதி என்று சொல்லக்கூடாது. நோயுற்றவருக்கு ஆதரவு தர முயற்சி செய்யவேண்டும். 
 
நாம் கூட இருக்கும் உணர்வைத் தந்து அவர்கள் வலியைப் பகிர்ந்துகொள்ள வேண்டும். அவர்கள் நமக்குத் தொல்லை தரவில்லை என்பதை உணரவேண்டும். 
 
அவர்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள், 
 
இதை அவர்கள் தெரிந்து செய்வதில்லை, அவர்களது மனநலப் பிரச்னைகள் இப்படி நடந்துகொள்ள வைக்கின்றன. ஆகவே மேலும் மேலும் கேள்வி கேட்டு அவர்களைக் கஷ்டப்படுத்தக்கூடாது.
Source: https://www.bbc.com/tamil/science-58360371
நன்றி: BBC.COM
குடும்ப உறுப்பினருக்கு மனநலப் பிரச்சனைகள் இருப்பதை எப்படி கண்டு பிடிப்பது? குடும்ப உறுப்பினருக்கு மனநலப் பிரச்சனைகள் இருப்பதை எப்படி கண்டு பிடிப்பது? Reviewed by irumbuthirai on August 30, 2021 Rating: 5

அதிபர் ஆசிரியர் சங்கங்கள் பிளவுபடுகிறதா?

August 28, 2021
 

அதிபர் சங்கங்களுக்கும் ஆசிரியர் சங்கங்களுக்குமிடையில் பிளவு ஏற்படும் என்ற நிலை உருவாகுவதாக தெரிகிறது. 
 
நேற்றைய தினம் (27) கல்வி அமைச்சரை சந்திப்பதற்காக பிற்பகல் 2 மணியிலிருந்து மாலை 6 மணி வரை காத்திருந்தும் சந்திப்பதற்கான அவகாசம் கிடைக்கவில்லை என இலங்கை தரப்படுத்தல் அதிபர் சங்கம் தெரிவித்துள்ளது. 
 
இது தொடர்பில் குறித்த சங்கம் தெரிவிக்கையில், 
 
கல்வியமைச்சர் ஆசிரியர் சங்கங்களை சந்தித்துள்ளார். ஆசிரியர் மற்றும் அதிபர்களுக்கான சம்பளம் ஒரே படிமுறையில் உள்வாங்கப்படுவது பிரச்சினையில்லை. ஆனால் அவர்களுக்கு மேலதிக கொடுப்பனவை மாத்திரம் கொடுக்கலாம் என்று ஆசிரியர் சங்கங்கள் அமைச்சரிடம் கூறியதாக தெரிய வருகிறது. 
 
அவர்கள் எவ்வாறு அப்படி சொல்லலாம்? அமைச்சரவை உப குழு கூட அதிபர்களுக்கு உரிய நிலை வழங்கப்பட வேண்டும் என்று கூறியிருப்பது சந்தோஷப்பட வேண்டிய விடயம். 
 
அவ்வாறு இருக்கையில் இந்த ஆசிரியர் சங்கத்தை சேர்ந்த சிலர் எவ்வாறு அமைச்சரிடம் இப்படி சொல்லலாம்? அதிபர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் ஒரே சம்பள அளவுத்திட்டம் சரியா? 
 
இது தொடர்பில் கலந்துரையாடுவதற்காக அமைச்சருக்கு எழுத்து மூலம் நாம் அறிவித்தும் எமக்கு இதுவரை சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. 
 
இந்த தொழிற்சங்க போராட்டங்களில் எமது பங்கு உயர்ந்த அளவில் இருந்தது. எமக்கு உரிய தீர்வு கிடைக்காவிட்டால் இந்த அரசாங்கத்திற்கு ஆசிரியர் சங்கங்களுக்கும் நாம் யார் என்று காட்ட வேண்டிவரும். 
 
இன்று(நேற்று-27)  எமது இலங்கை தரப்படுத்தல் அதிபர் சங்கம் மற்றும் ஏனைய அதிபர் சங்கங்களும் வருகை தந்துள்ளன. ஆனால் இதுவரை காத்திருந்தும் எமக்கு சந்திப்பதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை. 
 
இதற்கு முன்னர் இருந்த அமைச்சர்களுக்கும் அதிபர்களையும் ஆசிரியர்களையும் பிரித்தறிய முடியாத பிரச்சினை இருந்தது அது இந்த அமைச்சருக்கும் இருப்பதாக தெரிகிறது. 
 
இது தொடர்பில் எடுக்க வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கை தொடர்பாக எமது சங்கங்களின் செயற்குழு உறுப்பினர்கள் கூடி முடிவெடுக்க இருக்கிறோம் என்று தெரிவித்தனர். 
 
அமைச்சருடனான சந்திப்பு சாதகமாக அமைந்தது என ஆசிரியர் சங்கங்கள் தெரிவித்திருக்கின்றன. எனவே இவர்கள் எதிர்பார்க்கும் வகையில் சாதகமான தீர்வு கிடைத்தால் அவர்கள் தொழிற்சங்க நடவடிக்கையில் இருந்து விலகுவார்கள். இந்நிலையில் உங்கள் முடிவு எப்படி? என ஊடகவியலாளர் கேட்டபோது, 
 
இது தொடர்பில் இப்போதைக்கு எதுவும் கூற முடியாது. எமது செயற்குழு உறுப்பினர்கள் கூடி முடிவெடுக்க இருக்கிறோம் என தெரிவித்தனர்.
அதிபர் ஆசிரியர் சங்கங்கள் பிளவுபடுகிறதா? அதிபர் ஆசிரியர் சங்கங்கள் பிளவுபடுகிறதா? Reviewed by irumbuthirai on August 28, 2021 Rating: 5

சிறுவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதைக் கண்டறிவது எப்படி?

August 28, 2021
 

சிறுவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதா என்பதைக் கண்டறிவது எப்படி? என்பது தொடர்பாக லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் பணிப்பாளர், வைத்திய நிபுணர் ஜி. எஸ். விஜேசூரிய விளக்கம் அளித்துள்ளார். 
 
குழந்தையின் வழக்கமான நடவடிக்கைகளை தொடர்ந்து அவதானிப்பதன் மூலம் கொவிட் - 19 தொற்று அறிகுறிகளை அடையாளம் காண முடியும் என்று வைத்தியர் தெரிவித்துள்ளார். 
 
இதற்கமைவாக, பின்வரும் விடயங்களில் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். 
 
சிறுவர்கள் நடக்கும்போது வழக்கத்தை விட கடினமான சோர்வுடன் காணப்படுகின்றனரா? மிகக் குறைந்த தூரம் நடக்கும்போது நிற்கின்றனரா ? உட்காருகின்றனரா ? சுவாசிக்கும் தன்மை அதிகரிக்கின்றதா? சிறுவர்களின் உதடுகள் கருப்பு நிறமாக மாறுகின்றதா? கண் நிறத்தில் மாற்றம் ஏற்படுகின்றதா? சருமத்தில் மாற்றத்தைக் காணக்கூடியதாகவுள்ளதா ? 
 
இத்தகைய அறிகுறிகள் காணப்படும் சிறுவர்களின் ஒக்ஸிஜன் அளவு குறைந்துள்ளதையே எடுத்துக்காட்டும் அறிகுறியாகும் என்று வைத்திய நிபுணர் தெரிவித்துள்ளார். 
 
இரண்டு வயதிற்குட்பட்ட குழந்தைகள் மத்தியில் இத்தகைய அறிகுறிகளைக் கவனிப்பது மிகவும் கடினம் என்று அவர் மேலும் கூறினார்.
Source: அரசாங்க தகவல் திணைக்களம்.
சிறுவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதைக் கண்டறிவது எப்படி? சிறுவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதைக் கண்டறிவது எப்படி? Reviewed by irumbuthirai on August 28, 2021 Rating: 5

Vacancy (State Pharmaceutical Corporation of Sri Lanka)

August 28, 2021
 

Vacancy (State Pharmaceutical Corporation of Sri Lanka) 
 
Closing date: 01-09-2021. 
 
See the details below. 
 

Source: Sunday Observer. 

ஏனைய தொழில் வாய்ப்புகளையும் பார்வையிட...
Vacancy (State Pharmaceutical Corporation of Sri Lanka) Vacancy (State Pharmaceutical Corporation of Sri Lanka) Reviewed by irumbuthirai on August 28, 2021 Rating: 5

இலங்கையில் மூன்றாவது தடுப்பூசியை பெறுவோர்!

August 28, 2021
 

இலங்கையில் மூன்றாவது தடுப்பூசி செலுத்துவது தொடர்பான பல்வேறு கருத்துக்கள் தற்பொழுது பகிரப்பட்டு வருகின்றன. 
 
அந்தவகையில் பாரதூரமான நோய் நிலைமைகள் உள்ளவர்களுக்கு மூன்றாவது தடுப்பூசி எதிர்வரும் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் செலுத்த எதிர்பார்ப்பதாக அரச மருந்தகக் கூட்டுத்தாபன தலைவர் வைத்தியர் பிரசன்ன குணரசேன தெரிவித்துள்ளார். மேலும் அதற்கான பரிந்துரைகளை தான் பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 
 
இதேவேளை இலங்கையில் மூன்றாவது தடுப்பூசி சுகாதார துறையினருக்கு வழங்கப்படும் என ஏற்கனவே அறிவிப்பு வெளியானது குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் மூன்றாவது தடுப்பூசியை பெறுவோர்! இலங்கையில் மூன்றாவது தடுப்பூசியை பெறுவோர்! Reviewed by irumbuthirai on August 28, 2021 Rating: 5

வெளிநாடு செல்வோர் Smart Vaccination Certificate பெறுவது எவ்வாறு ?

August 28, 2021
 

சுகாதார அமைச்சும் உலக சுகாதார ஸ்தாபனத்தின் இலங்கை கிளையும் இணைந்து ஸ்மார்ட் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கையை அறிமுகப்படுத்தியுள்ளதாக இலங்கை தகவல் தொடர்பாடல்தொழில்நுட்ப முகவர் நிறுவனம் (ICTA) நிறுவனம் அறிவித்துள்ளது. 
 
இந்த Smart Vaccination Certificate வழங்கும் நடவடிக்கையை ICTA நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. 
 
இரண்டு தடுப்பூசிகளையும் போட்டவர்களுக்கு மாத்திரமே இது வழங்கப்படும். 
 
தற்போது வெளிநாடு செல்பவர்களுக்காகவே வழங்கப்படுகிறது. 
 
இதேவேளை தமது தடுப்பூசி அட்டையை தவறவிட்டவர்கள் யாராவது இருந்தால் தமது பிரதேசத்திற்கு பொறுப்பான பொது சுகாதார பரிசோதகரைத் தொடர்பு கொண்டு உரிய தகவல்களை பெற்றுக் கொள்ளுமாறு அமைச்சர் சுதர்சனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார். 
 
Smart Vaccination Certificate ஐப் பெறுவதற்காக கீழே உள்ள லிங்கில் சென்று விண்ணப்பத்தை பூர்த்தி செய்க.
வெளிநாடு செல்வோர் Smart Vaccination Certificate பெறுவது எவ்வாறு ? வெளிநாடு செல்வோர் Smart Vaccination Certificate பெறுவது எவ்வாறு ? Reviewed by irumbuthirai on August 28, 2021 Rating: 5

பல்கலைக்கழக அனுமதிக்காக Online முறையில் பாடசாலை காலத்தை உறுதிப்படுத்தல்:

August 27, 2021
 
2020/2021 ஆம் கல்வி ஆண்டுக்காக பல்கலைக்கழகத்திற்கு மாணவர்களை அனுமதிக்கும் செயற்பாட்டின் போது பாடசாலை காலத்தை உறுதிப்படுத்துவதற்காக இம்முறை பரீட்சைத் திணைக்களம் Online முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. 
 
பாடசாலைகள் தற்போது மூடப்பட்டுள்ளதாலும் கொரோனா நிலையை கருத்தில் கொண்டும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 
 
பரீட்சைத் திணைக்கள இணையதளத்திற்கு சென்று அந்தந்த பாடசாலைகளுக்கு வழங்கப்பட்டுள்ள UserName, Password என்பவற்றை உட்செலுத்தி இந்த விடயத்தை வழங்கலாம். இதற்கான அறிவுறுத்தல்கள் அங்கே வழங்கப்பட்டுள்ளன. 
 
பரீட்சைத் திணைக்களத்தின் குறித்த இணைப்பிற்கு செல்ல கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க.
பல்கலைக்கழக அனுமதிக்காக Online முறையில் பாடசாலை காலத்தை உறுதிப்படுத்தல்: பல்கலைக்கழக அனுமதிக்காக Online முறையில் பாடசாலை காலத்தை உறுதிப்படுத்தல்: Reviewed by irumbuthirai on August 27, 2021 Rating: 5

மன்னிக்கவும் மாட்டோம், மறக்கவும் மாட்டோம் - ஜோ பைடன் ஆவேசம்

August 27, 2021
 

காபூல் விமான நிலையத்தில் தாக்குதல் நடத்தியவர்களை மன்னிக்கவும் மாட்டோம். மறக்கவும் மாட்டோம். அவர்களை குறிவைத்து வேட்டையாடுவோம் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தனது விசேட உரையில் தெரிவித்துள்ளார். 
 
அமெரிக்காவை ஒரு  போதும் பயங்கரவாதிகளால்  

தடுக்க முடியாது" என்று அதிபர் பைடன் கூறியுள்ளார். 
 
தாலிபன்கள் திறந்துவிட்ட சிறைகளில் இருந்து வந்தவர்கள்தான் தாக்குதல் நடத்தியிருக்கலாம் என்று அவர் தனது உரையில் மறைமுகமாகக் குறிப்பிட்டார். 
 
இந்த தாக்குதலுக்கு உரிமை கோரியுள்ள ISIS-K என்றழைக்கப்படும் 

அமைப்பையும் ஜோ பைடன் குறிப்பிட்டதோடு மீட்புப் பணிகளை நிறுத்தப் போவதில்லை தொடர்ந்து செய்வோம் என்றும் தெரிவித்துள்ளார். 
 
ISIS அமைப்பின் ஆப்கானிஸ்தானுக்கான ஒரு பிரிவாக செயல்பட்டு வருவதே ISIS-K அமைப்பாகும். 
 
இந்த இரட்டை குண்டு வெடிப்புகளில் அமெரிக்க மீட்புப்படையைச் சேர்ந்த 13 பேர் உள்பட 90-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். 150-க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். 
 
மெரைன்ஸ் எனப்படும் அமெரிக்காவின் சிறப்புப் படைப் பிரிவைச் சேர்ந்த 11 பேரும் கொல்லப்பட்டவர்களில் அடங்குவர். 
 
கடந்த பெப்ரவரிக்கு பின்னர் அமெரிக்க 
 
ராணுவத்திலனர் கொல்லப்படுவது இதுவே முதல் தடவையாகும். 
 
எவ்வாறாயினும் தற்போதும் பொது மக்கள் பலரும் பல்வேறு சோதனை சாவடிகளை கடந்தும் விமான நிலையத்தை நோக்கி வந்து கொண்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 
 
இதனிடையே கனடா, பெல்ஜியம், நெதர்லாந்து மற்றும் டென்மார்க் உட்பட பல நாடுகள் ஏற்கனவே தமது மீட்பு நடவடிக்கைகளை நிறுத்திவிட்டன. 
 
விமான நிலையத்தில் கடந்த 06 ஆண்டுகளாக பாதுகாப்பு அளித்து வந்த துருக்கி தனது படைகளை வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளது.
மன்னிக்கவும் மாட்டோம், மறக்கவும் மாட்டோம் - ஜோ பைடன் ஆவேசம் மன்னிக்கவும் மாட்டோம், மறக்கவும் மாட்டோம் - ஜோ பைடன் ஆவேசம் Reviewed by irumbuthirai on August 27, 2021 Rating: 5

முதன் முறையாக தொழிற்சங்கங்களை சந்தித்த புதிய கல்வி அமைச்சர்:

August 27, 2021

புதிதாக நியமிக்கப்பட்ட கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தனவுக்கும் அதிபர் ஆசிரியர் தொழிற்சங்கங்களுக்குமிடையிலான சந்திப்பு நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளது. 
 
கல்வி அமைச்சருடனான இந்த சந்திப்பு சாதகமாக அமைந்ததாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 
 
இதன்போது, ஆசிரியர்கள் - அதிபர்களின் பிரச்சினைகள் தொடர்பில் அமைச்சரவை உபகுழு சமர்ப்பித்துள்ள பரிந்துரைகளுடன் ஆசிரியர் சங்கத்தின் பரிந்துரைகளையும் இணைத்து எதிர்வரும் 
 
திங்கட் கிழமை அமைச்சரவையில் சமர்ப்பிக்குமாறு தொழிற்சங்கங்கள் அமைச்சரிடம் வேண்டுகோள் விடுத்ததாக அவர் தெரிவித்தார். 
 
மேலும் தற்போதைய தொழிற்சங்க நடவடிக்கைகளைக் கைவிடுவதற்காக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பான யோசனைகளையும் முன்வைத்ததாக அவர் மேலும் தெரிவித்தார்.
முதன் முறையாக தொழிற்சங்கங்களை சந்தித்த புதிய கல்வி அமைச்சர்: முதன் முறையாக தொழிற்சங்கங்களை சந்தித்த புதிய கல்வி அமைச்சர்: Reviewed by irumbuthirai on August 27, 2021 Rating: 5

பரீட்சைகள் பிற்போடப்படுமா? கல்வி அமைச்சரின் அறிவிப்பு!

August 27, 2021

இவ்வருடத்திற்குரிய புலமைப் பரிசில் பரீட்சை மற்றும் உயர்தர பரீட்சை என்பவற்றுக்கான விண்ணப்ப திகதி நீடிக்கப்பட்டாலும் 
 
பரீட்சைகள் உரிய தினத்தில் நடத்தப்படும் என கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். 
 
எவ்வாறாயினும் பரீட்சைக்குரிய தினங்களில் ஏதாவது திருத்தங்கள் மேற்கொள்ளப்படுமாயின் அது தொடர்பான தீர்மானம் அடுத்துவரும் ஓரிரு வாரங்களுக்குள் மேற்கொள்ளப்படும் என அவர் மேலும் தெரிவித்தார். 
 
தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை நவம்பர் மாதம் 14 ஆம் திகதியும் உயர்தரப் பரீட்சை நவம்பர் 15 முதல் டிசம்பர் 10 வரை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பரீட்சைகள் பிற்போடப்படுமா? கல்வி அமைச்சரின் அறிவிப்பு! பரீட்சைகள் பிற்போடப்படுமா? கல்வி அமைச்சரின் அறிவிப்பு! Reviewed by irumbuthirai on August 27, 2021 Rating: 5
Powered by Blogger.