ஆப்கான் முன்னாள் ஜனாதிபதி வெளியிட்ட அறிக்கை: மக்களிடம் மன்னிப்பும் கோரினார்!
Irumbu Thirai News
September 09, 2021
எதிர்பாராத வகையில் தலிபான்கள் தலைநகர் காபூல் நுழைந்த பொழுது கடந்த ஆகஸ்ட் மாதம் 15 ஆம் திகதி நான் நாட்டை விட்டு வெளியேறினேன்.
காபூலை விட்டு வெளியேறுவது என் வாழ்வில் மிக கடினமான ஒரு முடிவு. ஆனால் அந்த சந்தர்ப்பத்தில் அதை தவிர வேறு வழி இருக்கவில்லை. காபூலையும் அதன் 6 மில்லியன் மக்களையும் பாதுகாக்க வேண்டுமென்றால் நான் நாட்டை விட்டு வெளியேறுவதுதான் பொருத்தம் என நினைத்தேன். பாதுகாப்பு அதிகாரிகளின் ஆலோசனையும் அதுவாகவே இருந்தது.
மில்லியன் கணக்கான டாலர்களை நான் எடுத்து வந்ததாக என் மீது குற்றம் சாட்டப்படுகிறது. ஆனால் அது எந்தவித அடிப்படையும் அற்ற ஒரு குற்றச்சாட்டாகும்.
நான் பதவியில் இருக்கும் பொழுது ஆப்கானின் ஜனநாயகம் மற்றும் உரிமை என்பவற்றை பாதுகாக்க பல வழிகளில் முயற்சிகளை மேற்கொண்டுள்ளேன்.
நான் எனது மக்களிடம் மன்னிப்பு கோருகிறேன். வேறு விதத்தில் இதை முடிவுக்கு கொண்டுவர முடியாமல் போனமைக்கு நான் மன்னிப்பு கேட்கிறேன் என அவர் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்ட அறிக்கையை கீழே காணலாம்.
ஆப்கான் முன்னாள் ஜனாதிபதி வெளியிட்ட அறிக்கை: மக்களிடம் மன்னிப்பும் கோரினார்!
Reviewed by Irumbu Thirai News
on
September 09, 2021
Rating: