அரச ஊழியர்களுக்கு ஏற்படும் சந்தேகங்களும் அதற்கான தீர்வுகளும் - பாகம் 03

September 16, 2021
 

தாபன விதிக்கோவை மற்றும் அரசாங்க நிர்வாக சுற்றறிக்கைகளில் நேரடியாக உள்ளடக்கப்படாத விடயங்கள் தொடர்பில் அரசாங்க ஊழியர்களுக்கு ஏற்படும் சந்தேகத்திற்கான தீர்வுகள் இங்கே வழங்கப்படுகின்றன. இவை தாபனப் பணிப்பாளரினால் வழங்கப்பட்ட பதில்களாகும். 
 
இவ்வாறு அரச நிறுவன தலைவர்களால் அடிக்கடி வினவப்பட்ட விடயங்களுக்கான பதில்களை கட்டங்கட்டமாக இங்கே தருகிறோம்.
 
(10) முறையான ஒழுக்காற்று விசாரணையின் போது காப்பு உத்தியோத்தர்களுக்கு இணைந்த கொடுப்பனவை செலுத்த முடியுமா? 
 
08.01.2008 ஆந் திகதிய அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை கடித இலக்கம் 02/2008 இன் மூலம் இது தொடர்பான அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைய தாபனவிதிக் கோவையின் XIV வது அத்தியாயத்தின் 29.8 வது ஏற்பாடுகளின் பிரகாரம் கொடுப்பனவுகளைச் செலுத்த முடியும். 
 
குறித்த சுற்றறிக்கைக்கு செல்ல..  Circular 02-2008

 

(11) ஒப்பந்த அடிப்படையின் பேரில் மீளச் சேவையில் அமர்த்தப்பட்ட உத்தியோகத்தர்களுக்கு உத்தியோகபூர்வ வாசஸ்தலம் உரித்துண்டா? 

ஏதாவது ஒரு பதவியொன்றின் பொருட்டு உப அட்டவணைப்படுத்தப்பட்ட உத்தியோகபூர்வ வாசஸ்தலமொன்று உரித்துண்டு எனில் மட்டும், அப்பதவியினை வகிப்பவர் ஒப்பந்த அடிப்படையின் பேரில் சேவையில் இருப்பினும் அதனை வழங்க முடியும். 

 

(12) கடமையின் பொருட்டு வெளிநாட்டிற்கு நியமிக்கப்படும் உத்தியோகத்தர் ஒருவரது வாழ்க்கைத் துணைவரும் அரச உத்தியோகத்தர் எனில் அவன்/அவளிற்கு தாபன விதிக்கோவையின் XII வது அத்தியாயத்தின் 36வது பிரிவின் ஏற்பாடுகளுக்கமைய சம்பளமற்ற வெளிநாட்டு விடுமுறையை வழங்கும் போது ஒப்பந்தம் கைச்சாத்திடல் வேண்டுமா? கட்டாய சேவைக்காலம் அவசியமா?

ஒப்பந்தம் அல்லது கட்டாய சேவைக் காலத்திற்கு உட்படுத்தல் அவசியமற்றது. 

 

(13) யாராவதொரு உத்தியோகத்தரின் பொருட்டு அரச சேவை சொத்துக் கடன் வழங்கக் கூடிய ஆகக் கூடிய தொகையை ( 30 இலட்சம் ரூபா அல்லது உத்தியோகத்தரின் 07 வருட கால சம்பளம் ஆகிய இரண்டில் குறைந்த தொகை) சிபாரிசு செய்யும் போது உத்தியோகத்தரிடமிருந்து அறவிடப்படக் கூடிய ஆகக் கூடிய மாதாந்த தவணைப்பணம் எவ்வாறு அமைதல் வேண்டும்? 

உத்தியோகத்தர் பெறும் மாதாந்த தேறிய சம்பளத்தை (கொடுப்பனவுகள் தவிர்ந்த) மிஞ்சாதவாறு மாதாந்த தவணை அறவீட்டையும் வட்டியையும் கணக்கிடல் வேண்டும். 

 

(14) தாபன விதிக்கோவையின் ஏற்பாடுகளுக்கமைய பிணையாளிகளை முன்வைத்து, ஒரு தடவை இடர் கடன் பெற்றுக் கொண்ட உத்தியோகத்தர் ஒருவர் அக் கடன் பணத்தில் நிலுவை உள்ள போது மீள ஒரு தடவை இடர் கடன் தொகையின் பொருட்டு விண்ணப்பிக்கும் போது, மீண்டும் பிணையாளிகளை முன்வைக்க வேண்டுமா? 

ஆம். இவ்விடயத்தில் முன்னைய பிணையாளிகள் விடுவிக்கப்படுவதுடன் கடைசியாகப் பெற்றுக் கொள்ளும் கடன் தொகையின் பொருட்டு பிணையாகும் நபர்கள் மொத்த இடர் கடன் தொகையின் பொருட்டும் பிணையாளிகளாவர். 

 

(15) இடமாற்ற கட்டளையில் சரிசெய்கைபடி கொடுப்பனவு செய்வதாக குறிப்பிடப்படாத சந்தர்ப்பத்தில் அக் கொடுப்பனவினைச் செலுத்த முடியுமா? 

ஒரு கலண்டர் மாதத்திற்கு குறைவான காலத்தினுள் அமுல்படுத்துவதற்கு இடமாற்றக் கட்டளையொன்றை வழங்கி, அதற்கமைய குறித்த இடமாற்றம் இடம் பெற்றிருப்பின் தாபன கோவையின் XIV வது அத்தியாயத்தின் 24வது பிரிவின் ஏற்பாடுகளுக்கமைய சரிசெய்கை படியினைச் செலுத்த முடியும். 

தொடரும்...

 

ஏனைய பாகங்களுக்கு செல்ல...

பாகம் - 01 

பாகம் - 02

பாகம் - 04 

பாகம் - 05

அரச ஊழியர்களுக்கு ஏற்படும் சந்தேகங்களும் அதற்கான தீர்வுகளும் - பாகம் 03 அரச ஊழியர்களுக்கு ஏற்படும் சந்தேகங்களும் அதற்கான தீர்வுகளும் - பாகம் 03 Reviewed by Irumbu Thirai News on September 16, 2021 Rating: 5

Teaching Appointments for Graduates and Diploma Holders - 2021 (North Central Province)

September 16, 2021
 

Recruitment of Graduates and Diplomates to the Sri Lanka Teachers Service for the Teacher Vacancies That Exist in Schools in The North Central Province – 2021 (Sinhala / Tamil / Bilingual / 13 Years Education) 
 
Age Limit: 18 – 35 
 
Closing date: 2 weeks after lock down ending date. 
 
 
மேற்படி ஆசிரியர் நியமனத்திற்கான விண்ணப்ப திகதி நீடிக்கப்பட்டுள்ளது. நாடு மீண்டும் திறக்கப்படும் திகதியிலிருந்து 2 வாரங்களுக்கு நீடிக்கப்படுகிறது. 
 
 
Click the link below for details: 

 
 
Click the link below for vacancy list:

 
Teaching Appointments for Graduates and Diploma Holders - 2021 (North Central Province) Teaching Appointments for Graduates and Diploma Holders - 2021 (North Central Province) Reviewed by Irumbu Thirai News on September 16, 2021 Rating: 5

கல்வி அமைச்சுக்கு அழைக்கப்பட்ட தொழிற்சங்க தலைமைகள் (கடிதம் இணைப்பு)

September 16, 2021
 

அதிபர் ஆசிரியர் தொழிற்சங்க தலைவர்கள் இன்று(16) மாலை 4 மணிக்கு கல்வி அமைச்சுக்கு அழைக்கப்பட்டுள்ளனர். 
 
அதிபர் ஆசிரியர் சம்பள முரண்பாட்டிற்காக கடந்த மாதம் 30 ஆம் திகதி அமைச்சரவையில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் தொடர்பாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கும் வகையிலேயே இவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 
 
தொழிற்சங்கங்களின் தலைவர் மற்றும் செயலாளர் மாத்திரம் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி வருகை தருமாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 
 
நேற்றைய(15) திகதி இடப்பட்ட குறித்த கடிதத்தின் பிரதியைக் கீழே காணலாம்.

 
கல்வி அமைச்சுக்கு அழைக்கப்பட்ட தொழிற்சங்க தலைமைகள் (கடிதம் இணைப்பு) கல்வி அமைச்சுக்கு அழைக்கப்பட்ட தொழிற்சங்க தலைமைகள் (கடிதம் இணைப்பு) Reviewed by Irumbu Thirai News on September 16, 2021 Rating: 5

பரீட்சை விண்ணப்பத்திற்கு மேலும் கால அவகாசம் இல்லை: இதுவரை விண்ணப்பித்த விண்ணப்பிக்காத பாடசாலைகள்:

September 16, 2021
 

இந்த வருடத்திற்குரிய உயர்தர மற்றும் புலமைப்பரிசில் பரீட்சை என்பவற்றுக்காக விண்ணப்பிக்க கூடிய கால அவகாசம் நேற்று நள்ளிரவுடன் நிறைவடைந்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார். 
 
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்த போது, 
 
விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் மேலும் நீட்டிக்கப்படமாட்டாது. 
 
இதுவரை தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்காக 6,835 பாடசாலைகள் விண்ணப்பித்துள்ளன. இன்னும் 2,339 பாடசாலைகள் விண்ணப்பிக்கவில்லை. மேலும் உயர்தர பரீட்சைக்கு 
 
இதுவரை 2,938 பாடசாலைகள் விண்ணப்பித்துள்ளன. இன்னும் 338 பாடசாலைகள் விண்ணப்பிக்கவில்லை என அவர் மேலும் தெரிவித்தார்.
பரீட்சை விண்ணப்பத்திற்கு மேலும் கால அவகாசம் இல்லை: இதுவரை விண்ணப்பித்த விண்ணப்பிக்காத பாடசாலைகள்: பரீட்சை விண்ணப்பத்திற்கு மேலும் கால அவகாசம் இல்லை: இதுவரை விண்ணப்பித்த விண்ணப்பிக்காத பாடசாலைகள்: Reviewed by Irumbu Thirai News on September 16, 2021 Rating: 5

தலிபான் தலைவர்களிடையே மோதல்: அதிபர் மாளிகையில் குழப்பம்: காணாமல் போன மூத்த தலைவர்!

September 15, 2021
 

கடந்த ஆகஸ்ட் மாதம் ஆப்கானிஸ்தானை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த தலிபான்கள் நாட்டின் பெயரையும் 'ஆப்கான் இஸ்லாமிய எமிரேட்' என்று அறிவித்தனர். 
 
மேலும் கடந்த சில தினங்களுக்கு முன்னர் தமது அரசையும் உத்தியோகபூர்வமாக அறிவித்தனர். அதில் மூத்த தலைவர்கள் மற்றும் அமெரிக்காவுக்கு எதிராக முன்னின்று தாக்குதல் நடத்தியவர்களும் அடங்குவர். குறித்த அரசில் பெண்களுக்கு இடம் வழங்கப்படாமையினால் பெண்களின் ஆர்ப்பாட்டமும் அண்மையில் நடைபெற்றது. 
 
இந்நிலையில் ஆப்கானின் புதிய அரசை கட்டியெழுப்புவது சம்பந்தமாக மூத்த தலைவர்களிடையே மோதல் நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
தலிபான் இயக்கத்தின் இணை நிறுவனரும் புதிய அரசின் துணைப் பிரதமரும் மூத்த தலைவருமான முல்லா அப்துல் கனி பராதருக்கும் 

புதிய அரசின் அகதிகள் விவகாரங்களுக்கான அமைச்சரான கலீலுர் ரஹ்மானுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. கலீலுர் ரஹ்மான் ஹக்கானி குழுவைச் சேர்ந்தவர். 
 
இடைக்கால அமைச்சரவையில் இடம் பெற்றிருப்பவர்கள் மீது பராதருக்கு அதிருப்தி ஏற்பட்டதே வாக்குவாதத்திற்கான காரணமென தெரிவிக்கப்படுகிறது. ஆப்கானிஸ்தானில் பெற்ற வெற்றிக்கு யார் காரணம் என்ற விடயத்தில் தொடங்கி பிளவுகள் விரிவடைந்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. 
 
தன்னைப் போன்று ராஜதந்திர முயற்சிகளை மேற்கொண்டவர்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டுமென பராதர் விரும்புகிறார். ஆனால் ஹக்கானி குழுவினர் இதை ஏற்கவில்லை. சண்டைகள் மூலமாகவே 

இந்த வெற்றி சாத்தியமானது என்று அவர்கள் கூறி வருகின்றனர். 
 
அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் உடன் 2020இல் தொலைபேசி மூலமாக முதன் முதலில் பேசிய தலிபான் தலைவர் பராதர் ஆவார். அமெரிக்கப் படைகளை விலக்கிக் கொள்வது தொடர்பாக அமெரிக்காவுடன் உடன்படிக்கை கைச்சாத்திடும் போது தலிபான்கள் சார்பாக கையெழுத்திட்டவரும் அவரே. 
 
இதேவேளை கடந்த சில நாட்களாக பராதரை பொதுவெளியில் காண முடியாமையினால் குழப்பம் இன்னும் அதிகரித்துள்ளது. 
 
ஆனால் அவர் பேசுவது போன்று ஒலிப்பதிவு ஒன்றை தலிபான்கள் வெளியிட்டுள்ளனர். "இந்த நேரத்தில் நான் எங்கிருந்தாலும் நாங்கள் அனைவரும் நலமாகவே இருக்கிறோம்" என்று அவர் அந்த ஒலிப்பதிவில் தெரிவித்துள்ளார். 
 
ஆனால் இது உண்மையிலேயே அவரா என்று உறுதிப்படுத்த முடியவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 
 
இதேவேளை அவர் தலிபான்களின் உச்ச தலைவரை பார்ப்பதற்காக கந்தஹார் சென்றிருக்கிறார் என்றும் 

தலிபான்களின் இன்னுமொரு செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார். 
 
இவ்வாறான முரண்பட்ட தகவல்களால் இன்னும் சந்தேகங்கள் அதிகரிக்கின்றன. இவ்வாறு சந்தேகங்கள் அதிகரிப்பதற்கு முக்கிய காரணம் உண்டு. தலிபான் அமைப்பை உருவாக்கிய முல்லா ஒமரின் மரணத்தை இரண்டு ஆண்டுகள் வரை மறைத்து வந்ததாகவும் அவரது பெயரிலேயே அறிக்கைகள் வெளியிடப்பட்டதாகும் தலிபான்கள் பின்னர் ஒப்புக் கொண்டமையே காரணமாகும்.
தலிபான் தலைவர்களிடையே மோதல்: அதிபர் மாளிகையில் குழப்பம்: காணாமல் போன மூத்த தலைவர்! தலிபான் தலைவர்களிடையே மோதல்: அதிபர் மாளிகையில் குழப்பம்: காணாமல் போன மூத்த தலைவர்! Reviewed by Irumbu Thirai News on September 15, 2021 Rating: 5

Short Course on Early Childhood Development (Open University of Sri Lanka) - 2021

September 15, 2021
 

Short Course on Early Childhood Development (Open University of Sri Lanka) 
 
 
To Whom: 
Pre School Teachers 
Care Givers 
Parents 
Others who wish to enhance their professional skills in this field. 
 
Medium: Tamil, Sinhala, English 
 
Duration: 03 Months 
 
Course Fee: Rs.20,000/= (Two – installment 10, 000/- ) 
 
Closing Date: 2021-09-30 
 
 
How to Apply? 
send your self-prepared applications on or before the closing date via Email or Postal Address: 
 
Address
Ms. Malani Munasinghe 
Head of The Department 
Short Course On “Early Childhood Development” 
Department of the Early Childhood and Primary Education 
Faculty of Education, 
The Open University Of Sri Lanka 
Nawala, 
Nugegoda. 
 
E-Mail: earlychildhoodousl@gmail.com 
 
 
Click the link below for details:

 

To view on web site:
 
Short Course on Early Childhood Development (Open University of Sri Lanka) - 2021 Short Course on Early Childhood Development (Open University of Sri Lanka) - 2021 Reviewed by Irumbu Thirai News on September 15, 2021 Rating: 5

இன்னும் இரு வாரங்களில் பாடசாலைகள் ஆரம்பம்?

September 15, 2021
 

பாடசாலைகளை நிகில மீள திறப்பது தொடர்பாக இன்றைய தினம்(15) சுகாதார அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தைச் சேர்ந்த வைத்தியர்கள் மற்றும் கல்வி அமைச்சின் அதிகாரிகள் கலந்து கொண்டனர். 
 
இந்த கூட்டத்தில்,
 
முதற்கட்டமாக 200-க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளை இன்னும் இரு வாரங்களில் மீள திறக்க அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். 
 
அந்தவகையில் 200க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட சுமார் 5,000 பாடசாலைகளை முதலில் திறப்பது தொடர்பாக அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. 
 
இதில் பாலர் பாடசாலைகள் மற்றும் தரம் 6 வரையான வகுப்புகளை மாத்திரம் கொண்ட பாடசாலைகளை முதலில் திறக்க அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. 
 
கல்விசார் ஊழியர்களுக்கு தடுப்பூசி முழுமையாக வழங்கப்பட்டுள்ள நிலையில் இதுவரை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத பாடசாலை போக்குவரத்து சேவையில் ஈடுபடும் நபர்களுக்கு விரைவில் தடுப்பூசி பெற்றுக் கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இன்னும் இரு வாரங்களில் பாடசாலைகள் ஆரம்பம்? இன்னும் இரு வாரங்களில் பாடசாலைகள் ஆரம்பம்? Reviewed by Irumbu Thirai News on September 15, 2021 Rating: 5

உயர்தர மற்றும் புலமைப்பரிசில் பரீட்சைக்கு இதுவரை விண்ணப்பித்தவர்கள் எத்தனை பேர் தெரியுமா?

September 15, 2021
 

இம்முறை நடைபெறவிருக்கும் உயர்தர பரீட்சை மற்றும் புலமைப்பரிசில் பரீட்சை என்பவற்றுக்காக இதுவரை விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கையை கல்வியமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா அறிவித்துள்ளார். 
 
அந்தவகையில் உயர்தர பரீட்சைக்காக 2,922 விண்ணப்பங்களும் 
 
புலமைப்பரிசில் பரீட்சைக்காக 6,589 விண்ணப்பங்களும் மாத்திரமே இதுவரை கிடைக்கப் பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளார். 
 
பாடசாலை பரீட்சார்த்திகளின் விண்ணப்பங்கள் பாடசாலை அதிபர் ஊடாகவே அனுப்பி வைக்கப்பட வேண்டும். 
 
ஆனால் அதிபர் ஆசிரியர் தொழிற்சங்கங்கள் தொழிற்சங்க நடவடிக்கையில் இருப்பதனால் விண்ணப்பிக்கவில்லை. 
 
அதன் காரணமாகவே இந்த வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயர்தர மற்றும் புலமைப்பரிசில் பரீட்சைக்கு இதுவரை விண்ணப்பித்தவர்கள் எத்தனை பேர் தெரியுமா? உயர்தர மற்றும் புலமைப்பரிசில் பரீட்சைக்கு இதுவரை விண்ணப்பித்தவர்கள் எத்தனை பேர் தெரியுமா? Reviewed by Irumbu Thirai News on September 15, 2021 Rating: 5

தடுப்பூசி வழங்கினால் மாணவர்களுக்கு தாக்கநிலை வருமா? தீர்மானம் இன்று!

September 15, 2021
 

இங்கிலாந்து ஜோன் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக ஆய்வு கடந்த 04 நாட்களுக்கு முன்னர் வெளியிடப்பட்டது. அதன் அடிப்படையில் 12 - 15 வயதுக்கு இடைப்பட்ட மாணவர்களுக்கு தடுப்பூசி வழங்கும் பட்சத்தில் ஏதாவது 
 
ஒரு தாக்க நிலை வரலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இது போன்ற நிலைமைகளை கருத்திற்கொண்டு மாணவர்களுக்கு தடுப்பூசி வழங்குவது தொடர்பில் இரண்டு முக்கிய தீர்மானங்கள் இன்றைய தினம்(15) எடுக்கப்பட இருப்பதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். 
 
அதாவது முன்பள்ளி முதல் தரம் 6 வரையான மாணவர்களுக்கு வழங்குவதா? அல்லது தரம் 12, 13 மாணவர்களுக்கு வழங்குவதா? என்ற தீர்மானம் இன்றைய தினம் எடுக்கப்பட இருப்பதாக தெரிவித்துள்ளார். 
 
சகல நிலைமைகளை ஆராய்ந்து சிறந்த ஒரு தீர்வை எடுக்க வேண்டும் ஆனால் அந்த சிறந்த ஒரு தேர்விலும் பிரச்சினைகள் ஏற்படலாம் என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
தடுப்பூசி வழங்கினால் மாணவர்களுக்கு தாக்கநிலை வருமா? தீர்மானம் இன்று! தடுப்பூசி வழங்கினால் மாணவர்களுக்கு தாக்கநிலை வருமா? தீர்மானம் இன்று!  Reviewed by Irumbu Thirai News on September 15, 2021 Rating: 5

SELECTION LIST: National Diploma in Technology (University of Moratuwa)

September 15, 2021
 

University of Moratuwa - Institute of Technology. 
 
SELECTION LIST: National Diploma in Technology 2020/2021 (Round -3)
 
Details about Selection (Round-111)

 
To View Selected List:

 
 
Form 01 - Form of Registration - 2020-2021 Intake:
 
Form 02 - Acceptance of the Field of study
 
For more details:
SELECTION LIST: National Diploma in Technology (University of Moratuwa) SELECTION LIST: National Diploma in Technology (University of Moratuwa) Reviewed by Irumbu Thirai News on September 15, 2021 Rating: 5

10-09-2021 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்)

September 14, 2021
 
gazette 10.9.2021

10-09-2021 அன்று வெளியான அரச வர்த்தமானியை தமிழ், ஆங்கிலம், சிங்களம் ஆகிய மொழிகளில் இங்கு தருகிறோம். 
 
Official Government Gazette released on 10-09-2021. 
 
இதில், 
 
பல முக்கிய அறிவித்தல்கள் காணப்படுகின்றன. கீழே உள்ள உரிய லிங்கை கிளிக் செய்து உரிய மொழியில் முழுமையாக பார்வையிடுக. 
 
 
தமிழில் பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க. 
 
ஆங்கிலத்தில் பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க. 
 
சிங்களத்தில் பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க
 
 
முன்னைய வர்த்தமானி அறிவித்தலுக்கு செல்ல...
10-09-2021 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) 10-09-2021 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) Reviewed by Irumbu Thirai News on September 14, 2021 Rating: 5

பட்டதாரிகளின் பயிற்சி காலம் நீடிக்கப்பட்டுள்ளதா? அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிவிப்பு!

September 14, 2021
 

நேற்றைய அமைச்சரவை கூட்டத்தின் முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று நடைபெற்றபோது ஊடகவியலாளர் ஒருவர், 
பட்டதாரிகளின் பயிற்சிக் காலத்தை மேலும் 6 மாதங்கள் நீடிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதா என கேள்வி எழுப்பினார். 
 
இதற்கு பதிலளித்த அமைச்சர் டளஸ் அழகப்பெரும, 
 
இதுவரை அவ்வாறான எந்தவொரு தீர்மானமும் எடுக்கப்படவில்லை. 53,000 பயிற்சி பட்டதாரிகளில் 18,000 பேருக்கு நியமனம் வழங்குவதற்கு எதிர்பார்த்திருந்த போதிலும் அந்த பணிகள் இதுவரை நிறைவடையவில்லை. பயிற்சி காலத்தை மேலும் 6 மாதத்திற்கு நீடிப்பதற்கான பத்திரம் அமைச்சரவைக்கு முன்வைக்கப்பட்டிருந்தது. 
 
ஆனால் குறித்த விடயங்களை விரைவுபடுத்தி எஞ்சிய பட்டதாரிகளுக்கும் விரைவில் நியமனங்களை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
பட்டதாரிகளின் பயிற்சி காலம் நீடிக்கப்பட்டுள்ளதா? அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிவிப்பு! பட்டதாரிகளின் பயிற்சி காலம் நீடிக்கப்பட்டுள்ளதா? அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிவிப்பு! Reviewed by Irumbu Thirai News on September 14, 2021 Rating: 5

13.09.2021 அன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்ட தீர்மானங்கள்

September 14, 2021
 
cabinet decisions in tamil

13.09.2021 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது எடுக்கப்பட்ட தீர்மானங்களை இங்கு தருகிறோம். 
இதில், 
 
பல முக்கிய தீர்மானங்கள் அடங்கியுள்ளன. 
 
இதன் முழு வடிவத்தைப் பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க. 
 
 
முன்னைய அமைச்சரவை கூட்ட தீர்மானங்களைப் பார்வையிட... 
13.09.2021 அன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்ட தீர்மானங்கள் 13.09.2021 அன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்ட தீர்மானங்கள் Reviewed by Irumbu Thirai News on September 14, 2021 Rating: 5
Powered by Blogger.