இலங்கை நிர்வாக சேவை (SLAS) வினைத்திறன்காண் பரீட்சை தொடர்பான அறிவித்தல்!

October 10, 2021

 

இலங்கை நிர்வாக சேவையின் அலுவலர்களுக்கான இரண்டாவது வினைத்திறன் காண் தடைப் பரீட்சை - 2019(1) பரீட்சையின் முகாமைத்துவத்திற்கான தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப பாவனை (16) பாடத்திற்குரிய பரீட்சைக்கான அறிவித்தல். 

 
இலங்கை நிர்வாக சேவை (SLAS) வினைத்திறன்காண் பரீட்சை தொடர்பான அறிவித்தல்! இலங்கை நிர்வாக சேவை (SLAS) வினைத்திறன்காண் பரீட்சை தொடர்பான அறிவித்தல்! Reviewed by Irumbu Thirai News on October 10, 2021 Rating: 5

சா.தர மற்றும் உ.தர வகுப்புக்களை மீள ஆரம்பிப்பது தொடர்பில் முரணான கருத்துக்கள்!

October 10, 2021
 

மேல் மாகாணத்தில் உள்ள சில பாடசாலைகளில் இம்மாதம் 21ஆம் திகதி சாதாரணதர மற்றும் உயர்தர வகுப்புக்களை ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகச் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல நேற்றைய தினம் (09) கண்டியில் வைத்து ஊடகங்களுக்க தெரிவித்துள்ளார். 
 
ஆனால் இது தொடர்பில் கருத்து தெரிவித்த கல்வியமைச்சர் தினேஷ் குணவர்தன 

அவ்வாறான தீர்மானமேதும் மேற்கொள்ளப்படவில்லையென தெரிவித்துள்ளார். 
 
4 கட்டங்களாக பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்படவுள்ளன. அதில் முதல் கட்டம் இம்மாதம் 21 ஆம் திகதி ஆரம்பமாகிறது. இந்த முதல் கட்டத்தில் சா.தர மற்றும் உ.தர வகுப்புக்கள் உள்ளடக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சா.தர மற்றும் உ.தர வகுப்புக்களை மீள ஆரம்பிப்பது தொடர்பில் முரணான கருத்துக்கள்! சா.தர மற்றும் உ.தர வகுப்புக்களை மீள ஆரம்பிப்பது தொடர்பில் முரணான கருத்துக்கள்! Reviewed by Irumbu Thirai News on October 10, 2021 Rating: 5

இலங்கை நிர்வாக சேவைக்கான (SLAS-111) ஆட்சேர்ப்பு: நீடிக்கப்பட்டது விண்ணப்ப திகதி!

October 10, 2021
 

இலங்கை நிர்வாக சேவையின் 111 ம் தரத்திற்கு (SLAS-111) ஆட்சேர்ப்பு செய்வதற்கான போட்டிப் பரீட்சை - 2021 ற்கான விண்ணப்ப திகதி நீடிப்பு தொடர்பான அறிவித்தல் 08-10-2021 வர்த்தமானியில் பின்வருமாறு வெளியிடப்பட்டுள்ளது. 

இலக்கம் 2240 கொண்ட 2021-08-06 திகதி உடைய வர்த்தமானி அறிவித்தலில் கூறப்பட்டுள்ள மேற்படி விடயத்திற்கான பரீட்சை சம்பந்தமாக... 
 
* இதற்கான விண்ணப்ப திகதி 2021-10-15 வரை நீடிக்கப்படுகிறது. 
 
* குறித்த வர்த்தமானி அறிவித்தலில் கூறப்பட்டுள்ள ஏனைய விடயங்கள் அவ்வாறே இருக்கும் என்பதோடு இதுவரை விண்ணப்பித்தவர்கள் மீண்டும் விண்ணப்பிக்க தேவையில்லை என இத்தால் அறிவிக்கப்படுகிறது. 
 
குறித்த வர்த்தமானி அறிவித்தலைக் (சிங்களம்) கீழே காணலாம். 

 
 
இலக்கம் 2240 கொண்ட 2021-08-06 திகதி உடைய வர்த்தமானிக்கு செல்ல..
இலங்கை நிர்வாக சேவைக்கான (SLAS-111) ஆட்சேர்ப்பு: நீடிக்கப்பட்டது விண்ணப்ப திகதி! இலங்கை நிர்வாக சேவைக்கான (SLAS-111) ஆட்சேர்ப்பு: நீடிக்கப்பட்டது விண்ணப்ப திகதி! Reviewed by Irumbu Thirai News on October 10, 2021 Rating: 5

இலங்கை கணக்காளர் சேவைக்கான (SLAcS) ஆட்சேர்ப்பு: நீடிக்கப்பட்டது விண்ணப்ப திகதி!

October 10, 2021
 

இலங்கை கணக்காளர் சேவையின் 111 ம் தரத்திற்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான போட்டிப் பரீட்சை - 2021 ற்கான விண்ணப்ப திகதி நீடிப்பு தொடர்பான அறிவித்தல் 08-10-2021 வர்த்தமானியில் பின்வருமாறு வெளியிடப்பட்டுள்ளது. 

இலக்கம் 2239 கொண்ட 2021-07-30 திகதி உடைய வர்த்தமானி அறிவித்தலில் கூறப்பட்டுள்ள மேற்படி விடயத்திற்கான பரீட்சை சம்பந்தமாக... 
 
* இதற்கான விண்ணப்ப திகதி 2021-10-15 வரை நீடிக்கப்படுகிறது. 
 
* குறித்த வர்த்தமானி அறிவித்தலில் கூறப்பட்டுள்ள ஏனைய விடயங்கள் அவ்வாறே இருக்கும் என்பதோடு இதுவரை விண்ணப்பித்தவர்கள் மீண்டும் விண்ணப்பிக்க தேவையில்லை என இத்தால் அறிவிக்கப்படுகிறது. 
 
குறித்த வர்த்தமானி அறிவித்தலைக் (சிங்களம்) கீழே காணலாம்.

 
இலக்கம் 2239 கொண்ட 2021-07-30 திகதி உடைய வர்த்தமானிக்கு செல்ல..
இலங்கை கணக்காளர் சேவைக்கான (SLAcS) ஆட்சேர்ப்பு: நீடிக்கப்பட்டது விண்ணப்ப திகதி! இலங்கை கணக்காளர் சேவைக்கான (SLAcS) ஆட்சேர்ப்பு: நீடிக்கப்பட்டது விண்ணப்ப திகதி! Reviewed by Irumbu Thirai News on October 10, 2021 Rating: 5

இலங்கை கல்வி நிர்வாக சேவை - 111 (SLEAS- 111) ற்கான விண்ணப்ப திகதி தொடர்பான அறிவித்தலும் ஏனைய திருத்தங்களும்!

October 09, 2021
 

இலங்கை கல்வி நிர்வாக சேவை - 111 (SLEAS- 111) ற்கான விண்ணப்ப திகதி நீடிப்பு மற்றும் இன்னும் சில திருத்தங்கள் தொடர்பான அறிவித்தலை 08-10-2021 வர்த்தமானியில் கல்வி அமைச்சு பின்வருமாறு வெளியிட்டுள்ளது. 

இலங்கை கல்வி நிர்வாக சேவையில் 111 தரத்திற்கு ஆட்சேர்ப்பு செய்வது சம்பந்தமாக 2021-06-04 திகதி இலக்கம் 2,231 மற்றும் 2021-08-20 திகதி இலக்கம் 2,242 கொண்ட வர்த்தமானி அறிவித்தல்களில் கூறப்பட்டுள்ள பரீட்சை தொடர்பான அறிவித்தல்களில் பின்வரும் மாற்றங்கள் செய்யப்படுகின்றன. 
 
* விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளும் இறுதித் திகதி 2021-10-22 வரை நீடிக்கப்படுகிறது. 
 
* சம்பந்தப்பட்ட சகல தகைமைகளும் 2021-07-30 திகதிக்கு பூரணப்படுத்தப்பட்டிருத்தல் வேண்டும். 
 
* 2021-09-03 வரை விண்ணப்பங்களை அனுப்பிய விண்ணப்பதாரிகள் மீண்டும் விண்ணப்பத்தை அனுப்ப தேவையில்லை. 
 
 
இது தொடர்பாக 2021-10-08 வெளியான வர்த்தமானி அறிவித்தலைக் கீழே காணலாம். 

 
2021-06-04 திகதி இலக்கம் 2,231 கொண்ட வர்த்தமானி அறிவித்தலைப் பார்வையிட...

2021-08-20 திகதி இலக்கம் 2,242 கொண்ட வர்த்தமானி அறிவித்தலைப் பார்வையிட...

இலங்கை கல்வி நிர்வாக சேவை - 111 (SLEAS- 111) ற்கான விண்ணப்ப திகதி தொடர்பான அறிவித்தலும் ஏனைய திருத்தங்களும்! இலங்கை கல்வி நிர்வாக சேவை - 111 (SLEAS- 111) ற்கான விண்ணப்ப திகதி தொடர்பான அறிவித்தலும் ஏனைய திருத்தங்களும்!   Reviewed by Irumbu Thirai News on October 09, 2021 Rating: 5

பாடசாலைகளை மீள ஆரம்பிக்க மக்கள் பிரதிநிதிகளின் ஒத்துழைப்பை கோரியுள்ள கல்வி அமைச்சு!

October 09, 2021


பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பில் அண்மையில் மாகாண ஆளுநர்களுக்கான கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தின் போது, 
 
பாடசாலைகளை மீள ஆரம்பித்தால் மாணவர்களை பாடசாலைக்கு அனுப்பி வைப்பதற்கான விழிப்பூட்டல்களை செய்வதற்காக 
அந்தந்த மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பிரதேசங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் ஒத்துழைப்பை கோருவது எனவும் தீர்மானிக்கப்பட்டது. 
 
அந்த வகையில் வடக்கு மாகாண கல்வி அமைச்சு மாகாணத்தில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களிடம் இது தொடர்பான ஒத்துழைப்பை கோரியுள்ளது. 
 
பாடசாலைகளை மீள ஆரம்பிக்கும் முதல் கட்டத்தின் கீழ் வடக்கு மாகாணத்தில் 680 பாடசாலைகள் எதிர்வரும் 21ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட உள்ளமை குறிப்பிடத்தக்கது.
பாடசாலைகளை மீள ஆரம்பிக்க மக்கள் பிரதிநிதிகளின் ஒத்துழைப்பை கோரியுள்ள கல்வி அமைச்சு! பாடசாலைகளை மீள ஆரம்பிக்க மக்கள் பிரதிநிதிகளின் ஒத்துழைப்பை கோரியுள்ள கல்வி அமைச்சு! Reviewed by Irumbu Thirai News on October 09, 2021 Rating: 5

08-10-2021 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) / Official Government Gazette released on 08-10-2021

October 09, 2021
 

08-10-2021 அன்று வெளியான அரச வர்த்தமானியை தமிழ், ஆங்கிலம், சிங்களம் ஆகிய மொழிகளில் இங்கு தருகிறோம். 
 
Official Government Gazette released on 08-10-2021 
 
இதில், பல முக்கிய அறிவித்தல்கள் காணப்படுகின்றன. கீழே உள்ள உரிய லிங்கை கிளிக் செய்து உரிய மொழியில் முழுமையாக பார்வையிடுக. 
 
தமிழில் பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க. 
 
ஆங்கிலத்தில் பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க. 
 
சிங்களத்தில் பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க
 
முன்னைய வர்த்தமானி அறிவித்தலுக்கு செல்ல..
08-10-2021 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) / Official Government Gazette released on 08-10-2021 08-10-2021 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) / Official Government Gazette released on 08-10-2021 Reviewed by Irumbu Thirai News on October 09, 2021 Rating: 5

க.பொ.த. (சா/தர)ப் பரீட்சை பெறுபேறு மீளாய்விற்கான (Re-Correction) விண்ணப்பம் - 2020 (2021)

October 06, 2021
 

க.பொ.த. (சா/தர)ப் பரீட்சை - 2020 
பெறுபேறு மீளாய்வு செய்தல் 
 
விண்ணப்பப்படிவத்தை நிகழ்நிலை முறையில் பூரணபடுத்துவதற்கான அறிவுறுத்தல்: 
 
பெறுபேற்று மீளாய்வின்போது குறித்து விடைத்தாள் பரிசீலனைக் குழுவின் உறுப்பினர்கள் பலரால் முழுமையாக பரிசீலிக்கப்படும். விடைத்தாள் மீள் ஆய்வின் பெறுபேறாக புள்ளிகளில் அல்லது கிடைக்கப்பெற்ற தரங்களில் அதிகரித்தல் அல்லது குறைவடைதல் ஏற்பட இடமுண்டு என்பதை பரீட்சார்த்திகள் அறிந்திருக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகின்றேன். 
 
1. குறித்த பரீட்சையின் மீளாய்வு விண்ணப்பங்கள் நிகழ்நிலையில் மாத்திரம் கோரப்படும். 
 
2. விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் இறுதித் திகதி 2021-10-25 ஆகும். 
 
3. மீளாய்விற்காக விண்ணப்பிக்கும்போது பரீட்சை திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தின் மூலமாகவோ அல்லது பரீட்சை திணைக்களத்தின் கையடக்கத்தொலைபேசி செயலி (Mobile App) மூலமாகவோ அல்லது www.onlineexams.gov.lk என்ற இணையதளத்தின் மூலமாக விண்ணப்பிக்கலாம். 
 
4. முறைமையினுல் பிரவேசிக்கும்போது தேசிய அடையாள அட்டை மற்றும் சாதாரண தர பரீட்சை சுட்டெண் என்பவற்றை பயன்படுத்த வேண்டும். 

5. படிவத்தை பூரணபடுத்துவதற்கு முன்பு தொழில்நுட்ப அறிவுறுத்தல்கள், பொது அறிவுறுத்தல்கள் என்பவற்றை வாசித்தல் மற்றும் வீடியோவை பார்த்தல் மூலம் சரியான முறையில் விண்ணப்பங்களை பூரணப்படுத்தல் அவசியமாகும். 
 
6. ஒரு பாடத்திற்கான மீளாய்வு கட்டணம் 200 ரூபா ஆகும். Credit Card / Debit Card மூலம் அல்லது தபாற்கந்தோரில் பணத்தை செலுத்த வேண்டும். 
 
7. பணத்தைச் செலுத்திய பின்பு விண்ணப்ப படிவத்தினை PDF முறையில் பதிவிறக்கம் (Download) செய்ய முடிவதோடு விண்ணப்ப படிவத்தை தாங்கள் வைத்திருக்க வேண்டும். பணம் செலுத்திய பின்பு தங்களது கைத்தொலைபேசிக்கு எஸ்எம்எஸ் (SMS) மூலம் தகவல் கிடைக்கப் பெறும். 
 
8. மீளாய்வு செய்வதற்கான சகல பாடங்களையும் சரியாக பூரணப்படுத்துவது விண்ணப்பதாரரின் கடுமையாவதோடு பணம் செலுத்தப்படாத விண்ணப்ப படிவங்கள் எந்தவித அறிவித்தலும் இன்றி நிராகரிக்கப்படும். 
 
9. விண்ணப்பத்திற்காக செலுத்தப்பட்ட கட்டணமும் மீள அளிக்கப்படமாட்டாது. 
 
கவனிக்க வேண்டியது: 
* நாட்டிலுள்ள கொவிட் நிலைமை காரணமாக இம்முறை பாடசாலை பரீட்சார்த்திகளுக்கு அதிபர் உறுதிப்படுத்துதல் / கையெழுத்து அவசியமில்லை என்பதை அவதானிக்கவும். 
 
* இம்மீளாய்வு தற்போது வெளியாகியுள்ள பாடங்களுக்கு மாத்திரம் உரியதாகும். 
 
B. சனத் பூஜித. 
பரீட்சை ஆணையாளர் நாயகம். 
 
 
 
அறிவுறுத்தல்களை மும்மொழிகளிலும் பார்வையிட..
 
வீடியோ வழிகாட்டலைப் பார்வையிட.. 
 
தொழிநுட்ப அறிவுறுத்தல்களைப் பார்வையிட..

Online விண்ணப்பத்திற்கு செல்ல..

 
க.பொ.த. (சா/தர)ப் பரீட்சை பெறுபேறு மீளாய்விற்கான (Re-Correction) விண்ணப்பம் - 2020 (2021) க.பொ.த. (சா/தர)ப் பரீட்சை பெறுபேறு மீளாய்விற்கான (Re-Correction) விண்ணப்பம் - 2020 (2021) Reviewed by Irumbu Thirai News on October 06, 2021 Rating: 5

முதன்முறையாக ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களுக்கு வழங்கப்படவுள்ள விசேட அடையாள அட்டை:

October 06, 2021
 

இலங்கையில் முதன் முறையாக ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களுக்கு கல்வி அமைச்சின் ஊடாக உத்தியோகபூர்வ அடையாள அட்டைகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். 
 
ஆசிரியர் தினத்தை முன்னிட்டு கல்வி அமைச்சில் இன்று(6) இடம்பெற்ற உத்தியோகபூர்வ அடையாள அட்டை 
 
வழங்கும் நிகழ்வின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 
 
இதுவரையில் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு கல்வி அமைச்சின் மூலமாக உத்தியோகபூர்வ அடையாள அட்டை வழங்கப்பட்டிருக்கவில்லை. தற்போது அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என அவர் மேலும் தெரிவித்தார்.
முதன்முறையாக ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களுக்கு வழங்கப்படவுள்ள விசேட அடையாள அட்டை: முதன்முறையாக ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களுக்கு வழங்கப்படவுள்ள விசேட அடையாள அட்டை: Reviewed by Irumbu Thirai News on October 06, 2021 Rating: 5

21 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் தம்ம பள்ளிகள், பிரிவேனாக்கள் மற்றும் பிக்கு கல்லூரிகள்

October 06, 2021
 

200 மாணவர்களுக்கு குறைந்த
தம்ம பள்ளிகள், பிரிவேனாக்கள் மற்றும் பிக்கு கல்லூரிகளை மீண்டும் ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 21 ஆம் திகதி குறித்த கல்லூரிகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
21 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் தம்ம பள்ளிகள், பிரிவேனாக்கள் மற்றும் பிக்கு கல்லூரிகள் 21 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் தம்ம பள்ளிகள், பிரிவேனாக்கள் மற்றும் பிக்கு கல்லூரிகள் Reviewed by Irumbu Thirai News on October 06, 2021 Rating: 5

05-10-2021 அன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்ட தீர்மானங்கள்

October 06, 2021
 

05-10-2021 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது எடுக்கப்பட்ட தீர்மானங்களை இங்கு தருகிறோம். 
இதில், 
பல முக்கிய தீர்மானங்கள் அடங்கியுள்ளன. 
 
இதன் முழு வடிவத்தைப் பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க.
 
முன்னைய அமைச்சரவை கூட்ட தீர்மானங்களைப் பார்வையிட...
05-10-2021 அன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்ட தீர்மானங்கள் 05-10-2021 அன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்ட தீர்மானங்கள் Reviewed by Irumbu Thirai News on October 06, 2021 Rating: 5

பரீட்சை திணைக்களத்தால் 2021 ஒக்டோபர் மாதம் நடத்தப்படும் பரீட்சைகள்

October 05, 2021
 

பரீட்சை திணைக்களத்தால் 2021 ஒக்டோபர் மாதம் நடத்தப்படும் பரீட்சைகளுக்கான நாட்காட்டியை இங்கு தருகிறோம். 
 
Examination calendar for the month of October, 2021 
 
பரீட்சை திணைக்களத்தால் 2021 ஒக்டோபர் மாதம் நடத்தப்படும் பரீட்சைகள் பரீட்சை திணைக்களத்தால் 2021 ஒக்டோபர் மாதம் நடத்தப்படும் பரீட்சைகள் Reviewed by Irumbu Thirai News on October 05, 2021 Rating: 5

பல்கலைக்கழக மாணவர்களுக்கு தடுப்பூசி வழங்குவதற்கான திகதிகளும் முறையும் அறிவிப்பு!

October 04, 2021
 

பல்கலைக்கழக மாணவர்களுக்கு தடுப்பூசி வழங்குவதற்கான திகதிகளை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. 
 
அதாவது இம்மாதம் 7ஆம் மற்றும் 8ஆம் திகதிகளில் தமது வசிப்பிடத்திற்கு அருகில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு சென்று அவர்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
இந்த நடவடிக்கைகள் நிறைவடைந்ததன் பின்னர் பல்கலைக்கழகங்கள் மீள திறப்பது தொடர்பான தீர்மானம் எடுக்கப்படும் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல்கலைக்கழக மாணவர்களுக்கு தடுப்பூசி வழங்குவதற்கான திகதிகளும் முறையும் அறிவிப்பு! பல்கலைக்கழக மாணவர்களுக்கு தடுப்பூசி வழங்குவதற்கான திகதிகளும் முறையும் அறிவிப்பு! Reviewed by Irumbu Thirai News on October 04, 2021 Rating: 5
Powered by Blogger.