நாளை மாவனல்லை வலய சகல பாடசாலைகளும் மூடப்படும்: - தொழிற்சங்கங்களின் அதிரடி அறிவிப்பு!
Irumbu Thirai News
November 08, 2021
மாவனல்லை வலயத்தில் உள்ள சகல பாடசாலைகளும் நாளை (9) மூடப்படும் என அதிபர், ஆசிரியர் தொழிற்சங்கங்களின் முன்னணி இன்று அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே குறித்த தொழிற்சங்க முன்னணி இதனை அறிவித்துள்ளது.
இது தொடர்பில் இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் பொதுச் செயலாளர் மஹிந்த ஜெயசிங்க தெரிவிக்கையில்,
மாவனல்லை பிரதேச சபையின் உப தலைவர் மெடேரிகம பாடசாலைக்கு கடந்த 3 ஆம் திகதி அத்துமீறி நுழைந்து ஆசிரியர்களுக்கும் பெற்றோர்களுக்கும் அச்சுறுத்தல் விடுத்து பேயாட்டம் ஆடினார். தற்போது இதற்கு இந்த ஜனாதிபதியின் போலீஸ் சரத் வீரசேகரவின் போலீஸ் எவ்வாறு நடவடிக்கை மேற்கொள்கிறது?
நாம் நேற்று ஆயிரக்கணக்கானோர் ஒன்று திரண்டு மெடேரிகம பாடசாலையிலிருந்து போலீஸ் நிலையம் வரை பாதயாத்திரையாக சென்றோம். குறித்த நபர் கைது செய்யப்பட வேண்டும் என்று அந்த இடத்தில் வைத்து நாம் தொடர்ச்சியாக அழுத்தம் கொடுத்த பொழுது போலீஸ் ASP அதிகாரியும் SSP அதிகாரியும் எம்மிடம் தொலைபேசியில் தெரிவித்தார்கள் குறித்த நபரை இன்று நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதாக....
ஆனால் இன்று ஜோசப் சகோதரரும் நானும் குறித்த பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி (OIC) யிடம் இது தொடர்பில் வினவியபோது... குறித்த விடயம் நீதிமன்றத்திற்கு செல்லும் அளவுக்கு பாரதூரமான விடயம் அல்ல எனவும் எனவே இதை இணக்க குழுவிற்கு (சமத்த மண்டல) சமர்ப்பிக்க உள்ளதாகவும் எம்மிடம் தெரிவித்தார்.
நாம் எந்த வகையிலும் இதை ஏற்றுக் கொள்ள தயாரில்லை. ஏனென்றால் நேற்று உயர் அதிகாரி SSP எம்மிடம் உறுதியாகவே தெரிவித்தார் இன்று நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதாக... அப்படியானால் SSP யினதும் ASP யினதும் OIC யினதும் சட்டம் 3 சட்டமா? நாம் கேட்பது அதைத்தான். நாம் நேற்றும் சொன்னோம்... இது வீரசேகரவின் போலீஸ் அல்ல.. இது மாவனல்லை பியதிஸ்ஸவின் போலீஸ் அல்ல... இது ராஜபக்சவின் போலீஸ் அல்ல... இது இந்த நாட்டு மக்களின் போலீஸ் என்று. இது இலங்கை போலீஸ்.
எனவே இந்த போலிஸ் செயற்பட வேண்டும் சட்ட புத்தகத்தின் அடிப்படையில்தான். அல்லாமல் ஒவ்வொரு அரசியல்வாதிகளின் தேவைக்கு அல்ல. எனவே நாம் தீர்மானித்து இருக்கிறோம்.. நாளைய தினம் மாவனெல்லை வலய சகல பாடசாலைகளினதும் அதிபர்கள், ஆசிரியர்கள் சேவைக்கு சமூகமளிக்காமல் இருக்க தீர்மானித்துள்ளோம்.
நாளை காலை மீண்டும் மாவனல்லை நகருக்கு நாம் வருவோம். நாம் மீண்டும் வருவோம். எனவே இந்த நாட்டு அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் விளையாட வேண்டாம் என்று நாம் நேற்றும் சொன்னோம். நாம் நினைத்திருந்தால் இன்று முதல் நாட்டிலுள்ள சகல பாடசாலைகளையும் மூடியிருக்க முடியும். ஆனால் இந்த நாட்டு பிள்ளைகள் தொடர்பில் பொறுப்பு எமக்கு இருப்பதினால் அந்த தீர்மானத்தை எடுக்கவில்லை. ஆனால் எமது இயலாமை காரணமாகத்தான் அந்த தீர்மானத்தை எடுக்கவில்லை என்று அரசாங்கம் நினைத்தால் அரசாங்கம் தவறும் இடம் அதுவாகத்தான் இருக்கும் என்று தெரிவித்தார்.
நாளை மாவனல்லை வலய சகல பாடசாலைகளும் மூடப்படும்: - தொழிற்சங்கங்களின் அதிரடி அறிவிப்பு!
Reviewed by Irumbu Thirai News
on
November 08, 2021
Rating: