க.பொ.த. (சா/தர)ப் பரீட்சை பெறுபேறு மீளாய்விற்கான (Re-Correction) விண்ணப்பம் - 2020 (2021)
Irumbu Thirai News
October 06, 2021
க.பொ.த. (சா/தர)ப் பரீட்சை - 2020
பெறுபேறு மீளாய்வு செய்தல்
விண்ணப்பப்படிவத்தை நிகழ்நிலை முறையில் பூரணபடுத்துவதற்கான அறிவுறுத்தல்:
பெறுபேற்று மீளாய்வின்போது குறித்து விடைத்தாள் பரிசீலனைக் குழுவின் உறுப்பினர்கள் பலரால் முழுமையாக பரிசீலிக்கப்படும். விடைத்தாள் மீள் ஆய்வின் பெறுபேறாக புள்ளிகளில் அல்லது கிடைக்கப்பெற்ற தரங்களில் அதிகரித்தல் அல்லது குறைவடைதல் ஏற்பட இடமுண்டு என்பதை பரீட்சார்த்திகள் அறிந்திருக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகின்றேன்.
1. குறித்த பரீட்சையின் மீளாய்வு விண்ணப்பங்கள் நிகழ்நிலையில் மாத்திரம் கோரப்படும்.
2. விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் இறுதித் திகதி 2021-10-25 ஆகும்.
3. மீளாய்விற்காக விண்ணப்பிக்கும்போது பரீட்சை திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தின் மூலமாகவோ அல்லது பரீட்சை திணைக்களத்தின் கையடக்கத்தொலைபேசி செயலி (Mobile App) மூலமாகவோ அல்லது www.onlineexams.gov.lk என்ற இணையதளத்தின் மூலமாக விண்ணப்பிக்கலாம்.
4. முறைமையினுல் பிரவேசிக்கும்போது தேசிய அடையாள அட்டை மற்றும் சாதாரண தர பரீட்சை சுட்டெண் என்பவற்றை பயன்படுத்த வேண்டும்.
5. படிவத்தை பூரணபடுத்துவதற்கு முன்பு தொழில்நுட்ப அறிவுறுத்தல்கள், பொது அறிவுறுத்தல்கள் என்பவற்றை வாசித்தல் மற்றும் வீடியோவை பார்த்தல் மூலம் சரியான முறையில் விண்ணப்பங்களை பூரணப்படுத்தல் அவசியமாகும்.
6. ஒரு பாடத்திற்கான மீளாய்வு கட்டணம் 200 ரூபா ஆகும். Credit Card / Debit Card மூலம் அல்லது தபாற்கந்தோரில் பணத்தை செலுத்த வேண்டும்.
7. பணத்தைச் செலுத்திய பின்பு விண்ணப்ப படிவத்தினை PDF முறையில் பதிவிறக்கம் (Download) செய்ய முடிவதோடு விண்ணப்ப படிவத்தை தாங்கள் வைத்திருக்க வேண்டும். பணம் செலுத்திய பின்பு தங்களது கைத்தொலைபேசிக்கு எஸ்எம்எஸ் (SMS) மூலம் தகவல் கிடைக்கப் பெறும்.
8. மீளாய்வு செய்வதற்கான சகல பாடங்களையும் சரியாக பூரணப்படுத்துவது விண்ணப்பதாரரின் கடுமையாவதோடு பணம் செலுத்தப்படாத விண்ணப்ப படிவங்கள் எந்தவித அறிவித்தலும் இன்றி நிராகரிக்கப்படும்.
9. விண்ணப்பத்திற்காக செலுத்தப்பட்ட கட்டணமும் மீள அளிக்கப்படமாட்டாது.
கவனிக்க வேண்டியது:
* நாட்டிலுள்ள கொவிட் நிலைமை காரணமாக இம்முறை பாடசாலை பரீட்சார்த்திகளுக்கு அதிபர் உறுதிப்படுத்துதல் / கையெழுத்து அவசியமில்லை என்பதை அவதானிக்கவும்.
* இம்மீளாய்வு தற்போது வெளியாகியுள்ள பாடங்களுக்கு மாத்திரம் உரியதாகும்.
B. சனத் பூஜித.
பரீட்சை ஆணையாளர் நாயகம்.
அறிவுறுத்தல்களை மும்மொழிகளிலும் பார்வையிட..
வீடியோ வழிகாட்டலைப் பார்வையிட..
தொழிநுட்ப அறிவுறுத்தல்களைப் பார்வையிட..
Online விண்ணப்பத்திற்கு செல்ல..
க.பொ.த. (சா/தர)ப் பரீட்சை பெறுபேறு மீளாய்விற்கான (Re-Correction) விண்ணப்பம் - 2020 (2021)
Reviewed by Irumbu Thirai News
on
October 06, 2021
Rating: