பாகிஸ்தானை உருவாக்கிய முகமது அலி ஜின்னாவின் சிலை குண்டு வைத்து தகர்ப்பு!

September 27, 2021
 

பாகிஸ்தான் நாட்டை உருவாக்கிய முகமது அலி ஜின்னாவின் சிலை குண்டு வைத்து தகர்க்கப்பட்டது. பாகிஸ்தான், பலூசிஸ்தான் மாகாணத்தின் குவாடர் பகுதியில் உள்ள முகமது அலி ஜின்னாவின் சிலை வெடிகுண்டு வைத்து தகர்க்கப்பட்டுள்ளது. 
 
இதற்கு பலூச் விடுதலை முன்னணி என்ற அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. பாகிஸ்தானில் அண்மைக்காலமாக வன்முறை சம்பவங்கள் நடந்து வருகின்றன. ஆனால் இந்த சிலை தகர்ப்பு சம்பவத்திற்கான காரணம் இதுவரை அறியப்படவில்லை. 

பாகிஸ்தானை உருவாக்கிய முகமது அலி ஜின்னாவின் சிலை குண்டு வைத்து தகர்ப்பு!  பாகிஸ்தானை உருவாக்கிய முகமது அலி ஜின்னாவின் சிலை குண்டு வைத்து தகர்ப்பு! Reviewed by Irumbu Thirai News on September 27, 2021 Rating: 5

இன்றுடன் Google ற்கு 23 வயது: Google பற்றி 23 சுவாரஸ்ய தகவல்கள்...

September 27, 2021
 

கூகுள் தொடங்கி இன்றுடன்(27/9/2021) 23 வருடங்களாகின்றன. எனவே இதை முன்னிட்டு கூகுள் தொடர்பாக 23 சுவாரஸ்ய தகவல்களை இங்கே பகிர்ந்து கொள்கிறோம். 

(1) அதிகம் தேடப்படும் மற்றும் பார்க்கப்படும் இணையதளம் இதுவாகும். 
 
(2) கல்லூரி மாணவர்கள் இருவரால் உருவாக்கப்பட்டதே Google. லேரி பேஜ் மற்றும் செர்கே ப்ரின் என்பவர்களாலேயே உருவாக்கப்பட்டது. இணையதளங்களை தரவரிசைப்படுத்தும் ஓர் தளமாகவே இதை உருவாக்க விரும்பினர். அதாவது ஒரு குறிப்பிட்ட இணையதளத்தின் இணைப்பை எத்தனை இணைய தளங்கள் பகிர்கின்றன என்பதை அடிப்படையாகக் கொண்டு இந்த தரவரிசை உருவாக்கப்பட்டது. 
 
(3) Google என்ற சொல் கூகொல் (Googol) என்ற சொல்லிலிருந்து வந்தது. அதாவது ஒன்றுக்கு பக்கத்தில் 100 பூச்சியங்களைப் போடுவதால் வரும் எண்ணைக் குறிக்கவே இந்த கூகொல் என்ற சொல் பயன்படுகிறது. எவ்வளவு தகவல்களை இதில் தேட விரும்புகிறோம் என்பதை குறிக்கவே இந்த வார்த்தையைப் பயன்படுத்தினர். 
 
(4) 1998 இல் முதல் கூகுள் டூடுல் உருவாக்கப்பட்டது.'burning man' என்ற நிகழ்வுக்காக இது உருவாக்கப்பட்டது. 
 
(5) முதல் வீடியோ டூடுல் ஜோன் லெனனின் 70 வது பிறந்த நாளுக்காக உருவாக்கப்பட்டது. 
 
(6) கூகுளின் தலைமை அலுவலகம் கலிபோர்னியாவில் உள்ள சிலிகான் வேலியில் அமைந்துள்ளது. இந்த தலைமை அலுவலகம் கூகுள் ப்ளக்ஸ் என அழைக்கப்படுகிறது. 

(7) தலைமை அலுவலகத்தில் டி-ரெக்ஸ் டைனோசரின் பெரிய சிலை காணப்படுகிறது. இந்த சிலை அடிக்கடி பிளமிங்கோ பறவையால் முழுமையாக மறைக்கப்படும். கூகுள் எப்போதுமே அழிந்து விடக்கூடாது என்பதை ஊழியர்களுக்கு உணர்த்துவதற்காகவே இவ்வாறு செய்யப்படுவதாக ஒரு வதந்தி இருக்கிறது. 
 
(8) கூகுளின் முதல் சேர்வர் (Server) லெகோ என்ற பிளாஸ்டிக் பொம்மை பாகங்களால் தயாரிக்கப்பட்ட பெட்டியில் தான் அமைந்திருந்தது. 

(9) கூகுளின் தலைமை அலுவலகம் மிகவும் பசுமையாக இருக்கும். அங்குள்ள புற்களை சீர் செய்வதற்கு ஊழியர்களுக்கு பதிலாக ஆடுகளே இருக்கும். 
 
(10) தமது செல்லப் பிராணியான நாய்களை கொண்டு வருவதற்கு Google இன் ஊழியர்களுக்கு அனுமதி உண்டு. 
 
(11) கூகுளில் இமேஜ் தேடுதல் முறை 2001 இல் ஆரம்பிக்கப்பட்டது. 
 
(12) Google தனது இமெயில் சேவையை Gmail என்ற பெயரில் 1-4-2004 இல் ஆரம்பித்தது. 
(13) கூகுள் என்ற வார்த்தை 2006 இல் முதன்முதல் அகராதியில் சேர்க்கப்பட்டது. அதன் பொருளாக "கூகுளை பயன்படுத்தி தகவலைத் தேடிப் பெறுதல்" என குறிப்பிடப்பட்டிருந்தது. 
 
(14) 2006இல் 1.5 பில்லியன் டொலருக்கு யூடியூப் ஐ கூகுள் வாங்கியது. தற்போது இதில் ஒவ்வொரு நிமிடத்திற்கும் 400 மணித்தியால அளவிற்கு வீடியோக்கள் பதிவேற்றப்படுகின்றன. 
 
(15) ஒவ்வொரு நாளும் வேறு எதிலும் தேவைப்படாத 15%மான தேடல்கள் கூகுளில் மாத்திரமே தேடப்படுகின்றன. 
 
(16) 2018 ஏப்ரல் தொடக்கம் 100 சதவீத புதுப்பிக்கத்தக்க ஆற்றலை மட்டும் பயன்படுத்தும் நிறுவனமாக கூகுள் மாறியது. அதாவது 1KW மின்சாரத்தை பயன்படுத்தினால் அது முழுமையாக புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலம் உற்பத்தி செய்யப்பட்டதாக இருக்கும். 
 
(17) கூகுளிற்கு 6 பிறந்த நாட்கள். ஆனால் செப்டம்பர் 27 ஐயே இது தேர்ந்தெடுத்தது. 
 
(18) கூகுள் ஹோம் பேஜ் (Home Page) குறைந்தபட்சம் 80 மொழிகளில் வழங்கப்படுகின்றது. 

(19) நமது தேடலின் முடிவை தருவதற்கான Google இன் கணிப்பு ஆற்றலின் அளவு அப்பலோ 11 விண்கலம் மூலம் விண்வெளி வீரர்களை நிலவிற்கு அனுப்புவதற்கு தேவைப்பட்ட கணிப்பு ஆற்றலின் அளவுக்கு சமம் என்பது குறிப்பிடத்தக்கது.  
 
(20) கூகுளை உருவாக்கியவர்களில் ஒருவரான லாரி, 1995இல் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தபோது, அவருக்கு அந்த பல்கலைக்கழகத்தை சுற்றி காட்டுவதற்காக செர்கே கேட்டுக் கொள்ளப்பட்டார். பின்னர் இருவரும் நண்பர்களாகி "Backrub" என்ற தேடுபொறியை உருவாக்கினர். பின்னர் Backrub - Googol என மாற்றினர். (Googol என்பது 1 ஐ தொடர்ந்து 100 பூச்சியங்கள் இருப்பதற்கு கணிதத்தில் பயன்படுத்தப்படும் சொல்). ஆனால் நடந்தது என்னவென்றால் லாரி பேஜ் அதன் எழுத்தை தவறாக எழுதியதால் உருவானதே கூகுள் (Google). பின்நாளில் அதையே பெயராக வைத்துவிட்டனர். 
 
(21) கூகுள் நிவ்ஸ் செப்டம்பர் 2002 இல் ஆரம்பிக்கப்பட்டது. 

(22) கூகுள் அனலிட்டிக்ஸ் நவம்பர் 2005 இல் தொடங்கப்பட்டது, இது வலைத்தள ட்ராஃபிக்கை (Website Traffic)  கண்காணித்து அறிக்கை செய்கிறது.
 
(23) Google தற்போது வெறுமனே ஒரு தேடுபொறியாக மட்டும் கருதப்படுவதில்லை. செயற்கை நுண்ணறிவு, ஓட்டுனர்கள் இல்லாத கார்கள், புதிய விளையாட்டு தளம் போன்ற பல்வேறு தொழில்நுட்ப அம்சங்களை உள்ளடக்கிய எதிர்கால வளர்ச்சியின் உதாரணமாகவே கருதப்படுகிறது. 

இன்றுடன் Google ற்கு 23 வயது: Google பற்றி 23 சுவாரஸ்ய தகவல்கள்... இன்றுடன் Google ற்கு 23 வயது: Google பற்றி 23 சுவாரஸ்ய தகவல்கள்... Reviewed by Irumbu Thirai News on September 27, 2021 Rating: 5

பாகிஸ்தானுக்கு அதிர்ச்சி கொடுத்த இஸ்லாமிய நாடுகள்!

September 27, 2021
 

இந்திய நிர்வாகத்தில் உள்ள காஷ்மீரில் மக்கள் ஒடுக்கப்படுவதாகவும், ஓஐசி (இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு) இஸ்லாமிய உலகத்தின் மீதே அவர்கள் நம்பிக்கை வைத்திருப்பதாகவும், நியூயார்க்கில் OIC யின் தொடர்பு குழுவில் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா மெஹ்மூத் குரேஷி தெரிவித்தார். 
 
இது மாத்திரமன்றி ஐக்கிய நாடுகள் பொதுச் சபை மற்றும் மனித உரிமைகள் கவுன்சில் உள்ளிட்ட சகல முக்கிய மன்றங்களிலும் இந்தப் பிரச்சினையை OIC உறுப்பு நாடுகள் எழுப்ப வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார். 
 
ஆனால் பாகிஸ்தான் எதிர்பார்த்ததற்கு மாற்றமாகவே நடைபெற்றது. 
 
ஐநா பொதுச் சபையில் உரையாற்றிய சவுதி அரேபியாவின் மன்னர் சல்மான், ஹூதி பயங்கரவாதத்தைப் பற்றி பேசினார். சூடான் மற்றும் எகிப்துக்கு இடையிலான தண்ணீர் பிரச்சினை பற்றியும் பேசினார். லிபியா மற்றும் சிரியா பற்றிப் பேசினார். சவுதிக்கு தற்காப்பு உரிமை உள்ளது என்றும் கூறினார். ஆப்கானிஸ்தான் தொடர்பாகவும் பேசினார். ஈரான் பற்றியும் பேசினார். அணு ஆயுதங்கள் பற்றி கவலை வெளியிட்டார். ஆனால் 

காஷ்மீர் விவகாரம் தொடர்பாக ஒரு வார்த்தை கூட பேசவில்லை. இந்தியாவுடனான அதன் வளர்ந்து வரும் உறவுக்கு முக்கியத்துவம் .கொடுத்து இந்த விவகாரத்தை  தவிர்த்திருக்கலாம் என அவதானிகள் தெரிவிக்கின்றனர். 
 
ஈரானின் புதிய ஜனாதிபதி இப்ராஹிம் ரயீசி ஐநா பொதுச்சபையில் உரையாற்றுகையில் காஷ்மீர் தொடர்பாக ஒரு வார்த்தை கூட பேசவில்லை. 
 
ஐநா பொதுச் சபையில் உரையாற்றிய அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் உலகெங்கிலும் உள்ள மனித உரிமை மீறல்கள் தொடர்பாக பேசினார். ஆனால் காஷ்மீர் தொடர்பாக ஒரு வார்த்தை கூட பேசவில்லை. 
 
ஆனால் துருக்கி ஜனாதிபதி எர்தூகான் மாத்திரம் தனது உரையில், 

காஷ்மீர் பற்றி பேசினார். ஆனால் அவரது தொணியும் முன்னரைப் போலல்லாமல் மென்மையாக மாறி இருந்தது. பேச்சுவார்த்தை மூலம் இந்தப் பிரச்சினையை தீர்க்கப்பட வேண்டும் என்று பொதுவாக கூறிவிட்டார். 
 
காஷ்மீர் பற்றி இதற்கு முன்னர் துருக்கி ஜனாதிபதியும் மலேசியாவின் மகாதிர் முஹம்மதும் சர்வதேச மன்றங்களில் பேசி வந்தனர். ஆனால் மஹாதீர் முஹம்மத் தற்போது பதவியில் இல்லை. 
 
பாகிஸ்தானுடனான சவுதி அரேபியாவின் உறவும் பிரச்சினையில்லை. 2018 இல் இம்ரான்கான் பதவிக்கு வந்தபோது 3 பில்லியன் டொலர் கடனாகவும் அதே பெறுமதியுடைய எண்ணையையும் கடனாக பாகிஸ்தானுக்கு சவுதி வழங்கியது. ஆனால் காஷ்மீருக்கான சிறப்பு அரசியலமைப்பு அந்தஸ்தை இந்தியா நீக்கியபோது பாகிஸ்தானுக்கு சவுதியின் ஆதரவு கிடைக்கவில்லை. இதற்காக சவுதி அரேபியா OIC கூட்டத்தை கூட்டவில்லை என பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் குற்றம் சுமத்தி இருந்தார். இதன் காரணமாக கோபமடைந்த சவுதி அரேபியா தான் வழங்கிய கடனை முன்கூட்டியே திருப்பி செலுத்துமாறு பாகிஸ்தானிடம் கூறியது குறிப்பிடத்தக்கது. 
 
எவ்வாறாயினும் OIC என்ற இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு நாடுகளிலிருந்து பாகிஸ்தான் ஏமாற்றத்தையே சந்தித்துள்ளது.
பாகிஸ்தானுக்கு அதிர்ச்சி கொடுத்த இஸ்லாமிய நாடுகள்! பாகிஸ்தானுக்கு அதிர்ச்சி கொடுத்த இஸ்லாமிய நாடுகள்! Reviewed by Irumbu Thirai News on September 27, 2021 Rating: 5

அரச ஊழியர்களுக்கு ஏற்படும் சந்தேகங்களும் அதற்கான தீர்வுகளும் - பாகம் 05

September 26, 2021
 

தாபன விதிக்கோவை மற்றும் அரசாங்க நிர்வாக சுற்றறிக்கைகளில் நேரடியாக உள்ளடக்கப்படாத விடயங்கள் தொடர்பில் அரசாங்க ஊழியர்களுக்கு ஏற்படும் சந்தேகத்திற்கான தீர்வுகள் இங்கே வழங்கப்படுகின்றன. இவை தாபனப் பணிப்பாளரினால் வழங்கப்பட்ட பதில்களாகும். 
 
இவ்வாறு அரச நிறுவன தலைவர்களால் அடிக்கடி வினவப்பட்ட விடயங்களுக்கான பதில்களை கட்டங்கட்டமாக இங்கே தருகிறோம். 

குறிப்பு: தொடர்புடைய சுற்றறிக்கைகள் வர்த்தமானி என்பன இணைக்கப்பட்டுள்ளன.

பாகம் - 05

 
(21) மத்திய அரசின் உத்தியோகத்தர்களின் பதவி உயர்வுகள் மற்றும் நியமனங்களை முற்தேதியிடல் தொடர்பாக எழும் பிரச்சினைகள் தொடர்பாக செயற்பட வேண்டியது எவ்வாறு? 
 
20.02.2009 ஆந் திகதிய 1589/30 என்னும் இலக்கமுடைய வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ள பொதுச் சேவைகள் ஆணைக்குழுவின் செயற்பாட்டு நடைமுறை விதிகளுக்கு அவதானத்தைச் செலுத்தி குறித்த அறிவுரைகளை பொதுச் சேவைகள் ஆணைக்குழுவிடமிருந்து பெற்றுக் கொள்ளல் வேண்டும். 
 
குறித்த வர்த்தமானிகளைப் பார்வையிட... 
 
 
(22) 2005.07.15 ஆந் திகதிய அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை இலக்கம் 20/94 (II) இன் ஏற்பாடுகளை, 31.12.1980 ஆந் திகதியின் பின்னர் அரச சேவையின் பொருட்டு சேர்த்துக் கொள்ளப்பட்ட உத்தியோகத்தர்களின் பொருட்டு ஏற்புடையதாக்கிக் கொள்ள முடியுமா? 
 
முடியாது. 
 
குறித்த சுற்றறிக்கையைப் பார்வையிட..
 
 
(23) அரச சேவையில் சகல பட்டதாரிகளையும் ஒரே சம்பளப் புள்ளியில் வைக்க முடியமா? 
 
ஒரே சம்பளப் புள்ளியில் அமைக்க முடியாது. சம்பளத்தினை தீர்மானிப்பது பதவியின் பொருட்டு என்பதுடன்; அப்பதவிகளின் உள்ள நபர்களின் தகைமைகளுக்கமைய மேற்கொள்ளப்படுவது இல்லை. 

 
(24) அரச சேவையில் ஓர் பதவியிலிருந்து அரச சேவையில் வேறொரு பதவியின் பொருட்டு நிரந்தரமாக விடுவிக்கப்பட்டுள்ள மத்திய அரசின் உத்தியோகத்தர் ஒருவருக்கு மீண்டும் முன்னைய பதவிக்கு வருதல் தொடர்பாக தற்போது நடைமுறையிலுள்ள ஏற்பாடுகள் என்ன? 
 
2009.02.20 ஆந் திகதிய 1589/30 என்னும் இலக்கமுடைய வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ள பொதுச் சேவைகள் ஆணைக்குழுவின் செயற்பாட்டு நடைமுறைக் கோவையில் இதற்குரிய ஏற்பாடுகள் குறிப்பிடப்படவில்லை என்பதால் இது தொடர்பாக பொதுச் சேவைகள் ஆணைக் குழுவிடமிருந்து அறிவுரையினைப் பெற்றுக் கொள்ளல் வேண்டும். 
(குறிப்பு:- குறித்த வர்த்தமானி 21ஆவது வினாவுக்கான விடையில் இணைக்கப்பட்டுள்ளது. )
 
 
(25) தேர்தல் ஒன்றிற்காகப் போட்டியிடும் அரசியல் உரிமைகள் உடைத்தான உத்தியோகத்தரொருவர், அதன் பொருட்டு விடுமுறைக்காக விண்ணப்பிக்கும் போது, அவ்வருடத்தில் அவருக்குரிய அது வரையில் பெற்றுக் கொள்ளப்படாதுள்ள சாதாரண விடுமுறைகள் இருப்பின் அவற்றைப் பெற்றுக் கொள்வதற்கு வாய்ப்புக்கள் உள்ளதா? 
 
ஆம். அவ்வருடத்திற்குரிய அமைய விடுமுறைகளையும் உழைத்துக் கொண்டுள்ள ஓய்வு விடுமுறைகளையும் பெற்றுக் கொள்ள முடியும். 
 
 
(26) அரசியல் உரிமை உடைத்தான உத்தியோகத்தர் ஒருவர் உள்ளுராட்சி தேர்தலின் பொருட்டு போட்டியிட்டு வெற்றியீட்டி உறுப்பினர் பதவியின் பொருட்டு நியமிக்கப்பட்டவுடன் அவர் வகித்த பதவியிலிருந்து விலகுதல் வேண்டுமா? 
 
இல்லை. அவர் வகித்த பதவியில் இருந்தவாறே ஆகக் குறைந்தது மாதம் ஒன்றிற்கு 05 நாட்கள் குறித்த கூட்டங்களின் பொருட்டு கலந்து கொள்ள முடியும். (22.05.2007 ஆந் திகதிய அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை 13/2007). 
 
குறித்த சுற்றறிக்கையைப் பார்வையிட..
 
 
(27) அரசியல் உரிமையுடைத்தான உத்தியோகத்தர் ஒருவருக்கு உள்ளுராட்சி தேர்தலின் பொருட்டு போட்டியிட்டு வெற்றியீட்டி தலைவர் பதவியின் பொருட்டு நியமிக்கப்பட்டவுடன் அவர் வகித்த பதவியிலிருந்து விலகுதல் வேண்டுமா? 
 
இல்லை. 
அவருக்கு கீழ் குறிப்பிடப்பட்டுள்ள 02 அணுசரணைகளைப் பெற்றுக் கொள்ளலாம். 
 
(1) உள்ளுராட்சி நிறுவனத்தில் பதவி வகிக்கும் முழுமையான காலத்திற்கும் சம்பளமற்ற விடுமுறையினைப் பெற்றுக் கொள்ளல். 
 
(11) நிரந்தர பதவியில் உள்ள போதே மாதத்திற்கு ஆகக் குறைந்தது 07 நாட்கள் சம்பளத்துடனான விடுமுறைகளைப் பெற்றுக் கொண்டு கூட்டங்களின் பொருட்டு கலந்து கொள்ளலாம். 
 
 
 
(28) அரசியல் உரிமை உரித்துடைய உத்தியோகத்தரொருவர் மாகாண சபைத் தேர்தலின் பொருட்டு போட்டியிட்டு வெற்றியீட்டி உறுப்பினர் ஒருவராக நியமிக்கப்பட்டவுடன் அவர் வகித்த பதவியிலிருந்து விலகுதல் வேண்டுமா? 
 
இல்லை. 
கீழ் குறிப்பிடப்பட்டுள்ள 02 விருப்புக்களில் ஏதாவது ஒரு விருப்பினை அனுபவிக்கலாம். 
 
(1) மாகாண சபை உறுப்பினராக இருக்கும் வரை சம்பளமற்ற விடுமுறையில் முழு நேர அடிப்படையின் பேரில் விடுவித்தல். 
 
(11) 22.04.1991 ஆந் திகதிய அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை இலக்கம் 1/89( I) இன் 02 வது பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகளின் பேரில் ஓய்வு பெறல். 
 
 
(29) அரசியல் உரிமைகள் உரித்துடைய உத்தியோகத்தர் ஒருவர் பாராளுமன்றத் தேர்தலின் பொருட்டு போட்டியிட்டு வெற்றியீட்டி பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டால் அவர் வகித்த பதவியில் இருந்து விலகுதல் வேண்டுமா? 

ஆம். 
 
 
(30) அரசியல் உரிமையற்ற உத்தியோகத்தர் ஒருவர் தேர்தலின் பொருட்டு போட்டியிடுவதற்கு சேவையிலிருந்து விலகுதல் வேண்டுமா? 
 
ஆம். 
15.12.2004 ஆந் திகதிய அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை இலக்கம் 07/2004 னால் திருத்தம் செய்யப்பட்ட தாபன விதிக்கோவையின் XXXII அத்தியாயத்தின் 1:3 பிரிவின் ஏற்பாடுகளுக்கமைய செயற்படல் வேண்டும்.
 
இது தொடர்பான சுற்றறிக்கைகளைப் பார்வையிட..
 
தொடரும்...
 
ஏனைய பாகங்களுக்கு செல்ல... 
 
 
 
 
அரச ஊழியர்களுக்கு ஏற்படும் சந்தேகங்களும் அதற்கான தீர்வுகளும் - பாகம் 05 அரச ஊழியர்களுக்கு ஏற்படும் சந்தேகங்களும் அதற்கான தீர்வுகளும் - பாகம் 05 Reviewed by Irumbu Thirai News on September 26, 2021 Rating: 5

21 செக்கன்களில் ஒருவரை அச்சுறுத்தலாமா? CID க்கு அழைக்கப்பட்ட ஆசிரியையின் விளக்கம்!

September 26, 2021
 

Online இல் கற்பிக்கும் ஆசிரியைகளுக்கு அச்சுறுத்தல் விடுத்த குற்றச்சாட்டின் பேரில் அதிபர் ஒருவரும் மினுவாங்கொடை வலயத்தை சேர்ந்த ஆசிரியை ஒருவரும் அண்மையில் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டிருந்தனர். 
 
குறித்த விசாரணை முடிவில் ஆசிரியை ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது, 

முறையான எழுத்துமூல அழைப்பு இன்றி தொலைபேசி மூலமே விசாரணைக்கு அழைத்தனர். இந்த இடத்தைப் பற்றிய மதிப்பு மரியாதை என்னிடம் இருந்தது. ஆனால் இந்த விடயங்களுக்கெல்லாம் இங்கே அழைத்திருக்கிறார்கள். இந்த இடத்திற்கு அழைக்கும் அளவிற்கு இது குற்றமா என்ற பிரச்சினை எனக்கு இருக்கிறது. 
 
இந்தக் குற்றச்சாட்டை நான் கடைசி வரை ஏற்றுக் கொள்ளவே இல்லை. நான் யாரையும் அச்சுறுத்துபவள் அல்ல. நான் ஏற்றுக் கொள்ளவே இல்லை. நான் அவ்வாறு யாரையும் அச்சுறுத்தியிருந்தால், தொலைபேசியில் கதைத்த நேர அளவை கூறுங்கள் என்று கேட்டேன். அவர்கள் சொல்லவில்லை. 
 
மூன்றாவது முறையும் கேட்டவுடன்தான் சொன்னார்கள் 21 செக்கன்கள் கதைத்திருப்பதாக. நான் உடனே கேட்டேன் 

ஒருவரை அச்சுறுத்துவது என்றால் 21 செக்கன்கள் போதுமா என்று. நான் கடைசிவரை குற்றச்சாட்டை ஏற்றுக்கொள்ளவே இல்லை என்று அவர் கூறினார். 
 
மேலும் அங்கிருந்த அதிகாரிகள் எம்முடன் நல்ல முறையில் நடந்து கொண்டார்கள். எவ்வாறாயினும் நான் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபாட்டுடன் செயற்படக்கூடிய ஒரு உறுப்பினர். நாங்கள் மேலதிக சம்பளத்தை கேட்கவில்லை. இல்லாமல் போனதை தான் கேட்கிறோம். எதிர்காலத்திலும் செயற்பாட்டு ரீதியாக பங்களிப்பு செய்யக்கூடிய ஒரு தொழிற் சங்க உறுப்பினராக நான் இருப்பேன் என்று தெரிவித்தார்.
21 செக்கன்களில் ஒருவரை அச்சுறுத்தலாமா? CID க்கு அழைக்கப்பட்ட ஆசிரியையின் விளக்கம்! 21 செக்கன்களில் ஒருவரை அச்சுறுத்தலாமா? CID க்கு அழைக்கப்பட்ட ஆசிரியையின் விளக்கம்! Reviewed by Irumbu Thirai News on September 26, 2021 Rating: 5

உயர்தரத்தில் ஒவ்வொரு துறைக்கும் தேவையான ஆகக்குறைந்த தகைமைகள்:

September 25, 2021
 

உயர்தரத்தில் ஒவ்வொரு துறைக்கும் தேவையான ஆகக்குறைந்த தகைமைகளை இங்கு சுருக்கமாகத் தருகிறோம்.


Arts:

கலைத்துறையில் கற்பதாயின் மொழி, கணிதம் உட்பட 6 பாடங்களில் சித்தி. (குறைந்தது 3C,3S) . கணிதம் அல்லது தமிழ் சித்தி அடையவில்லையாயின் அதனை அடுத்த முறை பெற்றுத்தரும் நிபந்தனையின் கீழ் கலைத்துறையில்  இணையலாம். 2 C மாத்திரம் பெற்ற ஒருவர் கட்டாயப் பாடங்களில் உள்ள S சித்தியை பாடசாலை மட்ட கணிப்பீடு (SBA) மட்டத்தை அடிப்படையாகக் கொண்டு C யாக கணிக்கலாம். ஆனால் ஒரே நேரத்தில் இந்த இரண்டு நிபந்தனைகளையும் பாவிக்க  முடியாது. ஏதாவது ஒரு நிபந்தனையை அடிப்படையாகக் கொண்டே கலைத்துறையில் இணையலாம்.

 

Commerce:

3C, 3S என்ற நிபந்தனையில் வணிகக்கல்வி அல்லது முயற்சியாண்மை அல்லது வரலாறு அல்லது கணிதத்தில் C சித்தி அவசியம்.


Technology:

3C, 3S என்ற நிபந்தனையில் விஞ்ஞானத்தின் S அவசியம்.

 

Bio Science:

3C, 3S என்ற நிபந்தனையில் விஞ்ஞானத்தில் Cயும் கணிதத்தில் S உம் அவசியம். 


Physical Science (Maths):

3C, 3S என்ற நிபந்தனையில் கணிதத்தில் Cஉம் விஞ்ஞானத்தில் Sஉம் அவசியம்.

 

குறிப்பு:- கலைத்துறை மற்றும் தொழில்நுட்பத் துறை (Arts & Technology) என்பவற்றுக்கு மட்டுமே நிபந்தனையுடன் உயர் தரத்திற்கு சேரலாம்.

 

 

 

 
உயர்தரத்தில் ஒவ்வொரு துறைக்கும் தேவையான ஆகக்குறைந்த தகைமைகள்:  உயர்தரத்தில் ஒவ்வொரு துறைக்கும் தேவையான ஆகக்குறைந்த தகைமைகள்: Reviewed by Irumbu Thirai News on September 25, 2021 Rating: 5

வெளியிடப்பட்ட சாதாரணதர பெறுபேறு: திருத்தங்கள் செய்வது தொடர்பான அறிவித்தல்!

September 25, 2021
 

வெளியிடப்பட்ட 2020 சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் தொடர்பாக பரீட்சைத் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவித்தலில் திருத்தங்கள் தொடர்பாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 
 
அது தொடர்பாக பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது. 

பெறுபேற்று அட்டவணையை கவனமாக பரீட்சித்துப் பார்த்து உரிய பரீட்சார்த்திகளின் பெயர்களில் அல்லது வேறு திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டுமாயின் அதுபற்றி 2020-10-29 ஆம் திகதிக்கு முன்னர் இத்திணைக்களத்திற்கு (பரீட்சைத் திணைக்களத்திற்கு) அறிவிக்கவும். மாற்றங்கள் தொடர்பாக நடவடிக்கை மேற்கொள்ளப்படாவிடில் எதிர்காலத்தில் பரீட்சார்த்திகளுக்கு ஏற்படும் அசௌகரியங்கள் தொடர்பாக அதிபரே பொறுப்புக்கூற கட்டுப்பட்டுள்ளார் என்பதை கவனத்தில் கொள்க. மேற்குறித்த திகதிக்குப் பின்னர் செய்யப்படும் கோரிக்கைகள் தொடர்பாக நடவடிக்கை மேற்கொள்ளப்படமாட்டாது. அவ்வாறான திருத்தங்கள் நீங்கள் முன்னர் அனுப்பி வைத்த விண்ணப்ப படிவத்தில் காணப்படுமாயின் தங்களின் எழுத்துமூல கோரிக்கையுடன் பரீட்சார்த்தியின் பெறுபேற்று அட்டவணையின் பிரதியை சமர்ப்பிக்க வேண்டும். இப்பெறுபேற்று அட்டவணையையோ அல்லது நிழற் பிரதியையோ பரீட்சார்த்திகள் தனிப்பட்ட முறையில் பார்வையிடுவதற்கு சந்தர்ப்பம் அளித்தல் மிகவும் நன்று. 
என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வெளியிடப்பட்ட சாதாரணதர பெறுபேறு: திருத்தங்கள் செய்வது தொடர்பான அறிவித்தல்! வெளியிடப்பட்ட சாதாரணதர பெறுபேறு: திருத்தங்கள் செய்வது தொடர்பான அறிவித்தல்! Reviewed by Irumbu Thirai News on September 25, 2021 Rating: 5

பாடசாலைகளை மீள ஆரம்பித்தல் தொடர்பில் அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்ட ஊடக அறிக்கை (தமிழில்)

September 25, 2021
 

பாடசாலைகளை ஆரம்பித்தல் தொடர்பாக அரசாங்க தகவல் திணைக்களம் நேற்றைய (24) தினம் வெளியிட்ட ஊடக அறிக்கையை இங்கே தருகிறோம்.

 


பாடசாலைகளை மீள ஆரம்பித்தல் தொடர்பில் அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்ட ஊடக அறிக்கை (தமிழில்) பாடசாலைகளை மீள ஆரம்பித்தல் தொடர்பில் அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்ட ஊடக அறிக்கை (தமிழில்) Reviewed by Irumbu Thirai News on September 25, 2021 Rating: 5

24-09-2021 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) / Official Government Gazette released on 24-09-2021

September 24, 2021
 

24-09-2021 அன்று வெளியான அரச வர்த்தமானியை தமிழ், ஆங்கிலம், சிங்களம் ஆகிய மொழிகளில் இங்கு தருகிறோம். 
 
Official Government Gazette released on 24-09-2021 
 
இதில், 
பல முக்கிய அறிவித்தல்கள் காணப்படுகின்றன. கீழே உள்ள உரிய லிங்கை கிளிக் செய்து உரிய மொழியில் முழுமையாக பார்வையிடுக. 
 
தமிழில் பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க. 
 
ஆங்கிலத்தில் பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க.
 
சிங்களத்தில் பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க. 
 
 
முன்னைய வர்த்தமானி அறிவித்தலுக்கு செல்ல...
24-09-2021 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) / Official Government Gazette released on 24-09-2021 24-09-2021 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) / Official Government Gazette released on 24-09-2021 Reviewed by Irumbu Thirai News on September 24, 2021 Rating: 5

Marketing Management - Online Short Course - 2021 (Open University of Sri Lanka)

September 24, 2021
 

The Short Course in Marketing Management aims to introduce the key concepts and theories in marketing while comparing and contrasting them with the real marketing practices carried out by marketing professionals in organizations. 
 
 
Course Content 
 
Introduction to Management 
Introduction to Marketing 
Marketing Environment 
Segmenting, Targeting and Positioning 
Product 
Price 
Place (Distribution) 
Promotion (Marketing Communication) 
Consumers Behavior 
Service Marketing 
Corporate Social Responsibilities and marketing ethics 
Marketing Information System 
Report Writing & Summary Discussion 
Project Report 

Closing Date for Applications : Extended till 10th October 2021 (Limited to 20 students) 
 
Duration: 03 Months (Weekends) 
 
Medium : English 
 
Time Table (Online) : Saturday 1.00pm – 5.00pm 
 
Click the link below for download application: 
 
Click the link below for more details: 
 
Marketing Management - Online Short Course - 2021 (Open University of Sri Lanka) Marketing Management - Online Short Course - 2021 (Open University of Sri Lanka) Reviewed by Irumbu Thirai News on September 24, 2021 Rating: 5

Moratuwa University NDT Selection List - 2020/2021 (Round: 04)

September 24, 2021

University of Moratuwa 
Institute of Technology 
NDT Selection List - 2020/2021 (Round: 04) 
 
Click the link below for selected list:

For more details:
Moratuwa University NDT Selection List - 2020/2021 (Round: 04) Moratuwa University NDT Selection List - 2020/2021 (Round: 04) Reviewed by Irumbu Thirai News on September 24, 2021 Rating: 5

சாதாரண தர பரீட்சைக்குத் தோற்றிய சிறைக் கைதிகளுக்கு வந்த பெறுபேறு

September 24, 2021
 

2020 சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் நேற்றைய தினம் வெளியிடப்பட்டிருந்தன. 
 
அந்த வகையில் இந்த பரீட்சைக்காக கொழும்பு மகசின் மற்றும் வட்டரக்க சிறைச்சாலைகளில் அமைக்கப்பட்டிருந்த விஷேட பரீட்சை நிலையங்களில் இருந்து மொத்தமாக 04 கைதிகள் பரீட்சைக்கு தோற்றியிருந்ததாக சிறைச்சாலைகள் பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார். 
 
இதில் மெகசின் சிறைச்சாலையில் இருந்து பரீட்சைக்கு தோற்றிய 

இருவரும் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று சித்தியடைந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். அதில் ஒருவர் விடுதலைப் புலிகள் அமைப்புடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் தடுத்துவைக்கப்பட்டுள்ள கைதியாவார். 
 
சிறைச்சாலையில் உள்ள கைதிகளுக்கு புனர்வாழ்வளித்து அவர்களை சமூகத்துக்கு விடுவிப்பது சிறைச்சாலையின் கடமைகளில் முக்கியமானதாகும். மேலும் ஒவ்வொருவரினதும் திறமைகளை இனங்கண்டு அவர்களின் திறமைகளை மேம்படுத்துவதற்கான பல ஏற்பாடுகள் சிறைச்சாலைகளில் காணப்படுகின்றன. 
 
மேலும் பொருத்தமானவர்களுக்கு உயர்கல்விக்கான வாய்ப்பும் வழங்கப்படுகிறது. அவ்வாறு உயர்கல்வியை பெற்று பட்டப் படிப்பை நிறைவுசெய்த கைதிகளும் காணப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
சாதாரண தர பரீட்சைக்குத் தோற்றிய சிறைக் கைதிகளுக்கு வந்த பெறுபேறு சாதாரண தர பரீட்சைக்குத் தோற்றிய சிறைக் கைதிகளுக்கு வந்த பெறுபேறு Reviewed by Irumbu Thirai News on September 24, 2021 Rating: 5

பரீட்சை இலக்கத்தை மறந்த மாணவர்களுக்கான அறிவித்தல்!

September 24, 2021
 

2020 சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் நேற்றைய தினம் வெளியிடப்பட்டன. இது தொடர்பில் ஊடகவியலாளர் சந்திப்பை நடத்திய பரீட்சைகள் ஆணையாளர் சனத் பூஜித இது தொடர்பான பல விடயங்களை தெளிவு படுத்தினார். 
 
அதாவது, 
அரச நிறுவனங்களை டிஜிட்டல் மயப்படுத்தும் அரசாங்கத்தின் கொள்கைக்கு அமைவாக பரீட்சை திணைக்களமும் கடந்த வருடத்திலிருந்து பெறுபேறுகளை பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கி வருகிறது. 

எந்த ஒரு மாணவருக்கும் பரீட்சை திணைக்களத்தின் இணையதளத்திற்கு சென்று அதை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அதை எந்த இடத்திலும் பாவிப்பதற்கான அதிகாரம் காணப்படுகிறது. மீண்டும் கட்டணம் செலுத்தி பெறுபேற்றை பெறவேண்டும் என்ற தேவை இல்லை. வேறு பாடசாலைகளுக்கு அனுமதி பெறுவதற்காகவும் பதிவிறக்கம் செய்யப்பட்ட இந்த பெறுபேற்றை பயன்படுத்தலாம். 
 
ஏதாவது பிரச்சினைகள் தொடர்பில் கேட்கப்பட்டால் அது தொடர்பில் பதில் அளிப்பதற்காக நானும் எனது அதிகாரிகளும் நேற்று நள்ளிரவு 12 மணி வரை திணைக்களத்தில் இருந்தோம். அதில் கேட்கப்பட்ட முக்கிய பிரச்சினைதான் தமது பரீட்சை சுட்டெண் மறந்தால் என்ன செய்வது என்பது. அப்படியானவர்கள் தமது 
 
தேசிய அடையாள அட்டை இலக்கத்தை உள்ளீடு செய்து பெறுபேறுகளை பார்வையிடலாம். அதுவும் முடியாதவர்கள் எமது துரித தொலைபேசி இலக்கமான 1911 என்ற இலக்கத்திற்கு அழைத்து தமது முழுப் பெயரை வழங்கினால் பெறுபேறை அறிவிக்கலாம். 
 
அதே போன்று அதிபர்கள், வலயக் கல்விப் பணிப்பாளர்கள், மாகாண கல்விப் பணிப்பாளருக்கு இந்த பெறுபேறுகளை Online முறையில் இன்று காலை முதல் பெற்றுக்கொள்ள முடியும். அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள Username, Password என்பவற்றை பயன்படுத்தி இந்த பெறுபேறுகளை பெற்றுக்கொள்ளலாம். 
 
அதேபோன்று இதற்கு மேலதிகமாக வெளிநாட்டு தேவைக்காக அல்லது வேறு தேவைகளுக்காக யாருக்காவது பெறுபேறுகளை பெறவேண்டியிருந்தால் அவர்களுக்கு திங்கட்கிழமை முதல் Online முறையில் பெறுபேறுகளை வழங்கும் நடவடிக்கை ஆரம்பமாகும் என தெரிவித்தார்.

பரீட்சை இலக்கத்தை மறந்த மாணவர்களுக்கான அறிவித்தல்! பரீட்சை இலக்கத்தை மறந்த மாணவர்களுக்கான அறிவித்தல்! Reviewed by Irumbu Thirai News on September 24, 2021 Rating: 5
Powered by Blogger.