Aptitude Test Results - 2021 (University of Colombo - School of Computing)

September 06, 2021
 


University Admission - 2021/2022. 

University of Colombo (School of Computing) 

Aptitude test results for B.Sc in Information System. 
 

 
 
 
பெறுபேறுகளைப் பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க.


இதுவரை வெளியான பெறுபேறுகள்:
 
 

 
 
Aptitude Test Results - 2021 (University of Colombo - School of Computing) Aptitude Test Results - 2021 (University of Colombo - School of Computing) Reviewed by Irumbu Thirai News on September 06, 2021 Rating: 5

ஒத்திவைக்கப்பட்டன ஆசிரியர் கலாசாலை பரீட்சைகள்

September 06, 2021
 

ஆசிரியர் கலாசாலை பரீட்சைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது. 
 
2020 மற்றும் 2021ற்கான இறுதிப் பரீட்சைகளே இவ்வாறு ஒத்திவைக்கப்பட்டுள்ளன. பரீட்சை நடைபெறும் திகதி தொடர்பில் 
 
பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
இந்த பரீட்சைகள் 21-09-2021 தொடக்கம் 26-09-2021 வரை நடைபெற இருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஒத்திவைக்கப்பட்டன ஆசிரியர் கலாசாலை பரீட்சைகள் ஒத்திவைக்கப்பட்டன ஆசிரியர் கலாசாலை பரீட்சைகள் Reviewed by Irumbu Thirai News on September 06, 2021 Rating: 5

மனித வள முகாமைத்துவத்தில் டிப்ளோமா பாடநெறி / Diploma in Human Resources Management - 2021 (University of Colombo)

September 06, 2021
 

மனித வள முகாமைத்துவ டிப்ளோமா பாடநெறிக்காக கொழும்பு பல்கலைக் கழகத்தினால் விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. 
 
தகைமை: 
உயர்தரத்தில் ஏதாவது பாட துறையில் 3 பாடங்களில் சித்தி. 
 
அல்லது 
 
அரச அல்லது தனியார் துறையில் 05 வருட வேலை அனுபவம். 
 
காலம்: 01 வருடம். 
 
பாடநெறி நடைபெறுவது: ஞாயிற்றுக்கிழமைகளில் மாத்திரம். 
 
விண்ணப்ப கட்டணம்: 1500/- 
 
பாடநெறி கட்டணம்: 95,000/- 
 
மொழி மூலம்: ஆங்கிலம் / சிங்களம் 
 
விண்ணப்ப முடிவு திகதி: 15-09-2021. 
 
இது தொடர்பான முழுமையான விவரங்களை பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக். 
 
Online விண்ணப்பப்படிவத்திற்கு செல்ல கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க. 
மனித வள முகாமைத்துவத்தில் டிப்ளோமா பாடநெறி / Diploma in Human Resources Management - 2021 (University of Colombo) மனித வள முகாமைத்துவத்தில் டிப்ளோமா பாடநெறி / Diploma in Human Resources Management - 2021 (University of Colombo) Reviewed by Irumbu Thirai News on September 06, 2021 Rating: 5

Aptitude Test Results - 2021 (Uva Wellassa University)

September 06, 2021
 

பல்கலைக்கழக அனுமதி - 2021/2022 
(தெரிவு பரீட்சை பெறுபேறுகள்) 
 
பின்வரும் பாடநெறிகளுக்காக ஊவா வெல்லச பல்கலைக்கழகத்தினால் நடாத்தப்பட்ட தெரிவுப் பரீட்சையின் பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளன. 
 
B.Sc (Hons) in Computer Science & Technology. 
B.Sc (Hons) Industrial Information Technology. 
BBM (Hons) in Entrepreneurship & Management. 
BBM (Hons) Hospitality, Tourism & Event Management 
 
பெறுபேறுகளை பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க.
 
இது தொடர்பான ஏனைய பதிவுகள்:
 
 
 
Aptitude Test Results - 2021 (Uva Wellassa University) Aptitude Test Results - 2021 (Uva Wellassa University) Reviewed by Irumbu Thirai News on September 06, 2021 Rating: 5

B.Ed மற்றும் M.Ed க்கான விண்ணப்ப திகதி நீடிப்பு:

September 06, 2021
 

தேசிய கல்வி நிறுவகத்தினால் நடத்தப்படும் B.Ed மற்றும் M.Ed பாடநெறிகளுக்கான விண்ணப்ப திகதி நீடிக்கப்பட்டுள்ளது. 
 
தனிமைப்படுத்தல் ஊரடங்கு முடிவடைந்ததன் பின்னர் விண்ணப்பங்களை அனுப்புவதற்கு வசதியாக இது நீடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
புதிய விண்ணப்ப திகதி தொடர்பாக பின்னர் அறிவிக்கப்படும். 
 
தேசிய கல்வி நிறுவகத்தின் இது தொடர்பான அறிவித்தலை கீழே காணலாம்.

 Quick links for Online Application:
 
இது தொடர்பான முன்னைய பதிவு:

B.Ed மற்றும் M.Ed க்கான விண்ணப்ப திகதி நீடிப்பு: B.Ed மற்றும் M.Ed க்கான விண்ணப்ப திகதி நீடிப்பு: Reviewed by Irumbu Thirai News on September 06, 2021 Rating: 5

பேச்சுவார்த்தைக்கு தயார்! தலிபான் எதிரணியின் தலைவர் அறிவிப்பு!

September 05, 2021
 

என்ஆர்எஃப் (National Resistance Front - NRF) தலைவர் அஹ்மத் மசூத், பஞ்ச்ஷிர் பள்ளத்தாக்கில் சண்டையை முடிவுக்கு கொண்டு வருவதற்காக தலிபான்களுடன் பேச்சுவார்த்தைக்கு தயார் என்று அறிவித்துள்ளார். 
 
ஆப்கானிஸ்தானின் பஞ்ச்ஷிர் பள்ளத்தாக்கில் தலிபானுக்கும் எதிர்ப்புப் படைகளுக்கும் இடையே கடுமையான சண்டை தொடர்கிறது, தலிபான் இன்னும் தமது கட்டுப்பாட்டில் வராத ஒரேயொரு மாகாணமான பஞ்ச்ஷிர் மாகாணத்தை கைப்பற்ற முயற்சிக்கிறது. 
 
நூற்றுக்கணக்கான தலிபான் துருப்புக்களையும் அவர்களது உபகரணங்கள் 
 
மற்றும் வாகனங்களையும் கைப்பற்றியதாக எதிர்ப்பு போராளிகள் ஞாயிற்றுக்கிழமை(5) தெரிவித்தனர். 
 
ஆனால் பஞ்ச்ஷிரின் ஒரு சில மாவட்டங்களை தாம் கைப்பற்றி விட்டதாகவும் மாகாணத்தின் தலைநகரை நோக்கி முன்னேறி வருவதாகவும் தலிபான்கள் அறிவித்துள்ளனர்.
பேச்சுவார்த்தைக்கு தயார்! தலிபான் எதிரணியின் தலைவர் அறிவிப்பு! பேச்சுவார்த்தைக்கு தயார்! தலிபான் எதிரணியின் தலைவர் அறிவிப்பு! Reviewed by Irumbu Thirai News on September 05, 2021 Rating: 5

குதிரைக்கான மருந்து: கொரோனா சிகிச்சை தொடர்பில் எச்சரிக்கும் அமெரிக்க மருத்துவர்:

September 05, 2021
 

குதிரைகளின் உடலில் புழுக்களால் ஏற்படும் பாதிப்பைத் தடுக்க பயன்படுத்தப்படும் ஐவர்மெக்டின் என்கிற மருந்தை கொரோனா சிகிச்சைக்கு பயன்படுத்த வேண்டாம் என அமெரிக்க மருத்துவர் ஜேசன் மெக்எலியா வலியுறுத்தியுள்ளார். 
 
இந்த மருந்து இதுவரை கொரோனாவை குணப்படுத்தும் என நிரூபிக்கப்படவில்லை. ஐவர்மெக்டின் மருந்தை குறைந்த அளவில் மனிதர்கள் எடுத்துக் கொள்ள அனுமதிக்கப்பட்டு இருக்கிறது. ஆனால் அது 
 
கொரோனா சிகிச்சைக்காக அனுமதிக்கப்படவில்லை. மருத்துவர்கள் இந்த மருந்தைப் பரிந்துரைத்தால் மட்டுமே இம்மருந்து கிடைக்கும், காரணம் இது ஆபத்தான மருந்து. 
 
ஐவர்மெக்டினை அளவுக்கு அதிகமாக தவறாக எடுத்துக் கொள்வதால், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டால் அவர்களுக்கு ஏற்பட்டு இருக்கும் பாதிப்பை விட, மோசமாக அவர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என அமெரிக்காவின் ஒக்லஹோமா மாகாணத்தைச் சேர்ந்த மருத்துவர் ஜேசன் மெக்எலியா கூறியுள்ளார். 
 
இந்த மருந்து இதுவரை கொரோனாவை குணப்படுத்தும் என நிரூபிக்கப்படவில்லை. இருப்பினும் கொரோனா சிகிச்சைக்கும், கொரோனா வைரஸ் பரவலைத் தவிர்க்கவும் உதவும் என இம்மருந்து விளம்பரப்படுத்தப்பட்ட போது பெரிதும் சர்ச்சையானது. அமெரிக்காவின் எஃப்.டி.ஏ எனப்படும் உணவு மற்றும் மருந்து நிர்வாகம், கடந்த மாதம், ஐவர்மெக்டினைப் பயன்படுத்த வேண்டாம் என ஒரு நீண்ட அறிக்கையையே வெளியிட்டது. 
மூலம்: பிபிசி
குதிரைக்கான மருந்து: கொரோனா சிகிச்சை தொடர்பில் எச்சரிக்கும் அமெரிக்க மருத்துவர்: குதிரைக்கான மருந்து: கொரோனா சிகிச்சை தொடர்பில் எச்சரிக்கும் அமெரிக்க மருத்துவர்: Reviewed by Irumbu Thirai News on September 05, 2021 Rating: 5

தற்காலிக பதிவு தொடர்பாக திறந்த பல்கலைக்கழகத்தின் அறிவித்தல்!

September 05, 2021
 

பதிவு செய்யும் போது நீங்கள் சமர்ப்பித்த சான்றிதழ்களின் நகல்களின் அடிப்படையில் தற்காலிக பதிவை வழங்க பல்கலைக்கழக அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். நாட்டில் கோவிட் -19 தொற்று நோயின் தற்போதைய நிலைமை காரணமாக, சான்றிதழ்களின் நம்பகத்தன்மையின் பௌதீக ரீதியான சரிபார்ப்பு தாமதமாகும். உங்கள் தகுதி அல்லது மாற்றுத் தகுதிகளை நிரூபிக்க நீங்கள் சமர்ப்பித்த சான்றிதழ்கள், இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் செனட் ஏற்றுக்கொள்ள முடியாதவை எனத் தெரிந்தால், உங்கள் பதிவை உடனடியாக ரத்து செய்யும் உரிமையை பல்கலைக்கழகம் கொண்டுள்ளது.
 

 
தற்காலிக பதிவு தொடர்பாக திறந்த பல்கலைக்கழகத்தின் அறிவித்தல்! தற்காலிக பதிவு தொடர்பாக திறந்த பல்கலைக்கழகத்தின் அறிவித்தல்! Reviewed by Irumbu Thirai News on September 05, 2021 Rating: 5

இனிமேல் தலிபான்களுக்கு அழுத்தம் கொடுக்க அமெரிக்காவால் முடியுமா?

September 04, 2021
 

20 வருட யுத்தத்தை ஆப்கானில் முடித்துக் கொண்டு வெளியேறிய அமெரிக்காவின்  முடிவு சரியானதுதான் என ஜோ பைடன் மீண்டும் தெரிவித்துள்ளார். 
 
ஆனால் எதிர்க்கட்சிகளின் பல்வேறு விமர்சனங்களை அவர் சந்தித்து வருகிறார். அதற்கு பதிலளித்த பைடன், முன்னாள் ஜனாதிபதி டோனால்ட் ரம்ப் செய்து கொண்ட ஒப்பந்தத்தையே தான் நிறைவேற்றி உள்ளதாக தெரிவித்துள்ளார். 
 
இதேவேளை இவ்வளவு விரைவாக தலிபான்கள் முன்னேறுவார்கள் என்றோ ஆப்கான் அரசும் ஆப்கான் ராணுவமும் இவ்வளவு விரைவாக தோல்வியை சந்திப்பார்கள் என்றோ எதிர்பார்க்கவில்லை என அமெரிக்கா தெரிவித்துள்ளது. 
 
இந்நிலையில் சுமார் 200 அமெரிக்க குடிமக்கள் இன்னும் ஆப்கானிஸ்தானில் 
 
எஞ்சியிருக்கிறார்கள். ஆனால் அவர்களை வெளியேற்ற உதவுவதாக தலிபான்களிடமிருந்து அமெரிக்கா வாக்குறுதி பெற்றிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
இந்த விடயங்கள் எவ்வாறிருந்தாலும் இனிமேல் ஆப்கான் விவகாரத்தில் அமெரிக்கா தலையிடவோ தலிபான்களுக்கு அழுத்தம் கொடுக்கவோ முடியுமா என்ற விடயம் தொடர்பில் இரு வேறு கருத்துக்கள் நிலவுகின்றன. 
 
ஆப்கானில் அமெரிக்கா இருக்கும் பொழுதே தலிபான்களுக்கு அழுத்தம் கொடுக்க முடியவில்லை. இப்பொழுது இல்லாத நிலையில் எவ்வாறு அழுத்தம் கொடுக்கலாம் என்ற கருத்து நிலவுகிறது. 
 
ஆனால் உலகத்தில் எங்களுக்கிருக்கும் செல்வாக்கையும் ஐநாவின் பரிந்துரைகளையும் நாம் தலிபான் விவகாரத்தில் அழுத்தம் கொடுக்க பயன்படுத்துவோம். எவ்வாறாயினும் தலிபானுடனான பேச்சுவார்த்தைக்கான எங்களது பாதை இன்னும் திறந்தே உள்ளது என்று வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஜென் சாகி தெரிவித்துள்ளார். 
 
தலிபான்கள் மீது அமெரிக்கா மீண்டும் அழுத்தம் கொடுக்க முடியுமா? முடியாதா? என்ற விடயம் தலிபான்கள் எந்த நாடுகளோடு கூட்டிச் சேர்கிறார்கள் என்ற விடயத்திலும் தங்கியிருப்பதாக விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.
இனிமேல் தலிபான்களுக்கு அழுத்தம் கொடுக்க அமெரிக்காவால் முடியுமா? இனிமேல் தலிபான்களுக்கு அழுத்தம் கொடுக்க அமெரிக்காவால் முடியுமா? Reviewed by irumbuthirai on September 04, 2021 Rating: 5

கொரோனா தடுப்பூசிகளை வடகொரியா நிராகரிப்பது ஏன்?

September 04, 2021
 

ஏழை நாடுகளுக்கும் தடுப்பூசி கிடைப்பதை உறுதிப்படுத்தும் நோக்கில் நடைமுறைப்படுத்தப்படும் கோவெக்ஸ் திட்டத்தின் கீழ் வடகொரியாவுக்கு வழங்கப்பட்ட சுமார் 30 இலட்சம் எண்ணிக்கையிலான தடுப்பூசிகளை அந்நாடு நிராகரித்துள்ளது. 
 
கடுமையாக பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு அந்த தடுப்பூசியை வழங்குமாறு வடகொரியா தெரிவித்துள்ளதாக ஐநா செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார். 
 
கடந்த ஆகஸ்ட் 19ஆம் திகதி வரை வடகொரியாவில் எவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டதாக பதிவுகள் இல்லை. 
 
உலகில் கொரோனா ஆரம்பித்த காலத்திலிருந்தே வடகொரியா கடுமையான 
 
கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்தி வருகிறது. ஆரம்பத்திலேயே தனது நாட்டு எல்லைகளை அது மூடிவிட்டது. 
 
வடகொரியா தடுப்பூசிகளை நிராகரிப்பது இது முதற்தடவை அல்ல. இதற்கு முன்னர் ஜூலை மாதத்தில் வழங்கப்பட்ட ஒரு தொகை தடுப்பூசிகளை அது நிராகரித்திருந்தது. 
 
எவ்வாறாயினும் தடுப்பூசியின் செயல்திறன் மீது கொண்டுள்ள சந்தேகம் காரணமாகவே வடகொரியா இவ்வாறு நிராகரிப்பதாக உளவுத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொரோனா தடுப்பூசிகளை வடகொரியா நிராகரிப்பது ஏன்? கொரோனா தடுப்பூசிகளை வடகொரியா நிராகரிப்பது ஏன்? Reviewed by irumbuthirai on September 04, 2021 Rating: 5

பரீட்சைக்கு விண்ணப்பித்தல்: பெற்றோர்கள் முறைப்பாடு செய்யலாம் என்கிறார் கல்வியமைச்சர்!

September 04, 2021
 

இந்த வருடத்திற்குரிய புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் உயர்தர பரீட்சை என்பவற்றுக்கான விண்ணப்பங்களை Online முறையில் சமர்ப்பிக்கும் விடயங்களில் ஆசிரியர் சங்கத்தை சேர்ந்தவர்கள் தலையிட்டால் அல்லது அச்சுறுத்தல் விடுத்தால் பெற்றோர்கள் அது தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யலாம் என கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். 
 
குறித்த செய்தியை இன்றைய (04/09/2021) திவயின பத்திரிகை வெளியிட்டுள்ளது. 
 
அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 
 
இந்த பரீட்சைகளுக்கு விண்ணப்பங்களை அனுப்புவதில் ஆசிரியர் சங்கத்தை சேர்ந்த யாராவது தடைகளை ஏற்படுத்தினால் அல்லது அச்சுறுத்தல் விடுத்தால் அது தொடர்பில் பெற்றோர்கள் அருகில் உள்ள போலீஸ் நிலையத்தில் அல்லது வலயக்கல்வி காரியாலயத்தில் அல்லது கல்வி அமைச்சில் முறைப்பாடு செய்யலாம். 
 
தற்போதைய நிலையிலும் அவ்வாறான சில முறைப்பாடுகள் பெற்றோரிடமிருந்து கிடைக்கப் பெற்றுள்ளன. அவற்றை நான் போலீசாருக்கு தெரியபடுத்தி உள்ளேன். அது தொடர்பான விசாரணைகள் விரைவில் இடம்பெறும். 
 
இது மாத்திரமன்றி Online முறையில் மாணவர்களுக்கு கற்பித்தல் நடவடிக்கைகளை ஆசிரியர்கள் மீள ஆரம்பிக்குமாறு நான் கேட்டுக்கொள்கிறேன். 
 
அவ்வாறு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கும் ஏதாவது அச்சுறுத்தல் இருந்தால் அவர்களும் முறைப்பாடு செய்யலாம் என அவர் மேலும் தெரிவித்தார். 
 
இது தொடர்பான பத்திரிகை செய்தியை கீழே காணலாம்.

 
பரீட்சைக்கு விண்ணப்பித்தல்: பெற்றோர்கள் முறைப்பாடு செய்யலாம் என்கிறார் கல்வியமைச்சர்! பரீட்சைக்கு விண்ணப்பித்தல்: பெற்றோர்கள் முறைப்பாடு செய்யலாம் என்கிறார் கல்வியமைச்சர்! Reviewed by irumbuthirai on September 04, 2021 Rating: 5

மீண்டும் இரண்டாம் மொழி டிப்ளோமா கற்கை நெறி:

September 04, 2021
 

இரண்டாம் மொழி டிப்ளோமா சான்றிதழ் கற்கைநெறியை மீண்டும் ஆரம்பிப்பதற்குரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் அரவிந்தகுமார் தெரிவித்துள்ளார். 
 
தேசிய மொழிக் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் ஊடாக நடத்தப்படும் இந்த கற்கை நெறியானது கடந்த நல்லாட்சி காலத்தில் ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மீண்டும் இரண்டாம் மொழி டிப்ளோமா கற்கை நெறி: மீண்டும் இரண்டாம் மொழி டிப்ளோமா கற்கை நெறி: Reviewed by irumbuthirai on September 04, 2021 Rating: 5

5,000/- கொடுப்பணவு வழங்குவதற்கான காரணத்தை வெளியிட்ட கல்வி அமைச்சர்:

September 04, 2021
 

அதிபர் ஆசிரியர் சம்பள முரண்பாட்டிற்கான தீர்வுகளை அமைச்சரவை முன்வைத்த பொழுது அதில் ஒரு விடயமாக செப்டம்பர், அக்டோபர் ஆகிய மாதங்களுக்கு 5000 ரூபா வீதம் கொடுப்பனவு வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டிருந்தது. 
 
இந்த கொடுப்பனவு ஏன் வழங்கப்படுகிறது என்ற காரணத்தை கல்வியமைச்சர் தெரிவித்துள்ளார். 
 
அதாவது இணையவழி கற்பித்தலுக்கான 
 
செலவுகளை ஈடு செய்யவே இந்த கொடுப்பனவு வழங்குவதற்கான தீர்மானத்தை அமைச்சரவை எடுத்தது என கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். 
 
ஒன்றரை வருடங்களாக அவர்களுக்குரிய சம்பளம் முறையாக கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் இணையவழி கற்பித்தலுக்காக ஏற்படுகின்ற மேலதிக செலவுகளை ஈடுசெய்யும் பொருட்டே இந்த 5000 ரூபா கொடுப்பனவு வழங்கப்பட இருக்கிறது என அவர் தெரிவித்துள்ளார்
5,000/- கொடுப்பணவு வழங்குவதற்கான காரணத்தை வெளியிட்ட கல்வி அமைச்சர்: 5,000/- கொடுப்பணவு வழங்குவதற்கான காரணத்தை வெளியிட்ட கல்வி அமைச்சர்: Reviewed by irumbuthirai on September 04, 2021 Rating: 5
Powered by Blogger.