அதிபர் ஆசிரியர் தொழிற்சங்கங்களின் முடிவு வெளியானது!

October 13, 2021

அதிபர் ஆசிரியர் தொழிற்சங்கங்களுக்கும் பிரதமருக்கும் இடையிலான பேச்சுவார்த்தை நேற்றையதினம் நடைபெற்றது. 
 
இந்த பேச்சுவார்த்தையை தொடர்ந்து தமது முடிவை தொழிற்சங்கங்களுடன் பேசி நாளைய தினம்(இன்று) அறிவிப்பதாக கூறியிருந்தார்கள். அந்த வகையில் இந்த தொழிற்சங்கங்களின் ஒன்றியத்தின் முடிவு தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
நாம் சுபோதினி அறிக்கையின்படி தீர்வை கோரினோம். ஆனால் அமைச்சரவை உபகுழு வேறு ஒரு தீர்வை தந்தது. அபபடியானால் சுபோதினியின் முதற்கட்டமாக இதை கருத்திற்கொண்டு அதை ஒரே தடவையில் தருமாறு கோரியிருந்தோம். 
 
ஆனால் நேற்றைய பேச்சுவார்த்தையில் அவ்வாறான தீர்வு கிடைக்கவில்லை. 
நேற்று பிரதமருடனான பேச்சுவார்த்தையில் நடந்த விடயங்களை முழுமையாக அறிந்துகொள்ள இங்கே கிளிக் செய்க.
 
எனவே இன்று எமது தொழிற்சங்க ஒன்றியத்தில் அங்கம் வகிக்கும் தொழிற்சங்கங்களுடன் கலந்துரையாடி இந்த தீர்மானம் எடுத்துள்ளோம்.  
 
அதாவது எமது தொழிற்சங்க போராட்டத்தை அவ்வாறே தொடர தீர்மானித்துள்ளோம். எதிர்வரும் 21ஆம் திகதி பாடசாலை ஆரம்பிக்கும் பொழுது பாடசாலைக்குச் செல்வதா இல்லையா என்ற முடிவை இன்னும் ஒருசில தினங்களில் அறிவிப்போம். 
 
நேற்றைய தினம் பேச்சுவார்த்தையின் போதும் ஒருசிலர் எமது கோரிக்கைகள் எல்லாவற்றையும் புறக்கணிக்கும் வகையிலேயே கருத்துக்களை வெளியிட்டனர். இதற்கு பின்னால் யார் செயற்படுகிறார்கள் என எமக்கு புரியவில்லை. 
 
நேற்றைய கூட்டத்தின் போதும் நாம் தெளிவாக சொன்னோம்... அரசாங்கம் தரும் தீர்வை பெற்றுக் கொண்டு செல்வதற்காக நாம் இங்கு வரவில்லை என்று. 
 
ஆசிரியர்களுக்கு சம்பளத்தை அதிகரிக்க 30 பில்லியன் செலவாகும் என்கிறார்கள். இதை விட அதிகமான பணம் அனாவசியமாக செலவழிக்கிறார்கள். கல்விக்காய் செலவழிக்கத் தான் கஷ்டமாக இருக்கிறது. 
 
எவ்வாறாயினும் எமது போராட்டத்தை வெற்றியோடுதான் நிறைவு செய்வோம் என்று இன்றைய ஊடகவியலாளர் சந்திப்பின்போது கருத்துக்களை தெரிவித்தனர்.  
அதிபர் ஆசிரியர் தொழிற்சங்கங்களின் முடிவு வெளியானது! அதிபர் ஆசிரியர் தொழிற்சங்கங்களின் முடிவு வெளியானது! Reviewed by Irumbu Thirai News on October 13, 2021 Rating: 5

11-10-2021 அன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்ட தீர்மானங்கள்

October 12, 2021
 

11-10-2021 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது எடுக்கப்பட்ட தீர்மானங்களை இங்கு தருகிறோம். 
இதில், 
 
பல முக்கிய தீர்மானங்கள் அடங்கியுள்ளன. 
 
இதன் முழு வடிவத்தைப் பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க
 
முன்னைய அமைச்சரவை கூட்ட தீர்மானங்களைப் பார்வையிட...
11-10-2021 அன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்ட தீர்மானங்கள் 11-10-2021 அன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்ட தீர்மானங்கள் Reviewed by Irumbu Thirai News on October 12, 2021 Rating: 5

Vacancy (The Open University of Sri Lanka)

October 12, 2021

Vacancy (The Open University of Sri Lanka) 
 
Post: Software Engineer (Contract Base) 
 
Closing date: 17-10-2021.

 
Vacancy (The Open University of Sri Lanka) Vacancy (The Open University of Sri Lanka) Reviewed by Irumbu Thirai News on October 12, 2021 Rating: 5

பிரதமருடனான சந்திப்பில் நடந்தது என்ன? அதிபர் ஆசிரியர் தொழிற்சங்க நடவடிக்கை முடிவுக்கு வருமா? (முழு விபரம் இணைப்பு)

October 12, 2021

அதிபர் ஆசிரியர் சம்பள முரண்பாடு தொடர்பில் இன்றைய தினம்(12) தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கும் பிரதமருக்கும் இடையிலான சந்திப்பு இடம்பெற்றது. 
 
இந்த சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த தொழிற்சங்க பிரதிநிதிகளின் கருத்துக்களை இங்கு தருகிறோம். 
 
இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் கருத்துத் தெரிவிக்கையில், 
 
இன்று பிரதமருடனான சந்திப்பு நண்பகல் 12:30 மணி அளவில் ஆரம்பித்து சுமார் இரண்டரை மணி நேரத்துக்கும் மேலாக இடம்பெற்றது. இதில் அமைச்சர்கள் சிலரும் அமைச்சுக்களின் அதிகாரிகளும் கலந்து கொண்டனர். 
 
அன்று முதல் இன்று வரை எமது கோரிக்கை என்னவென்றால் அமைச்சரவை உப குழுவின் தீர்வை சுபோதினி அறிக்கையில் ஒரு பகுதியாக எடுத்துக்கொள்ளப்பட்டு அதை ஒரே தடவையில் தர வேண்டும் என்பதாகும். நேற்றைய தினம் இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் மூன்று கட்டங்களாக செலுத்த தீர்மானிக்கப்பட்டிருந்தது. ஆனால் இன்றைய பேச்சுவார்த்தையில் பிரதமர் பல தரப்பினருடன் பேசியபின் கடைசியாக மூன்று கட்டங்களாக தருவதை இரு கட்டங்களாக தருவதாகச் சொன்னார். 
 
அதாவது முதலாவது கட்டம் அடுத்த வருடம் ஜனவரியிலும் இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்டங்கள் 2023 ஜனவரியிலும் தருவதாக தெரிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் இரு கட்டங்களிலும் சமமான அதிகரிப்பு கிடைக்காது. முதலாம் கட்டத்தில் மூன்றில் ஒரு (1/3) பங்கு அதிகரிப்பும் இரண்டாம் கட்டத்தின் போது மூன்றில் இரண்டு (2/3) பங்கு அதிகரிப்பும் கிடைக்கும். 
 
இது தொடர்பில் நாம் எமது முடிவை அறிவிக்கவில்லை. எமது தொழிற்சங்க ஒன்றியத்தில் அங்கம்வகிக்கும் சகல தொழிற்சங்கங்களுடனும் நாளைய தினம் பேச்சு வார்த்தை நடத்தி நாளையதினம் முடிவு அறிவிக்கப்படும். அதுவரை எமது தொழிற்சங்க நடவடிக்கைகள் அவ்வாறே தொடரும் என தெரிவித்தார். 
 
 
இது தொடர்பில் இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் பொதுச்செயலாளர் மஹிந்த ஜெயசிங்க கருத்து தெரிவிக்கையில், 
 
இன்று பேச்சுவார்த்தைக்கு பகல் 12:00 மணிக்கு நாம் அழைக்கப்பட்டிருந்தோம். அந்த வகையில் 12:30க்கு பேச்சுவார்த்தை தொடங்கி சுமார் 03 மணித்தியாலம் வரையில் நீடித்தது. 24 வருடங்களாக எமக்கு மறுக்கப்பட்டிருந்த சம்பள முரண்பாடு தொடர்பில் நாம் பேச்சுவார்த்தை நடத்தினோம். 
 
அமைச்சரவை உப குழுவின் சிபாரிசை 3 கட்டங்களாக வழங்க நேற்றைய அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டிருந்தது. ஆனால் நாம் அவர்களுக்கு தொடர்ச்சியாக சொன்னோம் அமைச்சரவை கூட்டத்தின் தீர்மானத்தை அவ்வாறே ஏற்றுக்கொள்வதென்றால் நாம் இந்த பேச்சுவார்த்தைக்கு வந்ததில் எந்த அர்த்தமும் இல்லை என்று சொன்னோம். நாம் தொடர்ச்சியாக கூறினோம் இது ஒரே தடவையில் தரப்பட வேண்டுமென்று. 
 
ஆனால் இது தொடர்பில் பிரதமர், கல்வி அமைச்சர், கல்வி அமைச்சின் அதிகாரிகள், நிதி அமைச்சின் அதிகாரிகள், பிரதமர் அலுவலக அதிகாரிகள் போன்ற சகல தரப்பினரும் கலந்துரையாடி இறுதியாக முதலாம் கட்டத்தை 2022 ஜனவரியிலும் இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்டங்களை 2023 ஜனவரியிலும் தருவதாகச் சொன்னார்கள். 
 
இதற்கு ஆசிரியர் அதிபர் தொழிற்சங்க சம்மேளனம் என்ற வகையில் ஆதரவையோ எதிர்ப்பையோ நாம் தெரிவிக்கவில்லை. இது தொடர்பிலான முடிவு ஏனைய தொழிற்சங்கங்களுடனும் கலந்துரையாடி நாளைய தினம் எடுக்கப்படும். அதுவரை எமது தொழிற்சங்க போராட்டம் அவ்வாறே தொடரும். அதில் எந்த மாற்றமும் இல்லை. 
 
நாம் ஒரே தடவையில் தர வேண்டும் என்று கோரிய போது, அதற்கான நிதி வசதியோ பொருளாதார நிலையோ தற்போது இல்லை என அரச தரப்பில் தெரிவிக்கப்பட்டது. விசேடமாக நிதியமைச்சின் அதிகாரிகள் இந்த முறை வரவு செலவுத் திட்டத்திற்கு மேலும் நிதி ஒதுக்கீடு செய்வதற்கு எந்த வகையிலும் முடியாத நிலை காணப்படுகிறது என தெரிவித்தனர். 
 
எனவே இந்த சகல நிலைமை தொடர்பாகவும் நாம் விரிவாக கலந்துரையாட வேண்டும். அவ்வாறு கலந்துரையாடி எமது தொழிற்சங்க நடவடிக்கையின் எதிர்காலம் பற்றி நாளைய தினம் நாம் தீர்மானம் எடுப்போம் என தெரிவித்தார்.
பிரதமருடனான சந்திப்பில் நடந்தது என்ன? அதிபர் ஆசிரியர் தொழிற்சங்க நடவடிக்கை முடிவுக்கு வருமா? (முழு விபரம் இணைப்பு) பிரதமருடனான சந்திப்பில் நடந்தது என்ன? அதிபர் ஆசிரியர் தொழிற்சங்க நடவடிக்கை முடிவுக்கு வருமா? (முழு விபரம் இணைப்பு) Reviewed by Irumbu Thirai News on October 12, 2021 Rating: 5

அதிபர் ஆசிரியர் தொழிற்சங்கங்களுக்கும் பிரதமருக்கும் இடையிலான பேச்சுவார்த்தை பிற்போடப்பட்டது!

October 10, 2021
 

நாளைய தினம் (11) நடைபெறவிருந்த அதிபர் ஆசிரியர் தொழிற்சங்கங்களுக்கும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை பிற்போடப்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 
 
எவ்வாறாயினும் தமது தொழிற்சங்க போராட்டம் தொடரும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அதிபர் ஆசிரியர் தொழிற்சங்கங்களுக்கும் பிரதமருக்கும் இடையிலான பேச்சுவார்த்தை பிற்போடப்பட்டது! அதிபர் ஆசிரியர் தொழிற்சங்கங்களுக்கும் பிரதமருக்கும் இடையிலான பேச்சுவார்த்தை பிற்போடப்பட்டது! Reviewed by Irumbu Thirai News on October 10, 2021 Rating: 5

PhD / MPhil Courses (Sabaragamuwa University of Sri Lanka)

October 10, 2021
 

Sabaragamuwa University of Sri Lanka. 
Faculty of graduate studies 
 
Applications are invited for , 
Masterof Philosophy (MPhil) 
Doctor of Philosophy (PhD) 
 
Fees: MPhil - 270,000/- PhD - 370,000/- 
 
Medium: English & Sinhala. 
 
Duration: MPhil - 2 years. PhD - 3 years.
 

 source: Sunday Observer
PhD / MPhil Courses (Sabaragamuwa University of Sri Lanka) PhD / MPhil Courses (Sabaragamuwa University of Sri Lanka) Reviewed by Irumbu Thirai News on October 10, 2021 Rating: 5

அதிபர் ஆசிரியர் தொழிற்சங்கங்களை சந்திக்கும் பிரதமர்!

October 10, 2021
 

அதிபர் ஆசிரியர் சம்பள முரண்பாடு உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து தொழிற்சங்கங்கள் முன்னெடுக்கும் போராட்டம் 90 நாட்களையும் கடந்து செல்கிறது. 
 
இதற்காக பிரதமர் மற்றும் கல்வி அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்தியும் இதுவரை தீர்வு இல்லை. 
 
இந்நிலையில் பிரதமருடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. 
 
நாளை திங்கட்கிழமை(11) இந்த பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நாளைய பேச்சுவார்த்தைகள் மூலம் சாதகமான 
 
முடிவுகள் எட்டப்படலாம் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். 
 
இதேவேளை நாளைய தினம் இடம்பெறும் சந்திப்பை கல்வி அமைச்சின் செயலாளரும் உறுதிப்படுத்தியுள்ளார். பாடசாலைகள் மீள ஆரம்பமானதும் ஆசிரியர்கள் கற்றல் நடவடிக்கைகளை ஆரம்பிப்பார்கள் என உறுதியாக நம்புவதாகவும் கல்வியமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
அதிபர் ஆசிரியர் தொழிற்சங்கங்களை சந்திக்கும் பிரதமர்! அதிபர் ஆசிரியர் தொழிற்சங்கங்களை சந்திக்கும் பிரதமர்! Reviewed by Irumbu Thirai News on October 10, 2021 Rating: 5

நாடளாவிய சேவை உத்தியோகத்தர்களுக்கான இணைய வழி தகவல் தொழில்நுட்பத் தளம் (Online IT system) ஒன்றை அறிமுகப்படுத்தல் - 2021

October 10, 2021
 

தற்போதைய கொவிட் 19 தொற்றுநோய் நிலைமைக்கு மத்தியில் நாடளாவிய சேவைகளிலுள்ள உத்தியோகத்தர்களின் நிர்வாக செயற்பாடுகளை மிகவும் சரியாகவும் வினைத்திறனுடனும் மேற்கொள்வதற்காக புதிய இணையவழி தகவல் தொழில்நுட்ப தொகுதி (Online IT system) ஒன்றை பயன்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. 
 
இத்திட்டத்தின் முதல் கட்டமாக, 

இலங்கை நிர்வாக சேவை உத்தியோகத்தர்களின் நிர்வாக செயற்பாடுகளுக்கான இணைய வழித் தகவல் தொழில்நுட்ப முறையொன்றை அறிமுகப்படுத்துவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. 
 
இதுதொடர்பாக 2021-10-07 திகதி இடப்பட்டு அரச சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் வெளியிடப்பட்ட அறிவித்தலை கீழே காணலாம்.

நாடளாவிய சேவை உத்தியோகத்தர்களுக்கான இணைய வழி தகவல் தொழில்நுட்பத் தளம் (Online IT system) ஒன்றை அறிமுகப்படுத்தல் - 2021 நாடளாவிய சேவை உத்தியோகத்தர்களுக்கான இணைய வழி தகவல் தொழில்நுட்பத் தளம் (Online IT system) ஒன்றை அறிமுகப்படுத்தல் - 2021 Reviewed by Irumbu Thirai News on October 10, 2021 Rating: 5

இலங்கை நிர்வாக சேவை (SLAS) வினைத்திறன்காண் பரீட்சை தொடர்பான அறிவித்தல்!

October 10, 2021

 

இலங்கை நிர்வாக சேவையின் அலுவலர்களுக்கான இரண்டாவது வினைத்திறன் காண் தடைப் பரீட்சை - 2019(1) பரீட்சையின் முகாமைத்துவத்திற்கான தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப பாவனை (16) பாடத்திற்குரிய பரீட்சைக்கான அறிவித்தல். 

 
இலங்கை நிர்வாக சேவை (SLAS) வினைத்திறன்காண் பரீட்சை தொடர்பான அறிவித்தல்! இலங்கை நிர்வாக சேவை (SLAS) வினைத்திறன்காண் பரீட்சை தொடர்பான அறிவித்தல்! Reviewed by Irumbu Thirai News on October 10, 2021 Rating: 5

சா.தர மற்றும் உ.தர வகுப்புக்களை மீள ஆரம்பிப்பது தொடர்பில் முரணான கருத்துக்கள்!

October 10, 2021
 

மேல் மாகாணத்தில் உள்ள சில பாடசாலைகளில் இம்மாதம் 21ஆம் திகதி சாதாரணதர மற்றும் உயர்தர வகுப்புக்களை ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகச் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல நேற்றைய தினம் (09) கண்டியில் வைத்து ஊடகங்களுக்க தெரிவித்துள்ளார். 
 
ஆனால் இது தொடர்பில் கருத்து தெரிவித்த கல்வியமைச்சர் தினேஷ் குணவர்தன 

அவ்வாறான தீர்மானமேதும் மேற்கொள்ளப்படவில்லையென தெரிவித்துள்ளார். 
 
4 கட்டங்களாக பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்படவுள்ளன. அதில் முதல் கட்டம் இம்மாதம் 21 ஆம் திகதி ஆரம்பமாகிறது. இந்த முதல் கட்டத்தில் சா.தர மற்றும் உ.தர வகுப்புக்கள் உள்ளடக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சா.தர மற்றும் உ.தர வகுப்புக்களை மீள ஆரம்பிப்பது தொடர்பில் முரணான கருத்துக்கள்! சா.தர மற்றும் உ.தர வகுப்புக்களை மீள ஆரம்பிப்பது தொடர்பில் முரணான கருத்துக்கள்! Reviewed by Irumbu Thirai News on October 10, 2021 Rating: 5

இலங்கை நிர்வாக சேவைக்கான (SLAS-111) ஆட்சேர்ப்பு: நீடிக்கப்பட்டது விண்ணப்ப திகதி!

October 10, 2021
 

இலங்கை நிர்வாக சேவையின் 111 ம் தரத்திற்கு (SLAS-111) ஆட்சேர்ப்பு செய்வதற்கான போட்டிப் பரீட்சை - 2021 ற்கான விண்ணப்ப திகதி நீடிப்பு தொடர்பான அறிவித்தல் 08-10-2021 வர்த்தமானியில் பின்வருமாறு வெளியிடப்பட்டுள்ளது. 

இலக்கம் 2240 கொண்ட 2021-08-06 திகதி உடைய வர்த்தமானி அறிவித்தலில் கூறப்பட்டுள்ள மேற்படி விடயத்திற்கான பரீட்சை சம்பந்தமாக... 
 
* இதற்கான விண்ணப்ப திகதி 2021-10-15 வரை நீடிக்கப்படுகிறது. 
 
* குறித்த வர்த்தமானி அறிவித்தலில் கூறப்பட்டுள்ள ஏனைய விடயங்கள் அவ்வாறே இருக்கும் என்பதோடு இதுவரை விண்ணப்பித்தவர்கள் மீண்டும் விண்ணப்பிக்க தேவையில்லை என இத்தால் அறிவிக்கப்படுகிறது. 
 
குறித்த வர்த்தமானி அறிவித்தலைக் (சிங்களம்) கீழே காணலாம். 

 
 
இலக்கம் 2240 கொண்ட 2021-08-06 திகதி உடைய வர்த்தமானிக்கு செல்ல..
இலங்கை நிர்வாக சேவைக்கான (SLAS-111) ஆட்சேர்ப்பு: நீடிக்கப்பட்டது விண்ணப்ப திகதி! இலங்கை நிர்வாக சேவைக்கான (SLAS-111) ஆட்சேர்ப்பு: நீடிக்கப்பட்டது விண்ணப்ப திகதி! Reviewed by Irumbu Thirai News on October 10, 2021 Rating: 5

இலங்கை கணக்காளர் சேவைக்கான (SLAcS) ஆட்சேர்ப்பு: நீடிக்கப்பட்டது விண்ணப்ப திகதி!

October 10, 2021
 

இலங்கை கணக்காளர் சேவையின் 111 ம் தரத்திற்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான போட்டிப் பரீட்சை - 2021 ற்கான விண்ணப்ப திகதி நீடிப்பு தொடர்பான அறிவித்தல் 08-10-2021 வர்த்தமானியில் பின்வருமாறு வெளியிடப்பட்டுள்ளது. 

இலக்கம் 2239 கொண்ட 2021-07-30 திகதி உடைய வர்த்தமானி அறிவித்தலில் கூறப்பட்டுள்ள மேற்படி விடயத்திற்கான பரீட்சை சம்பந்தமாக... 
 
* இதற்கான விண்ணப்ப திகதி 2021-10-15 வரை நீடிக்கப்படுகிறது. 
 
* குறித்த வர்த்தமானி அறிவித்தலில் கூறப்பட்டுள்ள ஏனைய விடயங்கள் அவ்வாறே இருக்கும் என்பதோடு இதுவரை விண்ணப்பித்தவர்கள் மீண்டும் விண்ணப்பிக்க தேவையில்லை என இத்தால் அறிவிக்கப்படுகிறது. 
 
குறித்த வர்த்தமானி அறிவித்தலைக் (சிங்களம்) கீழே காணலாம்.

 
இலக்கம் 2239 கொண்ட 2021-07-30 திகதி உடைய வர்த்தமானிக்கு செல்ல..
இலங்கை கணக்காளர் சேவைக்கான (SLAcS) ஆட்சேர்ப்பு: நீடிக்கப்பட்டது விண்ணப்ப திகதி! இலங்கை கணக்காளர் சேவைக்கான (SLAcS) ஆட்சேர்ப்பு: நீடிக்கப்பட்டது விண்ணப்ப திகதி! Reviewed by Irumbu Thirai News on October 10, 2021 Rating: 5

இலங்கை கல்வி நிர்வாக சேவை - 111 (SLEAS- 111) ற்கான விண்ணப்ப திகதி தொடர்பான அறிவித்தலும் ஏனைய திருத்தங்களும்!

October 09, 2021
 

இலங்கை கல்வி நிர்வாக சேவை - 111 (SLEAS- 111) ற்கான விண்ணப்ப திகதி நீடிப்பு மற்றும் இன்னும் சில திருத்தங்கள் தொடர்பான அறிவித்தலை 08-10-2021 வர்த்தமானியில் கல்வி அமைச்சு பின்வருமாறு வெளியிட்டுள்ளது. 

இலங்கை கல்வி நிர்வாக சேவையில் 111 தரத்திற்கு ஆட்சேர்ப்பு செய்வது சம்பந்தமாக 2021-06-04 திகதி இலக்கம் 2,231 மற்றும் 2021-08-20 திகதி இலக்கம் 2,242 கொண்ட வர்த்தமானி அறிவித்தல்களில் கூறப்பட்டுள்ள பரீட்சை தொடர்பான அறிவித்தல்களில் பின்வரும் மாற்றங்கள் செய்யப்படுகின்றன. 
 
* விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளும் இறுதித் திகதி 2021-10-22 வரை நீடிக்கப்படுகிறது. 
 
* சம்பந்தப்பட்ட சகல தகைமைகளும் 2021-07-30 திகதிக்கு பூரணப்படுத்தப்பட்டிருத்தல் வேண்டும். 
 
* 2021-09-03 வரை விண்ணப்பங்களை அனுப்பிய விண்ணப்பதாரிகள் மீண்டும் விண்ணப்பத்தை அனுப்ப தேவையில்லை. 
 
 
இது தொடர்பாக 2021-10-08 வெளியான வர்த்தமானி அறிவித்தலைக் கீழே காணலாம். 

 
2021-06-04 திகதி இலக்கம் 2,231 கொண்ட வர்த்தமானி அறிவித்தலைப் பார்வையிட...

2021-08-20 திகதி இலக்கம் 2,242 கொண்ட வர்த்தமானி அறிவித்தலைப் பார்வையிட...

இலங்கை கல்வி நிர்வாக சேவை - 111 (SLEAS- 111) ற்கான விண்ணப்ப திகதி தொடர்பான அறிவித்தலும் ஏனைய திருத்தங்களும்! இலங்கை கல்வி நிர்வாக சேவை - 111 (SLEAS- 111) ற்கான விண்ணப்ப திகதி தொடர்பான அறிவித்தலும் ஏனைய திருத்தங்களும்!   Reviewed by Irumbu Thirai News on October 09, 2021 Rating: 5
Powered by Blogger.