சா.தர பரீட்சை பெறுபேறுகள் இடைநிறுத்தப்பட்டோர்!

September 30, 2021

 


2020 ம் வருடத்திற்குரிய சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்பட்டிருந்தாலும் பரீட்சைக்கு தோற்றிய 207 பரீட்சார்த்திகளின் பெறுபேறுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

 

இது தொடர்பில் பரீட்சைகள் ஆணையாளர் சனத் பூஜித்த கருத்து தெரிவிக்கையில், 

 

இறுதியாக இடம்பெற்ற சாதாரண தர பரீட்சை தொடர்பாக 4,174 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றிருந்தன. அதில் விசாரணைகளை மேற்கொண்டதன் பின்னர் 3,967 பரீட்சார்த்திகளின் பரீட்சை பெறுபேறுகளை வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டது. 207 பரீட்சார்த்திகளின் பெறுபேறுகள் நிறுத்தப்பட்டுள்ளன. இதில் உரிய பரீட்சார்த்திகளுக்கு பதிலாக வேறு ஒருவர் பரீட்சைக்குத் தோற்றியது தொடர்பாக 06 நிகழ்வுகள் பதிவாகியுள்ளன. 

 

மேலும் கையெழுத்து மாற்றம், விடைத்தாள் மாற்றம், கையடக்கத் தொலைபேசியை வைத்திருத்தல் மற்றும் ஒரே மாதிரியான விடைகள் போன்ற விடயங்கள் காரணமாக குறித்த பெறுபேறுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன. இந்த விடயம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு அது தொடர்பான மேலதிக நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் தெரிவித்தார். 

 

மேலும் பெறுபேறு மீளாய்வு தொடர்பாக விண்ணப்பம் கோரல் உரிய நேரத்தில் அறிவிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

சா.தர பரீட்சை பெறுபேறுகள் இடைநிறுத்தப்பட்டோர்! சா.தர பரீட்சை பெறுபேறுகள் இடைநிறுத்தப்பட்டோர்! Reviewed by Irumbu Thirai News on September 30, 2021 Rating: 5

விடைத்தாள் மதிப்பீட்டுக்கான கொடுப்பனவுகள்: முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள்!

September 30, 2021
 

2020 ஆம் வருடத்திற்குரிய சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்பட்டாலும் அதற்காக விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகளை மேற்கொண்டவர்களுக்கான கொடுப்பனவுகள் இதுவரையில் கிடைக்கப் பெறவில்லை என இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது. 
 
குறித்த சங்கத்தின் செயலாளர் மகிந்த ஜயசிங்க இது தொடர்பில் தெரிவிக்கையில், 
 
கொரோனா பரவலுக்கு மத்தியிலும் விடைத்தாள் திருத்தும் பணிகளை மேற்கொண்டிருந்தனர். அவர்களுக்குரிய சுகாதார வசதிகளும் ஒழுங்கான முறையில் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டிருக்கவில்லை. இந்தநிலையிலேயே அவர்களுக்கான கொடுப்பனவு இன்னும் வழங்கப்படவில்லை என அவர் குற்றம் சாட்டினார்.
விடைத்தாள் மதிப்பீட்டுக்கான கொடுப்பனவுகள்: முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள்! விடைத்தாள் மதிப்பீட்டுக்கான கொடுப்பனவுகள்: முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள்! Reviewed by Irumbu Thirai News on September 30, 2021 Rating: 5

ஊரடங்கு நீக்கம்: வெளியானது அறிவித்தல்!

September 29, 2021
 

தற்போது நடைமுறையில் இருக்கும் தனிமைப்படுத்தல் ஊரடங்கை எதிர்வரும் ஒக்டோபர் முதலாம் திகதி  அதிகாலை 4:00 மணியுடன் நீக்க ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளதாக ராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.  
 
புதிய கட்டுப்பாடுகள் மற்றும் சுகாதார வழிகாட்டல்கள் என்பன பின்னர் அறிவிக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
ஊரடங்கு நீக்கம்: வெளியானது அறிவித்தல்! ஊரடங்கு நீக்கம்: வெளியானது அறிவித்தல்! Reviewed by Irumbu Thirai News on September 29, 2021 Rating: 5

மாணவர்களுக்கு தற்போது காணப்படும் தொலைக் கல்வி முறைகளும் அதைப் பெற்றுக் கொள்ளும் வழிகளும் (முழுமையான வழிகாட்டல்)

September 29, 2021
 

தற்போதைய நிலையில் பாடசாலை மாணவர்களுக்கு காணப்படுகின்ற தொலைக்கல்வி வசதி வாய்ப்புகளும் அது தொடர்பான சேவைகளைப் பெற்றுக்கொள்ளும் முறைகளையும் இங்கே தருகிறோம். 
 
(01) "ஈ-தக்சலாவ (e- thaksalawa)" கற்றல் முகாமைத்துவ முறைமை: 
 
இணையவழி ஊடாக செயற்படுத்தக்கூடிய தேசிய தொலைக் கல்வி செயற்திட்ட முறையாக இது காணப்படுகிறது. 
 
இதில் தரம் 1 - 13 வரை சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கில மொழி மூலங்களில் பாட உள்ளடக்கங்கள் இணைக்கப்பட்டுள்ளன. 
 
இது மாத்திரமன்றி பாடநூல்கள், ஆசிரியர் அறிவுரைப்பு வழிகாட்டி, கடந்தகால வினாப்பத்திரங்கள், நிகழ்நிலை(Online) வினாக்கள், மீட்டல் பயிற்சிகள், மாதிரி வினாத்தாள்கள், செயலட்டைகள் போன்றனவும் முடியுமானவரை இணைக்கப்பட்டுள்ளன. 
 
இதுவரை சுமார் ஒரு லட்சம் பாடப்பொருள் உள்ளடக்கங்கள் மற்றும் 65,000 பாடங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. இதற்கு மேலதிகமாக ஈ-நூலகம், அழகியல் அம்சங்கள், கல்விசார் விளையாட்டுக்கள் உள்ளிட்ட பல அம்சங்கள் அடங்கிய இந்த முறைமை அடிக்கடி இற்றைப்படுத்தப்படும் (Update)  முறைமையாகவும் காணப்படுகிறது. 
 
மேலதிகமாக ஆரோக்கியம் மற்றும் போசாக்கு தொடர்பாக மாணவர்களை அறிவுறுத்தும் இணையவழி பாடத்திட்டம் ஒன்றும் சைபர் பாதுகாப்பு தொடர்பான இணைய வழி பாடத்திட்டம் ஒன்றும் உள்ளடக்கப்பட்டுள்ளன 
 
குறித்த இணையதளத்திற்கு செல்ல கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க
 
 
(02) குருகெதர (Guru Gedara) கல்வி தொலைக்காட்சி அலைவரிசை: 
 
இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தின் "ஐ(Eye)" மற்றும் "நேத்ரா (Nethra)" அலைவரிசைகளின் ஊடாக நாளொன்றுக்கு 16 மணித்தியாலங்கள். சிங்களம் மற்றும் தமிழ் மொழி மூலமாக ஒரு மொழி மூலத்தில் 36 பாடங்கள் என்ற ரீதியில் ஒளிபரப்பப்படுகின்றன. 
 
பொதுவாக திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய தினங்களில் சிங்கள மொழிமூல பாடங்களும் செவ்வாய், வியாழன், சனி மற்றும் ஞாயிறு ஆகிய தினங்களில் தமிழ் மொழிமூல பாடங்களும் கற்பிக்கப்படுகின்றன. (கீழ் குறிப்பிடப்பட்டுள்ள பாடங்களுக்கு மேலதிகமாக ஒளிபரப்பப்படும் பாடங்கள் தொடர்பாக அறிந்து கொள்வதற்காக இதனுடன் தொடர்ச்சியாக இணைந்திருப்பது முக்கியமாகும்.) 
 
அந்த வகையில், 
 
(1) ஆரம்ப பிரிவின் 3 - 5 வரையான தரங்களுக்காக தாய்மொழி, கணிதம் மற்றும் சுற்றாடல் போன்ற பாடங்களும், 
 
(11) 6 - 11 வரையான தரங்களுக்காக கணிதம், விஞ்ஞானம், தாய்மொழி (சிங்களம் / தமிழ்), வரலாறு, ஆங்கிலம், சமயம், தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பம், குடியுரிமைக்கல்வி, புவியியல், கலை மற்றும் நாடகக் கலை, அழகியல், நடனம் போன்ற பாடங்களும், 
 
(111) 12 - 13 வரையான தரங்களுக்கு ஒருங்கிணைந்த கணிதம், உயிரியல், இரசாயனவியல், பௌதீகவியல், விவசாயம், பொருளாதாரம், கணக்கியல், வணிகக் கற்கைகள், புவியியல், சிங்களம்,  தமிழ், அரசியல், உயிர் முறைமைகள் தொழில்நுட்பவியல், பொறியியல் தொழில்நுட்பவியல், தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பம், நாடகமும் அரங்கியலும், சித்திரம் தர்க்கம் மற்றும் நடனம் போன்ற பாடங்களையும் சென்று பார்வையிடலாம். 
 
குருகெதர நேர அட்டவணையை பின்வரும் லிங்குகளில் சென்று பார்வையிடலாம்.
 
 
ரூபவாஹினி குருகெதர நிகழ்ச்சிகளை ரூபவாஹினி ஒளிபரப்புக்கு பின்னர் பின்வரும் ஊடகங்கள் மூலமாகவும் பார்வையிடலாம்: 
 
(1) தேசிய கல்வி நிறுவனத்தின் Channel NIE YouTube அலைவரிசை: 
 
(11) ஈ - தக்சலாவ கற்றல் முகாமைத்துவ முறைமை. 
 
(111) நெனச கல்வி செயற்திட்டம் மூலமாக 2 டயலொக் அலைவரிசைகளாக (Dialog Satellite Channel) செயல்படும் நெனச சிங்கள மற்றும் நெனச தமிழ் போன்ற இரண்டு கல்வி அலைவரிசைகள். 
 
 
(03) இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் உள்ளூர் வானொலி சேவையினால் ஒலிபரப்பப்படும் கல்விசார் நிகழ்ச்சிகள்: 
 
கீழே குறிப்பிடப்பட்டுள்ள உள்ளூர் வானொலி சேவை நான்குடனும் இணைந்து அந்தந்த மாகாண கல்வித் திணைக்களங்களினால்  கல்விசார் நிகழ்ச்சிகள் ஒலிபரப்பப்படுகின்றன. 
 
இதன்கீழ் ஒலிபரப்பப்படும் சகல பாடங்களின் ஒலிநாடாக்கள் ஈ - தக்சலாவ வலைத்தளத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன. அதற்கு மேலதிகமாக இந்த நான்கு சேவைகளின் ஊடாக ஒலிபரப்பப்படும் வானொலி பாடங்களை Radio e-thaksalawa எனும் கையடக்கத் தொலைபேசி செயலி (Mobile App) ஊடாகவும் செவிமடுக்கலாம். 
பிராந்திய வானொலிச் சேவைகளையும் அதன் அலைவரிசைகளையும் கீழே காணலாம்:

 

 
 
(04) மாகாண கல்வித் திணைக்களத்தினால் மற்றும் வலய மட்டத்தில் தயாரிக்கப்பட்ட கற்றல் உள்ளடக்கம்: 
 
இதற்கு மேலதிகமாக மாகாண கல்வித் திணைக்களத்தினால் மற்றும் வலய மட்டத்தில் கற்றல் உள்ளடக்கங்கள் தயாரிக்கப்பட்டிருப்பதுடன் அவற்றின் இணைப்புகள் சில கீழே தரப்பட்டுள்ளன. 
சப்ரகமுவ: https://enenapiyasa.lk/index-tm.html
வடமேல்:  http://nwpedu.lk/ 
வடமத்திய: https://www.edncp.lk/ht/index.php 
வடக்கு: http://www.edudept.np.gov.lk/
மேல்:  http://www.wpedu.sch.lk/
மத்திய: http://www.centralpedu.sch.lk/
 
 
மேற்படி அனைத்து வலைத்தளங்களிலும் பண்புத் தரத்துடன் கூடிய மிகப் பெரிதான உள்ளடக்கங்கள் காணப்படுவதால் அவற்றையும் கற்றலுக்காக மாணவர்கள் பயன்படுத்தலாம்.
----xx----

மாணவர்களுக்கு தற்போது காணப்படும் தொலைக் கல்வி முறைகளும் அதைப் பெற்றுக் கொள்ளும் வழிகளும் (முழுமையான வழிகாட்டல்) மாணவர்களுக்கு தற்போது காணப்படும் தொலைக் கல்வி முறைகளும் அதைப் பெற்றுக் கொள்ளும் வழிகளும் (முழுமையான வழிகாட்டல்) Reviewed by Irumbu Thirai News on September 29, 2021 Rating: 5

27.09.2021 அன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்ட தீர்மானங்கள்

September 29, 2021
 

27.09.2021 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது எடுக்கப்பட்ட தீர்மானங்களை இங்கு தருகிறோம். 
 
இதில், 
 பல முக்கிய தீர்மானங்கள் அடங்கியுள்ளன. 
 
இதன் முழு வடிவத்தைப் பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க. 
 
முன்னைய அமைச்சரவை கூட்ட தீர்மானங்களைப் பார்வையிட...
27.09.2021 அன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்ட தீர்மானங்கள் 27.09.2021 அன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்ட தீர்மானங்கள் Reviewed by Irumbu Thirai News on September 29, 2021 Rating: 5

பாடசாலைகளை திறந்தாலும் கற்பித்தல் ஒரு போதும் நடக்காது - ஜோசப் ஸ்டாலின்

September 29, 2021
 

பாடசாலைகள் மீண்டும் திறக்கப்பட்டாலும் ஆசிரியர்களின் சம்பளப் பிரச்சினை தீரும் வரை அவர்கள் கற்பித்தல் செயற்பாட்டில் பங்கேற்கமாட்டார்கள் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 
 
அதிபர், ஆசிரியர்களின் பிரச்சனையை தீர்க்காமல் கல்வி அமைச்சின் செயலாளர் ஊடக சந்திப்புகளில் முரண்பாடான அறிக்கைகளை கூறி வருவதாகவும் அவர் தெரிவித்தார். 
 
இது தொடர்பான செய்தி இன்றைய(29) தினகரன் பத்திரிகையில் வெளிவந்துள்ளதைக் கீழே காணலாம்.


 
பாடசாலைகளை திறந்தாலும் கற்பித்தல் ஒரு போதும் நடக்காது - ஜோசப் ஸ்டாலின் பாடசாலைகளை திறந்தாலும் கற்பித்தல் ஒரு போதும் நடக்காது - ஜோசப் ஸ்டாலின் Reviewed by Irumbu Thirai News on September 29, 2021 Rating: 5

பல்கலைக்கழகங்களை மீள ஆரம்பித்தல்: UGC யின் அறிவிப்பு!

September 29, 2021
 

பல்கலைக்கழகங்களை மீள ஆரம்பித்தல் தொடர்பாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார். 
 
அதாவது 20 - 30 வயதுக்கு இடைப்பட்டவர்களுக்கான தடுப்பூசி வழங்கும் பணிகளை அரசாங்கம் அடுத்த மாத இறுதிக்குள் நிறைவு செய்யுமாயின் எதிர்வரும் 
 
நவம்பர் மாதம் தொடக்கம் பல்கலைக்கழகங்களை மீள ஆரம்பிக்கலாம் என அவர் தெரிவித்துள்ளார். 
 
மேலும், பல வருடங்களுக்கு பிறகு இம்முறை பல்கலைக்கழகங்களுக்கு உள்வாங்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கை 10,000 ஆல் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய 42,000 மாணவர்கள் தகுதி பெற்றுள்ளனர். எதிர்காலத்திலும் இதுபோன்ற அதிகரிப்பினை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.
பல்கலைக்கழகங்களை மீள ஆரம்பித்தல்: UGC யின் அறிவிப்பு! பல்கலைக்கழகங்களை மீள ஆரம்பித்தல்: UGC யின் அறிவிப்பு! Reviewed by Irumbu Thirai News on September 29, 2021 Rating: 5

சமூக வலைத்தள பிரபலங்களுக்கு சம்மன் அனுப்பிய சவுதி அரேபியா!

September 28, 2021
 

தவறான விளம்பரங்களையும் பதிவுகளையும் வெளியிட்டதாக 5 சமூக வலைத்தள பிரபலங்களுக்கு சவுதி அரேபிய ஊடக ஒழுங்குமுறை அமைப்பு சம்மன் அனுப்பியுள்ளதாக சவுதி அரேபியாவின் அரச செய்தி நிறுவனமான SPA கூறியுள்ளது. 
 
இந்த வருடம் மட்டும் இதுவரை சமூக வலைத்தளங்களில் விதிமுறைகளை மீறியதாக 
 
65 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பதாக சவுதி அரேபிய ஊடக ஒழுங்குமுறை அமைப்பு தெரிவித்துள்ளது. 
 
சமூக வலைத்தளங்களில் விதிமுறைகளை யாராவது மீறினால் அவர்களுக்கு கடுமையான அபராதம் விதிக்கும் வகையில் சட்டங்கள் சவுதியில் இருக்கின்றன.
சமூக வலைத்தள பிரபலங்களுக்கு சம்மன் அனுப்பிய சவுதி அரேபியா! சமூக வலைத்தள பிரபலங்களுக்கு சம்மன் அனுப்பிய சவுதி அரேபியா! Reviewed by Irumbu Thirai News on September 28, 2021 Rating: 5

செயற்பாட்டு பரீட்சைக்குரிய மாணவர்களை உயர் தரத்திற்கு அனுமதித்தல்: வெளியானது சுற்றறிக்கை!

September 28, 2021
 

செயற்பாட்டு பரீட்சைக்குத் தோற்றவிருக்கும் மாணவர்களை உயர் தரத்திற்கு அனுமதித்தல் தொடர்பாக கல்வி அமைச்சு இன்றைய தினம் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது. அதனைக் கீழே காணலாம். 
 
சுற்றுநிறுப இலக்கம்: 18/2021 
 
மாகாண பிரதம செயலாளர்கள், 
மாகாண கல்வி செயலாளர்கள், 
மாகாண கல்விப் பணிப்பாளர்கள், 
வலயக் கல்விப் பணிப்பாளர்கள், 
கோட்ட பிரதி / உதவி கல்வி பணிப்பாளர்கள், 
பிரிவெனாதிபதிகள்,
சகல அரச பாடசாலை அதிபர்களுக்கு, 
 
2020 - க.பொ.த. (சாதாரண தர) பரீட்சையில் செயற்பாட்டுப் பரீட்சையுடன் கூடிய அழகியல் பாடத்திற்கு தோற்றிய மாணவர்களை கா. பொ. த.  (உயர்தர) வகுப்புகளுக்கு அனுமதித்தல். 
 
கபொ.த. (உயர்தர) வகுப்புகளுக்கு மாணவர்களை அனுமதித்தல் தொடர்பாக இதற்கு முன்னர் வெளியிடப்பட்டுள்ள 2008-4-30 ஆம் திகதி 2008/17 ஆம் இலக்கத்தை கொண்ட சுற்றுநிறுபம் மற்றும் இது தொடர்பாக வெளியிடப்பட்ட சுற்றுநிறுப திருத்தங்களுக்கு மேலதிகமானது. 
 
2.0 இச்சுற்றுநிறுப அறிவுறுத்தல்கள் 2020 க. பொ. த. (சாதாரண தரப்) பரீட்சையில் செயற்பாட்டு பரீட்சையுடன் கூடிய அழகியல் பாடத்திற்கு தோற்றிய மாணவர்களை க.பொ.த. (உயர்தர) வகுப்புகளுக்கு அனுமதித்து கொள்வதற்கு மட்டுமே பொருந்தும். 
 
3.0 க.பொ.த (சாதாரண தர) பரீட்சை - 2020 பெறுபேறுகளின் படி செயற்பாட்டு பரீட்சையுடன் கூடிய அழகியல் பாடத்திற்கு தோற்றிய மாணவர்களை 12 ஆம் தரத்திற்கு அனுமதித்துக்  கொள்வதற்காக குறைந்தபட்ச தகைமைகளைப் பொருத்திக் கொள்ள வேண்டிய முறை: 

 
3.1 மேற்படி 3.0(அ) இல் குறிப்பிடப்பட்டுள்ள தகைமைகளின் அடிப்படையில் தேவைப்படும் இரண்டு திறமை சித்திகளில் ஒன்று இல்லாத சந்தர்ப்பத்தில் மாத்திரம் 2020 - க. பொ. த. (சாதாரண தரப்) பரீட்சையில் எழுத்துப் பரீட்சையில் சாதாரண சித்தியைப் பெற்று அப்பாடத்திற்கு பாடசாலையை அடிப்படையாகக் கொண்ட கணிப்பீட்டு வேலைத்திட்டத்தின் கீழ் சாதாரணம் அல்லது அதற்கு மேற்பட்ட தேர்ச்சியினைப் பெற்றிருப்பின் அது ஒரு திறமை சித்தியாக கொள்ளப்படும். இது தாய் மொழி மற்றும் கணித பாடத்திற்கு பொருந்தாது. 
 
3.2 பாடசாலை பரீட்சார்த்தியாக முதற் தடவை தோற்றிய பின்னர் இரண்டாம் தடவையாக க.பொ.த. (சாதாரண தர) பரீட்சையில் செயற்பாட்டு பரீட்சையுடன் கூடிய அழகியல் பாடத்திற்கு தோற்றிய மாணவர் ஒருவருக்கு மேலே 3.1இல் குறிப்பிடப்பட்டுள்ளதன் படி, தகைமைகளைப் பூர்த்தி செய்து கொள்வதற்காக முதற் தடவையில் பெற்றுக்கொண்ட பாடசாலையை அடிப்படையாகக் கொண்ட கணிப்பீட்டு வேலைத்திட்டத்தின் பெறுபேற்றினை பயன்படுத்திக் கொள்ள முடியும். 
 
3.3 க.பொ.த. (சாதாரண தர) பரீட்சையில் செயற்பாட்டு பரீட்சையுடன் கூடிய அழகியல் பாடத்திற்கு தோற்றிய மாணவர்களை க.பொ.த. (உயர்தர) வகுப்புகளுக்கு அனுமதிக்கும் போது அதி திறமை சித்தி அல்லது விசேட திறமைச் சித்தி தேவைகளுக்கும் செயற்பாட்டு பரீட்சையுடன் கூடிய அழகியல் பாடங்களில் பெற்றுக் கொண்டுள்ள, பாடசாலையை அடிப்படையாகக் கொண்ட கணிப்பீட்டு வேலைத்திட்டத்தின் தேர்ச்சி மட்டத்தினை உரியதாக்கிக் கொள்ள வேண்டும். 
 
3.4 க.பொ.த. (சாதாரண தர) - 2020 பரீட்சையில் செயற்பாட்டு பரீட்சையுடன்  கூடிய அழகியல் பாடத்திற்கு தோற்றி, அப்பாடங்கள்  உள்ளடங்கலாக க.பொ.த. (உயர் தர) த்தினைக் கற்பதற்கு எதிர்பார்த்திருப்பின் அப் பாடத்திற்காக பாடசாலையை அடிப்படையாகக் கொண்ட கணிப்பீட்டு வேலைத்திட்டத்தின் கீழ் திறமை தேர்ச்சி அல்லது அதற்கு மேற்பட்ட தேர்ச்சி மட்டத்தினை பெற்றிருத்தல் வேண்டும். எனினும், பாடசாலையை அடிப்படையாகக் கொண்ட கணிப்பீட்டு வேலைத்திட்டத்தின் கீழ் தேர்ச்சி மட்டம்  குறிப்பிடப்பட்டிருக்காத சந்தர்ப்பத்தில் மாத்திரம் அதற்கான அனுமதியை கல்வி அமைச்சிடம் (பாடசாலை செயற்பாட்டு கிளை) பெற்றுக்கொள்ளல் வேண்டும். 

3.5 க.பொ.த. (சாதாரண தர) - 2020 பரீட்சையில் செயற்பாட்டு பரீட்சையுடன் கூடிய அழகியல் பாடத்திற்கு தோற்றிய மாணவர்கள் 2021 ஆம் வருடத்தில் க.பொ.த. (உயர் தரம்) 12ஆம் தரத்தில் அனுமதிக்கும் போது மேற்படி அறிவுறுத்தல்களின்படி நடவடிக்கை எடுத்தல் வேண்டும். 
 
மேலே குறிப்பிடப்பட்டுள்ள மேலதிக விதிமுறைகளுக்கு மேலதிகமாக உரிய சுற்றுநிருபங்களில் உள்ளடக்கப்பட்டுள்ள ஏனைய சகல விடயங்களும் அவ்வாறே நடைமுறையிலிருக்கும். இச் சுற்றறிக்கையில் எழும்  எந்தவொரு பிரச்சினை தொடர்பாகவும் கல்வி செயலாளரின் முடிவே இறுதியானதாக இருக்கும். 
 
பேராசிரியர் கே. கபில சி. கே. பெரேரா. 
செயலாளர். 
கல்வி அமைச்சு.
செயற்பாட்டு பரீட்சைக்குரிய மாணவர்களை உயர் தரத்திற்கு அனுமதித்தல்: வெளியானது சுற்றறிக்கை! செயற்பாட்டு பரீட்சைக்குரிய மாணவர்களை உயர் தரத்திற்கு அனுமதித்தல்: வெளியானது சுற்றறிக்கை! Reviewed by Irumbu Thirai News on September 28, 2021 Rating: 5

வரலாற்றில் முதற் தடவையாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் பதவிக்கு விண்ணப்பம் கோர தீர்மானம்

September 28, 2021
 

இலங்கை பரீட்சைத் திணைக்களத்தின் ஆணையாளர் பதவிக்கு இதுவரை காலமும் சேவை அனுபவம் மற்றும் நிர்வாக சேவையின் சிரேஷ்டத்துவம் அடிப்படையில்தான் நியமனம் இடம்பெற்றது. 
 
ஆனால் பரீட்சை திணைக்கள வரலாற்றிலேயே முதல் தடவையாக 
 
விண்ணப்பம் கோரல் மூலம் குறித்த பதவிக்கு நியமனம் வழங்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. 
 
தற்போதைய நிலையில் குறித்த பதவிக்காக பொருத்தமான தேர்ச்சி மட்டத்தை கொண்டிருப்பவர்கள் கல்வி அமைச்சின் நிர்வாக சேவையில் இல்லை என்பதனால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக அறியமுடிகிறது. 
 
இதற்கான விண்ணப்பங்கள் விரைவில் கோரப்படும் என கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார். 
 
முன்னாள் கல்வி அமைச்சர் ரிச்சர்ட் பத்திரனவின் காலத்தில் மாத்திரமே குறித்த பதவிக்கு வெளி நபர் ஒருவர் நியமிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 
 
இது தொடர்பாக வெளிவந்த பத்திரிகை செய்தியையும் கீழே காணலாம்.

 
வரலாற்றில் முதற் தடவையாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் பதவிக்கு விண்ணப்பம் கோர தீர்மானம் வரலாற்றில் முதற் தடவையாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் பதவிக்கு விண்ணப்பம் கோர தீர்மானம் Reviewed by Irumbu Thirai News on September 28, 2021 Rating: 5

பாடசாலைகள் ஆரம்பித்தால் விடுமுறை இல்லை: - கல்வி அமைச்சு

September 28, 2021
 

அக்டோபர் மாதத்திலிருந்து கட்டங்கட்டமாக பாடசாலைகள் ஆரம்பிக்கப்படும். அவ்வாறு பாடசாலைகள் ஆரம்பித்தால் தவணை விடுமுறை வழங்கப்படமாட்டாது என கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார். 
 
இதுதொடர்பாக இன்றைய(28) காலை கதிர் பத்திரிகையில் வெளியான செய்தியைக் கீழே காணலாம்.

 
பாடசாலைகள் ஆரம்பித்தால் விடுமுறை இல்லை: - கல்வி அமைச்சு பாடசாலைகள் ஆரம்பித்தால் விடுமுறை இல்லை: - கல்வி அமைச்சு Reviewed by Irumbu Thirai News on September 28, 2021 Rating: 5

பல்கலைக்கழக வெட்டுப்புள்ளிகள் தொடர்பான அறிவித்தல்!

September 28, 2021
 

நாட்டிலுள்ள பல்கலைக் கழகங்களுக்கு மாணவர்களை அனுமதிக்கும் நோக்கில் அதற்கான வெட்டுப்புள்ளிகள் அடுத்த மாதம் முதல் வாரத்தில் வெளியிடப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார. 
 
கடந்த வருடம் (2020) நடைபெற்ற உயர்தர பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் 

பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பித்த மாணவர்களை இணைத்துக் கொள்ளும் வகையில் இந்த வெட்டுப்புள்ளிகள் வெளியிடப்படுவதாக என அவர் மேலும் தெரிவித்தார்.
பல்கலைக்கழக வெட்டுப்புள்ளிகள் தொடர்பான அறிவித்தல்! பல்கலைக்கழக வெட்டுப்புள்ளிகள் தொடர்பான அறிவித்தல்! Reviewed by Irumbu Thirai News on September 28, 2021 Rating: 5

Diploma in Management - 2021 (Uva Wellassa University)

September 27, 2021
 

Uva Wellassa University 
Diploma in Management 2021/2022 
Offered by the Faculty of Management with the collaboration of the Center for Open and Distance Learning (CODL) 
 
Duration: One Year (2 Semesters) 
 
Medium: English 
 
Lectures: On Saturday 
 
Course Fee: 45,000 LKR (Can be paid in two installments) 
 
Registration Fee : Rs. 1,000.00 
 
Selection Procedure : Through an Interview 
 
Closing Date: 2021-10-22
 
Click the link below for full details and application:
 
Diploma in Management - 2021 (Uva Wellassa University) Diploma in Management - 2021 (Uva Wellassa University) Reviewed by Irumbu Thirai News on September 27, 2021 Rating: 5
Powered by Blogger.