பாடசாலைகளை மீள ஆரம்பிக்க மக்கள் பிரதிநிதிகளின் ஒத்துழைப்பை கோரியுள்ள கல்வி அமைச்சு!
Irumbu Thirai News
October 09, 2021
பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பில் அண்மையில் மாகாண ஆளுநர்களுக்கான கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தின் போது,
பாடசாலைகளை மீள ஆரம்பித்தால் மாணவர்களை பாடசாலைக்கு அனுப்பி வைப்பதற்கான விழிப்பூட்டல்களை செய்வதற்காக
அந்தந்த மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பிரதேசங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் ஒத்துழைப்பை கோருவது எனவும் தீர்மானிக்கப்பட்டது.
அந்த வகையில் வடக்கு மாகாண கல்வி அமைச்சு மாகாணத்தில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களிடம் இது தொடர்பான ஒத்துழைப்பை கோரியுள்ளது.
பாடசாலைகளை மீள ஆரம்பிக்கும் முதல் கட்டத்தின் கீழ் வடக்கு மாகாணத்தில் 680 பாடசாலைகள் எதிர்வரும் 21ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட உள்ளமை குறிப்பிடத்தக்கது.
பாடசாலைகளை மீள ஆரம்பிக்க மக்கள் பிரதிநிதிகளின் ஒத்துழைப்பை கோரியுள்ள கல்வி அமைச்சு!
Reviewed by Irumbu Thirai News
on
October 09, 2021
Rating: