சிவாஜிக்கு Google வழங்கிய கௌரவம்!

October 01, 2021
 

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 93வது பிறந்த தினம் இன்றாகும். அவர் மறைந்தாலும் இந்திய சினிமா வரலாற்றில் அவர் தவிர்க்க முடியாத ஒரு ஆளுமை ஆகும். 
 
அவர் தொடர்பான சில முக்கிய குறிப்புகளை கீழே தருகிறோம். 
 
அவர் முதன் முதலில் நடித்த மேடை நாடகம் ராமாயணம். அதில் சீதையாக நடித்தார். 
 
அவரது முதல் திரைப்படம் பராசக்தி. 1952இல் வெளிவந்தது. 
 
சிவாஜி மற்றும் எம்ஜிஆர் இணைந்து நடித்த ஒரே திரைப்படம் கூண்டுக்கிளி. 
 
1962 இல் அமெரிக்காவுக்கு சிறப்பு விருந்தினராக சென்ற போது நயாகரா மாநகரத்தின் ஒரு நாள் மேயராக அறிவிக்கப்பட்டு கெளரவிக்கப்பட்டார். 
 
எகிப்து ஜனாதிபதி கமால் அப்துல் நாசர் இந்தியாவிற்கு வருகை தந்தபோது அவரை வரவேற்று உபசரிக்க இந்திய அரசால் அனுமதிக்கப்பட்ட ஒரே நபர் சிவாஜி. 
 
தமிழக முன்னேற்ற முன்னணி' என்ற கட்சியை சிவாஜி ஆரம்பித்தார். ஆனால் சினிமாவில் வெற்றி கண்ட இவருக்கு அரசியலில் வெற்றி காண முடியவில்லை. 
 
கலைமாமணி விருது, பத்ம பூஷன், பத்ம விபூஷன், செவாலியே விருது, தாதா சாஹிப் பால்கே விருது உள்ளிட்ட பல விருதுகளை பெற்றுள்ளார் சிவாஜி கணேசன். 
 
சிவாஜி நடிக்க விரும்பிய கதாப்பாத்திரம் எது தெரியுமா? இவருக்கு 'சிவாஜி' என்ற பெயர் கொடுத்த தந்தை பெரியாருடைய வேடம்தான் அது. ஆனால், இறுதிவரை அது நடக்கவில்லை. 
 
சென்னையில் இவரது பெயரில் சாலை, அவருக்கு மணிமண்டபம், சிலை ஆகியவை உண்டு. 
 
இந்த நிலையில் இவரது 93வது பிறந்த தினத்தை முன்னிட்டு அவரை கௌரவிக்கும் முகமாக Google நிறுவனம் டூடுல் (Doodle) வெளியிட்டுள்ளது. இதனை வரைந்தவர் நூபூர் ராஜேஷ் சோக்ஸி என்பவர்.
சிவாஜிக்கு Google வழங்கிய கௌரவம்! சிவாஜிக்கு Google வழங்கிய கௌரவம்! Reviewed by Irumbu Thirai News on October 01, 2021 Rating: 5

பள்ளிவாசல்களில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் தொடர்பான சுற்றுநிறுபம்:

September 30, 2021


ஒக்டோபர் முதலாம் திகதி முதல் 15ம் திகதி வரை பள்ளிவாயல்களில் நடந்து கொள்ள வேண்டிய நடைமுறைகள் தொடர்பாக இலங்கை வக்ப் சபை பின்வரும் தீர்மானங்களை மேற்கொண்டுள்ளது. 
 
1) ஒரே நேரத்தில் அதிகபட்சமாக 25 பேர் மாத்திரமே தனித்து தொழுவதற்காக அனுமதிக்கப்படுவர். 
 
2) சகல பள்ளி வாயில்களிலும் ஜமாத் தொழுகை, ஜும்ஆ தொழுகை, ஜனாஸா தொழுகை, அல்குர்ஆன் மற்றும் நிக்காஹ் மஜ்லிஸ் போன்ற சகல கூட்டு செயற்பாடுகளுக்கும் அனுமதி இல்லை. 
 
3) சுகாதார தரப்பினரின் சகல வழிகாட்டுதல்களையும் வக்ப் சபையின் முன்னைய வழிகாட்டுதல்களையும் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். 
 
4) முகக் கவசம் அணிதல், இடைவெளி பேணல், தொழுகை விரிப்பை கொண்டு செல்லல், வீட்டில் வுழு செய்துவிட்டு செல்வது கட்டாயமாகும். 
 
5) பள்ளிவாசல்களில் வுழு செய்யும் பகுதி, மலசலகூடம் என்பன மூடப்பட்டிருத்தல் வேண்டும். 
 
6) தனிமைப்படுத்தபட்டதாக அல்லது போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள பள்ளிவாசல்கள் மறு அறிவித்தல் வரை தொடர்ந்தும் மூடப்பட்டிருத்தல் வேண்டும். 
 
இது தொடர்பாக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட சுற்றுநிருபத்தை கீழே காணலாம்.

 
பள்ளிவாசல்களில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் தொடர்பான சுற்றுநிறுபம்: பள்ளிவாசல்களில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் தொடர்பான சுற்றுநிறுபம்: Reviewed by Irumbu Thirai News on September 30, 2021 Rating: 5

எதிரியுடன் Hotline சேவையை மீள ஆரம்பிக்கும் வடகொரியா!

September 30, 2021
 

நல்லிணக்கத்திற்கு சாத்தியமான வகையில் தென் கொரியாவுடனான தகவல் தொடர்பாடல் சேவையை மீள புதுப்பிக்க வட கொரிய ஜனாதிபதி கிம் ஜோங் உன் இணக்கம் தெரிவித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. 
 
அந்தவகையில் ஒக்டோபர் மாதம் முதல் இரு நாடுகளுக்குமிடையிலான 
 
Hotline சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளன. 
 
2015 ற்கு பின்னர் இரு நாடுகளுக்குமிடையில் அரச மட்ட நேரடி தொலைபேசி இணைப்பு துண்டிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
எதிரியுடன் Hotline சேவையை மீள ஆரம்பிக்கும் வடகொரியா! எதிரியுடன் Hotline சேவையை மீள ஆரம்பிக்கும் வடகொரியா! Reviewed by Irumbu Thirai News on September 30, 2021 Rating: 5

வீட்டில் படிக்கச் சொல்லி தும்புத்தடியால் தாக்கப்பட்ட மாணவன் மரணம்!

September 30, 2021
 

வீட்டில் படிக்கச் சொல்லி தும்புத்தடியால் தாக்கப்பட்ட மாணவன் வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மரணமான சம்பவம் காலி, மஹமோதர என்ற பகுதியில் இடம்பெற்றுள்ளது. 
 
16 வயதுடைய குறித்த மாணவன் இம்முறை சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ளார். இந்நிலையில் வீட்டில் கற்றல் செயற்பாடுகளை மேற்கொள்ளுமாறு கூறி குறித்த மாணவனின் 

தந்தையால் நேற்று பிற்பகல் வேளை தாக்கப்பட்டுள்ளார். 
 
தும்புத்தடியால் தாக்கப்பட்ட குறித்த மாணவன் மயக்கமடைந்த நிலையில் கராப்பிட்டிய வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மரணமடைந்துள்ளார். இதேவேளை குறித்த மாணவனின் தந்தை காலி பிரதான நீதவான் நீதிமன்றத்தால் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
வீட்டில் படிக்கச் சொல்லி தும்புத்தடியால் தாக்கப்பட்ட மாணவன் மரணம்! வீட்டில் படிக்கச் சொல்லி தும்புத்தடியால் தாக்கப்பட்ட மாணவன் மரணம்! Reviewed by Irumbu Thirai News on September 30, 2021 Rating: 5

நாளை முதல் அமுலாகும் புதிய சுகாதார நடைமுறைகள் (முழு விவரம் தமிழில் இணைப்பு)

September 30, 2021
 

நாளை அதிகாலை 4 மணிக்கு தனிமைப்படுத்தல் ஊரடங்கு நீக்கப்பட்டதும் கடைபிடிக்க வேண்டிய சுகாதார ஒழுங்குமுறைகளை சுகாதார சேவைகள் பணிப்பாளர் இன்று(30) வெளியிட்டுள்ளார். 
 
அவற்றை ஒவ்வொன்றாக கீழே தருகிறோம். 
 
 
(01) வீட்டிலிருந்து வெளியே செல்ல அனுமதிக்கப்பட்டோர்: 
தொழில் நிமித்தம், மருத்துவ தேவை மற்றும் அத்தியாவசிய பொருட்கள் சேவைகளை கொள்வனவு செய்வதற்காக மாத்திரம் வெளியேறலாம். 
 
 
(02) கூட்டங்கள், செயலமர்வுகள், கருத்தரங்குகள்: 
இணையவழியில் நடத்துவதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அவ்வாறு இல்லாவிடின் அக்டோபர் 15 வரை இடத்தில் ஒன்று சேரக்கூடிய நபர்களின் எண்ணிக்கையில் 25 வீதம் நிரம்பும் அளவுக்கு உச்சமாக 25 பேர் வரை சேரலாம். அக்டோபர் 16 முதல் 31 வரை இடத்தில் ஒன்று சேரக்கூடிய நபர்களின் எண்ணிக்கையில் 25 வீதம் நிரம்பும் வகையில் உச்சமாக 50 பேர் வரை சேரலாம். 
 
 
(03) விழாக்கள், கொண்டாட்டங்கள், ஒன்றுகூடல்கள்: 
இவற்றுக்கு வீடுகளிலும் அனுமதி இல்லை. வெளியிடங்களிலும் அனுமதி இல்லை. 
 
 
(04) பொருளாதார மத்திய நிலையங்கள்: 
மொத்த வியாபாரத்திற்காக அனுமதி உண்டு. அதேவேளை பிரதேச குழுக்கள் மற்றும் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரியின் மேற்பார்வையின் கீழ் செயற்படவேண்டும். 
 
 
(05) திறந்த வியாபார நிலையம் / வாராந்த சந்தை: 
பிரதேச குழுக்கள் மற்றும் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரியின் மேற்பார்வையின் கீழ் செயற்பட வேண்டும். 
 
 
(06) Restaurant (dining in): 
அக்டோபர் 15 வரை அனுமதி இல்லை. 16 முதல் 31 வரை மொத்த இருக்கைகளின் 30 வீதம் நிரம்பும் அளவுக்கு உச்சமாக 50 பேர் வரை எடுக்கலாம். புகைத்தல், மதுபானம் என்பவற்றுக்கு தடை. திறந்த வெளியில் நடத்தப்படுவதாக இருந்தால் 60 பேர் வரை அனுமதிக்கலாம். 
 
 
(07) Restaurant (Take away / Delivery):
அனுமதி உண்டு. 
 
 
(08) நடமாடும் வியாபாரம்: 
பிரதேச குழுக்கள் மற்றும் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரியின் மேற்பார்வையின் கீழ் இடம்பெற வேண்டும். 
 
(09) சில்லறை கடை, ஃபார்மசி, சிறப்பு சந்தை (Super market), வீட்டுத் தளபாடங்கள் நிலையங்கள்: 
அக்டோபர் 15 வரை வியாபார நிலையத்தின் 10 வீதமான இடம் நிரம்பும் அளவுக்கு நபர்களை உள்ளே எடுக்கலாம். உள்ளே எடுக்கக்கூடிய நபர்களின் எண்ணிக்கை வெளியே காட்சிப்படுத்த வேண்டும். அக்டோபர் 16 முதல் 31 வரை இடத்தின் அளவில் 20 வீதம் நிரம்பும் அளவுக்கு நபர்களை உள்ளே எடுக்கலாம். 
 
 
(10) வங்கி மற்றும் நிதி நிறுவனங்கள்: 
5 பேர் வரை மாத்திரமே உள்ளே அனுமதிக்கலாம் ஏனையவர்கள் இடைவெளி விட்டு வெளியே நிற்க வேண்டும். 
 
 
(11) கட்டுமான பணிகள்: 
சுகாதார வழிகாட்டல்களைப் பின்பற்றி மேற்கொள்ள வேண்டும். 
 
 
(12) விவசாயம்: 
அனுமதி உண்டு. 
 
 
(13) சிகை அலங்கார நிலையங்கள்: 
ஏற்கனவே நேரத்தை ஒதுக்கி செல்ல வேண்டும். 
 
 
(14) பாடசாலைகள்: 
கல்வியமைச்சின் தீர்மானத்திற்கு அமைய முதலாம் கட்டத்திற்குரிய பாடசாலைகளை திறக்கலாம். 
 
 
(15) பராமரிப்பு நிலையங்கள் - Day Care Centres: 
அனுமதி உண்டு 
 
 
(16) பாலர் பாடசாலை: 
பிள்ளைகளின் எண்ணிக்கையில் 50 வீதம் வரை எடுக்கலாம். 

 
(17) பல்கலைக்கழகம் உட்பட ஏனைய உயர் கல்வி நிலையங்கள்: 
வழங்கப்பட்ட வழிகாட்டலுக்கு அமைவாக செயற்பாடுகளை ஆரம்பிக்கலாம். (இணையவழி முறைமைகளுக்கு முக்கியம் அளிக்கவேண்டும்) 
 
 
(18) தொழில்சார் பயிற்சி நிலையங்கள்: 
50 வீதமான நபர்கள் மாத்திரம் அனுமதிக்கப்படலாம். 
 
 
(19) நீதிமன்றம்: 
நீதிச் சேவைகள் ஆணைக்குழுவினால் வழங்கப்பட்டுள்ள உத்தரவிற்கு அமையவும் சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்ட வழிகாட்டலுக்கு அமைவாகவும் செயற்படவேண்டும். 
 
 
(20) திரையரங்குகள்: 
அனுமதி இல்லை. 
 
 
(21) உடற்பயிற்சி நிலையம்: 
அக்டோபர் 15 வரை ஐந்து நபர்கள் மாத்திரமே ஒரே நேரத்தில் அனுமதிக்கலாம். ஏனையவர்கள் பாவித்த உபகரணங்களை இன்னொருவர் பாவிக்க கூடாது. அக்டோபர் 16 முதல் 31 வரை 30 வீதம் நிரம்பும் அளவுக்கு உச்சமாக 10 நபர்கள் வரை உள்ளே அனுமதிக்கலாம். 
 
 
(22) விளையாட்டுப் போட்டிகள்: 
அக்டோபர் 15 வரை அனுமதி இல்லை. 16 முதல் 31 வரை தெரிவு செய்யப்பட்ட விளையாட்டுக்களுக்கு மாத்திரம் அனுமதி உண்டு. பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை. 
 
 
(23) உடற்பயிற்சிக்கான நடைபாதை மற்றும் கடற்கரை: 
அனுமதி உண்டு. 
 
 
(24) திருமண நிகழ்வுகள்: 
அக்டோபர் 15 வரை திருமண பதிவுகளுக்கு பத்து பேருக்கு மாத்திரமே அனுமதி. அக்டோபர் 16 முதல் 31 வரை இடத்தின் அளவில் 25 வீதம் நிரம்பும் அளவுக்கு உச்சமாக 50 பேர் வரை அனுமதிக்கலாம். மதுபானங்களுக்கு அனுமதி இல்லை. 

 
(25) மரணச் சடங்கு: 
கொரோனா இல்லாத மரணங்களுக்கு மாத்திரம் அக்டோபர் 15 வரை 10 பேர் வரை செல்லலாம். அக்டோபர் 16 முதல் 31 வரை 15 பேருக்கு மாத்திரம் அனுமதி உண்டு. 
 
 
(26) மத வழிபாட்டுத் தலங்கள்: 
கூட்டாக இடம்பெறும் வழிபாடுகளுக்கு அனுமதி இல்லை. கூட்டங்களுக்கும் அனுமதி இல்லை. 
 
 
(27) கண்காட்சி மற்றும் சம்மேளனம்: 
அனுமதி இல்லை. 
 
 
(28) பரீட்சைகள்: 
சுகாதார வழிகாட்டலுக்கு அமைவாக இடம் பெறவேண்டும். 
 
(29) மேலதிக வகுப்புக்கள்: 
அனுமதி இல்லை. 
 
(30) கைத்தொழில் நடவடிக்கை: 
சுகாதார வழிகாட்டலுக்கு அமைவாக இடம் பெறவேண்டும்.
நாளை முதல் அமுலாகும் புதிய சுகாதார நடைமுறைகள் (முழு விவரம் தமிழில் இணைப்பு) நாளை முதல் அமுலாகும் புதிய சுகாதார நடைமுறைகள் (முழு விவரம் தமிழில் இணைப்பு) Reviewed by Irumbu Thirai News on September 30, 2021 Rating: 5

சா.தர பரீட்சை பெறுபேறுகள் இடைநிறுத்தப்பட்டோர்!

September 30, 2021

 


2020 ம் வருடத்திற்குரிய சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்பட்டிருந்தாலும் பரீட்சைக்கு தோற்றிய 207 பரீட்சார்த்திகளின் பெறுபேறுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

 

இது தொடர்பில் பரீட்சைகள் ஆணையாளர் சனத் பூஜித்த கருத்து தெரிவிக்கையில், 

 

இறுதியாக இடம்பெற்ற சாதாரண தர பரீட்சை தொடர்பாக 4,174 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றிருந்தன. அதில் விசாரணைகளை மேற்கொண்டதன் பின்னர் 3,967 பரீட்சார்த்திகளின் பரீட்சை பெறுபேறுகளை வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டது. 207 பரீட்சார்த்திகளின் பெறுபேறுகள் நிறுத்தப்பட்டுள்ளன. இதில் உரிய பரீட்சார்த்திகளுக்கு பதிலாக வேறு ஒருவர் பரீட்சைக்குத் தோற்றியது தொடர்பாக 06 நிகழ்வுகள் பதிவாகியுள்ளன. 

 

மேலும் கையெழுத்து மாற்றம், விடைத்தாள் மாற்றம், கையடக்கத் தொலைபேசியை வைத்திருத்தல் மற்றும் ஒரே மாதிரியான விடைகள் போன்ற விடயங்கள் காரணமாக குறித்த பெறுபேறுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன. இந்த விடயம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு அது தொடர்பான மேலதிக நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் தெரிவித்தார். 

 

மேலும் பெறுபேறு மீளாய்வு தொடர்பாக விண்ணப்பம் கோரல் உரிய நேரத்தில் அறிவிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

சா.தர பரீட்சை பெறுபேறுகள் இடைநிறுத்தப்பட்டோர்! சா.தர பரீட்சை பெறுபேறுகள் இடைநிறுத்தப்பட்டோர்! Reviewed by Irumbu Thirai News on September 30, 2021 Rating: 5

விடைத்தாள் மதிப்பீட்டுக்கான கொடுப்பனவுகள்: முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள்!

September 30, 2021
 

2020 ஆம் வருடத்திற்குரிய சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்பட்டாலும் அதற்காக விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகளை மேற்கொண்டவர்களுக்கான கொடுப்பனவுகள் இதுவரையில் கிடைக்கப் பெறவில்லை என இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது. 
 
குறித்த சங்கத்தின் செயலாளர் மகிந்த ஜயசிங்க இது தொடர்பில் தெரிவிக்கையில், 
 
கொரோனா பரவலுக்கு மத்தியிலும் விடைத்தாள் திருத்தும் பணிகளை மேற்கொண்டிருந்தனர். அவர்களுக்குரிய சுகாதார வசதிகளும் ஒழுங்கான முறையில் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டிருக்கவில்லை. இந்தநிலையிலேயே அவர்களுக்கான கொடுப்பனவு இன்னும் வழங்கப்படவில்லை என அவர் குற்றம் சாட்டினார்.
விடைத்தாள் மதிப்பீட்டுக்கான கொடுப்பனவுகள்: முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள்! விடைத்தாள் மதிப்பீட்டுக்கான கொடுப்பனவுகள்: முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள்! Reviewed by Irumbu Thirai News on September 30, 2021 Rating: 5

ஊரடங்கு நீக்கம்: வெளியானது அறிவித்தல்!

September 29, 2021
 

தற்போது நடைமுறையில் இருக்கும் தனிமைப்படுத்தல் ஊரடங்கை எதிர்வரும் ஒக்டோபர் முதலாம் திகதி  அதிகாலை 4:00 மணியுடன் நீக்க ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளதாக ராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.  
 
புதிய கட்டுப்பாடுகள் மற்றும் சுகாதார வழிகாட்டல்கள் என்பன பின்னர் அறிவிக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
ஊரடங்கு நீக்கம்: வெளியானது அறிவித்தல்! ஊரடங்கு நீக்கம்: வெளியானது அறிவித்தல்! Reviewed by Irumbu Thirai News on September 29, 2021 Rating: 5

மாணவர்களுக்கு தற்போது காணப்படும் தொலைக் கல்வி முறைகளும் அதைப் பெற்றுக் கொள்ளும் வழிகளும் (முழுமையான வழிகாட்டல்)

September 29, 2021
 

தற்போதைய நிலையில் பாடசாலை மாணவர்களுக்கு காணப்படுகின்ற தொலைக்கல்வி வசதி வாய்ப்புகளும் அது தொடர்பான சேவைகளைப் பெற்றுக்கொள்ளும் முறைகளையும் இங்கே தருகிறோம். 
 
(01) "ஈ-தக்சலாவ (e- thaksalawa)" கற்றல் முகாமைத்துவ முறைமை: 
 
இணையவழி ஊடாக செயற்படுத்தக்கூடிய தேசிய தொலைக் கல்வி செயற்திட்ட முறையாக இது காணப்படுகிறது. 
 
இதில் தரம் 1 - 13 வரை சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கில மொழி மூலங்களில் பாட உள்ளடக்கங்கள் இணைக்கப்பட்டுள்ளன. 
 
இது மாத்திரமன்றி பாடநூல்கள், ஆசிரியர் அறிவுரைப்பு வழிகாட்டி, கடந்தகால வினாப்பத்திரங்கள், நிகழ்நிலை(Online) வினாக்கள், மீட்டல் பயிற்சிகள், மாதிரி வினாத்தாள்கள், செயலட்டைகள் போன்றனவும் முடியுமானவரை இணைக்கப்பட்டுள்ளன. 
 
இதுவரை சுமார் ஒரு லட்சம் பாடப்பொருள் உள்ளடக்கங்கள் மற்றும் 65,000 பாடங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. இதற்கு மேலதிகமாக ஈ-நூலகம், அழகியல் அம்சங்கள், கல்விசார் விளையாட்டுக்கள் உள்ளிட்ட பல அம்சங்கள் அடங்கிய இந்த முறைமை அடிக்கடி இற்றைப்படுத்தப்படும் (Update)  முறைமையாகவும் காணப்படுகிறது. 
 
மேலதிகமாக ஆரோக்கியம் மற்றும் போசாக்கு தொடர்பாக மாணவர்களை அறிவுறுத்தும் இணையவழி பாடத்திட்டம் ஒன்றும் சைபர் பாதுகாப்பு தொடர்பான இணைய வழி பாடத்திட்டம் ஒன்றும் உள்ளடக்கப்பட்டுள்ளன 
 
குறித்த இணையதளத்திற்கு செல்ல கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க
 
 
(02) குருகெதர (Guru Gedara) கல்வி தொலைக்காட்சி அலைவரிசை: 
 
இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தின் "ஐ(Eye)" மற்றும் "நேத்ரா (Nethra)" அலைவரிசைகளின் ஊடாக நாளொன்றுக்கு 16 மணித்தியாலங்கள். சிங்களம் மற்றும் தமிழ் மொழி மூலமாக ஒரு மொழி மூலத்தில் 36 பாடங்கள் என்ற ரீதியில் ஒளிபரப்பப்படுகின்றன. 
 
பொதுவாக திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய தினங்களில் சிங்கள மொழிமூல பாடங்களும் செவ்வாய், வியாழன், சனி மற்றும் ஞாயிறு ஆகிய தினங்களில் தமிழ் மொழிமூல பாடங்களும் கற்பிக்கப்படுகின்றன. (கீழ் குறிப்பிடப்பட்டுள்ள பாடங்களுக்கு மேலதிகமாக ஒளிபரப்பப்படும் பாடங்கள் தொடர்பாக அறிந்து கொள்வதற்காக இதனுடன் தொடர்ச்சியாக இணைந்திருப்பது முக்கியமாகும்.) 
 
அந்த வகையில், 
 
(1) ஆரம்ப பிரிவின் 3 - 5 வரையான தரங்களுக்காக தாய்மொழி, கணிதம் மற்றும் சுற்றாடல் போன்ற பாடங்களும், 
 
(11) 6 - 11 வரையான தரங்களுக்காக கணிதம், விஞ்ஞானம், தாய்மொழி (சிங்களம் / தமிழ்), வரலாறு, ஆங்கிலம், சமயம், தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பம், குடியுரிமைக்கல்வி, புவியியல், கலை மற்றும் நாடகக் கலை, அழகியல், நடனம் போன்ற பாடங்களும், 
 
(111) 12 - 13 வரையான தரங்களுக்கு ஒருங்கிணைந்த கணிதம், உயிரியல், இரசாயனவியல், பௌதீகவியல், விவசாயம், பொருளாதாரம், கணக்கியல், வணிகக் கற்கைகள், புவியியல், சிங்களம்,  தமிழ், அரசியல், உயிர் முறைமைகள் தொழில்நுட்பவியல், பொறியியல் தொழில்நுட்பவியல், தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பம், நாடகமும் அரங்கியலும், சித்திரம் தர்க்கம் மற்றும் நடனம் போன்ற பாடங்களையும் சென்று பார்வையிடலாம். 
 
குருகெதர நேர அட்டவணையை பின்வரும் லிங்குகளில் சென்று பார்வையிடலாம்.
 
 
ரூபவாஹினி குருகெதர நிகழ்ச்சிகளை ரூபவாஹினி ஒளிபரப்புக்கு பின்னர் பின்வரும் ஊடகங்கள் மூலமாகவும் பார்வையிடலாம்: 
 
(1) தேசிய கல்வி நிறுவனத்தின் Channel NIE YouTube அலைவரிசை: 
 
(11) ஈ - தக்சலாவ கற்றல் முகாமைத்துவ முறைமை. 
 
(111) நெனச கல்வி செயற்திட்டம் மூலமாக 2 டயலொக் அலைவரிசைகளாக (Dialog Satellite Channel) செயல்படும் நெனச சிங்கள மற்றும் நெனச தமிழ் போன்ற இரண்டு கல்வி அலைவரிசைகள். 
 
 
(03) இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் உள்ளூர் வானொலி சேவையினால் ஒலிபரப்பப்படும் கல்விசார் நிகழ்ச்சிகள்: 
 
கீழே குறிப்பிடப்பட்டுள்ள உள்ளூர் வானொலி சேவை நான்குடனும் இணைந்து அந்தந்த மாகாண கல்வித் திணைக்களங்களினால்  கல்விசார் நிகழ்ச்சிகள் ஒலிபரப்பப்படுகின்றன. 
 
இதன்கீழ் ஒலிபரப்பப்படும் சகல பாடங்களின் ஒலிநாடாக்கள் ஈ - தக்சலாவ வலைத்தளத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன. அதற்கு மேலதிகமாக இந்த நான்கு சேவைகளின் ஊடாக ஒலிபரப்பப்படும் வானொலி பாடங்களை Radio e-thaksalawa எனும் கையடக்கத் தொலைபேசி செயலி (Mobile App) ஊடாகவும் செவிமடுக்கலாம். 
பிராந்திய வானொலிச் சேவைகளையும் அதன் அலைவரிசைகளையும் கீழே காணலாம்:

 

 
 
(04) மாகாண கல்வித் திணைக்களத்தினால் மற்றும் வலய மட்டத்தில் தயாரிக்கப்பட்ட கற்றல் உள்ளடக்கம்: 
 
இதற்கு மேலதிகமாக மாகாண கல்வித் திணைக்களத்தினால் மற்றும் வலய மட்டத்தில் கற்றல் உள்ளடக்கங்கள் தயாரிக்கப்பட்டிருப்பதுடன் அவற்றின் இணைப்புகள் சில கீழே தரப்பட்டுள்ளன. 
சப்ரகமுவ: https://enenapiyasa.lk/index-tm.html
வடமேல்:  http://nwpedu.lk/ 
வடமத்திய: https://www.edncp.lk/ht/index.php 
வடக்கு: http://www.edudept.np.gov.lk/
மேல்:  http://www.wpedu.sch.lk/
மத்திய: http://www.centralpedu.sch.lk/
 
 
மேற்படி அனைத்து வலைத்தளங்களிலும் பண்புத் தரத்துடன் கூடிய மிகப் பெரிதான உள்ளடக்கங்கள் காணப்படுவதால் அவற்றையும் கற்றலுக்காக மாணவர்கள் பயன்படுத்தலாம்.
----xx----

மாணவர்களுக்கு தற்போது காணப்படும் தொலைக் கல்வி முறைகளும் அதைப் பெற்றுக் கொள்ளும் வழிகளும் (முழுமையான வழிகாட்டல்) மாணவர்களுக்கு தற்போது காணப்படும் தொலைக் கல்வி முறைகளும் அதைப் பெற்றுக் கொள்ளும் வழிகளும் (முழுமையான வழிகாட்டல்) Reviewed by Irumbu Thirai News on September 29, 2021 Rating: 5

27.09.2021 அன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்ட தீர்மானங்கள்

September 29, 2021
 

27.09.2021 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது எடுக்கப்பட்ட தீர்மானங்களை இங்கு தருகிறோம். 
 
இதில், 
 பல முக்கிய தீர்மானங்கள் அடங்கியுள்ளன. 
 
இதன் முழு வடிவத்தைப் பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க. 
 
முன்னைய அமைச்சரவை கூட்ட தீர்மானங்களைப் பார்வையிட...
27.09.2021 அன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்ட தீர்மானங்கள் 27.09.2021 அன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்ட தீர்மானங்கள் Reviewed by Irumbu Thirai News on September 29, 2021 Rating: 5

பாடசாலைகளை திறந்தாலும் கற்பித்தல் ஒரு போதும் நடக்காது - ஜோசப் ஸ்டாலின்

September 29, 2021
 

பாடசாலைகள் மீண்டும் திறக்கப்பட்டாலும் ஆசிரியர்களின் சம்பளப் பிரச்சினை தீரும் வரை அவர்கள் கற்பித்தல் செயற்பாட்டில் பங்கேற்கமாட்டார்கள் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 
 
அதிபர், ஆசிரியர்களின் பிரச்சனையை தீர்க்காமல் கல்வி அமைச்சின் செயலாளர் ஊடக சந்திப்புகளில் முரண்பாடான அறிக்கைகளை கூறி வருவதாகவும் அவர் தெரிவித்தார். 
 
இது தொடர்பான செய்தி இன்றைய(29) தினகரன் பத்திரிகையில் வெளிவந்துள்ளதைக் கீழே காணலாம்.


 
பாடசாலைகளை திறந்தாலும் கற்பித்தல் ஒரு போதும் நடக்காது - ஜோசப் ஸ்டாலின் பாடசாலைகளை திறந்தாலும் கற்பித்தல் ஒரு போதும் நடக்காது - ஜோசப் ஸ்டாலின் Reviewed by Irumbu Thirai News on September 29, 2021 Rating: 5

பல்கலைக்கழகங்களை மீள ஆரம்பித்தல்: UGC யின் அறிவிப்பு!

September 29, 2021
 

பல்கலைக்கழகங்களை மீள ஆரம்பித்தல் தொடர்பாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார். 
 
அதாவது 20 - 30 வயதுக்கு இடைப்பட்டவர்களுக்கான தடுப்பூசி வழங்கும் பணிகளை அரசாங்கம் அடுத்த மாத இறுதிக்குள் நிறைவு செய்யுமாயின் எதிர்வரும் 
 
நவம்பர் மாதம் தொடக்கம் பல்கலைக்கழகங்களை மீள ஆரம்பிக்கலாம் என அவர் தெரிவித்துள்ளார். 
 
மேலும், பல வருடங்களுக்கு பிறகு இம்முறை பல்கலைக்கழகங்களுக்கு உள்வாங்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கை 10,000 ஆல் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய 42,000 மாணவர்கள் தகுதி பெற்றுள்ளனர். எதிர்காலத்திலும் இதுபோன்ற அதிகரிப்பினை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.
பல்கலைக்கழகங்களை மீள ஆரம்பித்தல்: UGC யின் அறிவிப்பு! பல்கலைக்கழகங்களை மீள ஆரம்பித்தல்: UGC யின் அறிவிப்பு! Reviewed by Irumbu Thirai News on September 29, 2021 Rating: 5

சமூக வலைத்தள பிரபலங்களுக்கு சம்மன் அனுப்பிய சவுதி அரேபியா!

September 28, 2021
 

தவறான விளம்பரங்களையும் பதிவுகளையும் வெளியிட்டதாக 5 சமூக வலைத்தள பிரபலங்களுக்கு சவுதி அரேபிய ஊடக ஒழுங்குமுறை அமைப்பு சம்மன் அனுப்பியுள்ளதாக சவுதி அரேபியாவின் அரச செய்தி நிறுவனமான SPA கூறியுள்ளது. 
 
இந்த வருடம் மட்டும் இதுவரை சமூக வலைத்தளங்களில் விதிமுறைகளை மீறியதாக 
 
65 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பதாக சவுதி அரேபிய ஊடக ஒழுங்குமுறை அமைப்பு தெரிவித்துள்ளது. 
 
சமூக வலைத்தளங்களில் விதிமுறைகளை யாராவது மீறினால் அவர்களுக்கு கடுமையான அபராதம் விதிக்கும் வகையில் சட்டங்கள் சவுதியில் இருக்கின்றன.
சமூக வலைத்தள பிரபலங்களுக்கு சம்மன் அனுப்பிய சவுதி அரேபியா! சமூக வலைத்தள பிரபலங்களுக்கு சம்மன் அனுப்பிய சவுதி அரேபியா! Reviewed by Irumbu Thirai News on September 28, 2021 Rating: 5
Powered by Blogger.