2021 வாக்காளர் இடாப்பில் உங்கள் பெயர் உள்ளதா? இல்லாதவர்கள் எவ்வாறு பெயரைப் பதிய வேண்டும்? (வழிகாட்டல் இணைப்பு)
2021 வாக்காளர் இடாப்பில் தங்களது பெயர்கள் காணப்படுகின்றனவா என்பதை சரிபார்த்து கொள்ளுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு பொதுமக்களுக்கு அறிவித்தல் விடுத்துள்ளது.
பெயரை சரிபார்த்தல்:
பெயரை பதிவு செய்தல்:
சகல மாணவர்களுக்கும் கல்வியை வழங்க விசேட திட்டம்:
தற்போதைய நிலையில் பாடசாலைகள் மூடப்பட்டுள்ளமையால் சகல மாணவர்களுக்கும் கல்வியை வழங்கும் தேசிய ரீதியிலான திட்டமொன்றை கல்வி அமைச்சுடன் இணைந்து மிக விரைவில் ஆரம்பிக்க உள்ளதாக ஊடகத்துறை அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.
அரச ஊழியர்களுக்கான சகல மேலதிக கொடுப்பனவுகளும் இடைநிறுத்தம்! புதிய நியமனங்களுக்கும் அனுமதியில்லை!!
அரசாங்கம் மற்றும் அரசு சார்ந்த துறைகளில் எவ்வித புதிய நியமனங்களும் வழங்கப்படக் கூடாது என்பதை வலியுறுத்தும் புதிய சுற்றுநிருபம் நிதி அமைச்சினால் ஏனைய அமைச்சுகளுக்கு அவசரமாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
Closing Date Extended for University Colleges / பல்கலைக்கழக கல்லூரிக்கான விண்ணப்ப திகதி நீடிப்பு
ஆண்கள் கிரிக்கெட் அணிக்கு அனுமதி வழங்கிய தலிபான்
ஆப்கானிஸ்தானை 20 வருடங்களின் பின் தாலிபன்கள் மீண்டும் கைப்பற்றிய பிறகு முதன்முறையாக அந்நாட்டின் ஆண்கள் கிரிக்கெட் அணி சர்வதேச போட்டியில் விளையாடுவதற்கான அனுமதியை தாலிபன்கள் வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
மொடர்னா மற்றும் பைசர் தடுப்பூசிகள் பற்றி வெளியான ஆய்வு!
மொடர்னா மற்றும் பைசர் தடுப்பூசிகள் பற்றி பெல்ஜியத்தில் மேற்கொண்ட ஆய்வு தொடர்பாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, எதிர்ப்பு சக்தி ஆய்வு மற்றும் மரபணு விஞ்ஞான நிறுவனத்தின் பணிப்பாளர் வைத்தியர் சந்திம ஜீவந்திர தெரிவித்துள்ளார்.
எந்தவொரு தடுப்பூசிக்கும் கட்டுப்படாத புதிய வைரஸ் திரிபு கண்டுபிடிப்பு!
எந்த ஒரு தடுப்பூசிக்கும் கட்டுப்படாத புதிய வைரஸ் தெரிபு பரவி வருவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
Vacancies (Lanka Electricity Company PVT Ltd.)
முழுமையாக வெளியேறிய அமெரிக்க படைகள்: முக்கிய 30 தகவல்கள்
20 வருடங்களுக்குப் பிறகு ஆப்கான் மண்ணிலிருந்து 31-08-2021 திகதியோடு அமெரிக்க தலைமையிலான படைகள் முழுமையாக வெளியேறியிருக்கின்றன. இது தொடர்பான 30 தகவல்களை இங்கே தருகிறோம்.
1) 2001 செப்டம்பர் 11 அமெரிக்க இரட்டை கோபுர தாக்குதலை அடிப்படையாக வைத்து ஆப்கான் மீது அமெரிக்கா படையெடுத்தது. அப்போது ஆப்கானில் ஆட்சியிலிருந்த தலிபான்கள், தீவிரவாதிகளுக்கு புகலிடம் அளிப்பதாக குற்றம் சுமத்தியே இந்த படையெடுப்பு நடைபெற்றது.
2) 1996 - 2001 வரை ஆட்சியில் தலிபான்கள் இருந்தனர். தற்போது 20 வருடங்களின் பின்னர் மீண்டும் ஆட்சியை கைப்பற்றி உள்ளனர்.
3) ஆப்கானுக்கு படையெடுப்பை ஆரம்பித்தவர் அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யூ புஷ்.
4) படையெடுப்பு ஆரம்பித்ததன் பின்னர் தற்போதுள்ள ஜனாதிபதி ஜோ பைடன் 4வது அதிபர் ஆவார்.
5) ஜோர்ஜ் டபிள்யூ புஷ் மற்றும் டொனால்ட் ட்ரம்ப் ஆகியோர் குடியரசு கட்சியையும் பராக் ஒபாமா மற்றும் ஜோ பைடன் ஆகியோர் ஜனநாயக கட்சியையும் சேர்ந்தவர்கள்.
6) பராக் ஒபாமாவின் காலத்தில்தான் ஆப்கானில் அமெரிக்க படைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது. சுமார் ஒரு லட்சத்து 40 ஆயிரம் வரை அமெரிக்க படையினர் அதிகரிக்கப்பட்டனர். மேலும் இவரது காலத்தில்தான் பாகிஸ்தானில் வைத்து ஓசாமா பின்லேடன் கொல்லப்பட்டார்.
7) டோனால்ட் டிரம்ப் இன் காலத்தில்தான் அமெரிக்க படைகளை மீளப் பெறுவதற்கான ஒப்பந்தம் தலிபான்களுடன் கைச்சாத்திடப்பட்டது. தற்போது ஜனநாயக கட்சியைச் சேர்ந்த ஜோ பைடன் அதை முடித்து வைத்துள்ளார்.
8) 2001-2019 வரை ஆப்கான் போருக்காக அமெரிக்கா சுமார் 822 பில்லியன் அமெரிக்க டொலரை செலவழித்துள்ளது. இதன் கூட்டணி நாடுகளான பிரிட்டன் மற்றும் ஜெர்மனி முறையே 30 பில்லியன் மற்றும் 19 பில்லியன் அமெரிக்க டொலரை செலவழித்துள்ளன.
9) அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக பிரிட்டன் மற்றும் ஜெர்மனி நாட்டுப் படைகளே ஆப்கானில் அதிகமாக இருந்தனர்.
10) அமெரிக்காவுக்கு ஆதரவாக இருந்த நேட்டோ படைகள் 2014-ம் ஆண்டே ஆப்கானை விட்டு வெளியேறிவிட்டன.
11) 2001 முதல் இதுவரை சுமார் 2400 அமெரிக்கப் படையினர் ஆப்கான் மண்ணில் கொல்லப்பட்டுள்ளனர்.
12) இரட்டைக் கோபுரத் தாக்குதலின் சூத்திரதாரி ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்டதோடு அவரது அல்கைதா இயக்கமும் வலிமை குன்றச் செய்யப்பட்டுள்ளது. எனவே அமெரிக்காவின் நோக்கம் நிறைவேற்றப்பட்டுள்ளது என பைடன் கூறியிருந்தார்.
13) வேறொரு நாட்டின் உள்நாட்டுப் போரில் இனிமேல் அமெரிக்க துருப்புகளை பங்கெடுக்க வைக்க மாட்டோம் எனவும் பைடன் தெரிவித்தார்.
14) இரட்டை கோபுர தாக்குதலில் 20 ஆவது ஆண்டு நிறைவு எதிர்வரும் செப்டம்பர் 11ஆம் திகதி. அதற்கு முன்னர் அமெரிக்க படைகள் முழுமையாக வெளியேற்றப்படும் என ஜோ பைடன் அறிவித்ததும் தலிபான்கள் ஆப்கானில் பல்வேறு பகுதிகளை விரைவாக கைப்பற்றத் தொடங்கினர்.
15) ஆப்கான் ராணுவத்தின் கையில் பாதுகாப்பு ஒப்படைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பல்வேறு இடங்களை ராணுவத்தின் எந்தவித எதிர்ப்பும் இல்லாமல் தாலிபான்கள் கைப்பற்றினர்.
16) எதிர்பார்த்ததைவிட மிக விரைவாகவே தலைநகர் காபூலை தலிபான்கள் கைப்பற்றினர்.
17) உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியம் என்பன ஆப்கானுக்கான தமது நிதி உதவிகளை நிறுத்தி உள்ளன.
18) அமெரிக்கா மற்றும் அதன் நேச நாடுகளால் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். இதில் ஏராளமானவர்கள் ஆப்கானியர்கள்.
19) ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறிய கடைசி அமெரிக்க வீரர் கிறிஸ் டோஹன்யு என்பவர். இவர் அமெரிக்காவின் 82வது ஏர்போன் படைப்பிரிவின் கமாண்டிங் ஜென்ரல் பதவியில் உள்ளவர்.
20) அமெரிக்க படை முழுமையாக வெளியேறியதும் துப்பாக்கி வேட்டுக்களை தீர்த்து தலிபான்கள் தமது சந்தோஷத்தை வெளிப்படுத்தினர். ஆப்கானுக்கு தற்போதுதான் முழுமையான சுதந்திரம் கிடைத்ததாக தலிபான் உயர்பீடம் அறிவித்தது.
21) விமான நிலைய வளாகத்தில் பல கனரக ஆயுதங்கள் உட்பட அதிநவீன ஆயுதங்கள் என்பவற்றை அமெரிக்க தலைமையிலான கூட்டுப்படை விட்டுச் சென்றுள்ளது.
22) விட்டுச்சென்ற ஆயுதங்களோடு விமான நிலைய பாதுகாப்பில் தலிபான்கள் ஈடுபடும் காணொளிகள் வெளியாகியுள்ளன.
23) விமான நிலையத்தில் வைத்து தமது படைகளுக்கு உரையாற்றிய தலிபான் செய்தி தொடர்பாளர், நமது நேர்மை மற்றும் பொறுமையால்தான் இன்று இந்த நாடு அந்நிய சக்திகளிடம் இருந்து விடுபட்டுள்ளது. இன்னுமொரு அந்நிய படையெடுப்பு இங்கு நடக்கக்கூடாது. நமக்கு மகிழ்ச்சியும் வளமும் உண்மையான இஸ்லாமிய ஒழுங்கும் தேவை. பொது மக்களுக்கு மரியாதை கொடுங்கள். நாம் எப்பொழுதும் அவர்களின் சேவகர்கள் என்றார்.
24) அமெரிக்க வரலாற்றிலேயே சண்டையில் ஈடுபடாமல் இடம்பெற்ற மிகப்பெரிய வெளியேற்ற நடவடிக்கை இதுதான் என அந்நடவடிக்கைகளுக்கு தலைமை வகித்த ஜெனரல் பிராங்க் மக்கன்சி தெரிவித்துள்ளார்.
25) இனிமேல் ஆப்கானிஸ்தானுடன் வெளியுறவு தொடர்பு மாத்திரமே இருக்கும் என அமெரிக்கா அறிவித்துள்ளது. இதற்கான அலுவலகம் ஆப்கானில் இருக்காது. கட்டார், தோஹாவிலிருந்து அலுவலகம் இயங்கும் என தெரிவித்துள்ளது.
26) பாடசாலைகளில் ஆண்கள் பெண்களுக்கு தனித்தனி வகுப்பறைகள் இருக்க வேண்டும் என தலிபான்கள் உத்தரவிட்டுள்ளனர். ஆனால் முன்னர் போல் பெண்கள் கல்விக்கு தடை விதித்ததாக தகவல்கள் இல்லை.
27) அமையப்போகும் ஆட்சி தொடர்பில் தமது மூத்த தலைவர்களுடன் மூன்று நாட்களாக நடந்த கலந்துரையாடல் நிறைவடைந்துள்ளதாக தலிபான் அறிவித்துள்ளது.
28) பஞ்சிர் பிராந்தியம் தவிர்ந்த ஏனைய சகல இடங்களும் தலிபான் கட்டுப்பாட்டில் தற்போது உள்ளது. இது இயற்கையிலேயே மலைகளால் சூழப்பட்ட பாதுகாப்பான பள்ளத்தாக்கு பிரதேசமாகும்.
29) பஞ்சிர் போராளிகள் தலிபான்களுக்கு எதிரானவர்கள். தாம் ஆயுதங்களோடு தலிபான்களை எதிர்கொள்ள தயாராக இருப்பதாக அறிவித்துள்ளனர். தலிபான்கள் பஞ்சிர் பிரதேசத்தை சுற்றிவளைத்துள்ளதோடு உணவு உட்பட பல்வேறு விடயங்களுக்கான விநியோகத்தையும் துண்டித்து உள்ளனர்.
30) அமெரிக்காவின் போர் முடிந்து விட்டது. ஆனால் ஆப்கான் மக்களின் போர் இன்னும் முடியவில்லை.
தொகுப்பு: irumbuthirainews.com
Join our Telegram channel:
Vacancies (Sri Jayawardenapura General Hospital)
அதிக வீரியம் கொண்ட C.1.2 கொரோனா வைரஸ் திரிபு 6 நாடுகளில்...
அதிக வீரியம் கொண்ட C.1.2 என்ற கொரோனா வைரஸ் திரிபு தென்னாபிரிக்கா, கொங்கோ, மொரீசியஸ், போர்த்துக்கல், நியூசிலாந்து மற்றும் ஸ்விட்சர்லாந்து போன்ற நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஓய்வுபெற்ற அரச ஊழியர்களுக்கு அக்ரஹார காப்புறுதியின் நன்மைகளை அதிகரித்தல்:
ஓய்வுபெற்ற அரச ஊழியர்களுக்காக அக்ரஹார காப்புறுதி நன்மைகளை அதிகரித்தல் தொடர்பாக 30-8-2021 அன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தை இங்கு தருகிறோம்.