கல்விசார் மற்றும் கல்விசாரா ஊழியர்களை பாடசாலைக்கு அழைப்பது தொடர்பான புதிய சுற்றுநிருபம்! (தொடர்புடைய சுற்றறிக்கைகள் இணைப்பு)
Irumbu Thirai News
November 17, 2021
கல்விசார் மற்றும் கல்விசாரா ஊழியர்களை சேவைக்கு அழைப்பது தொடர்பாக 16-11-2021 ஆம் திகதியிடப்பட்ட சுற்றறிக்கை கடிதம் ஒன்றை கல்வியமைச்சின் செயலாளர் வெளியிட்டுள்ளார்.
இதில் கர்ப்பிணிகள் மற்றும் ஒரு வயதுக்குட்பட்ட பிள்ளைகளை கொண்ட தாய்மார்கள் மற்றும் ஏனைய விசேட நோய்களினால் பாதிக்கப்பட்டவர்களைப் பாடசாலைக்கு அழைப்பது தொடர்பான விபரம் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த சுற்றறிக்கையில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது...
பாடசாலைகளை ஆரம்பித்து வழமையான முறையில் கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பொழுது, சில பாடசாலைகளில் வரையறுக்கப்பட்ட ஆளணியினர் இருப்பதன் காரணமாக சிக்கல் நிலைமைகள் தோன்றியுள்ளதாக அறியக் கிடைத்துள்ளது. அதேபோன்று கொவிட்-19 பரவல் நிலைமை காரணமாக நீண்ட காலமாக பாடசாலைகளை திறக்க முடியாமல் போனதன் அடிப்படையில் வகுப்பறை கற்றல் கற்பித்தல் செயற்பாடு இல்லாமல்போன மாணவ மாணவியர்களை கருத்திற்கொண்டு, கல்விசார் கல்விசாரா ஊழியர்களை சேவைக்கு அழைக்கும் பொழுது கர்ப்பிணி உத்தியோகத்தர்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள், விஷேட நோய் நிலைமைகளினால் பாதிக்கப்பட்டவர்களை சேவைக்கு அழைத்தல் தொடர்பாக கீழுள்ளவாறு நடவடிக்கை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதுதொடர்பாக, அரசாங்க சேவையை
வழமைபோன்று கொண்டு நடத்தல் தொடர்பாக அரச சேவை, மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி அமைச்சு செயலாளரினால் இலக்கம் 02/2021 (V) கொண்ட 2021-10-01 திகதியிடப்பட்ட சுற்றறிக்கையின் 6வது சரத்தின் அறிவுறுத்தலுக்கு உங்களது கவனத்தை செலுத்தவும். அதன்படி, குறிப்பிட்ட ஆளணியினரை அழைப்பது தொடர்பாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அறியத்தருகிறேன்.
என்று குறித்த சுற்றறிக்கையில் கல்வி அமைச்சின் செயலாளர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.
மேலே குறிப்பிடப்பட்ட இலக்கம் கொண்ட சுற்றறிக்கையின் 6வது பகுதியைக் கீழே காணலாம்.
மேலுள்ள விடயங்களின் படி குறித்த உத்தியோகத்தர்களை அத்தியாவசியமான சந்தர்ப்பங்களில் மாத்திரமே சேவைக்கு அழைக்கவேண்டும் என்பது இங்கு கவனிக்கத்தக்கது. அவ்வாறு அழைக்கப்படும் பொழுது விஷேட காலப்பகுதியும் விஷேட வசதிகளும் வழங்க நடவடிக்கை எடுத்தல் வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கல்விசார் மற்றும் கல்விசாரா ஊழியர்களை சேவைக்கு அழைப்பது தொடர்பாக 16-11-2021 ஆம் திகதியிடப்பட்ட சுற்றறிக்கை கடிதத்தைக் கீழே காணலாம்.
இலக்கம் 02/2021 (V) கொண்ட 2021-10-01 திகதியிடப்பட்ட சுற்றறிக்கையை முழுமையாக இங்கே பார்வையிடலாம்.
கல்விசார் மற்றும் கல்விசாரா ஊழியர்களை பாடசாலைக்கு அழைப்பது தொடர்பான புதிய சுற்றுநிருபம்! (தொடர்புடைய சுற்றறிக்கைகள் இணைப்பு)
Reviewed by Irumbu Thirai News
on
November 17, 2021
Rating: