பாடசாலை மாணவர்கள் மத்தியில் புதிய டெல்டா திரிபு அபாயம் - அமைச்சர் வெளியிட்ட தகவல்

November 21, 2021

புதிய டெல்டா உப வைரஸ் திரிபானது பாடசாலை மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் பரவும் அபாயம் அதிகமாக காணப்படுவது ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக 

ஆய்வில் தெரியவந்துள்ளதாக ராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். 
 
அனுராதபுரத்தில் நிகழ்வொன்றில் கலந்து விட்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 
 
டெல்டா திரிபின் புதிய உப திரிபொன்று இலங்கையில் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
பாடசாலை மாணவர்கள் மத்தியில் புதிய டெல்டா திரிபு அபாயம் - அமைச்சர் வெளியிட்ட தகவல் பாடசாலை மாணவர்கள் மத்தியில் புதிய டெல்டா திரிபு அபாயம் - அமைச்சர் வெளியிட்ட தகவல் Reviewed by Irumbu Thirai News on November 21, 2021 Rating: 5

நடுவராக கடமையாற்றும் ரஞ்சன் மடுகல்ல செய்த சாதனை

November 21, 2021

200 டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் ஐசிசி யின் போட்டி நடுவராக கடமையாற்றிய முதல் நபர் என்ற சாதனையை இலங்கையைச் சேர்ந்த ரஞ்சன் மடுகல்ல படைத்துள்ளார். 
 
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் 

தலைவரான இவர் தற்போது ஐசிசியின் போட்டி நடுவராக கடமையாற்றி வருகின்றார். 
 
இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையில் நடைபெற்று வரும் டெஸ்ட் போட்டியே அவர் நடுவராக கடமையாற்றும் 200 ஆவது டெஸ்ட் போட்டியாகும்.
நடுவராக கடமையாற்றும் ரஞ்சன் மடுகல்ல செய்த சாதனை நடுவராக கடமையாற்றும் ரஞ்சன் மடுகல்ல செய்த சாதனை Reviewed by Irumbu Thirai News on November 21, 2021 Rating: 5

மாணவர்களுக்கான மகிழ்ச்சிகர செய்தி! 1400 ஆக அதிகரிக்கப்படும் சிசு சரிய!

November 19, 2021

எதிர்வரும் 22 ஆம் திகதி திங்கட்கிழமை முதல் 1,400 ”சிசு சரிய” பஸ்களை போக்குவரத்தில் ஈடுபடுத்தவுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நிலான் மிரெண்டா தெரிவித்துள்ளார். 
 
6 தொடக்கம் 9 ஆம் தரம் வரையிலான மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் மீண்டும் இம்மாதம் 22ம் திகதி ஆரம்பமாவதை முன்னிட்டும் தற்போதைய 

தொற்றுநோய் சூழ்நிலையில் சுகாதார வழிகாட்டுதல்களுக்கு இணங்க பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்வதற்காககவும் இவ்வாறு 'சிசு சரிய' பஸ் சேவை அதிகரிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
மாணவர்களுக்கான மகிழ்ச்சிகர செய்தி! 1400 ஆக அதிகரிக்கப்படும் சிசு சரிய! மாணவர்களுக்கான மகிழ்ச்சிகர செய்தி! 1400 ஆக அதிகரிக்கப்படும் சிசு சரிய! Reviewed by Irumbu Thirai News on November 19, 2021 Rating: 5

தற்கொலைக்கு முயன்ற மாணவன்! பேராதனையில் சம்பவம்!!

November 19, 2021

15 வயதுடைய மாணவர் ஒருவர் தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவம் ஒன்று பேராதனை பகுதியில் இடம்பெற்றுள்ளது. 
 
பெற்றோரை பாடசாலைக்கு அழைத்து வருமாறு 

குறித்த மாணவருக்கு அதிபர் வழங்கிய உத்தரவுக்குப் பயந்தே தற்கொலைக்கு முயன்றுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. 
 
தற்போது குறித்த மாணவன் பேராதனை வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்கொலைக்கு முயன்ற மாணவன்! பேராதனையில் சம்பவம்!! தற்கொலைக்கு முயன்ற மாணவன்! பேராதனையில் சம்பவம்!! Reviewed by Irumbu Thirai News on November 19, 2021 Rating: 5

புதிய பாடத்திட்டம் அவசியம் - ஜோசப் ஸ்டாலின்

November 19, 2021

கொரோனா பரவல் காரணமாக மாணவர்களுக்கு தவறவிடப்பட்ட பாடத் திட்டங்களை பூர்த்தி செய்வதற்காக தெரிவுசெய்யப்பட்ட பாடத்திட்டங்கள் அடங்கிய புதிய பாடத்திட்டத்தை கல்வி அமைச்சு அறிமுகப்படுத்த வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 
 
இவ்வாறான பாடத் திட்டம் அறிமுகப்படுத்தப்படுமானால் அதனை 

செய்வதற்கு அதிபர்களும் ஆசிரியர்களும் தயாராக இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
புதிய பாடத்திட்டம் அவசியம் - ஜோசப் ஸ்டாலின் புதிய பாடத்திட்டம் அவசியம் - ஜோசப் ஸ்டாலின் Reviewed by Irumbu Thirai News on November 19, 2021 Rating: 5

15.11.2021 அன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்ட தீர்மானங்கள்

November 17, 2021

15-11-2021 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது எடுக்கப்பட்ட தீர்மானங்களை இங்கு தருகிறோம். 
 
இதில், 
 
பல முக்கிய தீர்மானங்கள் அடங்கியுள்ளன. 
 
இதன் முழு வடிவத்தைப் பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க. 
 
முன்னைய அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்களைப் பார்வையிட...
15.11.2021 அன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்ட தீர்மானங்கள் 15.11.2021 அன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்ட தீர்மானங்கள் Reviewed by Irumbu Thirai News on November 17, 2021 Rating: 5

பரீட்சை திணைக்களத்தால் 2021 டிசம்பர் மாதம் நடத்தப்படும் பரீட்சைகள் (மும்மொழிகளிலும்)

November 17, 2021

பரீட்சை திணைக்களத்தால் 2021 டிசம்பர் மாதம் நடத்தப்படும் பரீட்சைகளுக்கான நாட்காட்டியை பரீட்சைத் திணைக்களம் வெளியிட்டுள்ளது. 14 வகையான பரீட்சைகள் டிசம்பர் மாதத்தில் நடாத்த திட்டமிடப்பட்டுள்ளன.
 
குறித்த நாட்காட்டியை மும்மொழிகளிலும் இங்கே காணலாம்.

பரீட்சை திணைக்களத்தால் 2021 டிசம்பர் மாதம் நடத்தப்படும் பரீட்சைகள் (மும்மொழிகளிலும்) பரீட்சை திணைக்களத்தால் 2021 டிசம்பர் மாதம் நடத்தப்படும் பரீட்சைகள் (மும்மொழிகளிலும்) Reviewed by Irumbu Thirai News on November 17, 2021 Rating: 5

கல்விசார் மற்றும் கல்விசாரா ஊழியர்களை பாடசாலைக்கு அழைப்பது தொடர்பான புதிய சுற்றுநிருபம்! (தொடர்புடைய சுற்றறிக்கைகள் இணைப்பு)

November 17, 2021

கல்விசார் மற்றும் கல்விசாரா ஊழியர்களை சேவைக்கு அழைப்பது தொடர்பாக 16-11-2021 ஆம் திகதியிடப்பட்ட சுற்றறிக்கை கடிதம் ஒன்றை கல்வியமைச்சின் செயலாளர் வெளியிட்டுள்ளார். 
 
இதில் கர்ப்பிணிகள் மற்றும் ஒரு வயதுக்குட்பட்ட பிள்ளைகளை கொண்ட தாய்மார்கள் மற்றும் ஏனைய விசேட நோய்களினால் பாதிக்கப்பட்டவர்களைப் பாடசாலைக்கு அழைப்பது தொடர்பான விபரம் குறிப்பிடப்பட்டுள்ளது. 
 
குறித்த சுற்றறிக்கையில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது...

பாடசாலைகளை ஆரம்பித்து வழமையான முறையில் கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பொழுது, சில பாடசாலைகளில் வரையறுக்கப்பட்ட ஆளணியினர் இருப்பதன் காரணமாக சிக்கல் நிலைமைகள் தோன்றியுள்ளதாக அறியக் கிடைத்துள்ளது. அதேபோன்று கொவிட்-19 பரவல் நிலைமை காரணமாக நீண்ட காலமாக பாடசாலைகளை திறக்க முடியாமல் போனதன் அடிப்படையில் வகுப்பறை கற்றல் கற்பித்தல் செயற்பாடு இல்லாமல்போன மாணவ மாணவியர்களை கருத்திற்கொண்டு, கல்விசார் கல்விசாரா ஊழியர்களை சேவைக்கு அழைக்கும் பொழுது கர்ப்பிணி உத்தியோகத்தர்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள், விஷேட நோய் நிலைமைகளினால் பாதிக்கப்பட்டவர்களை சேவைக்கு அழைத்தல் தொடர்பாக கீழுள்ளவாறு நடவடிக்கை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது. 
 
அதுதொடர்பாக, அரசாங்க சேவையை வழமைபோன்று கொண்டு நடத்தல் தொடர்பாக அரச சேவை, மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி அமைச்சு செயலாளரினால் இலக்கம் 02/2021 (V) கொண்ட 2021-10-01 திகதியிடப்பட்ட சுற்றறிக்கையின் 6வது சரத்தின் அறிவுறுத்தலுக்கு உங்களது கவனத்தை செலுத்தவும். அதன்படி, குறிப்பிட்ட ஆளணியினரை அழைப்பது தொடர்பாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அறியத்தருகிறேன். 
 
என்று குறித்த சுற்றறிக்கையில் கல்வி அமைச்சின் செயலாளர் கபில பெரேரா தெரிவித்துள்ளார். 
 
மேலே குறிப்பிடப்பட்ட இலக்கம் கொண்ட சுற்றறிக்கையின் 6வது பகுதியைக் கீழே காணலாம். 
 
மேலுள்ள விடயங்களின் படி குறித்த உத்தியோகத்தர்களை அத்தியாவசியமான சந்தர்ப்பங்களில் மாத்திரமே சேவைக்கு அழைக்கவேண்டும் என்பது இங்கு கவனிக்கத்தக்கது. அவ்வாறு அழைக்கப்படும் பொழுது விஷேட காலப்பகுதியும் விஷேட வசதிகளும் வழங்க நடவடிக்கை எடுத்தல் வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 
 
கல்விசார் மற்றும் கல்விசாரா ஊழியர்களை சேவைக்கு அழைப்பது தொடர்பாக 16-11-2021 ஆம் திகதியிடப்பட்ட சுற்றறிக்கை கடிதத்தைக் கீழே காணலாம்.


இலக்கம் 02/2021 (V) கொண்ட 2021-10-01 திகதியிடப்பட்ட சுற்றறிக்கையை முழுமையாக இங்கே பார்வையிடலாம்.


கல்விசார் மற்றும் கல்விசாரா ஊழியர்களை பாடசாலைக்கு அழைப்பது தொடர்பான புதிய சுற்றுநிருபம்! (தொடர்புடைய சுற்றறிக்கைகள் இணைப்பு) கல்விசார் மற்றும் கல்விசாரா ஊழியர்களை பாடசாலைக்கு அழைப்பது தொடர்பான புதிய சுற்றுநிருபம்! (தொடர்புடைய சுற்றறிக்கைகள் இணைப்பு) Reviewed by Irumbu Thirai News on November 17, 2021 Rating: 5

தரம் 6-9 வரையான வகுப்புக்களை ஆரம்பிக்கும் திகதி அறிவிப்பு!

November 16, 2021
 

நான்கு கட்டங்களாக பாடசாலைகளை ஆரம்பிக்கும் திட்டத்தின்கீழ் நான்காவது கட்ட ஆரம்பிப்பிற்கான திகதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
இதுவரை தரம் 6 தொடக்கம் 9 வரையான வகுப்புகளைத் தவிர ஏனைய சகல வகுப்புகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது தரம் 6 தொடக்கம் 9 வரையான வகுப்புகளுக்கான திகதி அறிவிக்கப்பட்டுள்ளது. 

அந்த வகையில் இந்த மாதம் 22ஆம் திகதி திங்கட்கிழமை முதல் தரம் 6 தொடக்கம் 9 வரையான வகுப்புக்கள் ஆரம்பமாகும் என அமைச்சரவைப் பேச்சாளர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். 
 
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தரம் 6-9 வரையான வகுப்புக்களை ஆரம்பிக்கும் திகதி அறிவிப்பு! தரம் 6-9 வரையான வகுப்புக்களை ஆரம்பிக்கும் திகதி அறிவிப்பு! Reviewed by Irumbu Thirai News on November 16, 2021 Rating: 5

தரம்: 6-9 வரையான வகுப்புக்களை ஆரம்பிப்பது தொடர்பாக கல்வி அமைச்சரின் அறிவிப்பு!

November 15, 2021

4 கட்டங்களாக பாடசாலை ஆரம்பிக்கும் திட்டத்தின் அடிப்படையில் நான்காவது கட்ட ஆரம்பம் தொடர்பான அறிவிப்பை கல்வியமைச்சர் வெளியிட்டுள்ளார். 
 
இதுவரை தரம் 6 தொடக்கம் 9 வரையான வகுப்புகளைத் தவிர்ந்த ஏனைய வகுப்புகள் அனைத்தும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 
 
எனவே தரம் 6 தொடக்கம் 9 வரையான வகுப்புகள் அடுத்த வாரம் 

ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன இன்று பாராளுமன்றத்தில் அறிவித்துள்ளார். வரவு செலவுத் திட்ட விவாதத்தின் போதே அவர் பாராளுமன்றத்தில் வைத்து இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
தரம்: 6-9 வரையான வகுப்புக்களை ஆரம்பிப்பது தொடர்பாக கல்வி அமைச்சரின் அறிவிப்பு! தரம்: 6-9 வரையான வகுப்புக்களை ஆரம்பிப்பது தொடர்பாக கல்வி அமைச்சரின் அறிவிப்பு! Reviewed by Irumbu Thirai News on November 15, 2021 Rating: 5

B.Ed (Special) Degree - 2022/2025 (Full Details & Online Application)

November 14, 2021

National Institute of Education (NIE) 
Bachelor of Education (Special) Degree - 2022/2025. 
 
தேசிய கல்வி நிறுவகத்தினால் கல்விமாணி (சிறப்பு) பட்டக் கற்கை நெறிக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. 
 
Subjects: Primary, Maths, Science, Commerce, Social Science, English, Agriculture, Home Economics, Health and Physical Education, Arts and Crafts, Special Education, ICT, Second Language (Sinhala/Tamil), Aesthetic Studies  (Music).
 
Application Fee (Inclusive of Entrance Examination) - Rs. 1,500/- 
 
Registration Fee - Rs. 2,000/- 
 
Course Fee - Rs. 150,000/- (2 Installments) 
 
Duration: 04 years.
 
Medium: Tamil, English and Sinhala.
 
Closing date: 25-11-2021. 
 
Click the link below for online application: 
 
Course details (In 3 languages): 

B.Ed (Special) Degree - 2022/2025 (Full Details & Online Application) B.Ed (Special) Degree - 2022/2025 (Full Details & Online Application) Reviewed by Irumbu Thirai News on November 14, 2021 Rating: 5

Covid-19 Recovery New Syllabus for Gr: 6-11 / தரம்: 6-11 வரை அறிமுகப்படுத்தப்பட்ட புதிய பாடத்திட்டம் (மூன்று மொழி மூலங்களிலும்)

November 13, 2021

கொரோனா விடுமுறை காரணமாக மாணவர்களுக்கு தவறவிடப்பட்ட பாடத்திட்டங்களைப் பூர்த்தி செய்வதற்காக தேசிய கல்வி நிறுவகத்தால் 06-11 வரையான வகுப்புகளுக்கும் புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 
 
இந்த புதிய பாடத்திட்டங்கள் தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மொழி மூலங்களில் தரப்பட்டுள்ளன.
 
விரும்பிய மொழி மூலத்தில் விரும்பிய பாடத்தை பார்வையிடவும் பதிவிறக்கம் செய்யவும் கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க.
 
தேசிய கல்வி நிறுவனத்தால் (NIE) ஆரம்ப பிரிவிற்கு அறிமுகப்படுத்தப்பட்ட 20 வாரங்கள் கொண்ட புதிய பாடத்திட்டத்தை முழுமையாக பார்வையிட இங்கே கிளிக் செய்க.

Covid-19 Recovery New Syllabus for Gr: 6-11 / தரம்: 6-11 வரை அறிமுகப்படுத்தப்பட்ட புதிய பாடத்திட்டம் (மூன்று மொழி மூலங்களிலும்) Covid-19 Recovery New Syllabus for Gr: 6-11 / தரம்: 6-11 வரை அறிமுகப்படுத்தப்பட்ட புதிய பாடத்திட்டம் (மூன்று மொழி மூலங்களிலும்) Reviewed by Irumbu Thirai News on November 13, 2021 Rating: 5

Covid-19 Recovery New Syllabus for Gr: 10-11 / தரம்: 10-11 ற்கு அறிமுகப்படுத்தப்பட்ட புதிய பாடத்திட்டம்

November 13, 2021

கொரோனா விடுமுறை காரணமாக மாணவர்களுக்கு தவறவிடப்பட்ட பாடத்திட்டங்களைப் பூர்த்தி செய்வதற்காக தேசிய கல்வி நிறுவகத்தால் தரம் 10, 11 ற்கு புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 
 
கீழே உள்ள லிங்குகளைக் கிளிக் செய்து உரிய பாடத்திட்டத்தை பார்வையிடலாம். பதிவிறக்கம் செய்யலாம். 

தரம்: 10 

 
இழந்த கல்வியை மீட்கும் நோக்கில் தேசிய கல்வி நிறுவகத்தால் (NIE) ஆரம்ப பிரிவிற்கு அறிமுகப்படுத்தப்பட்ட 20 வாரங்கள் கொண்ட புதிய பாடத்திட்டத்தை முழுமையாகப் பார்வையிட இங்கே கிளிக் செய்க.

 
 
தரம்: 11

இழந்த கல்வியை மீட்கும் நோக்கில் தேசிய கல்வி நிறுவகத்தால் (NIE) தரம்: 6-11 வரை அறிமுகப்படுத்தப்பட்ட புதிய பாடத்திட்டத்தை 3 மொழி மூலங்களிலும் பார்வையிட இங்கே கிளிக் செய்க.
Covid-19 Recovery New Syllabus for Gr: 10-11 / தரம்: 10-11 ற்கு அறிமுகப்படுத்தப்பட்ட புதிய பாடத்திட்டம் Covid-19 Recovery New Syllabus for Gr: 10-11 / தரம்: 10-11 ற்கு அறிமுகப்படுத்தப்பட்ட புதிய பாடத்திட்டம் Reviewed by Irumbu Thirai News on November 13, 2021 Rating: 5
Powered by Blogger.