சி.ஐ.டி. க்கு அழைக்கப்பட்ட அதிபரும் ஆசிரியையும்

September 21, 2021
 

தேசிய அதிபர் சங்கத்தின் தலைவர் மொஹான் வீரசிங்க அவர்களும், மினுவாங்கொடை வலயத்தைச் சேர்ந்த ஆசிரியை ஒருவரும் இன்று சிஐடி க்கு அழைக்கப்பட்டு ஐந்தரை மணித்தியாலத்திற்கும் மேலதிகமாக விசாரணை நடத்தி வருவதாக இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் தலைவர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார். 
 
குற்றப்புலனாய்வு திணைக்கள சுற்றுவட்டாரத்தில் இருந்து காணொளி ஒன்றை வெளியிட்டு இந்தத் தகவலை தெரிவித்தார். 
 
இதன்போது இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் உட்பட இன்னும் வேறு சங்கங்களின் பிரதிநிதிகளும் அங்கு காணப்பட்டனர். 
 
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த மஹிந்த ஜயசிங்க, 
 
இந்த இருவரும் காலை 10 மணிக்கு இன்று அழைக்கப்பட்டிருந்தனர். ஐந்தரை மணித்தியாலமாகியும் (காணொளி வெளியிடும்போது பிற்பகல் சுமார் 03:30 மணி) இன்னும் வெளியே விடவில்லை. 
 
விசாகா பாடசாலையை சேர்ந்த ஆசிரியை ஒருவருக்கு தொலைபேசி அழைப்பு எடுத்ததே இவர்கள் 
 
மீதுள்ள குற்றச்சாட்டாகும். தொலைபேசி அழைப்பு எடுத்து Online வகுப்புகள் நடத்துவதைப் பற்றி விசாரித்துள்ளனர். மற்றபடி அச்சுறுத்தல் விடுக்கவில்லை. இதற்காகவே இவர்கள் இருவரும் சுமார் ஐந்தரை மணித்தியாலத்திற்கு மேலதிகமாக விசாரிக்கப்படுகின்றனர். 
 
இதைவிட பாரிய குற்றச்சாட்டுக்கள் உள்ளவர்கள் சுதந்திரமாக இருக்கிறார்கள். நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டும் இருக்கிறார்கள். இது இந்த அரசாங்கத்தின் புதிய அடாவடித்தனம். என்ன செய்தாலும் நாம் எமது போராட்டத்தை கைவிடப் போவதில்லை என தெரிவித்தார். 
 
இது தொடர்பில் கருத்து தெரிவித்த ஜோசப் ஸ்டாலின், 

எந்தவித அடிப்படையும் அற்ற குற்றச்சாட்டுக்காக இவர்கள் இருவரும் இவ்வளவு நேரம் விசாரிக்கப்படுகிறார்கள். பொது ஜன பெரமுன குழு ஒன்று தான் முறைப்பாடு செய்துள்ளது. சரத் வீரசேகர அமைச்சரின் ஏற்பாட்டில்தான் அனைத்தும் நடக்கிறது. 
 
அதிபர் ஆசிரியர்கள் இதுதொடர்பில் பயப்படத் தேவையில்லை. சகலவற்றிற்கும் முகங்கொடுக்க நாம் தயாராக இருக்கிறோம் என தெரிவித்தார். 
 
பிந்திக் கிடைத்த செய்தி: விசாரணையின் பின் குறித்த இருவரும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
சி.ஐ.டி. க்கு அழைக்கப்பட்ட அதிபரும் ஆசிரியையும் சி.ஐ.டி. க்கு அழைக்கப்பட்ட அதிபரும் ஆசிரியையும் Reviewed by Irumbu Thirai News on September 21, 2021 Rating: 5

பல்கலைக்கழக அனுமதிக்கான மாவட்டரீதியான வெட்டுப்புள்ளிகள் வெளியானது!

September 21, 2021
 

2020 உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை அடிப்படையாகக்கொண்டு பல்கலைக்கழக அனுமதிக்கான மாவட்ட ரீதியான வெட்டுப்புள்ளிகள் வெளியிடப்பட்டுள்ளன. 
 
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்ட இந்த வெட்டுப்புள்ளிகள் புதிய மற்றும் பழைய பாடத்திட்டம் இரண்டிற்கும் வெளியிடப்பட்டுள்ளன. 
 
இதேவேளை பல்கலைக்கழக அனுமதிக்கான Z-Score  அடுத்த மாதம் வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் இணைய தளத்திற்கு சென்று குறித்த வெட்டுப்புள்ளிகளைப் பார்வையிடலாம். 
 
இணையதளத்திற்கு செல்ல கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க.
 
பல்கலைக்கழக அனுமதிக்கான மாவட்டரீதியான வெட்டுப்புள்ளிகள் வெளியானது! பல்கலைக்கழக அனுமதிக்கான மாவட்டரீதியான வெட்டுப்புள்ளிகள் வெளியானது! Reviewed by Irumbu Thirai News on September 21, 2021 Rating: 5

தலிபான்களின் புதிய அறிவிப்பு: கேள்விக்குறியாகும் பெண்களின் கல்வி!

September 20, 2021
 

ஆப்கானில் உயர்நிலைப் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. ஆனால் ஆண் ஆசிரியர்களும் மாணவர்களும் மாத்திரமே பள்ளிக்கு வரலாம் என தலிபான்கள் தெரிவித்துள்ளனர். 
 
எவ்வாறாயினும் பெண்கள் பள்ளிகள் விரைவில் திறக்கப்படும். இதற்கான நடைமுறைகள் 
 
குறித்து அதிகாரிகள் ஆலோசித்து வருகிறார்கள். ஆசிரியர்களை எப்படிப் பிரிப்பது என்பது உள்ளிட்ட விவரங்களும் ஆலோசிக்கப்படுகின்றன என்று தாலிபன் செய்தித் தொடர்பாளர் சபியுல்லா முஜாஹித் கூறியதாக ஆப்கானிஸ்தான் செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும் மாணவிகள் பள்ளி செல்வதற்கான போக்குவரத்து ஏற்பாடுகளை முடிவு செய்வது குறித்தும் அதிகாரிகள் ஆலோசித்துவருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 
 
பல்கலைக்கழகங்களில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனி வகுப்புகள் நடத்த போதிய வசதிகள் இல்லை. எனவே புதிய விதிகளின்படி பெண்களுக்கு கல்வி கற்க வாய்ப்பு ஏற்படாது என்று சிலர் தெரிவிக்கின்றனர். 
 
மாணவிகள் பள்ளி செல்வதற்கான வாய்ப்பு மிகவும் குறைவாக இருப்பதாகவே பெற்றோர்களும் கருதுகின்றனர். 
 
2001ல் தாலிபன்கள் ஆட்சி அகற்றப்பட்ட பிறகு, ஆப்கானிஸ்தானில் கல்வி கற்போர் எண்ணிக்கை, எழுத்தறிவு பெற்றோர் எண்ணிக்கை 
 
போன்றவற்றில் கணிசமான முன்னேற்றம் ஏற்பட்டது. பெண்கள் எழுத்தறிவு விகிதம் 30 சதவீதம் வரை அதிகரித்தது. 
 
ஆனால் தலிபான்களின் தற்போதைய இந்த அறிவிப்பால் பெண்களின் உயர்கல்வி தொடர்பில் நிச்சயமற்ற நிலை தோன்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 
 
இஸ்லாமிய மதச் சட்டம் குறித்த தங்களின் புரிதலுக்கு ஏற்ப பெண்கள் படிக்கவும் வேலை செய்யவும் அனுமதிக்கப்படுவார்கள் என்று கடந்த மாதம் ஆட்சியைப் பிடித்தபோது தாலிபன்கள் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

தலிபான்களின் புதிய அறிவிப்பு: கேள்விக்குறியாகும் பெண்களின் கல்வி! தலிபான்களின் புதிய அறிவிப்பு: கேள்விக்குறியாகும் பெண்களின் கல்வி! Reviewed by Irumbu Thirai News on September 20, 2021 Rating: 5

தொழிற்சங்க நடவடிக்கையில் இருக்கும் போது ஆசிரியர்கள் ஏன் 'மொடியுல்' செய்யக்கூடாது?

September 20, 2021
 

ஆசிரியர்களுக்கான மொடியுலில் பங்குபற்றுவது தொடர்பாக தனக்கு ஆசிரியர்களிடமிருந்து அடிக்கடி அழைப்புகள் வருவதாக இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் செயலாளர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார். 
 
தற்போதைய தொழிற்சங்க நடவடிக்கைகள் தொடர்பாக இன்று முகநூல் காணொளி ஒன்றை வழங்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 
 
இது தொடர்பில் அவர் தெரிவித்ததாவது, 
என்னிடம் இது தொடர்பாக அடிக்கடி கேட்கின்றனர். இதைப்பற்றி அவரவர் முடிவெடுக்க வேண்டும். மொடியுலை செய்தால் தொழிற்சங்க நடவடிக்கைகளுக்கு என்ன விளைவு வரும்? செய்யாவிட்டால் என்ன விளைவு வரும்? என அவரவர் புரிந்து கொள்ள வேண்டும். 
 
இந்த விடயத்தில் மனசாட்சிப்படி ஒவ்வொருவரும் தீர்மானம் எடுக்க வேண்டும். நாம் மாணவர்களுக்கு கற்பிப்பதை நிறுத்திவிட்டு எமது பதவி உயர்வுக்கான வேலைகளை செய்வது பொருத்தமா? அவ்வாறு செய்தால் அது மனச்சாட்சிக்கு விரோதமான செயல். 
 
இதுமட்டுமல்லாமல் எமது தொழிற்சங்க நடவடிக்கைகளை 

தோல்வியடையச் செய்ய எதிர்பார்த்திருக்கும் தரப்பினருக்கு அது வாய்ப்பாகவும் அமையும். அதை வைத்து பிரச்சாரமும் செய்வார்கள். 
 
இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டுதான் நாம் மொடியுல் நடவடிக்கையில் இருந்தும் விலகுவதாக ஏற்கனவே அறிவித்துள்ளோம் என தெரிவித்தார்.
தொழிற்சங்க நடவடிக்கையில் இருக்கும் போது ஆசிரியர்கள் ஏன் 'மொடியுல்' செய்யக்கூடாது? தொழிற்சங்க நடவடிக்கையில் இருக்கும் போது ஆசிரியர்கள் ஏன் 'மொடியுல்' செய்யக்கூடாது? Reviewed by Irumbu Thirai News on September 20, 2021 Rating: 5

உங்கள் தனிப்பட்ட தரவுகள் இணையத்தில் திருடப்படாமலிருக்க என்ன செய்ய வேண்டும்?

September 20, 2021
 

தற்போதைய டிஜிட்டல் பொருளாதார உலகில் தரவுகள் என்பது முக்கியமான ஒரு விடயமாக காணப்படுகிறது. ஒவ்வொருவரினதும் இப்படிப்பட்ட தரவுகளை அடிப்படையாகக் கொண்டு ஒரு பெரிய சந்தையே இயங்கிக்கொண்டிருக்கிறது. 
 
எனவே பொருளாதார கருமங்களுக்கு இப்படிப்பட்ட சகல தரவுகள், தகவல்கள் முக்கியமாக தேவைப்படுவதால் தற்போது இது தகவல் பொருளாதாரம் என்ற அடிப்படையில் செயல்படுகிறது. 
 
 
எது தனிப்பட்ட தரவுகள்? 

நாம் எந்த இணையத்தளத்திற்கு சென்றாலும் எம்மைப் பற்றி ஏதோ ஒரு சில தரவுகளை அவை பெற்றுக் கொள்கின்றன. சில தளங்கள் நாம் எவ்வளவு நேரம் இணையத்தில் செலவழிக்கிறோம்? எந்த நேரத்தில் இணையத்தை பயன்படுத்துகிறோம்? எப்படிப்பட்ட தகவல்களைத் தேடுகிறோம்? என்ற பொதுவான விடயங்களை பெற்றுக் கொள்கின்றன. 
 
இன்னும் சில இணையதளங்கள் இதற்கு மேலதிகமாக எமது பெயர், முகவரி, வயது, இமெயில், தொலைபேசி இலக்கம் போன்ற விடயங்களையும் பெற்றுக் கொள்கின்றன. 
 
பொதுவான தரவுகளை பெற்றுக்கொள்வது பிரச்சினை அல்ல. ஆனால் குறித்த தரவுகளை வைத்து நபர் யார் என்பதை அடையாளம் காண முடியும் என்றால் அவை தனிப்பட்ட தரவுகளாக கருதப்படும். இவ்வாறான தகவல்களை பெறுவது தனிநபர் உரிமை மீறலாகும். 
 
 
கவனமாக இருப்பது எப்படி? 
மிக முக்கியமான விடயம் என்னவென்றால் தேவைக்கு அதிகமான தகவல்களை வழங்க கூடாது. இதனால் இரு பிரச்சினைகள் ஏற்படுகின்றன. ஒன்று, எம்மைப் பற்றிய அதிக தகவல்கள் மூன்றாம் நபருக்கு செல்கின்றன. மற்றையது, எம்மை அவர்களது தளத்தில் அதிக நேரம் செலவழிக்க வைப்பதற்கான வாய்ப்பை நாமே அவர்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்கிறோம். உதாரணமாக, குறித்த தளம் ஒன்றில் மின்னஞ்சல் முகவரி கேட்கப்படாவிட்டால் நாம் அதை வழங்கக்கூடாது. ஆனால் கட்டாயம் மின்னஞ்சல் வழங்க வேண்டுமென்றால் 

இப்படிப்பட்ட பொதுவான விடயங்களுக்காக வேறு ஒரு மின்னஞ்சல் முகவரியை நாம் வைத்துக் கொள்ள வேண்டும். அதற்கு தனிப்பட்ட எமது மின்னஞ்சல் முகவரியை வழங்கக்கூடாது. எனவே பொதுவான விடையங்களுக்கு ஒன்றும் தனிப்பட்ட விடயங்களுக்கு ஒன்றும் என குறைந்தது இரு மின்னஞ்சல் முகவரிகளை பேணுவது சிறந்தது. 
 
 
VPN பாவிப்பவர்கள் நினைப்பதுண்டு எம்மைப் பற்றிய தரவுகளை வலைத்தளங்களுக்கு பெறமுடியாது என்று. ஆனால் உண்மை அதுவல்ல. நாம் விபிஎன் பாவிக்கும் போது எமக்கு இணைய சேவை வசதி வழங்கும் நிறுவனங்களுக்குதான் அது தெரியாமல் போகும். ஆனால் நாம் செல்லும் வலைத்தளங்கள் எமது தரவுகளை பெற்றுக் கொள்கின்றன. எனவே விபிஎன் பயன்படுத்தும் போதும் கவனமாக செயல்பட வேண்டும். 
 
 
சில மென்பொருள்கள் அல்லது செயலிகளை நாம் குறிப்பிட்ட காலம் வரை தான் பயன்படுத்துகிறோம் என்றால் அதற்கென தற்காலிகமான தரவுகளை மட்டும் நாம் வழங்குவது போதுமாகும். 
 
சமூக ஊடக மென்பொருள் அல்லது செயலிகளை பதிவிறக்கம்(Download) செய்யும் போது நம்பகமான தளத்திலிருந்து மட்டுமே அதை பதிவிறக்கம் செய்ய வேண்டும். 
 
 
சமூக ஊடகங்களைப் பயன்படுத்தும்போது மிகக்கவனமாக இருக்கவேண்டும். தேவையில்லாமல் புகைப்படங்கள் மற்றும் எமது தனிப்பட்ட தரவுகளை அதில் பகிர்வதை தவிர்க்க வேண்டும். 
 
 
ஒரு மென்பொருள் அல்லது செயலியை நாம் பயன்படுத்த விரும்பினால் அது தொடர்பான தனிநபர் கொள்கை (Privacy Policy) விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் (Terms and Conditions) மூன்றாம் தரப்பு மதிப்பாய்வு (Review) போன்றவற்றை அவசியம் பரிசோதித்தே முடிவெடுக்க வேண்டும். 
 
 
எமது தரவுகளை வழங்குவதால் என்ன நேர்ந்து விடப்போகிறது என்ற அலட்சியத்தை தவிர்க்க வேண்டும். ஏனெனில் அது வணிகர்களால் தகவலாகவும் பயன்படுத்தப்படலாம். தவறாகவும் பயன்படுத்தப்படலாம். எமது தனிநபர் உரிமை குறித்து முதலில் நாமே கவனம் செலுத்த வேண்டும்.
உங்கள் தனிப்பட்ட தரவுகள் இணையத்தில் திருடப்படாமலிருக்க என்ன செய்ய வேண்டும்? உங்கள் தனிப்பட்ட தரவுகள் இணையத்தில் திருடப்படாமலிருக்க என்ன செய்ய வேண்டும்? Reviewed by Irumbu Thirai News on September 20, 2021 Rating: 5

17-09-2021 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) / Official Government Gazette released on 17-09-2021

September 20, 2021
 

17-09-2021 அன்று வெளியான அரச வர்த்தமானியை தமிழ், ஆங்கிலம், சிங்களம் ஆகிய மொழிகளில் இங்கு தருகிறோம். 
 
Official Government Gazette released on 17-09-2021 
 
இதில், 
பல முக்கிய அறிவித்தல்கள் காணப்படுகின்றன. கீழே உள்ள உரிய லிங்கை கிளிக் செய்து உரிய மொழியில் முழுமையாக பார்வையிடுக. 
 
 
தமிழில் பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க. 
 
ஆங்கிலத்தில் பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க. 
 
சிங்களத்தில் பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க. 
 
முன்னைய வர்த்தமானி அறிவித்தலுக்கு செல்ல...
17-09-2021 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) / Official Government Gazette released on 17-09-2021 17-09-2021 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) / Official Government Gazette released on 17-09-2021 Reviewed by Irumbu Thirai News on September 20, 2021 Rating: 5

உயர்தரப் பரீட்சைக்கு விண்ணப்பிக்க தீர்மானிக்கப்பட்டதா? பல விடயங்களை அம்பலப்படுத்திய ஊடகவியலாளர் சந்திப்பு!

September 20, 2021

 


இவ்வருடத்திற்கான உயர்தரப் பரீட்சைக்குரிய விண்ணப்பங்களை அனுப்ப எந்தவிதத்திலும் தீர்மானம் எடுக்கப்படவில்லை என அதிபர் ஆசிரியர் தொழிற்சங்க முன்னணி தெரிவித்துள்ளது. 

 

இன்று(20) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

இன்றைய ஊடகவியலாளர் சந்திப்பின் போது தொழிற்சங்க தலைவர்கள் தெரிவித்த கருத்துக்களை தொகுத்து தருகிறோம். 

 

அதிபர் சங்கம் என்று தம்மை அழைத்துக்கொள்ளும் குழுவினர் நேற்றைய தினம் அறிவித்தல் ஒன்றை விடுத்திருந்தனர். அதாவது உயர்தரப் பரீட்சைக்குரிய விண்ணப்பத்தை மாத்திரம் அனுப்புவதாக தெரிவித்தனர். ஆனால் அவ்வாறான எந்த ஒரு தீர்மானமும் தொழிற்சங்க முன்னணி என்ற வகையில் நாம் எடுக்கவில்லை. 

 

இந்த முன்னணியானது அதிபர் மற்றும் ஆசிரியர் தொழிற்சங்கங்கள் சேர்ந்த ஒரு முன்னணி ஆகும். இதில் 30க்கும் மேற்பட்ட தொழிற் சங்கங்கள் இருக்கின்றன. அன்று முதல் இன்று வரை இந்த தொழிற்சங்க நடவடிக்கைகளை இந்த அதிபர் ஆசிரியர் தொழிற்சங்க முன்னணியே வழி நடத்தி வருகிறது. 

 

நேற்றைய தினம் அறிக்கை விட்ட அந்த தரப்பினர் அரசாங்கத்தின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுகின்றனர். மாணவர்களின் நலன் கருதி விண்ணப்பிப்பதாக தெரிவித்தனர். அவர்களுக்கு மாணவர்களின் நலன் இப்பொழுதா விளங்கியது? உண்மையிலேயே மாணவர்களின் நலன் என நினைத்திருந்தால் ஆரம்பத்திலிருந்தே விலகி இருக்க வேண்டும். 

 

இந்தத் தரப்பினர்தான் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கல்வி அமைச்சுக்கு முன்னால் வைத்து ஆசிரியர் சங்க உறுப்பினர்களுக்கு நாம் யாரென்று காட்டுவோம். அவர்களுக்கு உரிய பாடம் புகட்டுவோம் என சவால் விட்ட தரப்பினர். எனவே நாம் மீண்டும் வலியுறுத்துகிறோம். நாம் எந்தெந்த விடயங்களில் இருந்து விலகுவதாக அறிவித்தோமோ 


அவை அனைத்தும் அப்படியே முன்னெடுக்கப்படும். குறித்த தரப்பினரின் பொறுப்பற்ற அறிவித்தலை கண்டு யாரும் ஏமாந்து விட வேண்டாம். 

 

எமது தொழிற்சங்க நடவடிக்கை ஆரம்பித்து இன்றுடன் 71 நாட்கள் ஆகின்றன. அமைச்சரவை தீர்மானம் மேற்கொண்டு 21 நாட்கள் ஆகின்றன. நாம் பல சந்தர்ப்பங்களில் வேண்டுகோள் விடுத்தும் இதுவரை நிதியமைச்சருடனான பேச்சுவார்த்தைக்கு சந்தர்ப்பம் ஏற்படுத்தப்படவில்லை. 

 

ஆனால் இன்னும் ஒரு விடயம் நடக்கிறது. நேற்றைய தினம் தங்கல்ல மற்றும் இன்னும் ஒரு சில இடங்களில் அரசாங்கத்தைச் சேர்ந்த ஒரு சில அரசியல்வாதிகளின் ஏற்பாட்டில் 

 

இந்த தொழிற்சங்க நடவடிக்கைக்கு எதிராக கூட்டங்களை ஏற்பாடு செய்திருக்கிறார்கள். 

 

இந்தக் கூட்டத்திற்கு இலங்கை பொதுஜன கல்வி சேவைகள் சங்கத்தின் தலைவி வசந்தா, கல்வி அமைச்சின் வாகனத்தில் சென்றுள்ளார். அவ்வாறு அவருக்கு அரச வாகனத்தில் செல்லலாமா? மேலும் அரசியல் நடவடிக்கைகளுக்கு பொதுச் சொத்துக்களை இவ்வாறு பயன்படுத்தலாமா? கல்வியமைச்சின் இலட்சினை பொறிக்கப்பட்ட அந்த வாகனத்தின் இலக்கம் WP NB-1420 ஆகும். இது தொடர்பில் நாம் கல்வி அமைச்சின் செயலாளரிடம் விளக்கம் கோர இருக்கிறோம். 

 

இதேவேளை எத்தனையோ வலயக்கல்விப் பணிப்பாளர்களுக்கு பாடசாலைகளின் மேற்பார்வை தொடர்பில் சென்று வர வாகனம் இல்லாமல் இருக்கிறது. அவர்கள் பேருந்தில் சென்று வருகிறார்கள். ஆனால் எவ்வாறாயினும் நேற்று நடைபெற்ற இந்த கூட்டம் 

 

வெற்றியளிக்கவில்லை. அதில் ஆசிரியர்கள் வெறும் 8 பேரே இருந்துள்ளனர். ஏனையவர்கள் ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் அரசியல்வாதிகளுக்காக வேலை செய்பவர்கள். 

 

அரசாங்கம் இது போன்ற விடயங்களில் பணத்தையும் நேரத்தையும் செலவழிப்பதை விட உண்மையிலேயே பிள்ளைகளின் கல்வியில் அக்கறை கொண்டவர்களாக இருந்தால் இந்தப் பிரச்சினையை பேச்சுவார்த்தை மூலம் தீர்த்து மீண்டும் கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிக்க வழிவகை செய்ய வேண்டும். 

 

Online இல் கற்பிப்பவர்களுக்கு அச்சுறுத்தல் இருந்தால் அவர்கள் பொலிஸ் அவசர தொலைபேசி இலக்கத்திற்கு முறைப்பாடு செய்யலாம் என கூறுகின்றனர். ஆனால் தொழிற்சங்க நடவடிக்கையில் இருப்பவர்களுக்கு ஏதாவது அச்சுறுத்தல் வந்தால் அந்த முறைப்பாட்டிற்கு எந்த பலனும் இல்லாமல் இருக்கிறது. எவ்வாறாயினும் உரிய தீர்வு கிடைக்கும் வரை எமது தொழிற்சங்க போராட்டம் தொடரும் என தெரிவித்தனர்.

உயர்தரப் பரீட்சைக்கு விண்ணப்பிக்க தீர்மானிக்கப்பட்டதா? பல விடயங்களை அம்பலப்படுத்திய ஊடகவியலாளர் சந்திப்பு! உயர்தரப் பரீட்சைக்கு விண்ணப்பிக்க தீர்மானிக்கப்பட்டதா? பல விடயங்களை அம்பலப்படுத்திய ஊடகவியலாளர் சந்திப்பு! Reviewed by Irumbu Thirai News on September 20, 2021 Rating: 5

Bachelor of Business Management General (External) Degree - 2021 (Uva Wellassa University)

September 20, 2021

 


Bachelor of Business Management General (External) Degree - 2021 (Uva Wellassa University)


Closing date extended to 22/10/2021

Now you can submit the applications to our email. You have to PDF the application and payment slip and email to codl@uwu.ac.lk

 

 

Click the link below for download application:

Download application 

 

Click the link below for more details:

Full details 

 

 

 


Bachelor of Business Management General (External) Degree - 2021 (Uva Wellassa University) Bachelor of Business Management General (External) Degree - 2021 (Uva Wellassa University) Reviewed by Irumbu Thirai News on September 20, 2021 Rating: 5

தனது பெற்றோருக்கு எதிராக வழக்கு தொடர்ந்த நடிகர் விஜய்! பின்னணி என்ன?

September 19, 2021
 

தென்னிந்திய நடிகர் விஜய் தனது தாய் தந்தை உட்பட 11 பேருக்கு எதிராக சென்னை சிவில் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு வருகிறது. 
 
தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட 09 மாவட்டங்களுக்கான உள்ளூராட்சி தேர்தல் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 6ஆம் 9ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது. 
 
இதில் விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்தவர்களும் 
 
போட்டியிடவுள்ளனர். நீண்ட ஆலோசனைகளுக்கு பின் அதற்கான அனுமதியை விஜய் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 
 
அதாவது இந்த தேர்தலில் சுயேட்சையாக போட்டியிடவும் தனது பெயரையும் விஜய் மக்கள் மன்ற இயக்கத்தின் கொடியையும் பயன்படுத்தி அரசியலில் ஈடுபட விஜய் அனுமதி அளித்துள்ளார். 
 
விஜய் அரசியலுக்கு வர வேண்டும் என்பதே எங்கள் ஆசை. ஆனால் அவர் இதுவரை வரவில்லை. எவ்வாறாயினும் அவரது பெயரைச் சொல்லி அரசியலில் ஈடுபட அனுமதி கேட்டோம். அதற்கு அனுமதி தந்தார் என்று விஜய் மக்கள் மன்ற நிர்வாகிகளில் ஒருவரான விஜய் அன்பன் தெரிவித்துள்ளார். 
 
இதேவேளை நடிகர் விஜய் தனது தாய் மற்றும் தந்தை உட்பட 11 பேருக்கு எதிராக தொடர்ந்த வழக்கு இம்மாதம் 27ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது.
 
 
ஏன் வழக்கு தொடர்ந்தார்? 
 
இயக்குநரும் நடிகர் விஜயின் தந்தையுமான எஸ். ஏ. சந்திரசேகர் விஜய் ரசிகர்களை இணைத்து "அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம்" என்ற கட்சி தொடங்கப்பட உள்ளதாக கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அறிவித்தார். மேலும் இந்த கட்சியை முறைப்படி தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய இருப்பதாகவும் அறிவித்தார். 
 
இதற்கு கடுமையான ஆட்சேபணை தெரிவித்த நடிகர் விஜய். தனது பெயரில் கட்சி தொடங்கப்படுவதில் தனக்கு விருப்பமில்லை எனக்கூறி தனது பெற்றோர் உட்பட 11 பேருக்கு எதிராக வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கின் விசாரணையே இம்மாதம் 27 ஆம் தேதி வருகிறது.
தனது பெற்றோருக்கு எதிராக வழக்கு தொடர்ந்த நடிகர் விஜய்! பின்னணி என்ன? தனது பெற்றோருக்கு எதிராக வழக்கு தொடர்ந்த நடிகர் விஜய்! பின்னணி என்ன? Reviewed by Irumbu Thirai News on September 19, 2021 Rating: 5

உயர்தரப் பரீட்சை விண்ணப்பம் தொடர்பில் அதிபர் சங்கம் எடுத்த தீர்மானம்!

September 19, 2021
 

இந்த வருடத்திற்கான உயர்தர பரீட்சை மற்றும் புலமைப்பரிசில் பரீட்சை என்பவற்றுக்காக விண்ணப்பிப்பதற்கான திகதி கடந்த 15ஆம் திகதி நள்ளிரவுடன் நிறைவடைந்தது. 
 
அதிபர் ஆசிரியர் தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக சில பாடசாலைகளில் இதுவரை விண்ணப்பங்கள் அனுப்பி வைக்கப்படவில்லை. 
 
இந்நிலையில் உயர்தரப்பரீட்சை விண்ணப்பங்களை மாத்திரம் எதிர்வரும் 
 
21 ஆம் திகதிக்கு முன் அனுப்பிவைக்க தமது சங்கம் தீர்மானித்துள்ளதாக தரப்படுத்தப்பட்ட அதிபர் சங்கத்தின் தலைவர் நிமல் முதுன்கொடுவ தெரிவித்துள்ளார். 
 
மாணவர்களின் நிலையை கருத்தில் கொண்டு உயர்தர பரீட்சைக்கான விண்ணப்பங்களை மாத்திரம் அனுப்பிவைக்க தீர்மானித்துள்ளோம். எவ்வாறாயினும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் அனுப்பி வைக்கப்படமாட்டாது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
உயர்தரப் பரீட்சை விண்ணப்பம் தொடர்பில் அதிபர் சங்கம் எடுத்த தீர்மானம்! உயர்தரப் பரீட்சை விண்ணப்பம் தொடர்பில் அதிபர் சங்கம் எடுத்த தீர்மானம்! Reviewed by Irumbu Thirai News on September 19, 2021 Rating: 5

அரச ஊழியர்களுக்கு ஏற்படும் சந்தேகங்களும் அதற்கான தீர்வுகளும் - பாகம் 04

September 19, 2021
 
,

தாபன விதிக்கோவை மற்றும் அரசாங்க நிர்வாக சுற்றறிக்கைகளில் நேரடியாக உள்ளடக்கப்படாத விடயங்கள் தொடர்பில் அரசாங்க ஊழியர்களுக்கு ஏற்படும் சந்தேகத்திற்கான தீர்வுகள் இங்கே வழங்கப்படுகின்றன. இவை தாபனப் பணிப்பாளரினால் வழங்கப்பட்ட பதில்களாகும். 
 
 
இவ்வாறு அரச நிறுவன தலைவர்களால் அடிக்கடி வினவப்பட்ட விடயங்களுக்கான பதில்களை கட்டங்கட்டமாக இங்கே தருகிறோம். 
 
குறிப்பு: உரிய சுற்றறிக்கைகளும் முடியுமானவரை இணைக்கப்பட்டுள்ளன. 


பாகம் - 04
(16) ஏதாவதொரு பதவிக்குரிய நியமனக் கடிதத்தில் வினைத்திறன் காண் தடை தொடர்பாக குறிப்பிடப்படாதுள்ள போது, உத்தியோகத்தர் ஒருவர் தனது பதவிக்குரிய வினைத்திறன் காண்தடைப் பரீட்சையில் சித்தியடைய வேண்டுமா? சித்தியடைய வேண்டுமெனில் அதன் பொருட்டு ஏற்படுத்தப்பட்டுள்ள ஏற்பாடுகள் என்ன? 
 
பதவிக்குரிய ஆட்சேர்ப்புத் திட்டத்தில் அல்லது சேவைகள் பிரமாணக் குறிப்பில் வினைத்திறன் காண் தடை தொடர்பாக உட்படுத்தப்பட்டிருப்பின், உத்தியோகத்தர் வினைத்திறன் காண் தடைப் பரீட்சையில் சித்தியடைதல் வேண்டும். 
இருப்பினும் குறித்த நியமனக் கடிதத்தில் இவ் ஏற்பாடு குறிப்பிடப்படாதுள்ள போது, அதன் பொருட்டு பொது சேவைகள் ஆணைக்குழுவின் ஆலோசனையினைப் பெற்றுக் கொள்ளல் வேண்டும். 
 
 
(17) வினைத்திறன் காண் தடைப் பரீட்சையில் சித்தியடையும் பொருட்டு முறையான அதிகாரியினால் நிவாரண காலம் வழங்கப்பட்டிருப்பின், அக்காலத்தின் பொருட்டு சம்பள ஆண்டேற்றங்கள் வழங்க முடியுமா? 
 
முடியும். 
 
 
(18) ஆட்சேர்ப்பு நடைமுறையில் ∕ சேவைகள் பிரமாணக் குறிப்பில் அல்லது நியமனக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு உரிய வினைத்திறன் காண் தடைப்பரீட்சையில் சித்தியடைய முடியாத உத்தியோகத்தர்களுக்கு நிவாரணம் வழங்கும் பொருட்டு ஏற்படுத்தப்பட்டுள்ள ஏற்பாடுகள் என்ன? 
 
இதன் பொருட்டு பொதுச் சேவைகள் ஆணைக்குழுவின் சுற்றறிக்கை இலக்கம் 02/2001 மற்றும் 02/2011(1) இன் ஏற்பாடுகளின் பிரகாரம் நிவாரணக் காலத்தினைப் பெற்றுக் கொள்ளும் பொருட்டு பொதுச் சேவைகள் ஆணைக்குழுவிற்கு வேண்டுகோள்களைச் சமர்ப்பிக்கலாம். 
 
 
 
(19) உத்தியோகத்தர்கள் பதவி உயர்வு கிடைக்கும் போது அப்பதவியின் வினைத்திறன் சம்பளத் தடைப் புள்ளியை மீறியிருப்பின் அதன் பின்னர் மேற்கொண்டு, சம்பள ஆண்டேற்றத்தை வழங்குதல் தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியது எவ்வாறு? 
 
பதவி உயர்விற்கமைய சம்பளம் மாற்றியமைத்தலை மேற்கொண்டு வினைத்திறன் சம்பள புள்ளியை மீறியிருப்பின் 11.02.1994 ஆந் திகதிய அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை இலக்கம் 11/94 மூலம் திருத்தம் செய்யப்பட்ட தாபன விதிக் கோவையின் VII வது அத்தியாயத்தின் 5:6 பிரிவின் ஏற்பாடுகளுக்கமைய நடவடிக்கை எடுத்தல் வேண்டும். 
 
குறித்த சுற்றறிக்கைக்கு செல்ல..
 
 
(20) அரச சேவையில் நிரந்தர நியமனமொன்றை வகிக்கும் உத்தியோகத்தரொருவர் வேறொரு அரச பதவியொன்றிற்கு நியமனமொன்றை பெற்றுக் கொள்ளும் போது அவரது முன்னைய சேவைக் காலத்தை புதிய பதவியின் சேவைக் காலத்திற்கு சேர்த்துக் கொள்ள முடியுமா? 
 
சேர்த்துக் கொள்ள முடியாது. அவ்வாறாயினும் அரச சேவையில் / மாகாண அரச சேவையில் உள்ள உத்தியோகத்தரொருவர் முறையான விதத்தில் விடுவிப்பினை மேற்கொண்டு, அரச சேவையிலேயே புதிய நியமனமொன்றைப் பெற்றுக் கொள்ளும் சந்தர்ப்பத்தில், அரச சேவை / மாகாண அரச சேவையின் கீழான முழுமையான சேவைக் காலத்தை ஓய்வூதியத்தினைக் கணக்கிடும் பொருட்டு மட்டும் சேர்த்துக் கொள்ள முடியும். 
தொடரும்..
 
 
ஏனைய பாகங்களுக்கு செல்ல..
 

 

அரச ஊழியர்களுக்கு ஏற்படும் சந்தேகங்களும் அதற்கான தீர்வுகளும் - பாகம் 04 அரச ஊழியர்களுக்கு ஏற்படும் சந்தேகங்களும் அதற்கான தீர்வுகளும் - பாகம் 04 Reviewed by Irumbu Thirai News on September 19, 2021 Rating: 5

அதிபர், ஆசிரியர்களுக்கு 5,000 ரூபா வழங்குவதற்கான சுற்றுநிருபம்

September 19, 2021
 

அதிபர், ஆசிரியர்களுக்கு 5,000 ரூபா வழங்குவதற்கான சுற்றுநிருபம் 17-09-2021 அன்று கல்வியமைச்சின் செயலாளரினால் வெளியிடப்பட்டுள்ளது. 
 
பரிந்துரைக்கப்படும் அதிபர் மற்றும் ஆசிரியர்களுக்கே வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
குறித்த சுற்றறிக்கையை கீழே காணலாம்.

 
அதிபர், ஆசிரியர்களுக்கு 5,000 ரூபா வழங்குவதற்கான சுற்றுநிருபம் அதிபர், ஆசிரியர்களுக்கு 5,000 ரூபா வழங்குவதற்கான சுற்றுநிருபம் Reviewed by Irumbu Thirai News on September 19, 2021 Rating: 5

Diploma in Social Work - 2021 (National Institute of Social Development)

September 18, 2021
 

The Diploma in Social Work program aim to produce professional generic social practitioners to meet the requirements for effective social work interventionists in the country. It is a full time one year program. 
 
Medium - Sinhala/ Tamil/ English 
 
Requirements
Successfully completed the G.C.E. (A/L) and in the same year has fulfilled the basic admission requirements to the University 
 
or 
 
Equivalent higher educational qualifications. 
 
Permanent State officer from selected categories with a minimum 3 years of service. 
 
Duration: 01 year. 
 
Method: Online 
 
Closing date: 30-09-2021. 
 
 
Click the link below for online application: 
 
Click the link below for application download: 
 
Click the link below for full details: 
Diploma in Social Work - 2021 (National Institute of Social Development) Diploma in Social Work - 2021 (National Institute of Social Development) Reviewed by Irumbu Thirai News on September 18, 2021 Rating: 5
Powered by Blogger.