BA (External - New Syllabus): ஒவ்வொரு பாட அலகிற்கான கையேடுகளைப் பெறுவது எப்படி?
Irumbu Thirai News
September 08, 2021
பேராதனைப் பல்கலைக்கழக தொடர் தொலைக்கல்வி நிலையமானது, புதிய பாடத்திட்ட கலைமாணிப் பட்ட பாடநெறிக்கான (Bachelor of Arts - External) ஒவ்வொரு பாட அலகிற்கும் கையேடுகளைத் தயாரித்துள்ளது.
மாணவர்கள் நிர்ணயிக்கப்பட்ட விலையை செலுத்தி பாடநெறி கையேடுகளை கொள்வனவு செய்யலாம்.
தபால் மூலமாக கையேடுகளைப் பெற்றுக் கொள்வதற்கு, பரிந்துரைக்கப்பட்ட கையேட்டின் விலையை மக்கள் வங்கியின் பேராதனை கிளைக்கு, வங்கி கணக்கிலக்கம் 057-1001-4-1338036 இற்கு செலுத்தி அசல் வங்கிப் பற்றுச்சீட்டுடன் சுய முகவரியிடப்பட்டு, ரூ. 100/= பெறுமதியான முத்திரை ஒட்டப்பட்ட 10X15 கடிதவுறையினையும் பின்வரும் முகவரிக்கு அனுப்பவும். (ஒரு கையேட்டிற்கான முத்திரைக் கட்டணம் ரூ. 100/= ஆகும்.)
முகவரி:
Assistant Registrar,
Centre for Distance and Continuing Education,
No. 43, Old Galaha Road,
Peradeniya.
பாடநெறி கையேடுகள் மற்றும் அவற்றின் விலைகளை இங்கு அறிந்துகொள்ளலாம். (ஏனைய கையேடுகள் வெகு விரைவில் வழங்கப்படும்.)
BA (External - New Syllabus): ஒவ்வொரு பாட அலகிற்கான கையேடுகளைப் பெறுவது எப்படி?
Reviewed by Irumbu Thirai News
on
September 08, 2021
Rating: