தடுப்பூசி வழங்கினால் மாணவர்களுக்கு தாக்கநிலை வருமா? தீர்மானம் இன்று!

September 15, 2021
 

இங்கிலாந்து ஜோன் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக ஆய்வு கடந்த 04 நாட்களுக்கு முன்னர் வெளியிடப்பட்டது. அதன் அடிப்படையில் 12 - 15 வயதுக்கு இடைப்பட்ட மாணவர்களுக்கு தடுப்பூசி வழங்கும் பட்சத்தில் ஏதாவது 
 
ஒரு தாக்க நிலை வரலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இது போன்ற நிலைமைகளை கருத்திற்கொண்டு மாணவர்களுக்கு தடுப்பூசி வழங்குவது தொடர்பில் இரண்டு முக்கிய தீர்மானங்கள் இன்றைய தினம்(15) எடுக்கப்பட இருப்பதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். 
 
அதாவது முன்பள்ளி முதல் தரம் 6 வரையான மாணவர்களுக்கு வழங்குவதா? அல்லது தரம் 12, 13 மாணவர்களுக்கு வழங்குவதா? என்ற தீர்மானம் இன்றைய தினம் எடுக்கப்பட இருப்பதாக தெரிவித்துள்ளார். 
 
சகல நிலைமைகளை ஆராய்ந்து சிறந்த ஒரு தீர்வை எடுக்க வேண்டும் ஆனால் அந்த சிறந்த ஒரு தேர்விலும் பிரச்சினைகள் ஏற்படலாம் என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
தடுப்பூசி வழங்கினால் மாணவர்களுக்கு தாக்கநிலை வருமா? தீர்மானம் இன்று! தடுப்பூசி வழங்கினால் மாணவர்களுக்கு தாக்கநிலை வருமா? தீர்மானம் இன்று!  Reviewed by Irumbu Thirai News on September 15, 2021 Rating: 5

SELECTION LIST: National Diploma in Technology (University of Moratuwa)

September 15, 2021
 

University of Moratuwa - Institute of Technology. 
 
SELECTION LIST: National Diploma in Technology 2020/2021 (Round -3)
 
Details about Selection (Round-111)

 
To View Selected List:

 
 
Form 01 - Form of Registration - 2020-2021 Intake:
 
Form 02 - Acceptance of the Field of study
 
For more details:
SELECTION LIST: National Diploma in Technology (University of Moratuwa) SELECTION LIST: National Diploma in Technology (University of Moratuwa) Reviewed by Irumbu Thirai News on September 15, 2021 Rating: 5

10-09-2021 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்)

September 14, 2021
 
gazette 10.9.2021

10-09-2021 அன்று வெளியான அரச வர்த்தமானியை தமிழ், ஆங்கிலம், சிங்களம் ஆகிய மொழிகளில் இங்கு தருகிறோம். 
 
Official Government Gazette released on 10-09-2021. 
 
இதில், 
 
பல முக்கிய அறிவித்தல்கள் காணப்படுகின்றன. கீழே உள்ள உரிய லிங்கை கிளிக் செய்து உரிய மொழியில் முழுமையாக பார்வையிடுக. 
 
 
தமிழில் பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க. 
 
ஆங்கிலத்தில் பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க. 
 
சிங்களத்தில் பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க
 
 
முன்னைய வர்த்தமானி அறிவித்தலுக்கு செல்ல...
10-09-2021 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) 10-09-2021 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) Reviewed by Irumbu Thirai News on September 14, 2021 Rating: 5

பட்டதாரிகளின் பயிற்சி காலம் நீடிக்கப்பட்டுள்ளதா? அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிவிப்பு!

September 14, 2021
 

நேற்றைய அமைச்சரவை கூட்டத்தின் முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று நடைபெற்றபோது ஊடகவியலாளர் ஒருவர், 
பட்டதாரிகளின் பயிற்சிக் காலத்தை மேலும் 6 மாதங்கள் நீடிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதா என கேள்வி எழுப்பினார். 
 
இதற்கு பதிலளித்த அமைச்சர் டளஸ் அழகப்பெரும, 
 
இதுவரை அவ்வாறான எந்தவொரு தீர்மானமும் எடுக்கப்படவில்லை. 53,000 பயிற்சி பட்டதாரிகளில் 18,000 பேருக்கு நியமனம் வழங்குவதற்கு எதிர்பார்த்திருந்த போதிலும் அந்த பணிகள் இதுவரை நிறைவடையவில்லை. பயிற்சி காலத்தை மேலும் 6 மாதத்திற்கு நீடிப்பதற்கான பத்திரம் அமைச்சரவைக்கு முன்வைக்கப்பட்டிருந்தது. 
 
ஆனால் குறித்த விடயங்களை விரைவுபடுத்தி எஞ்சிய பட்டதாரிகளுக்கும் விரைவில் நியமனங்களை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
பட்டதாரிகளின் பயிற்சி காலம் நீடிக்கப்பட்டுள்ளதா? அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிவிப்பு! பட்டதாரிகளின் பயிற்சி காலம் நீடிக்கப்பட்டுள்ளதா? அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிவிப்பு! Reviewed by Irumbu Thirai News on September 14, 2021 Rating: 5

13.09.2021 அன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்ட தீர்மானங்கள்

September 14, 2021
 
cabinet decisions in tamil

13.09.2021 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது எடுக்கப்பட்ட தீர்மானங்களை இங்கு தருகிறோம். 
இதில், 
 
பல முக்கிய தீர்மானங்கள் அடங்கியுள்ளன. 
 
இதன் முழு வடிவத்தைப் பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க. 
 
 
முன்னைய அமைச்சரவை கூட்ட தீர்மானங்களைப் பார்வையிட... 
13.09.2021 அன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்ட தீர்மானங்கள் 13.09.2021 அன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்ட தீர்மானங்கள் Reviewed by Irumbu Thirai News on September 14, 2021 Rating: 5

Circular for SLAS Annual Transfer Procedure / வருடாந்த இடமாற்ற நடைமுறைகள் (இலங்கை நிர்வாக சேவை - SLAS)

September 13, 2021
 

இலங்கை நிர்வாக சேவை உத்தியோகத்தர்களுக்கான வருடாந்த இடமாற்ற நடைமுறைகள் தொடர்பான சுற்றறிக்கை பொது சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் இன்றைய தினம் (13) வெளியிடப்பட்டுள்ளது. 
 
சுற்றறிக்கை இலக்கம்: 17/2021. 
 
குறித்த சுற்றறிக்கையை முழுமையாக பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க. 
Circular for SLAS Annual Transfer Procedure / வருடாந்த இடமாற்ற நடைமுறைகள் (இலங்கை நிர்வாக சேவை - SLAS) Circular for SLAS Annual Transfer Procedure / வருடாந்த இடமாற்ற நடைமுறைகள் (இலங்கை நிர்வாக சேவை - SLAS) Reviewed by Irumbu Thirai News on September 13, 2021 Rating: 5

Diploma in Counselling - 2021 (National Institute of Social Development)

September 13, 2021
 
diploma in counselling

Diploma in Counselling 2021/2022 
National Institute of Social Development (NISD) 
 
Qualification: 
 
GCE A/L or O/L with 03 Years Experience in the relevant field 
 
 
 
Medium: Tamil, Sinhala, English 
 
Duration: 21 Months (Weekends) 
 
Course Fee: Rs.51,000/= 
 
Centers: Seeduwa, Ampara, Kilinochchi and Ranna. 
 
Closing Date: 2021-09-30 
 
 
Click the link below for full details: 
 
Click the link below for Online application
 
Click the link below for download application (Pdf):
Diploma in Counselling - 2021 (National Institute of Social Development) Diploma in Counselling - 2021 (National Institute of Social Development) Reviewed by Irumbu Thirai News on September 13, 2021 Rating: 5

போலி அறிக்கைகளைப் பார்த்து பரீட்சைக்கு விண்ணப்பிக்க வேண்டாம் - மஹிந்த ஜெயசிங்க

September 13, 2021
 

அதிபர் ஆசிரியர் சம்பள முரண்பாட்டிற்கான தீர்வு கடந்த ஆகஸ்ட் 30ஆம் தேதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்டு 31ஆம் திகதி அறிவிக்கப்பட்டது. 
 
அந்தப் பரிந்துரைகளுக்கு தொழிற்சங்கம் என்ற அடிப்படையில் நாம் எதிர்ப்பு தெரிவித்தோம். மேலும் இது தொடர்பில் கலந்துரையாடல் செய்வதற்காக ஜனாதிபதியிடமும் நிதியமைச்சரிடமும் சந்தர்ப்பம் வேண்டி வேண்டுகோள் விடுத்தோம். ஆனால் இதுவரை எந்த பதிலும் இல்லை. 
 
எனவே அரசாங்கம் இந்தப் பிரச்சினை தொடர்பில் அலட்சியமாகவே இருப்பதாக தோன்றுகிறது என இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் செயலாளர் மகிந்த ஜெயசிங்க தெரிவித்துள்ளார். 
 
தனது முகநூல் காணொளி ஒன்றின் மூலமே அவர் இன்றைய தினம் இவ்வாறு தெரிவித்துள்ளார். 
 
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது, 
 
எமது போராட்டம் தொடர்பாக மதத் தலைவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு தெளிவூட்டும் நடவடிக்கைகள் தற்போது சிறப்பாக முன்னெடுக்கப்படுகின்றன. 
 
ஏனையவர்களும் இதில் இணைந்து செயற்படுங்கள். தொழிற்சங்கமே எல்லாவற்றையும் செய்து தர வேண்டும் என எதிர்பார்க்காமல் ஒவ்வொருவரும் ஆக்கபூர்வமாக பங்களிக்க வேண்டும். 
 
மேலும் 15 ஆம் திகதிக்கு முன்னர் பரீட்சைக்கு விண்ணப்பிக்காத அதிபர்கள் அது தொடர்பில் முழுப் பொறுப்பையும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என கல்வி அமைச்சின் செயலாளர் அறிவித்த விடயம் தொடர்பாக நாம் எமது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தி அவருக்கு மீண்டும் பதில் கடிதம் அனுப்பியுள்ளோம். 
 
அதிபர் ஆசிரியர் தொழிற்சங்கங்களின் ஒன்றியம் என்ற அடிப்படையில் எல்லா சங்கங்களும் சேர்ந்து 
 
இந்த கடிதத்தை கடந்த 10 ஆம் திகதி செயலாளருக்கு அனுப்பி உள்ளோம். 
 
அதில் குறித்த விடயங்கள் எம்மால் செய்ய முடியாது என தெளிவாகவே தெரிவித்து இருக்கிறோம். 
 
எனவே எந்த அதிபர்களும் குறித்த பரிட்சைக்கு விண்ணப்பிக்க வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். அவ்வாறு விண்ணப்பிக்காத அதிபர்களுக்காக தொழிற்சங்கம் எப்பொழுதும் முன்னிற்கும் என தெரிவித்துக் கொள்கிறேன். 
 
மேலும் நேற்றைய தினமும் இது தொடர்பாக அதிபர்களுடன் விசேட கலந்துரையாடல் இடம்பெற்றது. அதில் தற்போதைய சிக்கல்கள் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டது. இறுதியாக பரிட்சைக்கு விண்ணப்பிப்பதில்லை என்ற தீர்க்கமான முடிவு எட்டப்பட்டது. 
 
இதேவேளை வேறு வேறு சங்கங்களின் பெயரில் 
 
போலியான அறிக்கைகள் வெளிவருகின்றன. அவற்றைக் கண்டு ஏமாந்து பரிட்சைக்கு விண்ணப்பிக்க வேண்டாம்.
 
அமைச்சரவையின் தீர்வு அறிவிக்கப்பட்டதன் பின்னர் நடைபெறுகின்ற இரண்டாவது அமைச்சரவை கூட்டம் இன்று இடம்பெறுகிறது. 
 
கடந்த அமைச்சரவைக் கூட்டத்திலும் இது தொடர்பில் எவ்வித விடையமும் பேசப்பட்டிருக்கவில்லை. 
 
இன்றைய அமைச்சரவை கூட்டத்திலாவது ஏதாவது முடிவு எடுக்கிறார்களா எனப் பார்ப்போம். 
 
எவ்வாறாயினும் உரிய தீர்வு கிடைக்கும் வரை நமது போராட்டம் தொடரும் என அவர் மேலும் தெரிவித்தார்.
Irumbuthirainews.com
போலி அறிக்கைகளைப் பார்த்து பரீட்சைக்கு விண்ணப்பிக்க வேண்டாம் - மஹிந்த ஜெயசிங்க போலி அறிக்கைகளைப் பார்த்து பரீட்சைக்கு விண்ணப்பிக்க வேண்டாம் - மஹிந்த ஜெயசிங்க Reviewed by Irumbu Thirai News on September 13, 2021 Rating: 5

பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான தடுப்பூசி தொடர்பான அறிவித்தல்

September 13, 2021
 

சாதாரணதர மற்றும் உயர்தர பரீட்சை என்பவற்றுக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டம் அடுத்த மாத முற்பகுதி தொடக்கம் ஆரம்பிக்கப்படும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் மத்திய செயற்குழு உறுப்பினர் வைத்தியர் நளின்த ஹேரத் தெரிவித்துள்ளார். 
 
மேலும் பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பான வழிகாட்டல்கள் அடங்கிய அறிக்கை எதிர்வரும் 17ஆம் திகதி கொவிட் தடுப்பு செயலணி கூட்டத்தில் கையளிக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான தடுப்பூசி தொடர்பான அறிவித்தல் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான தடுப்பூசி தொடர்பான அறிவித்தல் Reviewed by Irumbu Thirai News on September 13, 2021 Rating: 5

17 வயது மாணவன் சி.ஐ.டி. க்கு அழைப்பு!

September 13, 2021

17 வயது மாணவன் சிஐடி அழைக்கப்பட்டுள்ளதாக இன்றைய(13) 'காலைக்கதிர்' என்ற பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. 
 
இது தொடர்பான குறித்த பத்திரிகை செய்தியை கீழே காணலாம்.

 
17 வயது மாணவன் சி.ஐ.டி. க்கு அழைப்பு! 17 வயது மாணவன் சி.ஐ.டி. க்கு அழைப்பு! Reviewed by Irumbu Thirai News on September 13, 2021 Rating: 5

அமெரிக்க இரட்டை கோபுர தாக்குதல் பற்றி சவுதிக்கு ஏற்கனவே தெரியுமா? வெளியான இரகசிய அறிக்கை!

September 13, 2021
 

அமெரிக்காவில் நடைபெற்ற செப்டம்பர்- 11 தாக்குதல் (9/11 தாக்குதல்) குறித்து செளதி அரேபிய அதிகாரிகளுக்கு முன்பே தெரியும் எனவும், அவர்கள் தாக்குதலைத் தடுக்க முயலவில்லை எனவும், இந்த தாக்குதல் தொடர்பான ரகசிய ஆவணங்களை அமெரிக்கா வெளியிட வேண்டும் எனவும் 9/11 தாக்குதலில் இறந்தவர்களின் பலரது உறவினர்களும் அரசை தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். 
 
ஏனெனில் 9/11 தாக்குதல் நடத்திய 19 பேரில் 15 பேர் சவுதி அரேபியாவைச் சேர்ந்தவர்கள். 
 
இந்நிலையில் நீண்டகால கோரிக்கைக்குப் பிறகு இந்த ரகசிய ஆவணங்கள் தற்போது வெளியிடப்பட்டிருக்கிறது, 
 
ஆனால், 9/11 தாக்குதலுக்கும் செளதி அரசுக்கும் தொடர்பு இருப்பதாக இந்த ஆவணங்களில் எந்தவித ஆதாரங்களும் இல்லை. 
 
16 பக்கங்களைக் கொண்ட எஃப்.பி.ஐயின் (Federal Bureau of Investigation - FBI) இந்த ரகசிய ஆவணங்கள் வெளியிடப்பட்டாலும், பல இடங்கள் மறைக்கப்பட்டிருக்கின்றன. 
 
தற்போது வெளியிடப்பட்டுள்ள ஆவணங்கள் ஒரு ரகசிய நபரிடம் எடுக்கப்பட்ட நேர்காணலைப் பற்றியது. அவரின் விபரங்கள் இப்போதும் ரகசியமாகவே வைக்கப்பட்டிருக்கின்றன. 
 
முன்னைய ஜனாதிபதிகள் பாதுகாப்பு பிரச்சினைக்காக இதை வெளியிடாமல் 
இருந்தாலும் தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடன் துணிந்து இதை வெளியிட்டுள்ளார். 
 
தாக்குதலில் பங்கெடுத்த இருவர் லாஸ் ஏஞ்சலஸ் நகரத்தில் இருக்கும் ராஜா ஃபஹத் மசூதியைச் சேர்ந்த இமாம் ஃபஹத் அல் துமைரேவுடன் தொடர்புகளை வைத்திருந்ததாக இந்த ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. 
 
ஆனால் இந்த இமாம் தாக்குதல் நடப்பதற்கு சில வாரங்களுக்கு முன்பே அமெரிக்காவை விட்டு வெளியேறிவிட்டார். 
 
எவ்வாறாயினும் குறித்த அறிக்கையை வரவேற்றுள்ள சவுதி அரேபியா 2001-09-11 இல் நடந்த அந்த கொடூர தாக்குதலுக்கும் தங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என மீண்டும் ஒரு முறை அழுத்தமாக மறுத்திருக்கிறது.

அமெரிக்க இரட்டை கோபுர தாக்குதல் பற்றி சவுதிக்கு ஏற்கனவே தெரியுமா? வெளியான இரகசிய அறிக்கை! அமெரிக்க இரட்டை கோபுர தாக்குதல் பற்றி சவுதிக்கு ஏற்கனவே தெரியுமா? வெளியான இரகசிய அறிக்கை! Reviewed by Irumbu Thirai News on September 13, 2021 Rating: 5

அரச ஊழியர்களுக்கு ஏற்படும் சந்தேகங்களும் அதற்கான தீர்வுகளும் - பாகம் 02

September 12, 2021
 

தாபன விதிக்கோவை மற்றும் அரசாங்க நிர்வாக சுற்றறிக்கைகளில் நேரடியாக உள்ளடக்கப்படாத விடயங்கள் தொடர்பில் அரசாங்க ஊழியர்களுக்கு ஏற்படும் சந்தேகத்திற்கான தீர்வுகள் இங்கே வழங்கப்படுகின்றன. இவை தாபனப் பணிப்பாளரினால் வழங்கப்பட்ட பதில்களாகும். 
 
இவ்வாறு அரச நிறுவன தலைவர்களால் அடிக்கடி வினவப்பட்ட விடயங்களுக்கான பதில்களை கட்டங்கட்டமாக இங்கே தருகிறோம். 
 
 
(06) வைத்தியச் சான்றிதழை அடிப்பைடையாகக் கொண்டு விடுமுறை அனுமதிக்கப்பட்டுள்ள போது, அவ்விடுமுறை நாட்களுள் உள்ளடங்குகின்ற சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை அல்லது அரசாங்க விடுமுறை நாட்களும் அலுவலருக்கு உரித்தான ஓய்வு விடுமுறைகளில் இருந்து கழிக்கப்படுமா? 
 
வைத்தியச் சான்றிதழொன்றின் அடிப்படையில் அலுவலர் ஒருவருக்கு வழங்கப்படுகின்ற முழுச் சம்பளத்துடன் கூடிய விடுமுறைகளின் எண்ணிக்கை யாதெனில், குறித்த ஏற்பாடுகளுக்கு அமைவாக நடப்பாண்டில் தொடர்ந்தும் மீதமாகவுள்ள விடுமுறை நாட்களின் எண்ணிக்கை மற்றும் முன்னைய ஆண்டில் மீதமாகவுள்ள ஓய்வு/ சுகயீன விடுமுறைகளின் எண்ணிக்கையுடன் தொடர்ந்தும் விடுமுறை தேவைப்படுமாயின் தாபனவிதிக் கோவையின் XII ஆம் அத்தியாயத்தின் 10 ஆம் பிரிவின் கீழ் பெற்றுக்கொள்ள முடியுமான முன்னைய விடுமுறைகளுமாகும். 
 
அவ் அத்தியாயத்தின் 8.3 உப பிரிவின் ஏற்பாடுகளுக்கமைய உள் நாட்டில் கழிக்கும் ஓய்வு விடுமுறை காலத்தினுள் உள்ளடங்குகின்ற சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை மற்றும் அரசாங்க விடுமுறை நாட்கள் என்பன விடுமுறை நாட்களில் இருந்து கழிக்கப்பட மாட்டாது. 
 
அதற்கமைய வைத்தியச் சான்றிதழின் அடிப்படையில் சுகயீன விடுமுறையாக முழுச் சம்பளத்துடன் வழங்கப்படும் சில விடுமுறை நாட்கள் அனுமதிக்கப்படும் சந்தர்ப்பத்தில், 
 
சனிக்கிழமை சாதாரண அலுவலக கடமை நாளாக கணிக்கப்படுகின்ற அலுவலர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை மற்றும் அரசாங்க விடுமுறை நாட்களும், 
 
சுழற்சிமுறையின் கீழ் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள அலுவலர்களுக்கு வாரத்தில் அவர்களுக்கு கிடைக்கின்ற ஓய்வு நாட்களும், 
 
வாரத்தில் 05 நாட்களில் மாத்திரம் சாதாரண அலுவலக கடமை நாட்களாக விதிக்கப்பட்டுள்ள அலுவலர்களுக்கு சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை மற்றும் அரசாங்க விடுமுறை நாட்களும் அலுவலருக்கு உரித்தான ஓய்வு விடுமுறைகளில் இருந்து குறைக்கப்பட மாட்டாது. 
 
உதாரணமாக :- முழுச் சம்பளத்துடன் விடுமுறை வழங்கப்படும் வாரத்தின் 05 நாட்கள் மாத்திரம் அலுவலக கடமையில் ஈடுபடவேண்டிய அலுவலர் ஒருவருக்கு 05 நாட்கள் வைத்திய காரணங்களின் அடிப்படையில் விடுமுறை அனுமதிக்கும் சந்தர்ப்பத்தின் போதும், அக்கால எல்லையில் அரசாங்க விடுமுறை தினங்கள் 02 உள்ளடங்குமாயின், அலுவலர் சுகயீனம் காரணமாக 05 நாட்கள் சேவைக்கு சமூகமளிக்காதிருந்த போதிலும், உள்ளபடியாக அவருக்கு உரித்தான ஓய்வு விடுமுறைகளில் இருந்து 03 நாட்களே கழிக்கப்படும். 
 
(07) அரசாங்க அலுவலர் ஒருவர் கர்ப்பிணியாக இருப்பின், 05 மாதமாகும் போது, பிரசவ விடுமுறை பெற்றுக் கொள்ளும் வரையில், கடமையின் நிமித்தம் அலுவலகத்திற்கு அரை மணித்தியாலயம் பிந்தி வருவதற்கும், சாதாரணமாக அலுவலகத்தில் இருந்து வெளியேறும் நேரத்திற்கு அரை மணித்தியாலம் முந்தி புறப்படுவதற்கும் வழங்கப்பட்டுள்ள சலுகையை, காலை அல்லது மாலை ஒரேயடியாக ஒரு மணித்தியாலமாக பெற்றுக்கொள்ள முடியுமா? 
 
விடுமுறையை அனுமதியை வழங்கும் அதிகாரிக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ள விடயங்கள் குறித்து திருப்தியடைவாராயின் அச் சலுகையை ஒரேயடியாக ஒரு மணித்தியாலயம் வழங்குவது சம்பந்தமாக எதுவித எதிர்ப்புக்களும் இல்லை. 
 
(08) பிரசவ லீவு பெற்றுள்ள பெண் உத்தியோகத்தர் ஒருவருக்கு அந்த லீவு காலத்தினுள் இடமாற்றம் கிடைக்கப் பெற்று அதனை நடைமுறைப்படுத்தும் போது பிரசவ லீவு (சம்பளத்துடன், அரைச் சம்பளம் அல்லது சம்பளமற்ற) காலத்தின் மீதமுள்ள நாட்களைப் பெற புதிய சேவை நிலையத்தில் அனுமதியைப் பெற்றுக் கொள்ள முடியுமா? 
 
இடமாற்றக் கட்டளைக்கு ஏற்ப புதிய சேவை நிலையத்தில் கடமையைப் பொறுப்பேற்றதன் பின்னர் சுற்றறிக்கை ஏற்பாடுகளின் படி அப்பெண் உத்தியோகத்தருக்கு தொடர்ந்தும், சம்பளத்துடன், அரைச் சம்பளம் அல்லது சம்பளமின்றிய பிரசவ லீவுகள் எஞ்சியிருப்பின் புதிய சேவை நிலையத்தில் அம்மீதமுள்ள லீவு நாட்களைப் பெறுவதற்கு அனுமதிக்க முடியும். 
 
(09) அரச உத்தியோகத்தர்களில் தங்கி வாழும் குழந்தைகளின் பொருட்டு விடுமுறை புகையிரத ஆணைச்சீட்டுக்கள் (Railway warrants) வழங்கும் போது அவர்களின் பொருட்டு உச்ச வயதெல்லைகள் விடுக்கப்பட்டுள்ளதா? 
 
தாபன விதிக்கோவையில்; XVI வது அத்தியாயத்தின் 1:3 வது உப பிரிவின் பிரகாரம் வயதெல்லையைக் கருதாது நிரந்தரமாகத் தங்கி வாழ்வதாக உறுதிப்படுத்திக் கொள்ளல் போதுமானதாகும். 
 
மேலும் அவ் அத்தியாயத்தின் 1:3:4 வது உப பந்திக்கமைய இவ் உறுதிப்படுத்தல் திணைக்களத் தலைவரின் பொறுப்பாகும் என்பதுடன், தேவையெனில் இது தொடர்பாக கிராம அலுவலரிடம் உறுதிப்பாட்டொன்றை வேண்டிக் கொள்ள முடியும்.
தொடரும்... 

ஏனைய பாகங்களுக்கு செல்ல...
அரச ஊழியர்களுக்கு ஏற்படும் சந்தேகங்களும் அதற்கான தீர்வுகளும் - பாகம் 02 அரச ஊழியர்களுக்கு ஏற்படும் சந்தேகங்களும் அதற்கான தீர்வுகளும் - பாகம் 02 Reviewed by Irumbu Thirai News on September 12, 2021 Rating: 5

அரச ஊழியர்களுக்கு ஏற்படும் சந்தேகங்களும் அதற்கான தீர்வுகளும் - பாகம் 01

September 12, 2021
 

தாபன விதிக்கோவை மற்றும் அரசாங்க நிர்வாக சுற்றறிக்கைகளில் நேரடியாக உள்ளடக்கப்படாத விடயங்கள் தொடர்பில் அரசாங்க ஊழியர்களுக்கு ஏற்படும் சந்தேகத்திற்கான தீர்வுகள் இங்கே வழங்கப்படுகின்றன. 
 
இவை தாபனப் பணிப்பாளரினால் வழங்கப்பட்ட பதில்களாகும். 
 
இவ்வாறு அரச நிறுவன தலைவர்களால் அடிக்கடி வினவப்பட்ட விடயங்களுக்கான பதில்களை கட்டங்கட்டமாக இங்கே தருகிறோம். 
 
 
(01) அரசின் நிரந்தர நியமனம் ஒன்றை பெறும் சந்தர்ப்பத்தில் குழந்தை பிரசவித்த உத்தியோகத்தர் ஒருவருக்கு பிரசவ விடுமுறை வழங்கலாமா? 
 
முடியும். 
 
குழந்தை பிரசவித்த நாள் தொடக்கம் உத்தியோகத்தர் நிரந்தர நியமனத்தினைக் கையேற்ற நாள் வரையிலான கால எல்லையினைக் கழித்து சம்பளத்துடனான, அரைச் சம்பளத்துடனான மற்றும் சம்பளமற்ற பிரசவ விடுமுறையினை வழங்க முடியும்.
 
03.02.2005 ஆந் திகதிய 04/2005 என்னும் இலக்கமுடைய அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை ஏற்பாடுகளுக்கமைய இதை வழங்கலாம்.
 
இது தொடர்பான சுற்றறிக்கையை பார்வையிடவும் பதிவிறக்கம் செய்யவும் இங்கே கிளிக் செய்க. 
 
 
(02) கடமை வேளையின் பின்னர் விபத்தொன்று ஏற்படும் சந்தர்ப்பத்தில் அதன் பொருட்டு அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை 382 இன் ஏற்பாடுகளுக்கமைய விடுமுறை வழங்க முடியுமா? 
 
அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை இலக்கம் 382 இற்கமைய எதிர்பார்க்காத அனர்த்தமொன்று என்பது ஓர் புவியியல் பிரதேசமொன்றினுள் ஏற்படும் வெள்ளம், சூறாவளி, நிலநடுக்கம் நீண்ட வரட்சி போன்ற இயற்கை அனர்த்தங்கள் அல்லது யுத்தம் போன்ற சந்தர்ப்பத்தில் ஏற்படும் அனர்த்தங்கள் என்பதாகும். அவ்வாறான சந்தர்ப்பத்தில் விபத்துக்குள்ளாகும் உத்தியோகத்தரொருவருக்கு அச்சுற்றறிக்கையின் ஏற்பாடுகளைக் கடைப்பிடித்து விடுமுறை வழங்கலாம். 
 
அது தவிர வேறு அவசர விபத்துக்களின் (மோட்டார் வாகன விபத்து போன்ற) பொருட்டு அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை இலக்கம் 382 இன் ஏற்பாடுகளை ஏற்புடையதாக்க முடியாது. 
 
இது தொடர்பான சுற்றறிக்கையை பார்வையிடவும் பதிவிறக்கம் செய்யவும் இங்கே கிளிக் செய்க. 
 
 
 
(03) புலமைப்பரிசிலின் பேரில் வெளிநாடு செல்லும் உத்தியோகத்தர் ஒருவரின் துணையும் அவரோடு செல்ல வெளிநாட்டு விடுமுறை பெறலாமா? 
 
முடியாது. 
 
 
(04) ஒப்பந்த அடிப்படையில் (Contract Base) சேவையில் ஈடுபட்டுள்ள உத்தியோகத்தரொருவருக்கு பிரசவ விடுமுறை வழங்க முடியுமா? 
 
முடியாது. 
 
 
(05) சட்ட ரீதியாக குழந்தையொன்றை தத்தெடுக்கும் உத்தியோகத்தரொருவருக்கு குழந்தையை பார்த்துக் கொள்ளும் பொருட்டு விடுமுறையைப் பெற்றுக் கொள்ள முடியுமா? 
 
விசேட விடுமுறையைப் பெற்றுக் கொள்ள முடியும். அதன் பொருட்டு தாபனப் பணிப்பாளர் நாயகத்தின் அனுமதியினைப் பெற்றுக் கொள்ளல் வேண்டும். 
 
தொடரும்...
 
இது தொடர்பான ஏனைய பாகங்கள்...
அரச ஊழியர்களுக்கு ஏற்படும் சந்தேகங்களும் அதற்கான தீர்வுகளும் - பாகம் 01 அரச ஊழியர்களுக்கு ஏற்படும் சந்தேகங்களும் அதற்கான தீர்வுகளும் - பாகம் 01 Reviewed by Irumbu Thirai News on September 12, 2021 Rating: 5
Powered by Blogger.