என்னை இனிமேல் "தல" என்று அழைக்க வேண்டாம்: - நடிகர் அஜித்குமார்
Irumbu Thirai News
December 01, 2021
இன்றைய தினம் அறிக்கை ஒன்றை வெளியிட்டே அவர் இவ்வாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
என்னை அஜித் என்றோ அஜித்குமார் என்றோ அல்லது AK என்றோ அழைப்பதையே நான் விரும்புகிறேன். மாறாக தல என்றோ அல்லது வேறு அடைமொழிகளை கொண்டோ அழைப்பதை விரும்பவில்லை. உங்கள் அனைவருக்கும் நல்ல ஆரோக்கியம், மகிழ்ச்சி, வெற்றி, மன அமைதி மற்றும் மனநிறைவு நிறைந்த ஒரு அழகான வாழ்க்கையை நான் மனதார வாழ்த்துகிறேன்.
என்று அவர் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2001 இல் 'தீனா (Dheena)' என்ற திரைப்படம் வெளியானதிலிருந்து அஜித் குமாருக்கு
தல என்ற அடைமொழி மிகப் பிரபலமடைந்தது. அன்றிலிருந்து இன்றுவரை அஜித்குமாருக்கு இந்த அடைமொழி பயன்படுத்தப்பட்டு வருகிறது.
நடிகர் விஜய்யை தளபதி என்றும் அஜீத் குமாரை தல என்றும் அவரவர் ரசிகர்கள் கொண்டாடி வருவது வழமை. அடிக்கடி இந்த இரு தரப்பினரும் சமூக வலைதளங்களில் கருத்து மோதலில் ஈடுபடுவதும் வழமை.
வலிமை என்ற படத்தில் தற்போது நடித்து வரும் நிலையிலேயே அஜித்குமாரின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
என்னை இனிமேல் "தல" என்று அழைக்க வேண்டாம்: - நடிகர் அஜித்குமார்
Reviewed by Irumbu Thirai News
on
December 01, 2021
Rating: