National Diploma in Technology (NDT) - 2021/2022 (University of Moratuwa)

September 11, 2021
 

Applications for admission to the National Diploma in Technology (NDT) Student Intake 2021/2022 – Institute of Technology, University of Moratuwa (ITUM) 
 
Closing date: 2021-09-30 
 
Age Limit: below 24 years of age on 31.12.2020. 
 
Click the link below for full details:
 
 
Click the link below for online application: 
 

 
National Diploma in Technology (NDT) - 2021/2022 (University of Moratuwa) National Diploma in Technology (NDT) - 2021/2022 (University of Moratuwa) Reviewed by Irumbu Thirai News on September 11, 2021 Rating: 5

புதிய அறிவிப்பு: NIE Vacancies for SLTS, SLPS and SLEAS (ஆசிரியர்கள், அதிபர்கள், கல்வி நிர்வாக சேவை உத்தியோகத்தர்கள் விண்ணப்பிக்கலாம்)

September 11, 2021

 


Recruitment of Assistant Lecturers/Senior Lecturers From Teaching Service/ Principal Service and SLEAS on Attachment Basis. 

 
மேற்படி விடயம் தொடர்பாக ஏற்கனவே வெளியான அறிவிப்பை கருத்தில் எடுக்காது புதிய அறிவிப்பின்படி செயற்படுமாறு தேசிய கல்வி நிறுவகம் தெரிவித்துள்ளது. 
 
புதிய அறிவிப்பின் படி, 
உதவி விரிவுரையாளர்களும் சிரேஷ்ட விரிவுரையாளர்களும் எந்தெந்த நிலையங்களுக்காக இணைத்துக் கொள்ளப்படுவார்கள் என்ற விடயம் சேர்க்கப்பட்டுள்ளது. மேலும் தேவையான  தகைமைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. விண்ணப்பம் கோரப்படும் பாடப்பரப்புகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
 
புதிய அறிவிப்பை முழுமையாக பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க. 
 
ஒன்லைன் விண்ணப்பத்திற்கு செல்ல கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க. 
 
இதுதொடர்பாக ஏற்கனவே வெளியான பதிவிற்கு செல்ல... 
புதிய அறிவிப்பு: NIE Vacancies for SLTS, SLPS and SLEAS (ஆசிரியர்கள், அதிபர்கள், கல்வி நிர்வாக சேவை உத்தியோகத்தர்கள் விண்ணப்பிக்கலாம்) புதிய அறிவிப்பு: NIE Vacancies for SLTS, SLPS and SLEAS (ஆசிரியர்கள், அதிபர்கள், கல்வி நிர்வாக சேவை உத்தியோகத்தர்கள் விண்ணப்பிக்கலாம்) Reviewed by Irumbu Thirai News on September 11, 2021 Rating: 5

பட்டதாரி பயிலுனர்களுக்கான மற்றுமொரு அறிவித்தல்!

September 10, 2021
 

பட்டதாரி பயிலுனர்களிடமிருந்து Online மூலமாக தகவல்களை பெற்றுக்கொள்ளும் நடவடிக்கை தொடர்பாக அரச சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு மற்றுமொரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 
 
10-09-2021 அன்று வெளியிடப்பட்ட இந்த அறிவிப்பில், இதுவரை எந்தவித தகவல்களையும் உள்ளீடு செய்யாத பட்டதாரி பயிலுனர்களுக்கும் தகவல்களை மாற்றத் தேவையான பட்டதாரி பயிலுநர்களுக்கான அறிவித்தல்கள் காணப்படுகின்றன. 
 
குறித்த அறிவித்தலை முழுமையாக பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க. 
 
இதுதொடர்பாக இதற்கு முன்னர் வந்த அறிவிப்புகள்:
 
 
 
பட்டதாரி பயிலுனர்களுக்கான மற்றுமொரு அறிவித்தல்! பட்டதாரி பயிலுனர்களுக்கான மற்றுமொரு அறிவித்தல்! Reviewed by Irumbu Thirai News on September 10, 2021 Rating: 5

NIE Vacancies for SLTS, SLPS and SLEAS (ஆசிரியர்கள், அதிபர்கள், கல்வி நிர்வாக சேவை உத்தியோகத்தர்கள் விண்ணப்பிக்கலாம்)

September 10, 2021
 

Recruitment of Assistant Lecturers/Senior Lecturers From Teaching Service/ Principal Service and SLEAS on Attachment Basis Applications are invited for recruitment of Assistant Lecturers/Senior Lecturers for Curriculum Development/Educational Reforms on attachment basis from qualified Applicants for the period of 2 years. Please send the duly completed applications to reach the undersigned on or before 22nd September 2021. Prescribed application can be filled and sent through the Google Form link as necessary. 
 
Age Limit: Applicant should be not more than 55 years. 
 
தேசிய கல்வி நிறுவகத்தினில் உதவி விரிவுரையாளர்கள், சிரேஷ்ட விரிவுரையாளர்கள் போன்ற பதவிகளுக்காக விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. 
 
இதற்காக இலங்கை ஆசிரியர் சேவை(SLTS), இலங்கை அதிபர் சேவை(SLPS), இலங்கை கல்வி நிர்வாக சேவை(SLEAS) யில் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். 
 
60 பாடப்பரப்புகளுக்காக மூன்று மொழி மூலங்களிற்கும் விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. 
 
வயதெல்லை: 55ற்கு மேற்படாதிருத்தல். 
 
அடிப்படைச் சம்பளத்தில் 25 வீதம் ஊக்குவிப்பு கொடுப்பனவாகவும் வழங்கப்படும். 
 
விண்ணப்ப முடிவு திகதி: 22-09-2021. 
 
Click the link below for full details. 
 
Click the link below for online application. 
NIE Vacancies for SLTS, SLPS and SLEAS (ஆசிரியர்கள், அதிபர்கள், கல்வி நிர்வாக சேவை உத்தியோகத்தர்கள் விண்ணப்பிக்கலாம்) NIE Vacancies for SLTS, SLPS and SLEAS (ஆசிரியர்கள், அதிபர்கள், கல்வி நிர்வாக சேவை உத்தியோகத்தர்கள் விண்ணப்பிக்கலாம்) Reviewed by Irumbu Thirai News on September 10, 2021 Rating: 5

முதற்கட்டமாக 3,000 பாடசாலைகளை திறக்க நடவடிக்கை:

September 10, 2021
 

கிராமப்புறங்களில் உள்ள 100-க்கும் குறைந்தளவான மாணவர்களைக் கொண்ட சுமார் 3000 பாடசாலைகளை முதல் கட்டமாக திறப்பது தொடர்பில் ஜனாதிபதி அவதானம் செலுத்தி உள்ளார். 
 
இன்றைய தினம் தொலைக்காணொளி ஊடாக நடைபெற்ற கொவிட் தடுப்பு செயலணி கூட்டத்தின்போதே ஜனாதிபதி இந்த விடயம் தொடர்பில் ஆராய்ந்தார். 
 
இது தொடர்பாக ஆராய்ந்து பரிந்துரைகளை முன்வைப்பதற்கு சுகாதார மற்றும் கல்வித் துறை அதிகாரிகளைக் கொண்ட குழு ஒன்றிடம் இந்தப் பொறுப்பை ஒப்படைக்கவும் ஜனாதிபதி தீர்மானித்துள்ளார். 
 
கொரோனா நிலைமை காரணமாக நாட்டில் இதுவரை சுமார் ஏழு லட்சம் மாணவர்களுக்கு ஆரம்பக் கல்வியும் அதேபோன்று பல மாணவர்களுக்கு முன்பிள்ளைப் பருவ கல்வியும் கிடைக்காமல் போனமை தொடர்பாகவும் இதன்போது ஆராயப்பட்டது.

முதற்கட்டமாக 3,000 பாடசாலைகளை திறக்க நடவடிக்கை: முதற்கட்டமாக 3,000 பாடசாலைகளை திறக்க நடவடிக்கை: Reviewed by Irumbu Thirai News on September 10, 2021 Rating: 5

ஆப்கானில் அஷ்ரஃப் கனி ஆட்சியின் பரபரப்பான கடைசி தருணங்கள்: நடந்தது என்ன..?

September 10, 2021
 

முதல் நகரத்தைக் கைபற்றிய பிறகு காபூலுக்கு வந்து சேர தாலிபான்களுக்கு 10 நாட்கள் மட்டுமே தேவைப்பட்டன. ஆனால் தலைநகரம் அவ்வளவு சீக்கிரம் விழுந்துவிடாது என்ற ஓர் எண்ணம் இருந்தது. பேச்சுவார்த்தைக்குப் பிறகு, ஓர் ஒப்பந்தம் முடிவான பிறகே காபூல் வீழும் என்று எதிர்பார்க்கப்பட்டது. 
 
ஆகஸ்ட் மாதம் 15ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று எல்லாம் மாறிவிட்டது. சில மணி நேரங்களுக்குள்ளேயே அதிபரும் உயரதிகாரிகளும் மாயமாகிவிட்டனர். ஆப்கானிஸ்தான் ராணுவத்தினர் சிலரும் காவல்துறை அதிகாரிகளும் சீருடையை மாற்றிக்கொண்டு தலைமறைவாகிவிட்டனர். 
 
மேலை நாடுகளின் ஆதரவைப் பெற்ற ஆப்கானிஸ்தான் அரசாங்கத்துக்கு பல ட்ரில்லியன் டாலர் ராணுவ ஆதரவும் இருபது ஆண்டுகாலப் பயிற்சியும் கிடைத்திருந்தன. அவை எல்லாம் அப்படியே மாயமாகிவிட்டன. 
 
அங்கு இருந்த உள்வட்டாரங்களில் பேசி, ஆப்கானிஸ்தான் அரசு வீழ்ந்த கடைசி சில மணி நேரங்களில் நடந்தவை என்ன என்பதை பிபிசி தொகுத்திருக்கிறது. 
 
 

சனிக்கிழமை, ஆகஸ்ட் 14 

ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரஃப் கனியின் உள் வட்டாரங்கள் கொஞ்சம் யோசனையில் இருந்தன என்றாலும் யாரும் பெரிதாகக் கவலைப்படவில்லை என்று பிபிசியிடம் தெரிவிக்கப்பட்டது. தலைநகரைக் காப்பாற்றுவதற்கான ஒரு திட்டம் உருவாக்கப்பட்டு, அது ராணுவத் தளபதி ஹைபதுல்லா அலிசாய் மற்றும் அமெரிக்க ராணுவ உயரதிகாரி பீட்டர் வேல்சி ஆகியோருடன் விவாதிக்கப்பட்டது. 
 
திட்டத்தின் மையப்புள்ளி என்பது நகரத்துக்குள் நுழையாமல் தாலிபன்களைத் தடுப்பது. நாட்டின் மிகப்பெரிய மாகாணமான 

ஹெல்மாண்டில் முன்பு இருந்த ஆப்கானிஸ்தான் ராணுவ தளபதி சமி சதாத், காபூலுக்கான புதிய பாதுகாப்புப் படைக்குத் தலைவராக நியமிக்கப்பட்டார். 
 
தேவைப்பட்டால் சண்டையிடுவது என்றும், தாலிபான்களுடன் ஒரு அமைதி ஒப்பந்தத்துக்கு வருவது என்றும் திட்டமிடப்பட்டது. அது நடக்கவில்லை என்றால், குறைந்தது வெளியேறுவதற்கான அவகாசமாவது வேண்டும் என்பது காபூல் நிர்வாகத்தின் எண்ணம். 
 
தளபதி சதாத் தனது குழுவினரை சந்தித்தபோதே நாட்டின் வடக்குப் பகுதியில் தாலிபன்கள் மிகப்பெரிய நகரமான மஸார்-இ-ஷரீஃபைக் கைப்பற்றிவிட்டனர். கிழக்கு நகரமான ஜலாலாபாத்தில் கொஞ்சம் கொஞ்சமாக நுழையவும் தொடங்கியிருந்தனர். இரண்டு நகரங்களும் எதிர்ப்பின்றி வீழ்ந்திருந்தன. கடைசி நகரமாக காபூல் நின்றுகொண்டிருந்தது. 
 
கல்வித்துறையைச் சேர்ந்தவரும் உலக வங்கி அதிகாரியுமான அஷ்ரஃப் கனி, 2014 செப்டம்பரிலிருந்தே ஆப்கானிஸ்தான் அதிபராக இருந்தார். ஆப்கானிஸ்தான் அரசாங்கத்துக்குள் இருந்த விமர்சகர்கள், கடைசி வாரங்களில் காபூலை நோக்கி முன்னேறிக்கொண்டிருந்த தாலிபன்களின் அச்சுறுத்தலைக் கணிக்க இவர் தவறிவிட்டார் என்று தெரிவிக்கின்றனர். 
 
முன்னாள் அதிபர் மொஹமத் நஜிபுல்லாவுக்கு நடந்ததது கண்டிப்பாக அவர் மனதுக்குள் ஓடியிருக்கும். தான் தப்பிச்சென்றதற்கான காரணங்களை சொல்லும்போது அந்த நிகழ்வையும் கனி குறிப்பிட்டார். 
 
காபூலை 1996ல் தாலிபான்கள் கைப்பற்றியபோது நஜிபுல்லாவும் சிறைபிடிக்கப்பட்டார். அவரை ஐ.நா கட்டடத்திலிருந்து இழுத்து வெளியில் கொண்டு வந்த ஜிகாதிகள், அவரை சித்தரவதை செய்து கொன்றனர். அவரது உடல் அதிபர் மாளிகைக்கு வெளியில் இருந்த ஒரு ட்ராபிக் விளக்கில் தொங்கவிடப்பட்டது. 
 
 

ஞாயிறு காலை, 15 ஆகஸ்ட். 

ஆப்கானிஸ்தான் மாளிகையின் கடைசி சில மணிநேரங்கள்... 

 
பொழுது விடிந்தவுடனேயே நகர எல்லைகளில் தாலிபன்கள் வந்துவிட்டார்கள் என்ற செய்தி கேட்ட காபூல் வாசிகள் கொஞ்சம் தர்மசங்கடத்துக்குள்ளானார்கள். வங்கிகளிலும் விமான நிலையங்களிலும் வரிசைகள் குவிந்தன. 
 
ஆனால் தாலிபன்களால் வீழ்ச்சி வந்தாலும் அது உடனே நடக்காது என்று அதிபர் கனியின் உள் வட்டாரங்கள் நம்பிக்கொண்டிருந்தன. காபூலைச் சேர்ந்த 19ம் நூற்றாண்டு மாளிகையான ஆல்ர்க்கில் வழக்கம்போல பணியாளர்கள் வந்தனர். 
 
அதிபரின் முக்கிய அதிகாரிகளில் ஒருவரான சலாம் ரஹிமி அதற்கு முதல் நாள் ஒரு முக்கிய ஒப்பந்தத்தை முடித்திருந்தார் என்பதால் அங்கு நம்பிக்கை நிலவியது. 
 
தாலிபன்களை எப்படியோ தொடர்பு கொண்ட ரஹிமி, வலுகட்டாயமாக காபூலைக் கைப்பற்றப்போவதில்லை என்று தாலிபன்களிடம் ஒப்புதல் வாங்கியிருந்தார். அதற்கு பதில் உதவியாக அதிகாரப் பங்கீடு நடத்தப்போவதாகவும் உறுதியளித்திருந்தார். இதனால் வெளிநாட்டவர்களையும் 

அச்சுறுத்தலாக இருப்பவர்களையும் வெளியேற்றிவிடலாம் என்பதும் ஒரு திட்டமாக இருந்தது. ஏற்கனவே ஒருங்கிணைந்த ஓர் அரசாங்கத்தை உருவாக்குவதற்காக கத்தாரில் நடந்துகொண்டிருந்த பேச்சுவார்த்தைக்கும் இதனால் அவகாசம் கிடைத்திருக்கும். 
 
காபூல்வாசிகளுக்கு நம்பிக்கை அளிப்பதற்காக, கனியின் அதிகாரபூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் ஞாயிற்றுக்கிழமை அவரது குழு ஒரு வீடியோவைப் பதிவிட்டிருந்தது. அதில், தனது அமைச்சர்கள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளுடன் பாதுகாப்பு பற்றி கனி உரையாடுவதாக ஒரு காட்சி இருந்தது. 
 
ஓர் அழகான மர மேசையில் அமர்ந்துகொண்டு தன் அமைச்சர்களுடன் அவர் ஸ்பீக்கர் ஃபோனில் பேசுகிறார். வெகு விரைவில் தாலிபனுடன் ஒரு ஒப்பந்தம் வந்துவிடும் என்று அந்த வீடியோ தெரிவித்திருந்தது, ஆகவே காபூலில் எந்த ஒரு சண்டையும் நடக்காது என்றும் மறைமுகமாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. 
 
ஆனால் எல்லா மூத்த அமைச்சர்களையும் திருப்திப்படுத்த இது போதுமானதாக இல்லை. தனது முக்கியக் குழுவில் இருக்கிற மற்ற உறுப்பினர்களை சமாதானப்படுத்துவது அதிபருக்குக் கடினமாக இருந்தது என்று சில தகவல்கள் கிடைத்துள்ளன. 
 
துணை அதிபாரான அம்ருல்லா சலே ஏற்கனவே காபூலில் இருந்து 30 மைல் தொலைவில் இருந்த பஞ்ஷிர் பள்ளத்தாக்குக்குத் தப்பிச் சென்றிருந்தார். பாதுகாப்பு அமைச்சர் பிஸ்மில்லா கானைத் தொடர்பு கொள்ளவே முடியவில்லை. திட்டம் கொஞ்சம் கொஞ்சமாக வெளிச்சத்துக்கு வர ஆரம்பித்தது. 
 
இது நடந்துகொண்டிருக்கும்போதே முக்கிய ஆப்கன் தலைவர்கள் சிலர் இஸ்லாமாபாத்துக்குச் செல்லும் ஒரு விமானத்தைப் பிடிப்பதற்காக விமான நிலையத்தை நோக்கி விரைந்துகொண்டிருந்தனர். மக்களவைத் தலைவர் மிர் ரஹ்மான் ரமானியும் முன்னாள் துணை அதிபர் கரீம் காலிலியும் இந்தப் பட்டியலில் முக்கியமானவர்கள். 
 
இது வெளியேறுவற்கான பயணம் அல்ல என்று விவசாயத் துறை அதிகாரியான ஷாகிப் ஷ்ரீஃபி மறுப்புத் தெரிவித்தார். "ஆப்கானிஸ்தானில் சண்டையைத் தவிர்ப்பதற்காக வந்து மத்தியஸ்தம் செய்யுமாறு பாகிஸ்தான் அரசைக் கேட்க விரும்பினோம். ஆனால் கனி நாங்கள் செல்வதை விரும்பவில்லை. பாகிஸ்தானின் உதவியுடன் ஒரு ஒப்பந்தம் வந்துவிட்டால் அவரது அதிகாரம் போய்விடும் என்று பயந்தார். நாங்கள் செல்வதை வெறுத்தார்" என்கிறார். 
 
மக்களவை தலைவரை நாட்டை விட்டு வெளியேற அனுமதித்தால் பீதி கிளம்பும் என்பதால் அந்தப் பயணத்தைத் தவிர்க்குமாறு கனி கூறியிருக்கலாம் என்றும் சிலர் தெரிவிக்கிறார்கள். அவரும் மற்ற தலைவர்களும் விமான நிலையத்துக்குச் செல்லும் வழியில் நகரத்தின் எல்லா இடங்களிலும் பீதியாக இருந்ததாக ஷரீஃபி விவரிக்கிறார். 
 
"தாலிபன்கள் வாயிலை அடைந்துவிட்டார்கள் என்று கேள்விப்பட்டோம். ஆனால் விரைவிலேயே அவர்கள் காபூலுக்குள் நுழைவார்கள் என்று நினைக்கவில்லை. முந்தைய இரவு பரபரப்பாக பதற்றமாக இருந்தோம். எங்கள் ஆயுதங்களை அருகில் வைத்துக்கொண்டு தூங்கினோம். 
 
மக்கள் பணம் எடுப்பதற்காக வங்கிகளில் வரிசையாகக் குவிந்துவிட்டார்கள். விமான நிலையங்களிலும் மக்கள் கூட்டம். ஒரே போக்குவரத்து நெரிசல்" என்று ஷரீஃபி விவரிக்கிறார். எந்த அளவுக்கு நெரிசல் என்றால் கடைசி 15 நிமிடங்கள் காரிலிருந்து இறங்கி நடந்து அவர் விமான நிலையத்தை அடைய வேண்டியிருந்தது. 
 
விமான நிலையத்துக்கு வந்த பிறகு தாலிபன்களின் செயல்பாடுகள் பற்றிய உடனடித் தகவல்கள் அந்தக் குழுவுக்கு அனுப்பப்பட்டன. "ஒவ்வொரு நிமிடமும் நகரத்தின் முக்கியப் பகுதிகளை அவர்கள் கைபற்றியது பற்றிய தகவல்கள் வந்துகொண்டே இருந்தன. அச்சமாக இருந்தது" என்கிறார். 
 
விமான நிலையத்துக்குள் எந்த ஒழுங்கும் இருக்கவில்லை. மீதியிருக்கும் விமானங்களில் பயணச்சீட்டு வாங்குவதற்கு மக்கள் முண்டியடித்துக்கொண்டிருந்தார்கள். நாடாளுமன்ற உறுப்பினர்கள், பாடகர்கள் மற்றும் பிற முக்கிய விருந்தினர்கள் வந்ததால் பட்டியலில் ஏற்கனவே பயணச்சீட்டு இருந்தவர்கள் புறக்கணிக்கப்பட்டனர். 
 
விரைவிலேயே எல்லைப் பாதுகாப்பு அதிகாரிகளும் விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகளும் எங்கோ கிளம்பி மறையத் தொடங்கினார்கள். அந்தந்த இடங்களில் யாரும் இருக்கவில்லை, பயணிகளை கவனிக்கவும் யாரும் இருக்கவில்லை. அவர்கள் வெளியில் குவியத் தொடங்கினர். 
 
ஒருவழியாக அரசியல்வாதிகள் குழு பாகிஸ்தானை நோக்கிச் செல்லும் விமானத்தில் ஏறியது. ஆனால் விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டுக்குழு விமானம் கிளம்பக்கூடாது என்று உத்தரவிட்டது. "எந்த நேரமும் தாலிபான்கள் விமான நிலையத்தைக் கைப்பற்றி விடுவார்கள் என்று அச்சமாக இருந்தது. 
 
ஞாயிற்றுக்கிழமை பகல் நேரம் அதிபர் மாளிகையிலும் நிலைமை மோசமாகிக்கொண்டிருந்தது. பாதுகாப்பு மற்றும் உள்துறை அமைச்சகத்தைச் சேர்ந்த உயரதிகாரிகளைத் தொலைபேசியில் அழைக்க கனி தீவிரமாக முயற்சி செய்துகொண்டிருந்தார். ஆனால் யாரையும் பிடிக்க முடியவில்லை. 
 
ஒரு மூத்த அரசு அதிகாரி பிபிசியிடம் பேசினார். "ஒட்டுமொத்த அரசு இயந்திரமும் நொறுங்கியது போல இருந்தது. மூத்த அதிகாரிகள் கூட குழுக்களாகப் பிரிந்துவிட்டனர். எந்தக் குழுவுக்கும் இன்னொரு குழுவைப் பற்றித் தெரியவில்லை. மாளிகையிலிருந்து ஏதாவது ஒரு வழிகாட்டுதல் வரும் என்று நாங்கள் எதிர்பார்த்தோம். ஆனால் ஒன்றும் வரவில்லை" என்கிறார். 
 
கனியைச் சுற்றி இருந்தவர்களின் எண்ணிக்கையும் குறைந்துகொண்டே வந்தது. கனியைத் தவிர முக்கிய முடிவுகள் எடுத்துக் கொண்டிருந்தவர்கள் ஹம்துல்லா மோஹிப்பும் அவரது தலைமை அதிகாரி ஃபேசல் ஃபாஸ்லியும். 
 
மேலைக் கல்வி படித்த 38 வயதாகும் முன்னாள் ஆப்கானிஸ்தான் தூதுவரான மோஹிப், கனியின் முக்கிய அதிகாரிகளில் ஒருவர். எந்த ராணுவ பின்னணியும் இல்லாமல் இருந்தாலும் அவரையே 2018ல் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக கனி நியமித்தார். முக்கிய ராணுவ முடிவுகள் எடுக்கும் பொறுப்பு அவரிடமே கொடுக்கப்பட்டது. 
 
 

உயிருக்கு ஆபத்து என்று எச்சரிக்கை 

பகல் நேரம் நெருங்கியதும் வெளியேறவேண்டும் என்று மோஹிப் வலியுறுத்தத் தொடங்கினார். ஒரு மணி நேரத்துக்கு முன்னதாக வெளியில் துப்பாக்கி குண்டுகளின் சத்தம் கேட்கத் தொடங்கியிருந்தது. கிளம்புவதற்கு கனி தயங்கினாலும் 

அவர் உயிருக்கு ஆபத்து என்று மோஹிப் தெரிவித்தார். "தாலிபன்கள் வந்துகொண்டிருக்கிறார்கள் என்றும் அவரை சிறைப்பிடித்து அவர்கள் கொன்றுவிடுவார்கள் என்றும் மோஹிப் கனியிடம் தெரிவித்தார். அவர் மிகவும் கவலையாக இருந்தார்" என்கிறார் மாளிகைக்குள் இருந்த ஒருவர். 
 
அதற்குள் காபூலுக்குள் குழப்பமான நிலை உருவாகியிருந்தது. பிபிசியிடம் பேசிய ஒரு காபூல்வாசி," அலுவலகத்தில் இருந்தேன். சுமார் 2 மணிக்கு நகரத்துக்குள் தாலிபான்கள் வந்துவிட்டதை செய்திகளில் பார்த்தேன். கூட வேலை செய்பவர்கள் கிளம்பத் தொடங்கினார்கள். யாரும் யாருடனும் பேசவில்லை. நான் அலுவலகத்தை விட்டுக் கிளம்பியபோது தெருக்கள் நெரிசலாக இருந்தன, கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. துப்பாக்கி சத்தம் கேட்டது, யாரைப் பார்த்தாலும் சந்தேகமாக இருந்தது" என்கிறார். 
 
மக்கள் ஹெலிகாப்டரில் ஏறுவதால் பைகள் தரையில் வீசப்பட்டதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவிக்கின்றனர். சிலரோ இவை காவலர்களுக்குக் கொடுக்கப்பட்ட லஞ்சம் என்றும் சொல்வதாகத் தெரிகிறது. பின்னாளில், ஐக்கிய அரபு எமிரேட்டில் இருந்து செய்தி ஒன்றை வெளியிட்ட கனி, தான் மிகப்பெரிய தொகையுடன் நாட்டை விட்டு வெளியேறியதாக வந்த செய்தியை மறுத்தார். 
 
3.30 மணிக்கு மோஹிப், ஃபாஸ்லி, அதிபர் கனி ஆகியோர் ஹெலிகாப்டரில் மாளிகையை விட்டுக் கிளம்பினார்கள். முதலில் உஸ்பெகிஸ்தான் டெர்மெஸுக்குப் போய் அங்கிருந்து ஐக்கிய அரபு எமிரேட் சென்றனர். 
 
விமான நிலையத்தில் முக்கிய அரசு அதிகாரிகள் காத்துக்கொண்டிருந்தனர். கனி தப்பித்த விஷயம் யாருக்கும் தெரிந்திருக்கவில்லை. "அமைச்சர்கள் உட்பட சில முக்கிய அதிகாரிகளை என்னால் பார்க்க முடிந்தது. அடுத்த வாகனத்துக்காக அவர்கள் காத்திருந்தனர். எல்லாரும் கனி எங்கிருக்கிறார் என்று கேட்டுக்கொண்டிருந்தனர். ஆனால் அவர் எங்கிருக்கிறார் என்று யாருக்கும் தெரியவில்லை" என்கிறார் ஒரு அரசு உயரதிகாரி. 
 
விமான நிலையத்தில், பாகிஸ்தான் ஏர்லைன்ஸ் விமானம் PK6250, ஷரீஃபி மற்றும் அவரது குழுவினரோடு இன்னும் நின்றுக்கொண்டிருந்தது. நான்கரை மணிநேரமாக அவர்கள் காத்துக்கொண்டிருந்தனர். போக்குவரத்து கட்டுப்பாட்டு அதிகாரிகள் மௌனமாக இருந்தனர். 
 
விமான ஓட்டி ஒரு முடிவு எடுக்கவேண்டிய கட்டாயத்தில் இருந்தார். அனுமதி இல்லாமலே கிளம்பிய விமானம் விமான நிலையத்தின் ராணுவ தளத்தில் சினூக் ஹெலிகாப்டர்களும் அமெரிக்க ராணுவ விமானங்களும் தொடர்ந்து கிளம்பிக்கொண்டிருந்தன. அதிகாரபூர்வ அறிவிப்பு இன்றியே கிளம்புவதாக விமானி மாக்ஸூத் பஜ்ரானி முடிவெடுத்தார். அந்த முடிவால் அவர் பாகிஸ்தானில் ஒரு கதாநாயகனாகக் கொண்டாடப்பட்டார். ஏற்கனவே கிளம்பிக்கொண்டிருந்த இரு ராணுவ விமானங்களைப் பின் தொடர்ந்து சென்றதாக உள்ளுர் ஊடகங்களில் அவர் தெரிவித்தார். 
 
அந்தக் குழுவினர் அடைந்த ஆறுதலை ஷரீஃபி விவரிக்கிறார். "ஒருவழியாகக் கிளம்பிவிட்டோம் என்பது எங்களுக்கு ஆறுதலாக இருந்தது என்றாலும் எப்போது இங்கு திரும்பி வருவோம் என்பது தெரியாததால் வருத்தமாக இருந்தது" என்கிறார். 
 
இதனிடையே அதிபரின் மர மேசையில் தாலிபான்கள் அமர்ந்திருந்த புகைப்படங்கள் உலக ஊடகங்களை வந்தடைந்தன. காலையில் கனி பேசியபோது மேசையில் இருந்த புத்தகம் அப்படியே இருந்தது. ஆனால் அதில் புதிய அத்தியாயத்தைத்  துவக்கி வைத்திருந்தனர் தாலிபன்கள்!
Source: BBC.Com
நன்றி: பிபிசி தமிழ்.
 
 

ஆப்கானில் அஷ்ரஃப் கனி ஆட்சியின் பரபரப்பான கடைசி தருணங்கள்: நடந்தது என்ன..? ஆப்கானில் அஷ்ரஃப் கனி ஆட்சியின் பரபரப்பான கடைசி தருணங்கள்: நடந்தது என்ன..? Reviewed by Irumbu Thirai News on September 10, 2021 Rating: 5

தலிபான் ஆட்சி: ஆப்கானிலிருந்து வெளியேறிய முதல் விமானம்!

September 10, 2021

 


கடந்த ஆகஸ்ட் 31ஆம் திகதி அமெரிக்க படை ஆப்கானை விட்டு வெளியேறியவுடன் 10 நாட்கள் கடந்து அதாவது இன்றைய தினம் காபூல் விமான நிலையம் மீண்டும் இயங்கத் தொடங்கியுள்ளது.

 

தலிபான்கள் தமது அரசை உத்தியோகபூர்வமாக அறிவித்ததன் பின்னர் இடம்பெறுகின்ற முதலாவது விமான சேவை இதுவாகும்.  காபூலில் இருந்து கட்டார் தலைநகர் தோஹாவிற்கு பறந்த இந்த விமானத்தில் வெளிநாட்டு பயணிகள் சென்றுள்ளனர்.  

 

ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை தலிபான்கள் வெளிநாட்டவருக்கு நாட்டை விட்டு வெளியேற காலக்கெடு விதித்திருந்தது. ஆனால் பல்வேறு நெருக்கடி நிலைமை காரணமாக சிலருக்கு 

 

நாட்டை விட்டு வெளியேற முடியவில்லை. தற்போது அவ்வாறான சுமார் 113 பேரே இன்றைய தினம் நாட்டைவிட்டு சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கனடாவைச் சேர்ந்த 43 பேரும் நெதர்லாந்தைச் சேர்ந்த 13 பேரும் மீட்கப்பட்டிருப்பதாக அந்தந்த நாடுகள் தெரிவித்துள்ளன. 

 

அண்மையில் கட்டாருக்கு சென்றிருந்த அமெரிக்க வெளியுறவு அமைச்சர் அந்தோணி பிளிங்கன், ஆப்கானிஸ்தானிலிருந்து மக்களை மீட்பதற்கு உதவும்படி கட்டாரிடம் வேண்டுகோள் விடுத்திருந்தார். 

 

இந்நிலையிலேயே கட்டார் ஏர்வேஸ் விமானம் மூலம் இன்றையதினம் இவ்வாறு பயணிகள் சென்றுள்ளனர்.

தலிபான் ஆட்சி: ஆப்கானிலிருந்து வெளியேறிய முதல் விமானம்! தலிபான் ஆட்சி: ஆப்கானிலிருந்து வெளியேறிய முதல் விமானம்! Reviewed by Irumbu Thirai News on September 10, 2021 Rating: 5

தடுப்பூசி செலுத்தினால் மரணத்திலிருந்து எந்தளவு பாதுகாப்பு? வெளியான ஆய்வு..

September 10, 2021
 

கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்கள் மரணத்திலிருந்து எந்தளவு பாதுகாப்பு பெறுகிறார்கள் என்பது தொடர்பான ஆய்வின் முடிவை இந்திய அரசின் கொவிட் தடுப்பு தொழில்நுட்பக் குழு வெளியிட்டுள்ளது. 
 
அந்த வகையில் முதலாவது தடுப்பூசியை பெற்றுக்கொண்ட ஒருவர் கொரோனா மரணத்திலிருந்து 96% உம் இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றுக்கொண்ட ஒருவர் கொரோனா மரணத்திலிருந்து 97% உம் பாதுகாப்பு பெறுகிறார் என அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. 
 
கடந்த ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலான இந்தியாவில் கொரோனா தொற்று மற்றும் இறப்புகள் பற்றிய தரவை இந்த குழு பகுப்பாய்வு செய்து இதை கண்டறிந்துள்ளது.

தடுப்பூசி செலுத்தினால் மரணத்திலிருந்து எந்தளவு பாதுகாப்பு? வெளியான ஆய்வு.. தடுப்பூசி செலுத்தினால் மரணத்திலிருந்து எந்தளவு பாதுகாப்பு? வெளியான ஆய்வு..  Reviewed by Irumbu Thirai News on September 10, 2021 Rating: 5

மேலும் நீடிக்கப்பட்டது ஊரடங்கு

September 10, 2021

 


தற்போது அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு செப்டம்பர் 21ம் திகதி அதிகாலை 04:00 மணிவரை நீடிக்கப்பட்டுள்ளதாக இன்று நடைபெற்ற கொவிட் ஒழிப்பு கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் நீடிக்கப்பட்டது ஊரடங்கு மேலும் நீடிக்கப்பட்டது ஊரடங்கு Reviewed by Irumbu Thirai News on September 10, 2021 Rating: 5

சூனியத்தால் வருவதா மெனுஞ்சைத்திஸ் நோய்? தொடரும் அவல நிலை...

September 10, 2021
 

ஆப்பிரிக்க நாடான கொங்கோ ஜனநாயக குடியரசில் மெனுஞ்சைத்திஸ் (meningitis) என்ற நோய் காரணமாக இதுவரை 120 க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் 100க்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். 
 
கொங்கோ ஜனநாயக குடியரசில் கடந்த ஜூலை மாதம் முதன் முதலாக இந்த நோய் அறியப்பட்டது. பொதுவாக ஜனவரி முதல் ஜூலை வரையிலான உலர்வான பருவத்தில் இது ஏற்படுகிறது. 
 
சூனியம் வைப்பதால் இந்த நோய் ஏற்படுவதாக சமுதாயத்தில் நம்பிக்கை நிலவுவதால் 
 
இந்த நோயை கட்டுப்படுத்துவது சிரமம் என உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது. 
 
இது மாத்திரமன்றி நோய்தொற்றுக்கு ஆளானவர்கள் வேறொரு இடத்திற்கு இடம்பெயர்கின்றனர். அவ்வாறு செய்தால் இந்த நோய் தம்மை பின் தொடராது என நம்புகின்றனர். இவ்வாறான நிலைமைகளினால் நோயைக் கட்டுப்படுத்துவது சிரமம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
உண்மையிலேயே இது பாக்டீரியாவினால் ஏற்படுகிறது. நோய் பாதித்தவர்களின் உடலிலிருந்து எடுத்த மாதிரிகள் பிரான்சுக்கு அனுப்பி பரிசோதிக்கப்பட்டன. அதில், 
 
இந்த நோய்க்கு காரணமான பாக்டீரியம் மிகப் பெரிய கொள்ளை நோயை உருவாக்க வல்லது என்று கண்டறியப்பட்டது. 
 
செனகலில் இருந்து எத்தியோப்பியா வரையில் செல்லும் 'ஆப்பிரிக்காவின் மெனுஞ்சைத்திஸ் பெல்ட்' என்றழைக்கப்படும் பிராந்தியத்தில் 26 நாடுகள் இடம்பெற்றுள்ளன.
 
இதில் சில பகுதிகளில் மீண்டும் மீண்டும் இந்த நோய்த் தொற்று ஏற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. 
 
 
இந்த நோயின் அறிகுறிகள்: 
 
அதிக உடல் வெப்பம். 
 
கை, கால்கள் குளிர்தல். 
 
மனக்குழப்பம். 
 
வாந்தி. 
 
விரைவாக சுவாசித்தல். 
 
தசை மற்றும் மூட்டு வலி. 
 
வெளிறிய புள்ளிகள் அல்லது கறைபடிந்த தோல். 
 
உடலில் சொறி அல்லது புள்ளிகள் தோன்றல். 
 
தலைவலி. 
 
கழுத்துப்பகுதி கடினமாக இருத்தல். 
 
வெளிச்சத்திற்கு விருப்பமில்லாத தன்மை. 
 
அதிக தூக்கம் அல்லது தூக்கத்திலிருந்து எழும்ப விருப்பமின்மை. 
 
வலிப்பு. 
 
 
குழந்தைகளுக்கு
 
 உணவை புறக்கணித்தல். 
 
எரிச்சல் அடைதல். 
 
அதிக சத்தத்தில் அழுதல். 
 
உடல் கடினமாதல் / இலகுவாயிருத்தல்/ துலங்கல் அற்று இருத்தல். 
 
தலையின் மேல் பகுதியில் இலேசாக வீங்கியிருத்தல்.
சூனியத்தால் வருவதா மெனுஞ்சைத்திஸ் நோய்? தொடரும் அவல நிலை... சூனியத்தால் வருவதா மெனுஞ்சைத்திஸ் நோய்? தொடரும்  அவல நிலை... Reviewed by Irumbu Thirai News on September 10, 2021 Rating: 5

SCHOLARSHIPS FOR POSTGRADUATE COURSES (Indian Scholarship) - 2021/22

September 09, 2021
 

Applications are invited from eligible Sri Lankans for the award of postgraduate scholarships offered by the Government of India under the above scholarship scheme. 
 
 
General Eligibility Requirements: 
 
(a) Should be a citizen of Sri Lanka. 
 
(b) Masters applicants must have a BAMS degree recognized by CCIM and PhD applicants must have a MD (Ayurveda) degree recognized by CCIM. 
 
(c) Should be below 50 years of age as at 15.09.2021. 
 
(d) Be employed in the Public Sector, University, or a State Corporation 
 
(e) Should be confirmed in the service by the closing date of applications 
 
(f) An employee on probation may apply provided that his/her confirmation is conditional upon acquiring a specified postgraduate qualification, in such a case a statement to that effect should be included in cage 16 of the application. 
 e.g. A lecturer on probation is eligible to apply when he/she has been in continuous service for a period of one year from the date of his/her appointment by 15.09.2021 (As per the UGC-E Code Chapter X. Division II, 27:3) 
 
(g) Should possess a high proficiency in English 
 
 
Fields of Study: 
Ayurveda, Yoga, Unani, Siddha & Homeopathy 
 
The deadline of the submission of the application is 15th September 2021 
 
Click the link below for full details: 
 
 
Click the link below for online application:
SCHOLARSHIPS FOR POSTGRADUATE COURSES (Indian Scholarship) - 2021/22 SCHOLARSHIPS FOR POSTGRADUATE COURSES (Indian Scholarship) - 2021/22 Reviewed by Irumbu Thirai News on September 09, 2021 Rating: 5

Higher National Diploma (HND) in Livestock Production Technology (NVQ 5,6) – 2021/2023

September 09, 2021
 

Department of Animal Production & Health, Sri Lanka 
Applications for Admission to Sri Lanka Schools of Animal Husbandry 2021 (Open Competitive Examination) – Karandagolla 
 
Higher National Diploma (HND) in Livestock Production Technology (NVQ 5,6) – Academic Year 2021/2023 
 
Age Limit: 17 – 25 
 
Duration: 02 Years (Full Time) 
 
Medium: English 
 
Closing Date: 2021-10-08 
 
Click the link below for full details (03-09-2021 Gazette)
Higher National Diploma (HND) in Livestock Production Technology (NVQ 5,6) – 2021/2023 Higher National Diploma (HND) in Livestock Production Technology (NVQ 5,6) – 2021/2023 Reviewed by Irumbu Thirai News on September 09, 2021 Rating: 5

தரம்:07 முதல் மாணவர்களுக்கு தடுப்பூசி:

September 09, 2021
 

உலக சுகாதார ஸ்தாபனம் உட்பட ஏனைய சில சர்வதேச நிறுவனங்கள் சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவது தொடர்பாக பரிந்துரைகளை முன்வைத்துள்ளன. 
 
அந்தவகையில் இலங்கையிலும் சிறுவர்களுக்கான தடுப்பூசி செலுத்தும் 
 
பணிகள் ஆரம்பிக்கப்பட்டதும் தரம் 7 முதல் 13 வரையிலான மாணவர்களுக்கு முதலில் தடுப்பூசி வழங்கலாம் என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். 
 
இன்றைய தினம்(9) Zoom தொழில்நுட்பத்தின் ஊடாக நடைபெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 
 
கல்விசார் மற்றும் கல்விசாரா ஊழியர்களுக்கு பூரணமாக தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ள நிலையில் பாடசாலை மாணவர்களுக்கும் தடுப்பூசி செலுத்தி முடிக்கப்பட்டதன் பின்னர் பாடசாலைகளை ஆரம்பிக்கலாம். 
 
கொரோனா பரவல் காரணமாக சுமார் ஒன்றரை வருடங்கள் மாணவர்கள் கல்வியில் பின் தங்கிய நிலையில் காணப்படுகிறார்கள். எனவே பாடசாலைகளை விரைவாக ஆரம்பிக்க தடுப்பூசியை விரைவாக வழங்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.
தரம்:07 முதல் மாணவர்களுக்கு தடுப்பூசி: தரம்:07 முதல் மாணவர்களுக்கு தடுப்பூசி:  Reviewed by Irumbu Thirai News on September 09, 2021 Rating: 5
Powered by Blogger.