ஆண்கள் கிரிக்கெட் அணிக்கு அனுமதி வழங்கிய தலிபான்

September 01, 2021
 

ஆப்கானிஸ்தானை 20 வருடங்களின் பின் தாலிபன்கள் மீண்டும் கைப்பற்றிய பிறகு முதன்முறையாக அந்நாட்டின் ஆண்கள் கிரிக்கெட் அணி சர்வதேச போட்டியில் விளையாடுவதற்கான அனுமதியை தாலிபன்கள் வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது. 
 
ஆஸ்திரேலியாவுக்கு ஆண்கள் கிரிக்கெட் அணியை அனுப்புவதற்கான அனுமதி கிடைத்துள்ளதாக” ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் முக்கிய நிர்வாகியான ஹமீத் ஷிவாரி தெரிவித்துள்ளார். 
 
நவம்பர் மாதம் பிற்பகுதியில் இந்த போட்டிகள் நடைபெறவுள்ளன. 
 
அமெரிக்க படையெடுப்பு ஆரம்பிக்க முன்னர் ஆப்கானை தலிபான்கள் ஆண்டனர். அந்த காலப்பகுதியிலும் பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களுக்கு தடைவிதித்திருந்தாலும் கிரிக்கற்றுக்கு அனுமதி வழகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஆண்கள் கிரிக்கெட் அணிக்கு அனுமதி வழங்கிய தலிபான் ஆண்கள் கிரிக்கெட் அணிக்கு அனுமதி வழங்கிய தலிபான் Reviewed by irumbuthirai on September 01, 2021 Rating: 5

மொடர்னா மற்றும் பைசர் தடுப்பூசிகள் பற்றி வெளியான ஆய்வு!

September 01, 2021
 

மொடர்னா மற்றும் பைசர் தடுப்பூசிகள் பற்றி பெல்ஜியத்தில் மேற்கொண்ட ஆய்வு தொடர்பாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, எதிர்ப்பு சக்தி ஆய்வு மற்றும் மரபணு விஞ்ஞான நிறுவனத்தின் பணிப்பாளர் வைத்தியர் சந்திம ஜீவந்திர தெரிவித்துள்ளார். 
 
அதாவது அந்த ஆய்வின்படி பைசர் முதலாவது தடுப்பூசியை விட மொடர்னா முதலாவது தடுப்பூசியில் இருமடங்கு எதிர்ப்பு சக்தி உருவாவது கண்டறியப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
மொடர்னா மற்றும் பைசர் தடுப்பூசிகள் பற்றி வெளியான ஆய்வு! மொடர்னா மற்றும் பைசர் தடுப்பூசிகள் பற்றி வெளியான ஆய்வு! Reviewed by irumbuthirai on September 01, 2021 Rating: 5

எந்தவொரு தடுப்பூசிக்கும் கட்டுப்படாத புதிய வைரஸ் திரிபு கண்டுபிடிப்பு!

September 01, 2021
 

எந்த ஒரு தடுப்பூசிக்கும் கட்டுப்படாத புதிய வைரஸ் தெரிபு பரவி வருவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. 
 
மூ என அழைக்கப்படும் இந்த திரிபு முதன்முதலில் கொலம்பியாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 
 
இது எந்த ஒரு தடுப்பூசிக்கும் கட்டுப்படாது எனவும் மிக வேகமாக பரவக்கூடியது எனவும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது
எந்தவொரு தடுப்பூசிக்கும் கட்டுப்படாத புதிய வைரஸ் திரிபு கண்டுபிடிப்பு! எந்தவொரு தடுப்பூசிக்கும் கட்டுப்படாத புதிய வைரஸ் திரிபு கண்டுபிடிப்பு! Reviewed by irumbuthirai on September 01, 2021 Rating: 5

Vacancies (Lanka Electricity Company PVT Ltd.)

September 01, 2021


Vacancies (Lanka Electricity Company PVT Ltd.)

Closing date: 13-09-2021.

See the details below.


Source: Sunday Observer.

Vacancies (Lanka Electricity Company PVT Ltd.) Vacancies (Lanka Electricity Company PVT Ltd.) Reviewed by irumbuthirai on September 01, 2021 Rating: 5

முழுமையாக வெளியேறிய அமெரிக்க படைகள்: முக்கிய 30 தகவல்கள்

August 31, 2021

20 வருடங்களுக்குப் பிறகு ஆப்கான் மண்ணிலிருந்து 31-08-2021 திகதியோடு அமெரிக்க தலைமையிலான படைகள் முழுமையாக வெளியேறியிருக்கின்றன. இது தொடர்பான 30 தகவல்களை இங்கே தருகிறோம்.

1) 2001 செப்டம்பர் 11 அமெரிக்க இரட்டை கோபுர தாக்குதலை அடிப்படையாக வைத்து ஆப்கான் மீது அமெரிக்கா படையெடுத்தது. அப்போது ஆப்கானில் ஆட்சியிலிருந்த தலிபான்கள், தீவிரவாதிகளுக்கு புகலிடம் அளிப்பதாக குற்றம் சுமத்தியே இந்த படையெடுப்பு நடைபெற்றது.

 

2) 1996 - 2001 வரை ஆட்சியில்  தலிபான்கள் இருந்தனர். தற்போது 20 வருடங்களின் பின்னர் மீண்டும் ஆட்சியை கைப்பற்றி உள்ளனர்.

 

3)   ஆப்கானுக்கு படையெடுப்பை ஆரம்பித்தவர் அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யூ புஷ்.

 

4) படையெடுப்பு ஆரம்பித்ததன் பின்னர் தற்போதுள்ள ஜனாதிபதி ஜோ பைடன் 4வது அதிபர் ஆவார்.

 

5) ஜோர்ஜ் டபிள்யூ புஷ் மற்றும் டொனால்ட் ட்ரம்ப் ஆகியோர் குடியரசு கட்சியையும் பராக் ஒபாமா மற்றும் ஜோ பைடன் ஆகியோர் ஜனநாயக கட்சியையும் சேர்ந்தவர்கள்.

 

6) பராக் ஒபாமாவின் காலத்தில்தான் ஆப்கானில் அமெரிக்க படைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது. சுமார் ஒரு லட்சத்து 40 ஆயிரம் வரை அமெரிக்க படையினர் அதிகரிக்கப்பட்டனர். மேலும் இவரது காலத்தில்தான் பாகிஸ்தானில் வைத்து ஓசாமா பின்லேடன் கொல்லப்பட்டார்.

 

7)  டோனால்ட் டிரம்ப் இன் காலத்தில்தான் அமெரிக்க படைகளை மீளப் பெறுவதற்கான ஒப்பந்தம் தலிபான்களுடன் கைச்சாத்திடப்பட்டது. தற்போது ஜனநாயக கட்சியைச் சேர்ந்த ஜோ பைடன் அதை முடித்து வைத்துள்ளார்.

 

8) 2001-2019 வரை ஆப்கான் போருக்காக அமெரிக்கா சுமார் 822 பில்லியன் அமெரிக்க டொலரை செலவழித்துள்ளது.  இதன் கூட்டணி நாடுகளான பிரிட்டன் மற்றும் ஜெர்மனி முறையே 30 பில்லியன் மற்றும் 19 பில்லியன் அமெரிக்க டொலரை செலவழித்துள்ளன. 

 

9)  அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக பிரிட்டன் மற்றும் ஜெர்மனி  நாட்டுப் படைகளே ஆப்கானில் அதிகமாக இருந்தனர்.

 

10) அமெரிக்காவுக்கு ஆதரவாக இருந்த நேட்டோ படைகள் 2014-ம் ஆண்டே ஆப்கானை விட்டு வெளியேறிவிட்டன.

 

11)  2001 முதல் இதுவரை சுமார் 2400 அமெரிக்கப் படையினர் ஆப்கான் மண்ணில் கொல்லப்பட்டுள்ளனர்.

 

12) இரட்டைக் கோபுரத் தாக்குதலின் சூத்திரதாரி ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்டதோடு அவரது அல்கைதா இயக்கமும் வலிமை குன்றச் செய்யப்பட்டுள்ளது. எனவே அமெரிக்காவின் நோக்கம் நிறைவேற்றப்பட்டுள்ளது என பைடன் கூறியிருந்தார்.

 

13)  வேறொரு நாட்டின் உள்நாட்டுப் போரில் இனிமேல் அமெரிக்க துருப்புகளை பங்கெடுக்க வைக்க மாட்டோம் எனவும் பைடன் தெரிவித்தார்.

 

14)  இரட்டை கோபுர தாக்குதலில் 20 ஆவது ஆண்டு நிறைவு எதிர்வரும் செப்டம்பர் 11ஆம் திகதி. அதற்கு முன்னர் அமெரிக்க படைகள் முழுமையாக வெளியேற்றப்படும் என ஜோ பைடன் அறிவித்ததும் தலிபான்கள் ஆப்கானில் பல்வேறு பகுதிகளை விரைவாக கைப்பற்றத் தொடங்கினர்.

 

15)  ஆப்கான் ராணுவத்தின் கையில் பாதுகாப்பு ஒப்படைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பல்வேறு இடங்களை ராணுவத்தின் எந்தவித எதிர்ப்பும் இல்லாமல் தாலிபான்கள் கைப்பற்றினர்.

 

16)  எதிர்பார்த்ததைவிட மிக விரைவாகவே தலைநகர் காபூலை தலிபான்கள் கைப்பற்றினர்.

 

17) உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியம் என்பன ஆப்கானுக்கான தமது நிதி உதவிகளை நிறுத்தி உள்ளன.

 

18)  அமெரிக்கா மற்றும் அதன் நேச நாடுகளால் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். இதில் ஏராளமானவர்கள் ஆப்கானியர்கள். 

 

19) ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறிய கடைசி அமெரிக்க வீரர் கிறிஸ் டோஹன்யு என்பவர். இவர் அமெரிக்காவின் 82வது ஏர்போன் படைப்பிரிவின் கமாண்டிங் ஜென்ரல் பதவியில் உள்ளவர்.

 

20) அமெரிக்க படை முழுமையாக வெளியேறியதும் துப்பாக்கி வேட்டுக்களை தீர்த்து தலிபான்கள் தமது சந்தோஷத்தை வெளிப்படுத்தினர். ஆப்கானுக்கு  தற்போதுதான் முழுமையான சுதந்திரம் கிடைத்ததாக தலிபான் உயர்பீடம் அறிவித்தது.

 

21)  விமான நிலைய வளாகத்தில் பல கனரக ஆயுதங்கள் உட்பட அதிநவீன ஆயுதங்கள் என்பவற்றை அமெரிக்க தலைமையிலான கூட்டுப்படை விட்டுச் சென்றுள்ளது.

 

22) விட்டுச்சென்ற ஆயுதங்களோடு விமான நிலைய பாதுகாப்பில் தலிபான்கள்  ஈடுபடும் காணொளிகள் வெளியாகியுள்ளன.

 

23)  விமான நிலையத்தில் வைத்து தமது படைகளுக்கு உரையாற்றிய தலிபான் செய்தி தொடர்பாளர், நமது நேர்மை மற்றும் பொறுமையால்தான் இன்று இந்த நாடு அந்நிய சக்திகளிடம் இருந்து விடுபட்டுள்ளது. இன்னுமொரு அந்நிய படையெடுப்பு இங்கு நடக்கக்கூடாது.  நமக்கு மகிழ்ச்சியும் வளமும் உண்மையான இஸ்லாமிய ஒழுங்கும் தேவை.  பொது மக்களுக்கு மரியாதை கொடுங்கள். நாம் எப்பொழுதும் அவர்களின் சேவகர்கள் என்றார்.

 

24) அமெரிக்க வரலாற்றிலேயே சண்டையில் ஈடுபடாமல் இடம்பெற்ற மிகப்பெரிய வெளியேற்ற நடவடிக்கை  இதுதான் என அந்நடவடிக்கைகளுக்கு தலைமை வகித்த ஜெனரல் பிராங்க் மக்கன்சி தெரிவித்துள்ளார்.

 

25)  இனிமேல் ஆப்கானிஸ்தானுடன் வெளியுறவு தொடர்பு மாத்திரமே இருக்கும் என அமெரிக்கா அறிவித்துள்ளது. இதற்கான அலுவலகம் ஆப்கானில் இருக்காது. கட்டார், தோஹாவிலிருந்து அலுவலகம் இயங்கும் என தெரிவித்துள்ளது.

 

26) பாடசாலைகளில் ஆண்கள் பெண்களுக்கு தனித்தனி வகுப்பறைகள் இருக்க வேண்டும் என தலிபான்கள் உத்தரவிட்டுள்ளனர். ஆனால் முன்னர் போல் பெண்கள் கல்விக்கு தடை விதித்ததாக தகவல்கள் இல்லை.

 

27) அமையப்போகும் ஆட்சி தொடர்பில் தமது மூத்த தலைவர்களுடன் மூன்று நாட்களாக நடந்த கலந்துரையாடல் நிறைவடைந்துள்ளதாக தலிபான் அறிவித்துள்ளது.

 

28) பஞ்சிர் பிராந்தியம் தவிர்ந்த ஏனைய சகல  இடங்களும் தலிபான் கட்டுப்பாட்டில் தற்போது உள்ளது.   இது இயற்கையிலேயே மலைகளால் சூழப்பட்ட பாதுகாப்பான பள்ளத்தாக்கு பிரதேசமாகும்.

 

29) பஞ்சிர் போராளிகள் தலிபான்களுக்கு எதிரானவர்கள். தாம் ஆயுதங்களோடு தலிபான்களை எதிர்கொள்ள தயாராக இருப்பதாக அறிவித்துள்ளனர்.  தலிபான்கள் பஞ்சிர் பிரதேசத்தை சுற்றிவளைத்துள்ளதோடு உணவு உட்பட பல்வேறு விடயங்களுக்கான விநியோகத்தையும் துண்டித்து உள்ளனர்.

 

30)  அமெரிக்காவின் போர் முடிந்து விட்டது. ஆனால் ஆப்கான் மக்களின் போர் இன்னும் முடியவில்லை.

தொகுப்பு: irumbuthirainews.com 

 

Join our Telegram channel:

https://t.me/irumbuthirainews

முழுமையாக வெளியேறிய அமெரிக்க படைகள்: முக்கிய 30 தகவல்கள் முழுமையாக வெளியேறிய அமெரிக்க படைகள்: முக்கிய 30 தகவல்கள் Reviewed by irumbuthirai on August 31, 2021 Rating: 5

Vacancies (Sri Jayawardenapura General Hospital)

August 31, 2021
 00000

Vacancies (Sri Jayawardenapura General Hospital) 
 
Closing date: 13-09-2021. 
 
See the details below.
 



Vacancies (Sri Jayawardenapura General Hospital) Vacancies (Sri Jayawardenapura General Hospital) Reviewed by irumbuthirai on August 31, 2021 Rating: 5

அதிக வீரியம் கொண்ட C.1.2 கொரோனா வைரஸ் திரிபு 6 நாடுகளில்...

August 31, 2021
 

அதிக வீரியம் கொண்ட C.1.2 என்ற கொரோனா வைரஸ் திரிபு தென்னாபிரிக்கா, கொங்கோ, மொரீசியஸ், போர்த்துக்கல், நியூசிலாந்து மற்றும் ஸ்விட்சர்லாந்து போன்ற நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 
 
இந்த அதிக பிறழ்வு கொண்ட வைரஸ் திரிபு தென்னாபிரிக்காவில் முதலில் கண்டறியப்பட்டதாக அமெரிக்க தேசிய தொற்றுநோய் நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதிக வீரியம் கொண்ட C.1.2 கொரோனா வைரஸ் திரிபு 6 நாடுகளில்... அதிக வீரியம் கொண்ட C.1.2 கொரோனா வைரஸ் திரிபு 6 நாடுகளில்... Reviewed by irumbuthirai on August 31, 2021 Rating: 5

ஓய்வுபெற்ற அரச ஊழியர்களுக்கு அக்ரஹார காப்புறுதியின் நன்மைகளை அதிகரித்தல்:

August 31, 2021

 


ஓய்வுபெற்ற அரச ஊழியர்களுக்காக அக்ரஹார காப்புறுதி நன்மைகளை அதிகரித்தல் தொடர்பாக 30-8-2021 அன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தை இங்கு தருகிறோம்.


ஓய்வு பெற்ற அரச ஊழியர்களுக்காக தற்போது நடைமுறையிலுள்ள அக்ரஹார காப்புறுதி திட்டத்தின் கீழுள்ள நன்மைகளை மேலும் அதிகரித்தல் 
 
2016 ஜனவரி மாதம் 01 ஆம் திகதிக்குப் பின்னர் அரச சேவையிலிருந்து ஓய்வு பெற்றவர்கள் தமது 70 வயது வரை தற்போது நடைமுறையிலுள்ள அக்ரஹார காப்புறுதி திட்டத்தின் கீழ் நன்மைகளை பெற்றுக்கொடுப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 
 
குறித்த தினத்திற்கு முன்னர் அரச சேவையிலிருந்து ஓய்வு பெற்றுள்ளவர்களுக்காக குறித்த நன்மைகயைப் பெற்றுக் கொடுப்பதற்கு இயலுமான வகையில் அக்ரஹார காப்புறுதி திட்டத்தை திருத்தம் செய்வதற்காக 2020 யூலை மாதம் 22 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. 
 
அதற்கமைய, தற்போது நடைமுறையிலுள்ள பிரதிபலன்களை மேலும் அதிகரித்து ஓய்வு பெற்ற அரச ஊழியர்கள் அனைவருக்கும் ஏற்புடைய வகையில் அக்ரஹார காப்புறுதி திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக அரச சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
Source: அரசாங்க தகவல் திணைக்களம்.

ஓய்வுபெற்ற அரச ஊழியர்களுக்கு அக்ரஹார காப்புறுதியின் நன்மைகளை அதிகரித்தல்: ஓய்வுபெற்ற அரச ஊழியர்களுக்கு அக்ரஹார காப்புறுதியின் நன்மைகளை அதிகரித்தல்: Reviewed by irumbuthirai on August 31, 2021 Rating: 5

30-08-2021 அன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்ட தீர்மானங்கள்

August 31, 2021
 

30-08-2021 அன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது எடுக்கப்பட்ட தீர்மானங்கள் இங்கு தருகிறோம். 
இதில், 
 
அதிபர், ஆசிரியர்களின் சம்பளப் பிரச்சினைகளுக்காக அமைச்சரவையால் முன்வைக்கப்பட்ட தீர்மானங்கள் உட்பட இன்னும் பல முக்கிய தீர்மானங்கள் அடங்கியுள்ளன. 
 
இதன் முழு வடிவத்தைப் பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க. 
 
முன்னைய அமைச்சரவை கூட்டத்திற்கு செல்ல...
30-08-2021 அன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்ட தீர்மானங்கள் 30-08-2021 அன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்ட தீர்மானங்கள் Reviewed by irumbuthirai on August 31, 2021 Rating: 5

அடுத்த மாதம் முதல் அதிபர், ஆசிரியர்களுக்கு 5000 ரூபா இடைக்கால கொடுப்பணவு!

August 31, 2021

அதிபர் ஆசிரியர் தொழிற்சங்கங்கள் தமது தொழிற்சங்க போராட்டங்களை ஆரம்பித்து இன்றுடன் 51 நாட்களாகின்றன. 
 
இந்நிலையில் இது தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக அமைச்சரவை உப குழு இம்மாதம் 9ஆம் திகதி நியமிக்கப்பட்டது. 
 
குறித்த உபகுழு பல கட்டங்களாக தொழிற்சங்கங்களை சந்தித்து தமது பரிந்துரைகளை தயாரித்தது. இந்நிலையில் குறித்த பரிந்துரைகளுக்கு நேற்றைய தினம் இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின்போது அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. 
 
அந்த வகையில் எதிர்வரும் நவம்பர் மாதம் இந்த 
 
சேவையை வரைவிட்ட சேவையாக அறிவிக்கப்படும். எதிர்வரும் வரவுசெலவுத் திட்டத்திலிருந்து கட்டங்கட்டமாக சம்பள அதிகரிப்பு வழங்கப்படும். அதுவரை அடுத்த மாதத்திலிருந்து இடைக்கால கொடுப்பனவாக 5000 ரூபா வழங்கப்படும் என இந்த அமைச்சரவை உப குழுவின் உறுப்பினர்களில் ஒருவரான அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
 
இதேவேளை இது தொடர்பில் கருத்து தெரிவித்த இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் செயலாளர் மஹிந்த ஜயசிங்க, 
 
நாம் எதிர்பார்த்தது சுபோதினி அறிக்கையை. ஆனால் 2018ஆம் ஆண்டு கூறிய பிரேரணைகளை இப்பொழுது கட்டங்கட்டமாக செய்ய இருக்கிறார்கள். சுபோதினி அறிக்கை என்ற விடயத்தில் நாம் உறுதியாக இருக்கிறோம். எவ்வாறாயினும் இந்த இடைக்கால தீர்வை நாம் எதிர்க்க போவதும் இல்லை. எமது அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பாக ஏனைய தொழிற்சங்கங்களோடும் கலந்துரையாடி தீர்மானிக்கப்படும்  என்று அவர் தெரிவித்தார்.
 
இதேவேளை இது தொடர்பில் கருத்து தெரிவித்த இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின், 
 
இந்த அமைச்சரவை தீர்மானம் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இல்லை என்று தெரிவித்திருக்கிறார்.
அடுத்த மாதம் முதல் அதிபர், ஆசிரியர்களுக்கு 5000 ரூபா இடைக்கால கொடுப்பணவு! அடுத்த மாதம் முதல் அதிபர், ஆசிரியர்களுக்கு 5000 ரூபா இடைக்கால கொடுப்பணவு! Reviewed by irumbuthirai on August 31, 2021 Rating: 5

Vacancies (Ministry of Agriculture - Smallholder Agribusiness Partnership Programme)

August 30, 2021

Vacancies (Ministry of Agriculture - Smallholder Agribusiness Partnership Programme) 
 
Junior Consultant 
Regional Project Coordinators 
 
Closing date: 13-09-2021 (2:30PM) 
 
See the details below.

 
 Source: Sunday Observer.
Vacancies (Ministry of Agriculture - Smallholder Agribusiness Partnership Programme) Vacancies (Ministry of Agriculture - Smallholder Agribusiness Partnership Programme) Reviewed by irumbuthirai on August 30, 2021 Rating: 5

அதிபர் ஆசிரியர் சம்பள பிரச்சினைக்கு தீர்வு: அமைச்சரவைக் கூட்ட முடிவு வெளியானது

August 30, 2021

அதிபர் மற்றும் ஆசிரியர்களின் சம்பளப் பிரச்சினைக்காக அமைச்சரவை உப குழுவினால் முன்வைக்கப்பட்ட 
 
பரிந்துரைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. 
 
இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்திலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. 
 
மேலும் குறித்த பரிந்துரைகள் எதிர்வரும் வரவு செலவுத்திட்டத்தில் ஆரம்பித்து கட்டங்கட்டமாக செயற்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதிபர் ஆசிரியர் சம்பள பிரச்சினைக்கு தீர்வு: அமைச்சரவைக் கூட்ட முடிவு வெளியானது அதிபர் ஆசிரியர் சம்பள பிரச்சினைக்கு தீர்வு: அமைச்சரவைக் கூட்ட முடிவு வெளியானது Reviewed by irumbuthirai on August 30, 2021 Rating: 5

பட்டதாரி பயிலுனர்களுக்கான அறிவித்தல்!

August 30, 2021
 

பட்டதாரி பயிலுனர்களின் தகவல்களை Online முறையில் பெற்றுக் கொள்ளல். 

 
மேற்படி விடயம் தொடர்பான மற்றுமொரு அறிவித்தல் 27-08-2021 திகதி இடப்பட்டு அரசு சேவைகள் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது. 
 
இது தொடர்பில் 11-08-2021 மற்றும் 20-08-2021 போன்ற திகதிகளில் வெளியிடப்பட்ட கடிதத்திற்கு மேலதிகமாக இது வெளியிடப்படுகிறது. 
 
பட்டதாரி பயிலுனர்கள் தமது பயிற்சி நிலையத்தை உள்ளீடு செய்யும் போது பின்வரும் விடயங்களை கருத்தில் கொள்ள வேண்டும். 
 
தேசிய பாடசாலைகளில் பயிற்சி பெறுகிறவர்களின் பயிற்சி பெறும் சேவை நிலையம் கல்வி அமைச்சு என உள்ளீடு செய்ய வேண்டும். 
 
மாகாண பாடசாலைகளில் பயிற்சி பெறுகிறவர்கள் அந்தந்த மாகாணத்தை பயிற்சி நிலையமாக குறிப்பிட வேண்டும். 
 
அரசாங்க சார்பு நிறுவனம் ஒன்றில் அல்லது அரசாங்க செயற்திட்டம் ஒன்றில் பயிற்சி பெறுகிறவர்கள் பயிற்சி பெறுகின்ற சேவை நிலையம் அந்த நிறுவனத்திற்கு உரிய அமைச்சு ஆகும். 
 
குறிப்பு: ஏற்கனவே தகவல்களை உள்ளீடு செய்த பட்டதாரி பயிலுனர்கள் மேற்படி விடயங்கள் தொடர்பில் வேறு தகவல்களை உள்ளீடு செய்திருந்தால் அவற்றில் திருத்தங்கள் செய்வதற்கு பின்னர் சந்தர்ப்பம் வழங்கப்படும். 

Quick links for login:
 
 
தொழில்நுட்ப காரணங்களுக்காக தரவுகளை உள்ளீடு செய்ய முடியாமல் போன பட்டதாரிகளுக்கு மாத்திரமே மீண்டும் தரவுகளை உள்ளீடு செய்வதற்கு சந்தர்ப்பம் வழங்க முடியும் என்பதனால் தமக்குரிய தினத்திலேயே தரவுகளை உள்ளீடு செய்ய இயன்றவரை முயற்சிக்கவும்.
 
இது தொடர்பான முழுமையான தகவல்களை பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க:


இது தொடர்பில் இதற்கு முன்னர் வெளிவந்த இரு அறிவித்தல்களையும்  பார்வையிட...
 

பட்டதாரி பயிலுனர்களுக்கான அறிவித்தல்! பட்டதாரி பயிலுனர்களுக்கான அறிவித்தல்! Reviewed by irumbuthirai on August 30, 2021 Rating: 5
Powered by Blogger.