கப்ராலின் கோரிக்கையை நிறைவேற்றிய ஜனாதிபதி! இலங்கையின் 5வது முன்னுரிமை கொண்ட நபராக மாறினார்!

October 26, 2021

மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலுக்கு அரசாங்கத்தின் புதிய முன்னுரிமையில் 5வது இடம் வழங்கப்பட்டுள்ளது. அந்த வகையில் அமைச்சரவை அமைச்சரின் அந்தஸ்து அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. 
 
5வது இடத்தில் எதிர்க்கட்சித் தலைவர், அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர், பீல்ட் மார்ஷல் போன்ற பதவிகள் உள்ளமை குறிப்பிடத்தக்கது. தற்போது அதற்கு சமமான அந்தஸ்து கப்ராலுக்கும் வழங்கப்பட்டுள்ளது. 
 
ஆளுநர் பதவியைப் பொறுப்பேற்குமாறு ஜனாதிபதியினால் கோரிக்கை விடுத்த சந்தர்ப்பத்தில் தனக்கு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர் ஒருவருக்குரிய இடம் வழங்கப்பட வேண்டும் என கப்ரால் ஜனாதிபதியிடம் தெரிவித்ததாக ஏற்கனவே செய்திகள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது. 
 
இலங்கையில் தனி நபர்களுக்கான முன்னுரிமை அடிப்படையில் முதலாம் இடத்தில் ஜனாதிபதியும் இரண்டாம் இடத்தில் பிரதமரும் மூன்றாம் இடத்தில் சபாநாயகரும் நான்காம் இடத்தில் பிரதம நீதியரசரும் இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது. 
 
இலங்கையில் ஒவ்வொரு பதவிகளுக்கும் வழங்குகின்ற முன்னுரிமை வரிசை பட்டியலையும் அது தொடர்பான ஏனைய விபரங்களையும் கீழே காணலாம்.




கப்ராலின் கோரிக்கையை நிறைவேற்றிய ஜனாதிபதி! இலங்கையின் 5வது முன்னுரிமை கொண்ட நபராக மாறினார்! கப்ராலின் கோரிக்கையை நிறைவேற்றிய ஜனாதிபதி! இலங்கையின் 5வது முன்னுரிமை கொண்ட நபராக மாறினார்! Reviewed by Irumbu Thirai News on October 26, 2021 Rating: 5

பாடசாலைகளை மீள ஆரம்பித்தல்: ஆரம்பப் பிரிவுக்கு அறிமுகமான 20 வாரம் கொண்ட புதிய பாடத்திட்டம்! (முழு விபரம் இணைப்பு)

October 24, 2021

Recovery Plan for Learning loss Due to COVIC 19 Pandemic (Grade 1 to 5) 
 
கொவிட் தொற்று நிலைமை காரணமாக பாடசாலை மாணவர்கள் இழந்திருக்கின்ற பாடசாலை காலத்திற்கமைய கலைத் திட்டத்தை நிறைவு செய்வதற்கு பதிலீடான உத்தேச நிகழ்ச்சித்திட்டம் தொடர்பான ஆலோசனைகள். 
 
கொரோனா தொற்று நிலைமை காரணமாக 2020 மற்றும் 2021 ஆம் வருடங்களில் தரம் 1 தொடக்கம் தரம் 5 வரை ஆரம்பக்கல்வி பருவத்தில் கல்வி பயிலும் பிள்ளைகளுக்கான கவனத்திற்கொள்ள வேண்டிய அளவில் கற்றலுக்கான காலம் இழக்கப்பட்டிருக்கின்றமை அவதானிக்கப்பட்டது. அவ்வாறு கற்றல் இழப்பு ஏற்பட்ட காலத்துடன் கல்வி ஆண்டின் இறுதியில் அடுத்த வகுப்பிற்கு கற்றலுக்காக பிரவேசிப்பதற்கான அத்தியாவசியமான கற்றல் உள்ளடக்கத்தை இனங் காணவும் வேண்டியுள்ளது. 
 
இதற்காக முதலாவது இரண்டாவது மற்றும் மூன்றாவது முதன்மை நிலைகளுக்காக ஏற்கனவே இனங்காணப்பட்டுள்ள அத்தியாவசிய கற்றல் எண்ணக்கருவை அடிப்படையாக கொண்டு ஒவ்வொரு வகுப்புகளிலும் இருக்கின்ற மாணவர்களுக்கு அடுத்த வகுப்பிற்கு செல்வதற்கான அத்தியாவசிய கற்றல் உள்ளடக்கத்தை உள்ளடக்கியதான திட்டமொன்று தயாரிக்கப்பட்டுள்ளது. 
 
"பாடசாலைகளை மீள ஆரம்பித்தல் தொடர்பாகவும் பரீட்சை, பாடவிதானத்தை நிறைவு செய்தல், டிசம்பர் விடுமுறை போன்ற பல விடயங்கள் தொடர்பாகவும் கல்வியமைச்சின் செயலாளர் தனியார் தொலைக்காட்சிக்கு வழங்கிய பேட்டியின் தமிழ் வடிவத்தைப் பார்வையிட..."
 
அந்தவகையில் 20 வாரம் கொண்ட கற்றல் கற்பித்தலுக்கான திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. 2020 மற்றும் 2021 ல் இழந்த கற்றல் காலம் 2021 ல் எஞ்சியுள்ள கற்றல் காலம் என்பவற்றைக் கருத்திற்கொண்டு இது தயாரிக்கப்பட்டுள்ளது. பாடசாலையின் தேவைக்கேற்ப இந்த உள்ளடக்கங்களை பயன்படுத்தலாம். 
 
கீழே உள்ள லிங்குகளைக் கிளிக் செய்து உரிய பாட உள்ளடக்கங்களை பெற்றுக் கொள்ளலாம்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
பாடசாலைகளை மீள ஆரம்பித்தல்: ஆரம்பப் பிரிவுக்கு அறிமுகமான 20 வாரம் கொண்ட புதிய பாடத்திட்டம்! (முழு விபரம் இணைப்பு) பாடசாலைகளை மீள ஆரம்பித்தல்: ஆரம்பப் பிரிவுக்கு அறிமுகமான 20 வாரம் கொண்ட புதிய பாடத்திட்டம்! (முழு விபரம் இணைப்பு) Reviewed by Irumbu Thirai News on October 24, 2021 Rating: 5

மாணவர்கள் தடுப்பூசியை வைத்தியசாலைகளிலும் பெறலாம் - சுகாதார அமைச்சு

October 24, 2021

மாணவர்களுக்கான தடுப்பூசிகள் தற்போது வழங்கப்பட்டு வருகின்றன. 
 
இந்நிலையில் பாடசாலைகள் மூலம் தடுப்பூசி பெற முடியாத மாணவர்கள் வைத்தியசாலைகளில் பெற்றுக்கொள்ளலாம் என சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் ஜி. விஜேசூரிய தெரிவித்துள்ளார். 
 
இவ்வாறு பாடசாலைகள் மூலம் தடுப்பூசியை பெற முடியாத மாணவர்கள் சனி ஞாயிறு தினங்களில் வைத்தியசாலைகளில் பெற்றுக்கொள்ளலாம் என அவர் தெரிவித்தார்.
மாணவர்கள் தடுப்பூசியை வைத்தியசாலைகளிலும் பெறலாம் - சுகாதார அமைச்சு மாணவர்கள் தடுப்பூசியை வைத்தியசாலைகளிலும் பெறலாம் - சுகாதார அமைச்சு Reviewed by Irumbu Thirai News on October 24, 2021 Rating: 5

Vacancies (Japan International Cooperation Agency - JICA)

October 23, 2021

Vacancies (Japan International Cooperation Agency - JICA) 
 
Post: 
Administrative Officer. 
Consultant.
 


 Source: Sunday Observer.
Vacancies (Japan International Cooperation Agency - JICA) Vacancies (Japan International Cooperation Agency - JICA) Reviewed by Irumbu Thirai News on October 23, 2021 Rating: 5

கையொப்பமிடாமல் சில ஆசிரியர்கள் பணிக்கு திரும்பியுள்ளனர் - கல்வியமைச்சர்

October 23, 2021

கையொப்பமிடாமல் சில ஆசிரியர்கள் பணிக்கு திரும்பியுள்ளதாக கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். 
 
நேற்று பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 
 
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது, 
 
திட்டமிட்டபடி 98% மான பாடசாலைகளை மீள திறக்க முடிந்தது. 26% ஆன ஆசிரியர்களும் 16% ஆன மாணவர்களும் பாடசாலைக்கு சமூகம் அளித்துள்ளனர். அடுத்த வாரம் ஆசிரியர் மாணவர் வருகை அதிகரிக்கும் என நான் நம்புகிறேன். 
 
மேலதிக வகுப்புக்களை ஆரம்பிப்பதற்கான திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர்களுக்கு தடுப்பூசி வழங்க பெற்றோர்களின் அனுமதி கட்டாயமாக்கப்பட்டுள்ளது...
 
ஆசிரியர்கள் மொடியூலை நிறைவு செய்வதற்கான கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளது...
 
சில ஆசிரியர்கள் கையொப்பமிடாமலும் பணிக்கு திரும்பியுள்ளனர். துரிதமாக பாடசாலைகளைத் திறந்து நாட்டை வழமை நிலைக்கு கொண்டு வருவது முக்கியமாகும். எனவே இதற்கு சகல தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.
கையொப்பமிடாமல் சில ஆசிரியர்கள் பணிக்கு திரும்பியுள்ளனர் - கல்வியமைச்சர் கையொப்பமிடாமல் சில ஆசிரியர்கள் பணிக்கு திரும்பியுள்ளனர் - கல்வியமைச்சர் Reviewed by Irumbu Thirai News on October 23, 2021 Rating: 5

மேலதிக வகுப்புகளை ஆரம்பிப்பதற்கான திகதி அறிவிப்பு!

October 23, 2021

மேலதிக வகுப்புக்களை (ரியுசன்) எதிர்வரும் நவம்பர் 1ம் திகதி முதல் ஆரம்பிக்கப்படும் என அகில இலங்கை நிபுணத்துவ விரிவுரையாளர் சங்கம் தெரிவித்துள்ளது. 
 
இது தொடர்பில் அச்சங்கத்தின் செயலாளர் கமல் பிரியங்கர தெரிவித்ததாவது, 
 
டியூஷன் வகுப்புக்களை ஆரம்பிப்பதற்கான அனுமதியை நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச தந்துள்ளார். அந்தவகையில் சுகாதார வழிகாட்டுதலுக்கு அமைய 100க்கும் குறைவான மாணவர்களைக் கொண்டு நவம்பர் 1ஆம் தேதி முதல் இது ஆரம்பிக்கப்படும். 
 
கடந்த காலங்களில் ஆசிரியர் தொழிற்சங்க வேலைநிறுத்தம் நடைபெற்றாலும் எமது சங்கம் Online மூலம் கற்பித்தல் நடவடிக்கைகளை தொடர்ந்தும் மேற்கொண்டு வருகிறது. எனவே மாணவர்களுக்கு இது ஒரு பிரச்சினையாக அமையவில்லை. 
 
தடுப்பூசி பெறும் மாணவர்களுக்கு பெற்றோரின் அனுமதி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான செய்திகளுக்கு...
 
தற்போது நாடளாவிய ரீதியில் சுமார் ஒரு லட்சம் டியூஷன் ஆசிரியர்கள் இருக்கின்றனர். இது மாத்திரமன்றி சாதாரண தர, உயர்தர, புலமைப்பரிசில் பரீட்சை போன்றவற்றுக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு கூடுதல் நேரம் ஒதுக்கப்பட்டு கற்பிக்கப்பட உள்ளது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
மேலதிக வகுப்புகளை ஆரம்பிப்பதற்கான திகதி அறிவிப்பு! மேலதிக வகுப்புகளை ஆரம்பிப்பதற்கான திகதி அறிவிப்பு! Reviewed by Irumbu Thirai News on October 23, 2021 Rating: 5

மாணவர்களுக்கான தடுப்பூசி தொடர்பில் விதிக்கப்பட்ட நிபந்தனை!

October 23, 2021
மாணவர்களுக்கு தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டம் தற்பொழுது நாடளாவிய ரீதியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 
 
இந்நிலையில் இந்த மாணவர்களுக்கு தடுப்பூசி வழங்கும் பொழுது அவர்களது பெற்றோரின் அனுமதி கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் பாடசாலை செயற்பாடுகள் தொடர்பான மேலதிக செயலாளர் எல்.எம்.பி. தர்மசேன தெரிவித்துள்ளார். 
 
நேற்று(22) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 
 
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது, 
 
சுகாதார அமைச்சின் செயலாளர் மற்றும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆகியோர் கல்வி அமைச்சின் செயலாளர் மற்றும் கல்வி அமைச்சர் ஆகியோருக்கு மாணவர்களுக்கு தடுப்பூசியை வழங்குவது தொடர்பாக அறிவித்துள்ளனர். 
 
அந்த வகையில் இம்முறை தரம் 11 மற்றும் தரம் 12 இல் கற்கும் மாணவர்களுக்கு பைசர் தடுப்பூசி தற்போது வழங்கப்படுகிறது. இம்முறை தரம் 11 இல் இரண்டாவது தடவையாக பரீட்சைக்கு தோற்றுபவர்களும் இதில் உள்ளடங்குவர். 
 
மாகாண கல்விப் பணிப்பாளர், மாகாண சுகாதார பணிப்பாளர் ஆகியோரின் இணக்கப்பாட்டின் அடிப்படையிலேயே தற்போது இந்த வேலைத்திட்டம் நடைபெறுகிறது. 
 
தடுப்பூசி வழங்கும் நிலையங்கள் தொடர்பான தகவல்களை சுகாதார வைத்திய அதிகாரிகளையோ அதிபர்களையோ மற்றும் வலயக்கல்வி காரியாலயம் என்பவற்றையோ தொடர்பு கொள்வதன் மூலம் பெற்றுக் கொள்ளலாம். இது மாத்திரமன்றி மாகாண கல்வித் திணைக்களத்தின் இணையத்தளம் கல்வி அமைச்சின் இணையத்தளம் என்பவற்றிலும் தகவல்களை பெற்றுக் கொள்ளலாம். 
 
மாணவர்களுக்கு தடுப்பூசி வழங்க பெற்றோரின் அனுமதி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதற்காக மாதிரி படிவம் ஒன்றும் வழங்கப்பட்டுள்ளது. அதை நிரப்பி பெற்றோர்கள் கையொப்பமிட்டு வழங்க வேண்டும். 
 
இது மாத்திரமன்றி நீண்ட கால விடுமுறையில் இருந்ததனால் குறித்த மாணவர்கள் சீருடை அணிந்து செல்வதில் சிக்கல்கள் இருக்கலாம். சீருடை அணிய முடியாத அளவுக்கு உடல் நிலையில் மாற்றங்கள் ஏற்பட்டிருக்கலாம். எனவே முடியுமாணவர்கள் சீருடை அணிந்து செல்லலாம். ஏனையவர்கள் பொருத்தமான வேறு ஆடையை அணிந்து செல்லலாம் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
மாணவர்களுக்கான தடுப்பூசி தொடர்பில் விதிக்கப்பட்ட நிபந்தனை! மாணவர்களுக்கான தடுப்பூசி தொடர்பில் விதிக்கப்பட்ட நிபந்தனை! Reviewed by Irumbu Thirai News on October 23, 2021 Rating: 5

நீடிக்கப்பட்டது ஆசிரியர்களுக்கான மொடியூல் (Module) கால எல்லை! (கடிதம் இணைப்பு)

October 23, 2021

ஆசிரியர்களுக்கான மொடியூலைப் (Module) பூர்த்தி செய்வதற்கான கால எல்லை மேலும் ஒரு வருடத்தால் நீடிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. 
 
22-10-2021 திகதி இடப்பட்ட கடிதம் மூலம் இந்த அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. அந்த வகையில் குறிப்பிட்ட கால எல்லை 22-10-2022 வரை நீடிக்கப்பட்டுள்ளது. 
 
ஆசிரியர்களின் வினைத்திறன் தடைதாண்டல் செயற்பாடுகள் (மொடியூல்) இதுவரை நிறைவு செய்யப்படாமல் இருப்பதாலும் அந்த செயற்பாடுகளை வெற்றிகரமாக நிறைவு செய்வதற்காக அரச சேவைகள் ஆணைக்குழுவின் செயலாளர் 06-10-2021 திகதி இடப்பட்ட கடிதம் மூலம் 22-10-2022 வரை கால எல்லையை நீடிக்க அனுமதி அளித்துள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
SLTES-1 அலுவலர்களைப் பதவியில் நியமித்தல் தொடர்பாக கல்வியமைச்சின் அறிவித்தலைப் பார்வையிட... 
 
அதனடிப்படையில் தமது பதவி உயர்வுக்கான தகைமைகளை நிறைவு செய்துள்ள ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு தாமதமின்றி மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதோடு 22-10-2022 ற்கு பின்னர் பதவி உயர்வு பெறும் சகல ஆசிரியர்களும் குறித்த காலப்பகுதிக்குள் தமக்குரிய வினைத்திறன் தடைதாண்டல் செயற்பாடுகளை நிறைவு செய்துகொள்ள வேண்டும். 
 
இது தொடர்பாக கல்வி அமைச்சால் வெளியிடப்பட்ட கடிதத்தைக் கீழே காணலாம். 

நீடிக்கப்பட்டது ஆசிரியர்களுக்கான மொடியூல் (Module) கால எல்லை! (கடிதம் இணைப்பு) நீடிக்கப்பட்டது ஆசிரியர்களுக்கான மொடியூல் (Module)  கால எல்லை! (கடிதம் இணைப்பு) Reviewed by Irumbu Thirai News on October 23, 2021 Rating: 5

இலங்கை ஆசிரியர் கல்வியியலாளர் சேவையின் (SLTES) அலுவலர்களை பதவியில் நியமித்தல் - 2021

October 23, 2021

கல்வி அமைச்சின் கீழ் உள்ள 16 தேசிய கல்வியற் கல்லூரிகள் மற்றும் 06 ஆசிரியர் கல்லூரிகளில் நிலவும் பதவிகளுக்காக இலங்கை ஆசிரியர் கல்வியியலாளர் சேவை தரம் 1 அலுவலர்களை நியமிக்க தகைமை வாய்ந்த ஆர்வலர்களிடமிருந்து அரசாங்க சேவை ஆணைக்குழுவின் கல்வி சேவைகள் குழுவின் உத்தரவின்படி விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. 
 
விண்ணப்ப முடிவு திகதி: 05-11-2021. 
 
முழுமையான விபரங்களை கீழே காணலாம்:

இலங்கை ஆசிரியர் கல்வியியலாளர் சேவையின் (SLTES) அலுவலர்களை பதவியில் நியமித்தல் - 2021 இலங்கை ஆசிரியர் கல்வியியலாளர் சேவையின் (SLTES) அலுவலர்களை பதவியில் நியமித்தல் - 2021 Reviewed by Irumbu Thirai News on October 23, 2021 Rating: 5

22-10-2021 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) / Official Government Gazette released on 22-10-2021

October 23, 2021
22-10-2021 அன்று வெளியான அரச வர்த்தமானியை தமிழ், ஆங்கிலம், சிங்களம் ஆகிய மொழிகளில் இங்கு தருகிறோம். 
 
Official Government Gazette released on 22-10-2021 
 
இதில், 
பல முக்கிய அறிவித்தல்கள் காணப்படுகின்றன. கீழே உள்ள உரிய லிங்கை கிளிக் செய்து உரிய மொழியில் முழுமையாக பார்வையிடுக. 
 
தமிழில் பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க. 
 
ஆங்கிலத்தில் பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க. 
 
சிங்களத்தில் பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க.
 
 
முன்னைய வர்த்தமானி அறிவித்தலுக்கு செல்ல..
22-10-2021 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) / Official Government Gazette released on 22-10-2021 22-10-2021 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) / Official Government Gazette released on 22-10-2021 Reviewed by Irumbu Thirai News on October 23, 2021 Rating: 5

Open University LLB Selection Test Date Announced / திறந்த பல்கலைக்கழக LLB பட்டப்படிப்பு தெரிவுப் பரீட்சைக்கான திகதி

October 23, 2021

இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தினால் நடத்தப்படும் சட்டமானி பட்டப்படிப்புக்கான தெரிவுப் பரீட்சையின் திகதி அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
அந்தவகையில் 14-11-2021 அன்று இந்த பரீட்சை நடத்தப்படும் என இலங்கை பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது. நாட்டிலுள்ள 09 மாகாணங்களில் பிரதான நகரங்களில் இந்தப் பரீட்சை நடைபெறவுள்ளது. 
 
குறித்த பரீட்சையானது கொரோனா பரவல் காரணமாக ஏற்கனவே ஒத்திவைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 
 
பரீட்சைத் திணைக்களத்தினால் நவம்பர் மாதம் நடாத்தப்படவுள்ள பரீட்சைகளின் விவரங்களை மும்மொழிகளிலும் பார்வையிட இங்கே கிளிக் செய்க.
Open University LLB Selection Test Date Announced / திறந்த பல்கலைக்கழக LLB பட்டப்படிப்பு தெரிவுப் பரீட்சைக்கான திகதி Open University LLB Selection Test Date Announced / திறந்த பல்கலைக்கழக LLB பட்டப்படிப்பு தெரிவுப் பரீட்சைக்கான திகதி Reviewed by Irumbu Thirai News on October 23, 2021 Rating: 5

சகல பாடசாலைகளிலும் ஆரம்பப்பிரிவு ஆரம்பம்! திகதி அறிவிப்பு!

October 22, 2021
 

சகல பாடசாலைகளிலும் ஆரம்ப பிரிவை ஆரம்பிப்பதற்கான திகதியை கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. 
 
அந்தவகையில் எதிர்வரும் திங்கட்கிழமை அதாவது 25 ஆம் திகதி சகல பாடசாலைகளிலும் ஆரம்பப்பிரிவை ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வியமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார். 
 
கொரோனா காரணமாக கடந்த ஆறு மாதமாக மூடப்பட்ட பாடசாலைகளை நான்கு கட்டங்களில் மீள ஆரம்பிப்பதற்கான பரிந்துரைகளை சுகாதார அமைச்சு கல்வி அமைச்சுக்கு வழங்கியிருந்தது. 
 
அந்தவகையில் முதலாம் கட்டத்தில் 200க்கும் குறைவான ஆரம்பப்பிரிவு பாடசாலைகள் நேற்றைய தினம் ஆரம்பிக்கப்பட்டு இருந்தது. 
 
இதேவேளை தமது தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக நேற்றும் இன்றும் பெரும்பாலான அதிபர்கள் ஆசிரியர்கள் பாடசாலைக்கு சமூகமளிக்கவில்லை. அவர்கள் 25ஆம் திகதி முதலே தமக்கு பாடசாலைக்குச் செல்லலாம் என ஏற்கனவே அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 
சகல பாடசாலைகளிலும் ஆரம்பப்பிரிவு ஆரம்பம்! திகதி அறிவிப்பு! சகல பாடசாலைகளிலும் ஆரம்பப்பிரிவு ஆரம்பம்! திகதி அறிவிப்பு! Reviewed by Irumbu Thirai News on October 22, 2021 Rating: 5

பரீட்சை திணைக்களத்தால் 2021 நவம்பர் மாதம் நடத்தப்படும் பரீட்சைகள் (மும்மொழிகளிலும்)

October 22, 2021


பரீட்சை திணைக்களத்தால் 2021 நவம்பர் மாதம் நடத்தப்படும் பரீட்சைகளுக்கான நாட்காட்டியை மும்மொழிகளிலும் இங்கு தருகிறோம். 


Examination calendar for the month of November, 2021 


 

பரீட்சை திணைக்களத்தால் 2021 நவம்பர் மாதம் நடத்தப்படும் பரீட்சைகள் (மும்மொழிகளிலும்) பரீட்சை திணைக்களத்தால் 2021 நவம்பர் மாதம் நடத்தப்படும் பரீட்சைகள் (மும்மொழிகளிலும்) Reviewed by Irumbu Thirai News on October 22, 2021 Rating: 5
Powered by Blogger.