Indian Scholarships for Degree Courses / பட்டப் பாடநெறிகளுக்காக இந்தியா வழங்கும் புலமைப்பரிசில் - 2021

September 09, 2021
 

Applications are invited from eligible applicants for the award of Undergraduate Scholarships offered by the Government of India for the academic year 2021/22. 
 

 Closing date: 15-09-2021.

Click the link below for full details:
 
Click the link below for Online application:
Indian Scholarships for Degree Courses / பட்டப் பாடநெறிகளுக்காக இந்தியா வழங்கும் புலமைப்பரிசில் - 2021 Indian Scholarships for Degree Courses / பட்டப் பாடநெறிகளுக்காக இந்தியா வழங்கும் புலமைப்பரிசில் - 2021 Reviewed by Irumbu Thirai News on September 09, 2021 Rating: 5

03-09-2021 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்)

September 09, 2021
 

03-09-2021 அன்று வெளியான அரச வர்த்தமானியை தமிழ், ஆங்கிலம், சிங்களம் ஆகிய மொழிகளில் இங்கு தருகிறோம். 
 
Official Government Gazette released on 03-09-2021. 
 
இதில், 
 
பல முக்கிய அறிவித்தல்கள் காணப்படுகின்றன. கீழே உள்ள உரிய லிங்கை கிளிக் செய்து உரிய மொழியில் முழுமையாக பார்வையிடுக. 
 
தமிழில் பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க. 

ஆங்கிலத்தில் பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க.
 
சிங்களத்தில் பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க. 
 
 
முன்னைய வர்த்தமானி அறிவித்தலுக்கு செல்ல...
03-09-2021 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) 03-09-2021 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) Reviewed by Irumbu Thirai News on September 09, 2021 Rating: 5

Sinopharm தடுப்பூசி போட்டவர்களின் நிலை: கோரிக்கை நிறைவேறுமா?

September 09, 2021
 

சைனோபார்ம் தடுப்பூசியைப் போட்டுக் கொண்ட 50 வயதுக்கு மேற்பட்டவர்களின் மரணம் மற்றும் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படும் அளவு என்பன ஏனைய தடுப்பூசி போட்டவர்களை விட அதிகம் என இலங்கை வைத்திய சங்கம் தெரிவித்துள்ளது. 
 
எனவே சைனோபார்ம் தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் பெற்றுக்கொண்ட 60 வயதுக்கு மேற்பட்டோர்க்கும் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களுக்கும் மூன்றாவதாக தடுப்பூசியாக வேறு ஒரு தடுப்பூசியை வழங்குமாறு அந்த சங்கம் கோரிக்கை முன்வைத்துள்ளது. 
 
இந்த மூன்றாவது தடுப்பூசியாக அஸ்ராசெனகா, மொடர்னா அல்லது 
 
பைசர் போன்ற தடுப்பூசிகளை பயன்படுத்தலாம் எனவும் அது பரிந்துரை செய்துள்ளது. 
 
இதேவேளை ஸ்புட்னிக் தடுப்பூசியின் முதலாவது டோஸை வழங்கியவர்களுக்கு இரண்டாவது டோஸை வழங்க முடியாத நிலை இருந்தால் அதற்காக அஸ்ராசெனகா, மொடர்னா அல்லது பைசர் போன்ற தடுப்பூசிகளை வழங்குமாறும் குறித்த சங்கம் தெரிவித்துள்ளது.
Sinopharm தடுப்பூசி போட்டவர்களின் நிலை: கோரிக்கை நிறைவேறுமா? Sinopharm தடுப்பூசி போட்டவர்களின் நிலை: கோரிக்கை நிறைவேறுமா? Reviewed by Irumbu Thirai News on September 09, 2021 Rating: 5

ஆப்கான் முன்னாள் ஜனாதிபதி வெளியிட்ட அறிக்கை: மக்களிடம் மன்னிப்பும் கோரினார்!

September 09, 2021
 

ஆப்கான் முன்னாள் ஜனாதிபதி மொஹமட் அஷ்ரஃப் கனி நேற்று (8) அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். 
 
எதிர்பாராத வகையில் தலிபான்கள் தலைநகர் காபூல் நுழைந்த பொழுது கடந்த ஆகஸ்ட் மாதம் 15 ஆம் திகதி நான் நாட்டை விட்டு வெளியேறினேன். 
 
காபூலை விட்டு வெளியேறுவது என் வாழ்வில் மிக கடினமான ஒரு முடிவு. ஆனால் அந்த சந்தர்ப்பத்தில் அதை தவிர வேறு வழி இருக்கவில்லை. காபூலையும் அதன் 6 மில்லியன் மக்களையும் பாதுகாக்க வேண்டுமென்றால் நான் நாட்டை விட்டு வெளியேறுவதுதான் பொருத்தம் என நினைத்தேன். பாதுகாப்பு அதிகாரிகளின் ஆலோசனையும் அதுவாகவே இருந்தது. 
 
மில்லியன் கணக்கான டாலர்களை நான் எடுத்து வந்ததாக என் மீது குற்றம் சாட்டப்படுகிறது. ஆனால் அது எந்தவித அடிப்படையும் அற்ற ஒரு குற்றச்சாட்டாகும். 
 
நான் பதவியில் இருக்கும் பொழுது ஆப்கானின் ஜனநாயகம் மற்றும் உரிமை என்பவற்றை பாதுகாக்க பல வழிகளில் முயற்சிகளை மேற்கொண்டுள்ளேன். 
 
நான் எனது மக்களிடம் மன்னிப்பு கோருகிறேன். வேறு விதத்தில் இதை முடிவுக்கு கொண்டுவர முடியாமல் போனமைக்கு நான் மன்னிப்பு கேட்கிறேன் என அவர் தெரிவித்துள்ளார். 
 
அவர் வெளியிட்ட அறிக்கையை கீழே காணலாம்.

 
ஆப்கான் முன்னாள் ஜனாதிபதி வெளியிட்ட அறிக்கை: மக்களிடம் மன்னிப்பும் கோரினார்! ஆப்கான் முன்னாள் ஜனாதிபதி வெளியிட்ட அறிக்கை: மக்களிடம் மன்னிப்பும் கோரினார்! Reviewed by Irumbu Thirai News on September 09, 2021 Rating: 5

முழுமையான தடுப்பூசி போட்டாலும் நோயெதிர்ப்பைக் கடந்து செல்லும் டெல்டா: ஆய்வில் வெளியான தகவல்!

September 09, 2021
 

முழுமையான தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கும் டெல்டா வைரஸ் திரிபானது தொற்றக் கூடிய நிலை காணப்படுவதாக விஞ்ஞானிகள் பரவலாக கண்டறிந்துள்ளதாக நேச்சர் என்ற சஞ்சிகை தகவல் வெளியிட்டுள்ளது. 
 
இந்த டெல்டா திரிபானது மனிதர்களின் நோயெதிர்ப்பு கட்டமைப்பையும் கடந்து சென்று தாக்கக் கூடியது என அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
நேச்சர் சஞ்சிகை வெளியிட்ட இந்த தகவலை மேற்கோள்காட்டி ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் மூலக்கூறு உயிரியல் துறை பிரிவின் பேராசிரியர் சந்திம ஜீவந்தர தெரிவிக்கையில், 
 
முழுமையான தடுப்பூசி போட்டாலும் அதையும் தாண்டி தாக்கக் கூடிய திறன் டெல்டா திரிபுக்கு காணப்படுகிறது. எனவே தடுப்பூசி போட்ட பின்னரும் முறையான சுகாதார பழக்க வழக்கங்களை பின்பற்றுவது அவசியமாகும் என அவர் தெரிவித்துள்ளார்.
முழுமையான தடுப்பூசி போட்டாலும் நோயெதிர்ப்பைக் கடந்து செல்லும் டெல்டா: ஆய்வில் வெளியான தகவல்! முழுமையான தடுப்பூசி போட்டாலும் நோயெதிர்ப்பைக் கடந்து செல்லும் டெல்டா: ஆய்வில் வெளியான தகவல்! Reviewed by Irumbu Thirai News on September 09, 2021 Rating: 5

ஆப்கானில் அறிவிக்கப்பட்டது புதிய அரசு: நாட்டின் பெயரும் மாற்றம்!

September 09, 2021
 

ஆப்கானிஸ்தான் இடைக்கால அரசு தொடர்பான தகவல்களை தலிபான்கள் அறிவித்துள்ளனர். அது தொடர்பான தகவல்களை இங்கு தருகிறோம். 
 
நாட்டின் உத்தியோகபூர்வ பெயர்: ஆப்கானிஸ்தான் இஸ்லாமிய எமிரேட். 
 
பிரதமர்
முல்லா மொஹம்மத் ஹஸன் அகுந்த் (இவர் தாலிபன் இயக்கத்தின் ஸ்தாபகர் முல்லா ஒமருடன் நண்பராக இருந்தவர்) 
 
துணை பிரதமர்கள்: 
1) முல்லா அப்துல் கனீ பரதர். 
2) மெளலவி அதுல் சலாம் ஹனாஃபி. 
 
உள்துறை:
சிராஜுதீன் ஹக்கானி (ஹக்கானி ஆயுத போராளிகள் குழுவின் தலைவருடைய மகன்) 
 
பாதுகாப்பு
முல்லா மொஹம்மத் யாகூப் முஜாஹித் (இவர் தாலிபன் நிறுவனர் முல்லா ஒமரின் மகன்) 
 
நிதி
முல்லா ஹிதாயத் பத்ரி 
 
வெளியுறவு
மெளலவி ஆமிர் கான் முடாக்கி 
 
நீதித்துறை
அப்துல் ஹக்கீம் இஷாக்ஸி 
 
தகவல் துறை: 
கைருல்லா சயீத் வாலி கெய்ர்க்வா

 

 
தற்போது அறிவிக்கப்பட்டவர்கள், முறைப்படி அரசு அமையும்வரை இடைக் காலமாக அமைச்சரவையை வழி நடத்துவார்கள் என்று தாலிபன் செய்தித்தொடர்பாளர் சஃபியுல்லா முஜாஹிதின் தெரிவித்துள்ளார்.
 
இதேவேளை புதிய அரசில் பெண்களுக்கு இடம் இல்லாததனால் தலைநகர் காபூல் மற்றும் வட கிழக்கு மாகாணமான படக்‌ஷனில் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பெண் அமைச்சர் இல்லாத அரசாங்கத்தை ஏற்றுகொள்ளப் போவதில்லை என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆப்கானில் அறிவிக்கப்பட்டது புதிய அரசு: நாட்டின் பெயரும் மாற்றம்! ஆப்கானில் அறிவிக்கப்பட்டது புதிய அரசு: நாட்டின் பெயரும் மாற்றம்! Reviewed by Irumbu Thirai News on September 09, 2021 Rating: 5

ஆசிரியர் உதவியாளர்களுக்கான நியமனங்கள் வழங்கல் தொடர்பில் வெளியான அறிவிப்பு!

September 08, 2021
 

மத்திய மாகாணத்தில் தற்போது ஆசிரியர் உதவியாளர்களாக கடமையாற்றுபவர்களுக்கான முதற்கட்ட நியமனங்கள் விரைவில் வழங்கப்படும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி ரமேஷ் தெரிவித்துள்ளார். 

முதற்கட்டமாக 210 பேருக்கு நியமனங்கள் வழங்கப்பட உள்ளன.  ஏனையவர்களுக்கான நியமனங்கள் 

 

டிசம்பர் மாதத்திற்கு முன்னர் வழங்கப்படும். கொரோனா பரவல் காரணமாகவே இந்த நியமனங்கள் வழங்கும் நிகழ்வு தாமதமாகியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

 

 

 

 

 

 



ஆசிரியர் உதவியாளர்களுக்கான நியமனங்கள் வழங்கல் தொடர்பில் வெளியான அறிவிப்பு! ஆசிரியர் உதவியாளர்களுக்கான நியமனங்கள் வழங்கல் தொடர்பில் வெளியான அறிவிப்பு! Reviewed by Irumbu Thirai News on September 08, 2021 Rating: 5

2 வயதுக்கு மேற்பட்ட பிள்ளைகளுக்கு தடுப்பூசி போடும் முதல் நாடு

September 08, 2021
 

2 வயதுக்கு மேற்பட்ட பிள்ளைகளுக்கு தடுப்பூசி போடக்கூடிய உலகின் முதல் நாடாக கியூபா பதிவாகியுள்ளது. 
 
பாடசாலைகளை மீள திறப்பதற்கு முன் இந்த நடவடிக்கையை கியூபா அரசாங்கம் மேற்கொண்டுள்ளது. 
 
கடந்த வெள்ளிக்கிழமை ஆரம்பமான இந்த தடுப்பூசி வழங்கும் திட்டத்திற்காக கியூபாவில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகளே 
 
பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் இந்தத் தடுப்பூசிக்கு உலக சுகாதார ஸ்தாபனத்தின் அங்கீகாரம் இதுவரை கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இதேவேளை சீனா, ஐக்கிய அரபு ராச்சியம் உள்ளிட்ட சில நாடுகளும் பிள்ளைகளுக்கான தடுப்பூசி திட்டம் குறித்து அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
2 வயதுக்கு மேற்பட்ட பிள்ளைகளுக்கு தடுப்பூசி போடும் முதல் நாடு 2 வயதுக்கு மேற்பட்ட பிள்ளைகளுக்கு தடுப்பூசி போடும் முதல் நாடு Reviewed by Irumbu Thirai News on September 08, 2021 Rating: 5

Aptitude Test Results - 2021 (University of Sri Jayawardanapura)

September 08, 2021
 

University Admission - 2020/2021. 

Selection test results (Sri Jayawardanapura University) 

 
Degree
B. Sc (Hons) in Sports Science & Management. 
 
Click the link below for results: 
 
 
இதுவரை வெளியான பெறுபேறுகள்:
 
 
 
 
 
 

 
 
 
 
Aptitude Test Results - 2021 (University of Sri Jayawardanapura) Aptitude Test Results - 2021 (University of Sri Jayawardanapura) Reviewed by Irumbu Thirai News on September 08, 2021 Rating: 5

B.Sc. (Plantation Management) External Degree - 2021 (Wayamba University)

September 08, 2021
 


B.Sc. (Plantation Management) External Degree - 2021 

இந்த பட்டப்படிப்பு முகாமைத்துவம் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியின் ஒரு புதிய பரிமாணமாகும். இது பெருந்தோட்ட துறை மற்றும் அதனோடு இணைந்த துறைகளிலுள்ள உயர்மட்ட, நடுத்தர மட்ட முகாமையாளர்கள் மற்றும் தொழினுட்ப அதிகாரிகளுக்கு மிகவும் பயனுள்ளது. 
 
Duration : 03 Years 
 
Medium : English Course 
 
Fee : Rs.250,000/= 
 
Closing Date: 2021-10-31 
 
பாடநெறி தொடர்பான முழுமையான விபரங்களைப் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க. 
 
விண்ணப்பத்திற்கு செல்ல கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.
 
B.Sc. (Plantation Management) External Degree - 2021 (Wayamba University) B.Sc. (Plantation Management) External Degree - 2021 (Wayamba University) Reviewed by Irumbu Thirai News on September 08, 2021 Rating: 5

Advanced Certificate Course in Data Analysis for Social Scientists - 2021

September 08, 2021
 

University of Sri Jayawardenapura. 

Advanced Certificate Course in Data Analysis for Social Scientists - 2021 

 

Introduction

There is an unprecedented demand for technology companies, financial services, government and not-for-profit organizations for graduates who can effectively analyze data. The Advanced Certificate in Data Analysis for Social Scientists will introduce the essential notions of probability and statistics. Also, it will cover techniques in modern data analysis: estimation, regression and econometrics, prediction, experimental design, etc. It will illustrate these concepts with applications drawn from real world examples and frontier research. Finally, it will provide instruction on how to use statistical packages such as SPSS, EViews, R and opportunities for students to perform self-directed empirical analyses. 
 
Therefore, the advanced certificate course will help students gain a critical understanding of the strengths of quantitative research, and acquire practical skills using different methods and tools to answer relevant social science questions. 
 

 
 

Entry Qualifications: 

Reading Business Statistics as a Subject in General Certificate of Education (Advance Level). 
 
or 
 
Passing at least two subjects in General Certificate of Education (Advance Level). 
 
or 
 
Obtaining a qualification equivalent to above two in any field of study. 
 
 
Duration: 06 Months 
 
Lectures and Practical Sessions: Saturday, From 8 a.m. to 4 p.m. 
 
Medium: English 
 
Course Fee (including application fee): Rs. 40,000 
 
Application Deadline: 30/09/2021
 
 
Click the link below for Full details:

Click the link below for online application:
 
 
 
கற்கைநெறிகள் மற்றும் கல்வி சம்பந்தமான ஏனைய பதிவுகளுக்கு..
Advanced Certificate Course in Data Analysis for Social Scientists - 2021 Advanced Certificate Course in Data Analysis for Social Scientists - 2021 Reviewed by Irumbu Thirai News on September 08, 2021 Rating: 5

அரசாங்கம் 5000 ரூபா கொடுப்பணவு தந்தால் என்ன செய்வது? புதுவடிவம் பெறும் தொழிற்சங்க போராட்டம்!

September 08, 2021
 

எமக்கு இரண்டு மாதங்களுக்கு தருவதாக கூறும் அந்த இடைக்கால கொடுப்பனவை வேண்டாம் என்று கூறியும் அரசாங்கம் அதை பலவந்தமாக தர முயற்சிப்பதாக தெரிகிறது. அவ்வாறு அதை தரும் பட்சத்தில் என்ன நடவடிக்கைகளை மேற்கொள்வது என்ற தீர்மானம் விரைவில் அறிவிக்கப்படும் என இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் செயலாளர் மகிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார். 
 
தனது முகநூல் பக்கத்திலேயே அவர் இன்றைய தினம் இவ்வாறு தெரிவித்துள்ளார். 
 
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது, 
 
எமக்கு இரு மாதங்கள் தருவதாக கூறும் அந்த இடைக்கால கொடுப்பனவை கொவிட் ஒழிப்பு நடவடிக்கைகளுக்காக எடுத்துக் கொள்ளுமாறு கூறியும் அதை பலவந்தமாக அரசாங்கம் தர முயற்சிப்பதாக தெரிகிறது. நேற்றைய தினமும் அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின் போது இந்த கொடுப்பனவு இந்த மாத சம்பளத்துடன் வழங்கப்படும் என கூறப்பட்டது.
 
இன்னும் ஒருசில தினங்களில் இந்த கொடுப்பனவு இந்த மாத சம்பளத்துடன் சேர்க்கப்பட்டுள்ளதா என வலயக்கல்வி காரியாலயங்கள் ஊடாக அறிந்து கொள்ளலாம். அவ்வாறு 5000 ரூபாய் சேர்க்கப்பட்டு இருந்தால் அதை என்ன செய்வது என்ற தீர்மானம் ஏனைய தொழிற்சங்கங்களோடு ஒன்றிணைந்து நாம் விரைவாக எடுக்க இருக்கிறோம். அதன் அடிப்படையில் அது தொடர்பான தீர்மானத்தை கூட்டாக அறிவிப்போம். 
 
இதேவேளை நாம் எங்களது தொழிற்சங்க போராட்டங்களை புது உத்வேகத்துடனும் புதிய வடிவிலும் செய்ய இருக்கிறோம். 
 
அது தொடர்பாகவும் ஊடகவியலாளர் சந்திப்பை விரைவில் நடத்துவோம். 
 
மாவட்ட ரீதியாக பல்வேறு வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்படும். அதேபோல் சகல மதத் தலைவர்களுக்கும் எமது போராட்டம் தொடர்பான உண்மையான விளக்கத்தை வழங்க வேண்டும். 
 
நேற்றைய தினம் பெற்றோர்களுக்கு எமது போராட்டம் தொடர்பான விளக்கத்தை நான் வீடியோ 
 
மூலம் பதிவிட்டு இருந்தேன். அதற்கு சிறந்த பிரதிபலன் கிடைத்திருக்கிறது. 
 
தற்போதைய நிலையிலும் பல்வேறு பாடசாலைகள் பகுதி பகுதியாக ஒவ்வொரு பிரிவு அடிப்படையிலும் அந்த பிரிவு மாணவர்களை கொண்டு அந்தப் பெற்றோர்களுக்கு தெளிவை வழங்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன. 
 
மாணவர்கள் மூலம் பெற்றோரை இலகுவில் அணுகி அவர்களுக்கான தெளிவை வழங்கலாம். மேலும் பாடசாலைகளிலும் இதுதொடர்பான பதாதைகளை காட்சிப்படுத்த வேண்டும். 
 
அரசாங்கம் எமது போராட்டம் தொடர்பில் மக்களை பிழையாக வழி நடத்துகிறது. எனவே நாம் அவர்களுக்கு உரிய தெளிவை வழங்க வேண்டும். 
 
இது மாணவர்களுக்கு எதிராக செய்யும் போராட்டம் அல்ல. எதிர்கால மாணவர் சமூகத்துக்காகவும் சுதந்திரமான கல்வியை உறுதி செய்வதற்காகவும் இடம்பெறும் போராட்டம். 
 
பெரும்பாலான கணித விஞ்ஞான பட்டதாரிகள் மற்றும் ஏனைய துறைகளில் திறமையானவர்கள் இதில் 
 
நீடிப்பதில்லை. காரணம் இதிலுள்ள சம்பள அளவு திட்டம். 
 
எனவே இவ்வாறான திறமையானவர்களை இதில் நிலைத்திருக்க வைக்க வேண்டுமென்றால் சம்பள முரண்பாடு தீர்க்கப்பட வேண்டும் என அமைச்சரவை உப குழுவும் ஏற்றுக்கொண்டுள்ளது. 
 
எனவே இது எதிர்கால கல்வி சமூகத்திற்காகவும் சுதந்திர கல்வியை உறுதி செய்வதற்காகவும் நடைபெறும் போராட்டம் என்பதை விளங்க வேண்டும் என மேலும் தெரிவித்தார்.
Irumbuthirainews.com
அரசாங்கம் 5000 ரூபா கொடுப்பணவு தந்தால் என்ன செய்வது? புதுவடிவம் பெறும் தொழிற்சங்க போராட்டம்! அரசாங்கம் 5000 ரூபா கொடுப்பணவு தந்தால் என்ன செய்வது? புதுவடிவம் பெறும் தொழிற்சங்க போராட்டம்! Reviewed by Irumbu Thirai News on September 08, 2021 Rating: 5

5000/- இடைக்கால கொடுப்பணவு இம்மாதம் கிடைக்கும்

September 08, 2021
 

அதிபர் ஆசிரியர் சம்பள முரண்பாட்டிற்காக அமைச்சரவையினால் முன்வைக்கப்பட்ட தீர்மானங்களின் அடிப்படையில் 5000 ரூபா இடைக்கால கொடுப்பனவு இந்த மாதம் கிடைக்கும் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.

நேற்று அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

கொரோனா பரவல் நிலையினால் ஏற்பட்ட பொருளாதார தாக்கத்தினால் சம்பள முரண்பாட்டினை முழுமையாக தீர்ப்பதில் 

 

சிக்கல் காணப்படுகிறது. எனவே எதிர்வரும் வரவு-செலவுத் திட்டத்திலிருந்து கட்டங்கட்டமாக தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

 

 

 

5000/- இடைக்கால கொடுப்பணவு இம்மாதம் கிடைக்கும் 5000/- இடைக்கால கொடுப்பணவு இம்மாதம் கிடைக்கும் Reviewed by Irumbu Thirai News on September 08, 2021 Rating: 5
Powered by Blogger.