கல்வியற் கல்லூரி இறுதிப் பரீட்சை தொடர்பான அறிவித்தல்
Irumbu Thirai News
September 07, 2021
2017/2019 கட்டுறுப் பயில்வை முடித்த மற்றும் சித்தியடையாதவர்களுக்கான இறுதிப் பரீட்சை தொடர்பான தீர்மானம் அறிவிக்கப்பட்டுள்ளது.
அவை பின்வருமாறு:
1. வாண்மைத்துவ பாடங்களுக்கு தற்போது கல்வியியல் கல்லூரிகளில் குறித்த பாடங்களுக்கு வழங்கப்பட்ட உள்ளக புள்ளிகளின் 60 வீத புள்ளிகளை 100 வீதமாக மாற்றுதல்
2. பிரதான பாடங்கள் மற்றும் துணை பாடங்களுக்கு கல்லூரிகளில் உள்ளக ரீதியாக வழங்கப்பட்ட 60 வீத புள்ளிகளை 100 வீதமாக மாற்றுதல்
3. பிரயோகப் பரீட்சைகள் (Practical Test) உள்ள பாடங்களுக்கு, உள்ளக பிரயோகப் புள்ளிகளை இறுதிப் புள்ளிகளாக கணிப்பிடுதல்
4. விசேட பாடத்துறை தொடர்பான விடய அறிவை மற்றும் ஆசிரியர் தேர்ச்சிகளை மதிப்பீடு செய்ய பரீட்சை ஒன்றை நடாத்துதல்
5. பிரதான பாடத்துறையை மையமாகக் கொண்டு பாடசாலை கலைத் திட்டத்தில் குறித்த பாடத்தை தெரிவு செய்து, குறிப்பிட்ட தேர்ச்சியின் கீழ் ஒரு தேர்ச்சி மட்டப் பாடமொன்றை தெரிவு செய்து, முன்வைக்கும் முறையைப் பரீட்சிப்பது இதன் ஊடாக எதிர்பார்க்கப்படுகிறது.
- குறித்த பாடத்தை கற்பிப்பதற்கு பயன்படுத்த முடியுமான வேறு முறைகளை விளக்குதல்
- குறித்த பாடத்தைக் கற்பிப்பதற்கு கல்வி உளவியலின் பிரயோகத்தை குறிப்பிடுதல்
- கற்றல் கற்பித்தலில் பயன்படுத்தத்தக்க துணை சாதனங்களைத் தெரிவு செய்யும் போது கவனிக்க வேண்டிய 3 விடயங்கள்
- கல்வி சமூகவியல் அறிவை பயன்படுத்துவற்கான சந்தர்ப்ப உதாரணம் ஒன்றை வழங்குதல்
- கல்வி ஆலோசனையும் வழிகாட்டலும் பாட அறிவு பயன்படுத்தத்தக்க முறையை சுருக்கமாக விளக்குதல்
- ஆசிரியர்களாக பின்பற்றத்தக்க விழுமியங்கள் 3 ஐக் குறிப்பிடல்
- குறித்த பாட உள்ளடக்கம் தொடர்பாக விடய அறிவைப் பரீட்சித்தல்
- ஆசிரியர் மனப்பாங்களை அளவிடல்
- புதிய தொழில்நுட்ப அறிவை மற்றும் Online கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளுக்கு ஏற்ப ஆசிரியர் வகிபாகம் மற்றும் சவால்களை வெற்றி கொள்ளல் தொடர்பாக விபரித்தல்
புள்ளி வழங்கல்
1. மொத்த முன்வைப்பு - 30%
2. கேட்கப்படும் கேள்விகளுக்கு விடையளித்தல் - 70%
3. பெற்றுக் கொள்ளும் 40 விதத்தை பெற்றுக் கொண்டு கல்வி விடயங்களின் புள்ளிகளை சேர்த்தல்
மொத்த முன்வைப்புக்கு 40 நிமிடங்கள் (முன்வைப்புக்கு 20 புள்ளிகளும் கேள்வி கேட்டலுக்கு 25 வினாவிடைகளுக்கு)
4. குறித்த விடயப் பரப்பின் கருப்பொருள் கல்வியியல் கல்லூரிகளினால் இரு தினங்களுக்கு முன்னர் மாணவர்களுக்கு வழங்கப்படும்
குறிப்பு:
ஏற்கனவே நடைபெற்ற பரீட்சைகளில் சித்தியடையத் தவறியவர்களுக்கு ஒவ்வொரு பாடங்களுக்கும் விடயப் பரப்பு தொடர்பாக நேர்காணல் நடாத்தப்பட முன்மொழியப்படுகிறது.
Source: teachmore.
நன்றி: டீச்மோர்.
கல்வியற் கல்லூரி இறுதிப் பரீட்சை தொடர்பான அறிவித்தல்
Reviewed by Irumbu Thirai News
on
September 07, 2021
Rating:
