கப்ராலின் கோரிக்கையை நிறைவேற்றிய ஜனாதிபதி! இலங்கையின் 5வது முன்னுரிமை கொண்ட நபராக மாறினார்!
Irumbu Thirai News
October 26, 2021
மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலுக்கு அரசாங்கத்தின் புதிய முன்னுரிமையில் 5வது இடம் வழங்கப்பட்டுள்ளது. அந்த வகையில் அமைச்சரவை அமைச்சரின் அந்தஸ்து அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
5வது இடத்தில்
எதிர்க்கட்சித் தலைவர், அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர், பீல்ட் மார்ஷல் போன்ற பதவிகள் உள்ளமை குறிப்பிடத்தக்கது. தற்போது அதற்கு சமமான அந்தஸ்து கப்ராலுக்கும் வழங்கப்பட்டுள்ளது.
ஆளுநர் பதவியைப் பொறுப்பேற்குமாறு ஜனாதிபதியினால் கோரிக்கை விடுத்த சந்தர்ப்பத்தில் தனக்கு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர் ஒருவருக்குரிய இடம் வழங்கப்பட வேண்டும் என கப்ரால் ஜனாதிபதியிடம் தெரிவித்ததாக ஏற்கனவே செய்திகள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் தனி நபர்களுக்கான முன்னுரிமை அடிப்படையில் முதலாம் இடத்தில் ஜனாதிபதியும் இரண்டாம் இடத்தில் பிரதமரும் மூன்றாம் இடத்தில் சபாநாயகரும் நான்காம் இடத்தில் பிரதம நீதியரசரும் இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் ஒவ்வொரு பதவிகளுக்கும் வழங்குகின்ற முன்னுரிமை வரிசை பட்டியலையும் அது தொடர்பான ஏனைய விபரங்களையும் கீழே காணலாம்.
கப்ராலின் கோரிக்கையை நிறைவேற்றிய ஜனாதிபதி! இலங்கையின் 5வது முன்னுரிமை கொண்ட நபராக மாறினார்!
Reviewed by Irumbu Thirai News
on
October 26, 2021
Rating: