பாடசாலைகளை மீள ஆரம்பித்தல்: மாகாண ஆளுநர்களுடன் கல்வியமைச்சர் நடத்திய பேச்சுவார்த்தை!
Irumbu Thirai News
October 03, 2021
பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பாக மாகாண ஆளுநர்களுக்கும் கல்வி அமைச்சருக்கும் இடையில் நேற்றைய (2) தினம் பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளதாக கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த பேச்சுவார்த்தையில் 200கும் குறைவான மாணவர்களைக் கொண்ட ஆரம்பப்பிரிவு பாடசாலைகள் மற்றும் 100க்கும் குறைந்த மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளை உள்ளடக்கி 3000 பாடசாலைகளின் கற்றல் செயற்பாடுகளை ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் மீள ஆரம்பித்தலுக்காக உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பது தொடர்பாகவும் குறித்த கலந்துரையாடலின் போது அவதானம் செலுத்தப்பட்டதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாடசாலைகளை மீள ஆரம்பித்தல்: மாகாண ஆளுநர்களுடன் கல்வியமைச்சர் நடத்திய பேச்சுவார்த்தை!
Reviewed by Irumbu Thirai News
on
October 03, 2021
Rating: