மாணவர்கள் இழந்த கல்வியை வழங்க புதிய வேலைத் திட்டம்!
Irumbu Thirai News
November 07, 2021
கொரோனா பரவல் காரணமாக 2020 மற்றும் 2021இல் மாணவர்கள் இழந்த கல்வியை அவர்களுக்கு வழங்குவதற்காக புதிய வேலைத் திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக தேசிய கல்வி நிறுவகத்தின் பணிப்பாளர் சுனில் ஜயந்த நவரத்ன தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
இந்த புதிய வேலைத் திட்டத்திற்காக நவம்பர் மாதம் முதல் அடுத்த வருடம் மார்ச் மாதம் வரை ஒதுக்கப்பட்டுள்ளது. சில வேளை அது ஏப்ரல் வரை நீடிக்கப்படலாம்.
இழந்த கல்வியை வழங்குவதற்கும் பரீட்சைகளை நடத்துவதற்குமே இந்த காலப்பகுதி தேவைப்படுகிறது. இதன்போது பாடப்பரப்பில் உள்ள அத்தியாவசியமான பாகங்கள் மீது அதிக கவனம் செலுத்தப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.
மாணவர்கள் இழந்த கல்வியை வழங்க புதிய வேலைத் திட்டம்!
Reviewed by Irumbu Thirai News
on
November 07, 2021
Rating: