MSc in Structural Engineering -2022/2023 (Open University of Sri Lanka)

November 09, 2021

MSc in Structural Engineering (Open University of Sri Lanka) 
 
Course fees: 400,000/- 
 
Application fees: 800/- 
 
Closing date: 30-11-2021.

 Source: Sunday Observer.
 
MSc in Structural Engineering -2022/2023 (Open University of Sri Lanka) MSc in Structural Engineering -2022/2023 (Open University of Sri Lanka) Reviewed by Irumbu Thirai News on November 09, 2021 Rating: 5

MSc in Environmental Science (Open University of Sri Lanka)

November 09, 2021

MSc in Environmental Science (Open University of Sri Lanka) 
 
Course fees: 207,000/- 
 
Duration: 02 years. 
 
Closing date: 30-11-2021.

 
MSc in Environmental Science (Open University of Sri Lanka) MSc in Environmental Science (Open University of Sri Lanka) Reviewed by Irumbu Thirai News on November 09, 2021 Rating: 5

நீடிக்கப்பட்டது உயர்தர பரீட்சைக்கான விண்ணப்ப திகதி!

November 09, 2021

இவ்வருடம் நடைபெறவுள்ள உயர்தர பரீட்சைக்கான விண்ணப்பிக்கும் காலப்பகுதி நாளையுடன் நிறைவடைய உள்ள நிலையில் அது மீண்டும் இம்மாதம் 20 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது. 
 
அந்தவகையில் விண்ணப்ப திகதி 10 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. 
 
கடந்த வருடம் பல்கலைக்கழக அனுமதியை இழந்த உயர்தர மாணவர்களால் 

முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமையவே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.
நீடிக்கப்பட்டது உயர்தர பரீட்சைக்கான விண்ணப்ப திகதி! நீடிக்கப்பட்டது உயர்தர பரீட்சைக்கான விண்ணப்ப திகதி! Reviewed by Irumbu Thirai News on November 09, 2021 Rating: 5

31 Vacancies (Sri Lanka Army)

November 09, 2021


31 Vacancies (Sri Lanka Army) 

Closing date: 30-11-2021. 



 Source: Sunday Observer.

 

Click the link below for more job vacancies.

https://www.irumbuthirainews.com/search/label/Vacancy?m=1

 

31 Vacancies (Sri Lanka Army) 31 Vacancies (Sri Lanka Army) Reviewed by Irumbu Thirai News on November 09, 2021 Rating: 5

Vacancies (Open University of Sri Lanka)

November 09, 2021

Vacancies (Open University of Sri Lanka) 
 
Posts
1. Programmer Cum System Analyst -Gr:11 
2. Personal Secretary to Vice Chancellor 
 
Closing date: 22-11-2021.

Source: Sunday Observer.
 
ஏனைய தொழில் வாய்ப்புகளையும் பார்வையிட...
Vacancies (Open University of Sri Lanka) Vacancies (Open University of Sri Lanka) Reviewed by Irumbu Thirai News on November 09, 2021 Rating: 5

Vacancies (Tea Research Institute of Sri Lanka - TRI)

November 09, 2021

Vacancies (Tea Research Institute of Sri Lanka - TRI) 
 
Posts: 
 
1. Management Assistant (Store Keeping) 
2. Technological Officer (Civil) 
3. Technological Officer (Workshop) 
4. Management Assistant (Non-Tech) 
 
Closing Date: 15-11-2021. 
Source: Sunday Observer.

ஏனைய தொழில் வாய்ப்புகளையும் பார்வையிட...

 
 
Vacancies (Tea Research Institute of Sri Lanka - TRI) Vacancies (Tea Research Institute of Sri Lanka - TRI) Reviewed by Irumbu Thirai News on November 09, 2021 Rating: 5

Vacancy (Sri Lanka Accounting and Auditing Standards Monitoring Board)

November 09, 2021

Vacancy (Sri Lanka Accounting and Auditing Standards Monitoring Board) 
 
Post: Management Assistant (Finance and Administration) 
 
Closing date: 14-11-2021.

 Source: Sunday Observer.

ஏனைய தொழில் வாய்ப்புகளையும் பார்வையிட...
Vacancy (Sri Lanka Accounting and Auditing Standards Monitoring Board) Vacancy (Sri Lanka Accounting and Auditing Standards Monitoring Board) Reviewed by Irumbu Thirai News on November 09, 2021 Rating: 5

நாளைய "தேசிய எதிர்ப்பு தினம்" தொடர்பில் அதிபர் ஆசிரியர் தொழிற்சங்கங்களின் அறிவிப்பு!

November 09, 2021

நாளை(9) இடம்பெறும் தேசிய எதிர்ப்பு தினம் தொடர்பிலான தகவல்களை அதிபர் ஆசிரியர் சங்கங்களின் முன்னணி தெரிவித்துள்ளது. 
 
இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
இது தொடர்பில் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவிக்கையில், 
அதிபர் ஆசிரியர் தொழிற்சங்கங்களின் முன்னணி மற்றும் ஏனைய தொழிற்சங்கங்கள் ஒன்று சேர்ந்து நாளைய தினத்தை தேசிய எதிர்ப்பு தினமாக பிரகடனப்படுத்த தீர்மானித்துள்ளோம். 
 
அதிபர் ஆசிரியர் சம்பள முரண்பாடு தொடர்பான பிரச்சினையை தீர்ப்பதோடு ஏனைய துறைகளில் காணப்படும் பிரச்சினைகளையும் தீர்க்க வேண்டும் என்று கோரியே இவ்வாறு இந்த தினத்தை பிரகடனப்படுத்த நாம் தீர்மானித்துள்ளோம். 
 
நாளை நாட்டிலுள்ள சகல வலயக்கல்வி காரியங்களுக்கு முன்னாலும் இந்த 
 
ஆர்ப்பாட்டம் பிற்பகல் 2 மணிக்கு ஆரம்பமாகும். கொழும்பிலும் லிப்டன் சுற்றுவட்டாரத்தில் பிற்பகல் 02 மணிக்கு ஆரம்பமாகும். கொழும்பில் உள்ள சகல அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களை அந்த இடத்திற்கு வருமாறு அழைக்கின்றோம். 
 
கடந்த 25ஆம் திகதி முதல் கற்பித்துக் கொண்டு சட்டப்படி வேலையில் (Work to Rule) ஈடுபட்டு எமது போராட்டத்தை தொடரவே நாம் தீர்மானித்தோம். அதன் அடிப்படையிலேயே இந்த போராட்டத்தையும் ஏற்பாடு செய்துள்ளோம். 
 
எதிர்வரும் வரவுசெலவுத் திட்டம் வாசிக்கும் தினத்தன்றும் பாரிய ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்துள்ளோம். எனவே நாம் அரசாங்கத்திற்கு சொல்கிறோம் அவசரமாக எமது பிரச்சினைகளை தீர்த்து தரும்படி... ஏனைய தொழிற்சங்கங்களும் எமது சம்பள போராட்டத்திற்கான ஆதரவைத் தெரிவிப்பதோடு அவர்களுக்கு உள்ள பிரச்சனைகளை தீர்க்கும் படியும் நாளைய தினம் போராட்டத்தில் இறங்குவார்கள் என்று தெரிவித்தார்.
நாளைய "தேசிய எதிர்ப்பு தினம்" தொடர்பில் அதிபர் ஆசிரியர் தொழிற்சங்கங்களின் அறிவிப்பு! நாளைய "தேசிய எதிர்ப்பு தினம்" தொடர்பில் அதிபர் ஆசிரியர் தொழிற்சங்கங்களின் அறிவிப்பு! Reviewed by Irumbu Thirai News on November 09, 2021 Rating: 5

ஜப்பான் தென்கொரியா மற்றும் இஸ்ரேலில் வேலைவாய்ப்பு: மோசடி தொடர்பில் விடுக்கப்பட்ட எச்சரிக்கை!

November 08, 2021

ஜப்பான், தென்கொரியா மற்றும் இஸ்ரேலில் வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாக கூறி நிதி மோசடியில் ஈடுபடுவது தொடர்பான கிடைக்கப் பெற்றுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. 
 
மேற்படி நாடுகளுக்கு தொழில் வாய்ப்பிற்காக வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தினால் முன்னெடுக்கப்படும் ஆட்சேர்ப்புக்கு அமைவாக தொழில்களை 

பெற்றுத் தருவதாகக் கூறி குறித்த மோசடிகள் இடம்பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
தென் கொரியா தொழில் வாய்ப்பானது வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தினால் மாத்திரம் முன்னெடுக்கப்படுகிறது. அதேவேளை ஜப்பான் மற்றும் இஸ்ரேல் போன்ற நாடுகளுக்கான தொழில் வாய்ப்புகள் அந்த நாடுகளுடன் ஏற்படுத்திக் கொண்டுள்ள உடன்படிக்கைக்கு அமைவாக அனுமதி வழங்கப்பட்ட தொழில் முகவர் நிறுவனங்கள் ஊடாக மாத்திரமே ஏற்படுத்திக் கொடுக்கப்படுகிறது. எனவே இந்த விடயங்களை கருத்திற்கொண்டு மோசடிகளுக்கு ஏமாற வேண்டாம் என வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஜப்பான் தென்கொரியா மற்றும் இஸ்ரேலில் வேலைவாய்ப்பு: மோசடி தொடர்பில் விடுக்கப்பட்ட எச்சரிக்கை! ஜப்பான் தென்கொரியா மற்றும் இஸ்ரேலில் வேலைவாய்ப்பு: மோசடி தொடர்பில் விடுக்கப்பட்ட எச்சரிக்கை! Reviewed by Irumbu Thirai News on November 08, 2021 Rating: 5

Entering Data of the Public Officers and Their Families to the "e-Grama Niladhari Data System (Details in Tamil)

November 08, 2021

அரச நிறுவனங்களில் உள்ள உத்தியோகத்தர்கள் மற்றும் அவர்களின் குடும்ப அங்கத்தவர்களின் தரவுகளை "ஈ-கிராம உத்தியோகத்தர்" முறைமையில் சேர்த்தல். 
 
கிராம உத்தியோகத்தர்கள் ஊடாக பொதுமக்களுக்கு வழங்கப்படும் சேவையுடன் தொடர்புடைய அன்றாட கடமை நடவடிக்கைகளுக்கு தேவைப்படும் தகவல்களை சேகரித்து வைத்தல் மற்றும் பரிசீலனை பார்த்தல் ஆகிய நடவடிக்கைகளுக்கு அவசியப்படும் தரவுகள் முறைமை மற்றும் மென்பொருள் "ஈ- கிராம உத்தியோகத்தர் (e-GN) நிகழ்ச்சித்திட்டத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. 
 
இது தொடர்பான சகல விதமான ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டல்கள் என்பவற்றை சகல மாவட்ட மற்றும் பிரதேச செயலாளர்களுக்கும் கிராம உத்தியோகத்தர்களுக்கும் உள்நாட்டலுவல்கள் ராஜாங்க அமைச்சினால் வழங்கப்பட்டுள்ளது. 
 
இதுதொடர்பாக வெளியிடப்பட்ட சுற்றுநிறுபம் அதை எவ்வாறு மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற வழிகாட்டல் மற்றும் விண்ணப்பம் என்பவற்றை கீழே காணலாம்.

 
 
Entering Data of the Public Officers and Their Families to the "e-Grama Niladhari Data System (Details in Tamil) Entering Data of the Public Officers and Their Families to the "e-Grama Niladhari Data System (Details in Tamil) Reviewed by Irumbu Thirai News on November 08, 2021 Rating: 5

நாளை மாவனல்லை வலய சகல பாடசாலைகளும் மூடப்படும்: - தொழிற்சங்கங்களின் அதிரடி அறிவிப்பு!

November 08, 2021

மாவனல்லை வலயத்தில் உள்ள சகல பாடசாலைகளும் நாளை (9) மூடப்படும் என அதிபர், ஆசிரியர் தொழிற்சங்கங்களின் முன்னணி இன்று அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 
 
இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே குறித்த தொழிற்சங்க முன்னணி இதனை அறிவித்துள்ளது. 
 
இது தொடர்பில் இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் பொதுச் செயலாளர் மஹிந்த ஜெயசிங்க தெரிவிக்கையில், 
 
மாவனல்லை பிரதேச சபையின் உப தலைவர் மெடேரிகம பாடசாலைக்கு கடந்த 3 ஆம் திகதி அத்துமீறி நுழைந்து ஆசிரியர்களுக்கும் பெற்றோர்களுக்கும் அச்சுறுத்தல் விடுத்து பேயாட்டம் ஆடினார். தற்போது இதற்கு இந்த ஜனாதிபதியின் போலீஸ் சரத் வீரசேகரவின் போலீஸ் எவ்வாறு நடவடிக்கை மேற்கொள்கிறது? 
 
நாம் நேற்று ஆயிரக்கணக்கானோர் ஒன்று திரண்டு மெடேரிகம பாடசாலையிலிருந்து போலீஸ் நிலையம் வரை பாதயாத்திரையாக சென்றோம். குறித்த நபர் கைது செய்யப்பட வேண்டும் என்று அந்த இடத்தில் வைத்து நாம் தொடர்ச்சியாக அழுத்தம் கொடுத்த பொழுது போலீஸ் ASP அதிகாரியும் SSP அதிகாரியும் எம்மிடம் தொலைபேசியில் தெரிவித்தார்கள் குறித்த நபரை இன்று நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதாக.... 
 
ஆனால் இன்று ஜோசப் சகோதரரும் நானும் குறித்த பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி (OIC) யிடம் இது தொடர்பில் வினவியபோது... குறித்த விடயம் நீதிமன்றத்திற்கு செல்லும் அளவுக்கு பாரதூரமான விடயம் அல்ல எனவும் எனவே இதை இணக்க குழுவிற்கு (சமத்த மண்டல) சமர்ப்பிக்க உள்ளதாகவும் எம்மிடம் தெரிவித்தார். 
 
நாம் எந்த வகையிலும் இதை ஏற்றுக் கொள்ள தயாரில்லை. ஏனென்றால் நேற்று உயர் அதிகாரி SSP எம்மிடம் உறுதியாகவே தெரிவித்தார் இன்று நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதாக... அப்படியானால் SSP யினதும் ASP யினதும் OIC யினதும் சட்டம் 3 சட்டமா? நாம் கேட்பது அதைத்தான். நாம் நேற்றும் சொன்னோம்... இது வீரசேகரவின் போலீஸ் அல்ல.. இது மாவனல்லை பியதிஸ்ஸவின் போலீஸ் அல்ல... இது ராஜபக்சவின் போலீஸ் அல்ல... இது இந்த நாட்டு மக்களின் போலீஸ் என்று. இது இலங்கை போலீஸ். 
 
எனவே இந்த போலிஸ் செயற்பட வேண்டும் சட்ட புத்தகத்தின் அடிப்படையில்தான். அல்லாமல் ஒவ்வொரு அரசியல்வாதிகளின் தேவைக்கு அல்ல. எனவே நாம் தீர்மானித்து இருக்கிறோம்.. நாளைய தினம் மாவனெல்லை வலய சகல பாடசாலைகளினதும் அதிபர்கள், ஆசிரியர்கள் சேவைக்கு சமூகமளிக்காமல் இருக்க தீர்மானித்துள்ளோம். 
 
நாளை காலை மீண்டும் மாவனல்லை நகருக்கு நாம் வருவோம். நாம் மீண்டும் வருவோம். எனவே இந்த நாட்டு அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் விளையாட வேண்டாம் என்று நாம் நேற்றும் சொன்னோம். நாம் நினைத்திருந்தால் இன்று முதல் நாட்டிலுள்ள சகல பாடசாலைகளையும் மூடியிருக்க முடியும். ஆனால் இந்த நாட்டு பிள்ளைகள் தொடர்பில் பொறுப்பு எமக்கு இருப்பதினால் அந்த தீர்மானத்தை எடுக்கவில்லை. ஆனால் எமது இயலாமை காரணமாகத்தான் அந்த தீர்மானத்தை எடுக்கவில்லை என்று அரசாங்கம் நினைத்தால் அரசாங்கம் தவறும் இடம் அதுவாகத்தான் இருக்கும் என்று தெரிவித்தார்.
நாளை மாவனல்லை வலய சகல பாடசாலைகளும் மூடப்படும்: - தொழிற்சங்கங்களின் அதிரடி அறிவிப்பு! நாளை மாவனல்லை வலய சகல பாடசாலைகளும் மூடப்படும்: - தொழிற்சங்கங்களின் அதிரடி அறிவிப்பு! Reviewed by Irumbu Thirai News on November 08, 2021 Rating: 5

அடுத்த வருடத்திற்கான கல்வி நடவடிக்கைகள் 08 மாதங்கள் மட்டுமே! NIE முன்வைத்த பரிந்துரைகள் (முழு விபரம் இணைப்பு)

November 08, 2021

கொரோனா காரணமாக கடந்த வருடம் மார்ச் மாதம் முதல் பாடசாலைகள் மூடப்பட்டு இடைக்கிடையே திறக்கப்பட்டாலும் அவை சரியாக வெற்றியளிக்கவில்லை. இந்நிலையில் கொரோனா 3வது அலைக்குப் பின்னர் பாடசாலைகள் 04 கட்டங்களாக திறக்க சுகாதார அமைச்சு பரிந்துரை செய்த நிலையில் அதன் முதற்கட்டம் கடந்த ஒக்டோபர் 21ஆம் திகதி ஆரம்பமானது. 
 
இந்நிலையில் பாடசாலைகள் மீண்டும் கட்டங்கட்டமாக ஆரம்பிக்கப்படுகின்ற நிலையில் மாணவர்கள் இழந்த கல்வியை எவ்வாறு நிவர்த்தி செய்வது என்பது தொடர்பான பல்வேறு பரிந்துரைகளை கல்வி அமைச்சுக்கு தேசிய கல்வி நிறுவகம் முன்வைத்துள்ளது. 
 
தவறவிடப்பட்ட பாடவிதானம் தொடர்பான ஆய்வு தேசிய கல்வி நிறுவனத்தால் மேற்கொள்ளப்பட்டது. அதன் விவரங்கள் பின்வருமாறு: 

2020 இல் தவறவிடப்பட்ட பாடவிதானம் :

2021 இல் தவறவிடப்பட்ட பாடவிதானம் (2021.08.31 வரை):


 
எனவே மாணவர்கள் அடுத்த தரத்திற்கு செல்வதற்கு முன்னர் தவறவிடப்பட்ட பாட அலகுகளை பூர்த்தி செய்வதற்காக 20 வாரங்கள் கொண்ட செயல் திட்டம் தேசிய கல்வி நிறுவகத்தால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. எனவே மூன்றாம் தவணையானது 20 வாரங்களை கொண்டதாக அமையும். 
 
தேசிய கல்வி நிறுவகத்தால் ஆரம்பப் பிரிவிற்கு அறிமுகப்படுத்தப்பட்ட 20 வாரங்கள் கொண்ட பாடவிதானத்தை முழுமையாகப் பார்வையிட இங்கே கிளிக் செய்க.

 
அந்தவகையில் அடுத்த வருடம் ஏப்ரல் விடுமுறைக்குப் பின்னர் மே மாதமளவில் முதலாம் தவணை ஆரம்பமாகும். எனவே மே முதல் டிசம்பர் வரை 8 மாதங்களைக் கொண்டதாக அடுத்த வருடத்தின் கல்வியாண்டு அமையும். 
 
நிறைவு செய்யப்படாத பாட விதானங்களை நிறைவு செய்வதற்காக மார்ச் 31 வரை ஒவ்வொரு தரத்திற்கும் ஒதுக்கப்பட வேண்டிய பாடவேளைகள் தொடர்பான விபரங்களைக் கீழே காணலாம்.

 
குறிப்பு: 20 வாரங்கள் கொண்ட வேலைத்திட்டம் உயர் தரத்திற்கு பொருந்தாது.
அடுத்த வருடத்திற்கான கல்வி நடவடிக்கைகள் 08 மாதங்கள் மட்டுமே! NIE முன்வைத்த பரிந்துரைகள் (முழு விபரம் இணைப்பு) அடுத்த வருடத்திற்கான கல்வி நடவடிக்கைகள் 08 மாதங்கள் மட்டுமே! NIE முன்வைத்த பரிந்துரைகள் (முழு விபரம் இணைப்பு) Reviewed by Irumbu Thirai News on November 08, 2021 Rating: 5

மாணவர்கள் இழந்த கல்வியை வழங்க புதிய வேலைத் திட்டம்!

November 07, 2021

கொரோனா பரவல் காரணமாக 2020 மற்றும் 2021இல் மாணவர்கள் இழந்த கல்வியை அவர்களுக்கு வழங்குவதற்காக புதிய வேலைத் திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக தேசிய கல்வி நிறுவகத்தின் பணிப்பாளர் சுனில் ஜயந்த நவரத்ன தெரிவித்துள்ளார். 
 
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 

இந்த புதிய வேலைத் திட்டத்திற்காக நவம்பர் மாதம் முதல் அடுத்த வருடம் மார்ச் மாதம் வரை ஒதுக்கப்பட்டுள்ளது. சில வேளை அது ஏப்ரல் வரை நீடிக்கப்படலாம். இழந்த கல்வியை வழங்குவதற்கும் பரீட்சைகளை நடத்துவதற்குமே இந்த காலப்பகுதி தேவைப்படுகிறது. இதன்போது பாடப்பரப்பில் உள்ள அத்தியாவசியமான பாகங்கள் மீது அதிக கவனம் செலுத்தப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.
மாணவர்கள் இழந்த கல்வியை வழங்க புதிய வேலைத் திட்டம்! மாணவர்கள் இழந்த கல்வியை வழங்க புதிய வேலைத் திட்டம்! Reviewed by Irumbu Thirai News on November 07, 2021 Rating: 5
Powered by Blogger.