தற்காலிக பதிவு தொடர்பாக திறந்த பல்கலைக்கழகத்தின் அறிவித்தல்!

September 05, 2021
 

பதிவு செய்யும் போது நீங்கள் சமர்ப்பித்த சான்றிதழ்களின் நகல்களின் அடிப்படையில் தற்காலிக பதிவை வழங்க பல்கலைக்கழக அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். நாட்டில் கோவிட் -19 தொற்று நோயின் தற்போதைய நிலைமை காரணமாக, சான்றிதழ்களின் நம்பகத்தன்மையின் பௌதீக ரீதியான சரிபார்ப்பு தாமதமாகும். உங்கள் தகுதி அல்லது மாற்றுத் தகுதிகளை நிரூபிக்க நீங்கள் சமர்ப்பித்த சான்றிதழ்கள், இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் செனட் ஏற்றுக்கொள்ள முடியாதவை எனத் தெரிந்தால், உங்கள் பதிவை உடனடியாக ரத்து செய்யும் உரிமையை பல்கலைக்கழகம் கொண்டுள்ளது.
 

 
தற்காலிக பதிவு தொடர்பாக திறந்த பல்கலைக்கழகத்தின் அறிவித்தல்! தற்காலிக பதிவு தொடர்பாக திறந்த பல்கலைக்கழகத்தின் அறிவித்தல்! Reviewed by Irumbu Thirai News on September 05, 2021 Rating: 5

இனிமேல் தலிபான்களுக்கு அழுத்தம் கொடுக்க அமெரிக்காவால் முடியுமா?

September 04, 2021
 

20 வருட யுத்தத்தை ஆப்கானில் முடித்துக் கொண்டு வெளியேறிய அமெரிக்காவின்  முடிவு சரியானதுதான் என ஜோ பைடன் மீண்டும் தெரிவித்துள்ளார். 
 
ஆனால் எதிர்க்கட்சிகளின் பல்வேறு விமர்சனங்களை அவர் சந்தித்து வருகிறார். அதற்கு பதிலளித்த பைடன், முன்னாள் ஜனாதிபதி டோனால்ட் ரம்ப் செய்து கொண்ட ஒப்பந்தத்தையே தான் நிறைவேற்றி உள்ளதாக தெரிவித்துள்ளார். 
 
இதேவேளை இவ்வளவு விரைவாக தலிபான்கள் முன்னேறுவார்கள் என்றோ ஆப்கான் அரசும் ஆப்கான் ராணுவமும் இவ்வளவு விரைவாக தோல்வியை சந்திப்பார்கள் என்றோ எதிர்பார்க்கவில்லை என அமெரிக்கா தெரிவித்துள்ளது. 
 
இந்நிலையில் சுமார் 200 அமெரிக்க குடிமக்கள் இன்னும் ஆப்கானிஸ்தானில் 
 
எஞ்சியிருக்கிறார்கள். ஆனால் அவர்களை வெளியேற்ற உதவுவதாக தலிபான்களிடமிருந்து அமெரிக்கா வாக்குறுதி பெற்றிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
இந்த விடயங்கள் எவ்வாறிருந்தாலும் இனிமேல் ஆப்கான் விவகாரத்தில் அமெரிக்கா தலையிடவோ தலிபான்களுக்கு அழுத்தம் கொடுக்கவோ முடியுமா என்ற விடயம் தொடர்பில் இரு வேறு கருத்துக்கள் நிலவுகின்றன. 
 
ஆப்கானில் அமெரிக்கா இருக்கும் பொழுதே தலிபான்களுக்கு அழுத்தம் கொடுக்க முடியவில்லை. இப்பொழுது இல்லாத நிலையில் எவ்வாறு அழுத்தம் கொடுக்கலாம் என்ற கருத்து நிலவுகிறது. 
 
ஆனால் உலகத்தில் எங்களுக்கிருக்கும் செல்வாக்கையும் ஐநாவின் பரிந்துரைகளையும் நாம் தலிபான் விவகாரத்தில் அழுத்தம் கொடுக்க பயன்படுத்துவோம். எவ்வாறாயினும் தலிபானுடனான பேச்சுவார்த்தைக்கான எங்களது பாதை இன்னும் திறந்தே உள்ளது என்று வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஜென் சாகி தெரிவித்துள்ளார். 
 
தலிபான்கள் மீது அமெரிக்கா மீண்டும் அழுத்தம் கொடுக்க முடியுமா? முடியாதா? என்ற விடயம் தலிபான்கள் எந்த நாடுகளோடு கூட்டிச் சேர்கிறார்கள் என்ற விடயத்திலும் தங்கியிருப்பதாக விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.
இனிமேல் தலிபான்களுக்கு அழுத்தம் கொடுக்க அமெரிக்காவால் முடியுமா? இனிமேல் தலிபான்களுக்கு அழுத்தம் கொடுக்க அமெரிக்காவால் முடியுமா? Reviewed by irumbuthirai on September 04, 2021 Rating: 5

கொரோனா தடுப்பூசிகளை வடகொரியா நிராகரிப்பது ஏன்?

September 04, 2021
 

ஏழை நாடுகளுக்கும் தடுப்பூசி கிடைப்பதை உறுதிப்படுத்தும் நோக்கில் நடைமுறைப்படுத்தப்படும் கோவெக்ஸ் திட்டத்தின் கீழ் வடகொரியாவுக்கு வழங்கப்பட்ட சுமார் 30 இலட்சம் எண்ணிக்கையிலான தடுப்பூசிகளை அந்நாடு நிராகரித்துள்ளது. 
 
கடுமையாக பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு அந்த தடுப்பூசியை வழங்குமாறு வடகொரியா தெரிவித்துள்ளதாக ஐநா செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார். 
 
கடந்த ஆகஸ்ட் 19ஆம் திகதி வரை வடகொரியாவில் எவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டதாக பதிவுகள் இல்லை. 
 
உலகில் கொரோனா ஆரம்பித்த காலத்திலிருந்தே வடகொரியா கடுமையான 
 
கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்தி வருகிறது. ஆரம்பத்திலேயே தனது நாட்டு எல்லைகளை அது மூடிவிட்டது. 
 
வடகொரியா தடுப்பூசிகளை நிராகரிப்பது இது முதற்தடவை அல்ல. இதற்கு முன்னர் ஜூலை மாதத்தில் வழங்கப்பட்ட ஒரு தொகை தடுப்பூசிகளை அது நிராகரித்திருந்தது. 
 
எவ்வாறாயினும் தடுப்பூசியின் செயல்திறன் மீது கொண்டுள்ள சந்தேகம் காரணமாகவே வடகொரியா இவ்வாறு நிராகரிப்பதாக உளவுத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொரோனா தடுப்பூசிகளை வடகொரியா நிராகரிப்பது ஏன்? கொரோனா தடுப்பூசிகளை வடகொரியா நிராகரிப்பது ஏன்? Reviewed by irumbuthirai on September 04, 2021 Rating: 5

பரீட்சைக்கு விண்ணப்பித்தல்: பெற்றோர்கள் முறைப்பாடு செய்யலாம் என்கிறார் கல்வியமைச்சர்!

September 04, 2021
 

இந்த வருடத்திற்குரிய புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் உயர்தர பரீட்சை என்பவற்றுக்கான விண்ணப்பங்களை Online முறையில் சமர்ப்பிக்கும் விடயங்களில் ஆசிரியர் சங்கத்தை சேர்ந்தவர்கள் தலையிட்டால் அல்லது அச்சுறுத்தல் விடுத்தால் பெற்றோர்கள் அது தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யலாம் என கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். 
 
குறித்த செய்தியை இன்றைய (04/09/2021) திவயின பத்திரிகை வெளியிட்டுள்ளது. 
 
அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 
 
இந்த பரீட்சைகளுக்கு விண்ணப்பங்களை அனுப்புவதில் ஆசிரியர் சங்கத்தை சேர்ந்த யாராவது தடைகளை ஏற்படுத்தினால் அல்லது அச்சுறுத்தல் விடுத்தால் அது தொடர்பில் பெற்றோர்கள் அருகில் உள்ள போலீஸ் நிலையத்தில் அல்லது வலயக்கல்வி காரியாலயத்தில் அல்லது கல்வி அமைச்சில் முறைப்பாடு செய்யலாம். 
 
தற்போதைய நிலையிலும் அவ்வாறான சில முறைப்பாடுகள் பெற்றோரிடமிருந்து கிடைக்கப் பெற்றுள்ளன. அவற்றை நான் போலீசாருக்கு தெரியபடுத்தி உள்ளேன். அது தொடர்பான விசாரணைகள் விரைவில் இடம்பெறும். 
 
இது மாத்திரமன்றி Online முறையில் மாணவர்களுக்கு கற்பித்தல் நடவடிக்கைகளை ஆசிரியர்கள் மீள ஆரம்பிக்குமாறு நான் கேட்டுக்கொள்கிறேன். 
 
அவ்வாறு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கும் ஏதாவது அச்சுறுத்தல் இருந்தால் அவர்களும் முறைப்பாடு செய்யலாம் என அவர் மேலும் தெரிவித்தார். 
 
இது தொடர்பான பத்திரிகை செய்தியை கீழே காணலாம்.

 
பரீட்சைக்கு விண்ணப்பித்தல்: பெற்றோர்கள் முறைப்பாடு செய்யலாம் என்கிறார் கல்வியமைச்சர்! பரீட்சைக்கு விண்ணப்பித்தல்: பெற்றோர்கள் முறைப்பாடு செய்யலாம் என்கிறார் கல்வியமைச்சர்! Reviewed by irumbuthirai on September 04, 2021 Rating: 5

மீண்டும் இரண்டாம் மொழி டிப்ளோமா கற்கை நெறி:

September 04, 2021
 

இரண்டாம் மொழி டிப்ளோமா சான்றிதழ் கற்கைநெறியை மீண்டும் ஆரம்பிப்பதற்குரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் அரவிந்தகுமார் தெரிவித்துள்ளார். 
 
தேசிய மொழிக் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் ஊடாக நடத்தப்படும் இந்த கற்கை நெறியானது கடந்த நல்லாட்சி காலத்தில் ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மீண்டும் இரண்டாம் மொழி டிப்ளோமா கற்கை நெறி: மீண்டும் இரண்டாம் மொழி டிப்ளோமா கற்கை நெறி: Reviewed by irumbuthirai on September 04, 2021 Rating: 5

5,000/- கொடுப்பணவு வழங்குவதற்கான காரணத்தை வெளியிட்ட கல்வி அமைச்சர்:

September 04, 2021
 

அதிபர் ஆசிரியர் சம்பள முரண்பாட்டிற்கான தீர்வுகளை அமைச்சரவை முன்வைத்த பொழுது அதில் ஒரு விடயமாக செப்டம்பர், அக்டோபர் ஆகிய மாதங்களுக்கு 5000 ரூபா வீதம் கொடுப்பனவு வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டிருந்தது. 
 
இந்த கொடுப்பனவு ஏன் வழங்கப்படுகிறது என்ற காரணத்தை கல்வியமைச்சர் தெரிவித்துள்ளார். 
 
அதாவது இணையவழி கற்பித்தலுக்கான 
 
செலவுகளை ஈடு செய்யவே இந்த கொடுப்பனவு வழங்குவதற்கான தீர்மானத்தை அமைச்சரவை எடுத்தது என கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். 
 
ஒன்றரை வருடங்களாக அவர்களுக்குரிய சம்பளம் முறையாக கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் இணையவழி கற்பித்தலுக்காக ஏற்படுகின்ற மேலதிக செலவுகளை ஈடுசெய்யும் பொருட்டே இந்த 5000 ரூபா கொடுப்பனவு வழங்கப்பட இருக்கிறது என அவர் தெரிவித்துள்ளார்
5,000/- கொடுப்பணவு வழங்குவதற்கான காரணத்தை வெளியிட்ட கல்வி அமைச்சர்: 5,000/- கொடுப்பணவு வழங்குவதற்கான காரணத்தை வெளியிட்ட கல்வி அமைச்சர்: Reviewed by irumbuthirai on September 04, 2021 Rating: 5

அமைச்சரவை தீர்மானத்தின்படி அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு கிடைக்கும் புதிய சம்பளப் படிநிலைகள் (தனித்தனியான முழுமையான விளக்கம்)

September 03, 2021
 

கடந்த 30-08-2021 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின்போது அதிபர் ஆசிரியர் சம்பளம் முரண்பாட்டிற்காக முன்வைக்கப்பட்ட தீர்வின் அடிப்படையிலான புதிய சம்பள விவரங்களையும் அதிகரிக்கும் தொகைகளையும் இங்கு தனித்தனியாக தருகிறோம். 
 
இந்த புதிய சம்பள படிநிலைகள் அதிபர், ஆசிரியர் சேவையின் ஒவ்வொரு தரத்திற்கும் வெவ்வேறாக தொகுக்கப்பட்டுள்ளது. 
 
இதில், 
 
Column A - தற்போது பெறும் அடிப்படைச் சம்பளம். 
 
Column B - 04 கட்ட அதிகரிப்புக்கு பின் கிடைக்க வேண்டிய அடிப்படை சம்பளம். 
 
Column C - மொத்த அதிகரிப்பு. 
 
Column D - 1ம் கட்ட அதிகரிப்பு. 
 
Column E - 2ம் கட்ட அதிகரிப்பு. 
 
Column F - 3ம் கட்ட அதிகரிப்பு. 
 
Column G - 4ம் கட்ட அதிகரிப்பு. 
 
குறிப்பு: மொத்த அதிகரிப்பானது 04 கட்டங்களுக்கும் சமமாக பகிரப்பட்டுள்ளது.
 
இலங்கை ஆசிரியர் சேவை - 3 (11)

 இலங்கை ஆசிரியர் சேவை: 3-1C, 3-1B, 3-1A.

இலங்கை ஆசிரியர் சேவை: 2- 11

 
இலங்கை ஆசிரியர் சேவை: 2- 1

இலங்கை ஆசிரியர் சேவை: 1 (SLTS - 1)

இலங்கை அதிபர் சேவை: தரம் - 3. (SLPS- 3)

இலங்கை அதிபர் சேவை: தரம்-2 (SLPS- 2)

 இலங்கை அதிபர் சேவை: தரம்-1. (SLPS-1)

தொகுப்பு: ஓய்வு பெற்ற அதிபர் அன்பு ஜவஹர்ஷா.
அமைச்சரவை தீர்மானத்தின்படி அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு கிடைக்கும் புதிய சம்பளப் படிநிலைகள் (தனித்தனியான முழுமையான விளக்கம்) அமைச்சரவை தீர்மானத்தின்படி அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு கிடைக்கும் புதிய சம்பளப் படிநிலைகள் (தனித்தனியான முழுமையான விளக்கம்) Reviewed by irumbuthirai on September 03, 2021 Rating: 5

Advanced Certificate Course for Geography Teachers / புவியியல் பாட ஆசிரியர்களுக்கான கற்கைநெறி - 2021

September 03, 2021
 

புவியியல் பாட ஆசிரியர்களுக்கான உயர் சான்றிதழ் கற்கைநெறிக்காக கொழும்பு பல்கலைக்கழகத்தினால் விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. 
 
பாடநெறி காலம்: 16 வாரங்கள் 
 
பாடநெறி நடைபெறும் நேரம்: சனிக்கிழமைகளில் காலை 8:30 முதல் மாலை 4 மணி வரை. 
 
விண்ணப்பிப்பதற்கான தகைமை: குறித்த பாடத்தில் 02 வருட கற்பித்தல் அனுபவம். 
 
கட்டணம்: 16,000/- 
 
விண்ணப்ப முடிவு திகதி: 15-10-2021. 
 
மொழி மூலம்: தமிழ், சிங்களம், ஆங்கிலம். 
 
Online விண்ணப்பத்திற்கு செல்ல கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க. 
 
 
முழுமையான தகவல்களை பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க.
Advanced Certificate Course for Geography Teachers / புவியியல் பாட ஆசிரியர்களுக்கான கற்கைநெறி - 2021 Advanced Certificate Course for Geography Teachers / புவியியல் பாட ஆசிரியர்களுக்கான கற்கைநெறி - 2021 Reviewed by irumbuthirai on September 03, 2021 Rating: 5

Vacancies (University of Peradeniya)

September 03, 2021


Vacancies (University of Peradeniya) 
 
1) Curator (Landscape) Grade 111 
2) Chief Medical Officer 
3) Medical Officer 
 
Closing date: 29-09-2021. 
 
See the details below.

 Source: Sunday Observer.
Vacancies (University of Peradeniya) Vacancies (University of Peradeniya) Reviewed by irumbuthirai on September 03, 2021 Rating: 5

2021 வாக்காளர் இடாப்பில் உங்கள் பெயர் உள்ளதா? இல்லாதவர்கள் எவ்வாறு பெயரைப் பதிய வேண்டும்? (வழிகாட்டல் இணைப்பு)

September 02, 2021
 

2021 வாக்காளர் இடாப்பில் தங்களது பெயர்கள் காணப்படுகின்றனவா என்பதை சரிபார்த்து கொள்ளுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு பொதுமக்களுக்கு அறிவித்தல் விடுத்துள்ளது. 
 
பெயரை சரிபார்ப்பது எப்படி? அவ்வாறு பெயர் இல்லாதவர்கள் எவ்வாறு பெயரை பதிவு செய்வது என்ற விடயங்களை இங்கே தருகிறோம். 
 

 பெயரை சரிபார்த்தல்:

தமது பெயரை சரிபார்க்க கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க. (அங்கு உரிய மொழியை தெரிவு செய்து உங்களது தேசிய அடையாள அட்டை இலக்கத்தை வழங்கி தேடவும்) 
 
 
 

பெயரை பதிவு செய்தல்:

பெயர் இல்லாதவர்கள் பெயரை பதிவு செய்வதற்காக கீழே உள்ள லிங்கில் சென்று அங்கே காணப்படுகின்ற விண்ணப்பத்தை தரவிறக்கம் செய்து அந்த விண்ணப்பத்தை பூர்த்தி செய்து செப்டம்பர் 7ஆம் திகதிக்கு முன்னர் கிராம சேவையாளரிடம் ஒப்படைக்க வேண்டும்.
2021 வாக்காளர் இடாப்பில் உங்கள் பெயர் உள்ளதா? இல்லாதவர்கள் எவ்வாறு பெயரைப் பதிய வேண்டும்? (வழிகாட்டல் இணைப்பு) 2021 வாக்காளர் இடாப்பில் உங்கள் பெயர் உள்ளதா? இல்லாதவர்கள் எவ்வாறு பெயரைப் பதிய  வேண்டும்? (வழிகாட்டல் இணைப்பு) Reviewed by irumbuthirai on September 02, 2021 Rating: 5

சகல மாணவர்களுக்கும் கல்வியை வழங்க விசேட திட்டம்:

September 02, 2021
 

தற்போதைய நிலையில் பாடசாலைகள் மூடப்பட்டுள்ளமையால் சகல மாணவர்களுக்கும் கல்வியை வழங்கும் தேசிய ரீதியிலான திட்டமொன்றை கல்வி அமைச்சுடன் இணைந்து மிக விரைவில் ஆரம்பிக்க உள்ளதாக ஊடகத்துறை அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார். 
 
கல்வி மறுசீரமைப்பு அமைச்சர் சுசில் பிரேமஜயந்த மற்றும் கல்வி அமைச்சின் அதிகாரிகளுடன் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 
 
தற்போதைய கொரோனா நிலை காரணமாக மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் இழந்த கல்வியை அவர்களுக்கு 
 
வழங்க வேண்டும். சகலருக்கும் இந்த கல்வி கிடைக்கும் வகையில் தேசிய வேலைத்திட்டமொன்று ஊடக நிறுவனங்களின் பங்களிப்புடன் நடைமுறைப்படுத்தப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.
சகல மாணவர்களுக்கும் கல்வியை வழங்க விசேட திட்டம்: சகல மாணவர்களுக்கும் கல்வியை வழங்க விசேட திட்டம்: Reviewed by irumbuthirai on September 02, 2021 Rating: 5

அரச ஊழியர்களுக்கான சகல மேலதிக கொடுப்பனவுகளும் இடைநிறுத்தம்! புதிய நியமனங்களுக்கும் அனுமதியில்லை!!

September 02, 2021
 

அரசாங்கம் மற்றும் அரசு சார்ந்த துறைகளில் எவ்வித புதிய நியமனங்களும் வழங்கப்படக் கூடாது என்பதை வலியுறுத்தும் புதிய சுற்றுநிருபம் நிதி அமைச்சினால் ஏனைய அமைச்சுகளுக்கு அவசரமாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 
 
இது தொடர்பான தீர்மானம் கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்டது. அதற்கமையவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 
 
இது மாத்திரமன்றி அரச ஊழியர்களுக்கு சம்பளத்திற்கு மேலதிகமாக வழங்கப்படும் சகலவிதமான மேலதிக கொடுப்பனவுகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. 
 
உயர் அதிகாரிகளுக்கு வழங்கப்படும் எரிபொருள் கொடுப்பனவுகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இது மாத்திரமன்றி வேலைக்கு சமூகம் அளிக்கும் உண்மையான நாட்களுக்கு மாத்திரமே கொடுப்பனவுகள் வழங்கப்படும். 
 
இது தொடர்பான சுற்று நிருபத்தை கீழே காணலாம்.

 
அரச ஊழியர்களுக்கான சகல மேலதிக கொடுப்பனவுகளும் இடைநிறுத்தம்! புதிய நியமனங்களுக்கும் அனுமதியில்லை!! அரச ஊழியர்களுக்கான சகல மேலதிக கொடுப்பனவுகளும் இடைநிறுத்தம்! புதிய நியமனங்களுக்கும் அனுமதியில்லை!!  Reviewed by irumbuthirai on September 02, 2021 Rating: 5

Closing Date Extended for University Colleges / பல்கலைக்கழக கல்லூரிக்கான விண்ணப்ப திகதி நீடிப்பு

September 02, 2021
 

பல்கலைக்கழக கல்லூரிகளுக்கு Online மூலமான விண்ணப்ப திகதி நீடிக்கப்பட்டுள்ளது. 
 
புதிய விண்ணப்ப முடிவு திகதி Online விண்ணப்பம் மற்றும் ஏனைய அறிவுறுத்தல்கள் என்பவற்றை அந்தந்த பல்கலைக்கழக கல்லூரி இணையதளத்திற்கு சென்று பார்வையிடலாம். 
 
பல்கலைக்கழக கல்லூரிகளின் இணையதள முகவரிகள் கீழே:

 
இது தொடர்பில் எமது இணையத்தளத்தில் ஏற்கனவே வெளியான இரு பதிவுகளின் லிங்குகளை கீழே தருகிறோம்.
Closing Date Extended for University Colleges / பல்கலைக்கழக கல்லூரிக்கான விண்ணப்ப திகதி நீடிப்பு Closing Date Extended for University Colleges / பல்கலைக்கழக கல்லூரிக்கான விண்ணப்ப திகதி நீடிப்பு Reviewed by irumbuthirai on September 02, 2021 Rating: 5
Powered by Blogger.