கொரோனா தடுப்பூசிகளை வடகொரியா நிராகரிப்பது ஏன்?
irumbuthirai
September 04, 2021
ஏழை நாடுகளுக்கும் தடுப்பூசி கிடைப்பதை உறுதிப்படுத்தும் நோக்கில் நடைமுறைப்படுத்தப்படும் கோவெக்ஸ் திட்டத்தின் கீழ் வடகொரியாவுக்கு வழங்கப்பட்ட சுமார் 30 இலட்சம் எண்ணிக்கையிலான தடுப்பூசிகளை அந்நாடு நிராகரித்துள்ளது.
கடுமையாக பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு அந்த தடுப்பூசியை வழங்குமாறு வடகொரியா தெரிவித்துள்ளதாக ஐநா செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.
கடந்த ஆகஸ்ட் 19ஆம் திகதி வரை வடகொரியாவில் எவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டதாக பதிவுகள் இல்லை.
உலகில் கொரோனா ஆரம்பித்த காலத்திலிருந்தே வடகொரியா கடுமையான
கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்தி வருகிறது. ஆரம்பத்திலேயே தனது நாட்டு எல்லைகளை அது மூடிவிட்டது.
வடகொரியா தடுப்பூசிகளை நிராகரிப்பது இது முதற்தடவை அல்ல. இதற்கு முன்னர் ஜூலை மாதத்தில் வழங்கப்பட்ட ஒரு தொகை தடுப்பூசிகளை அது நிராகரித்திருந்தது.
எவ்வாறாயினும் தடுப்பூசியின் செயல்திறன் மீது கொண்டுள்ள சந்தேகம் காரணமாகவே வடகொரியா இவ்வாறு நிராகரிப்பதாக உளவுத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொரோனா தடுப்பூசிகளை வடகொரியா நிராகரிப்பது ஏன்?
Reviewed by irumbuthirai
on
September 04, 2021
Rating: