க.பொ.த. (சா.தர) விண்ணப்பம் - 2021 (Online விண்ணப்பம் மற்றும் முழு விபரம் இணைப்பு)

December 19, 2021

இந்த வருடத்திற்குரிய (2021) சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை இலங்கை பரீட்சைத் திணைக்களம் கோரியுள்ளது. 
 
  • இம்முறை பரீட்சைக்காக சகல விண்ணப்பதாரிகள் நிகழ்நிலை (Online) முறைமையிலேயே விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும். 
 
  • 2021-12-20 (திங்கட்கிழமை) முதல் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். 
 
  • நிகழ்நிலை முறைமையில் விண்ணப்பப்படிவத்தை பூரணப்படுத்தி அதன் PDF கோவையை அச்சுப் பிரதி எடுத்து தேவையேற்படின் அதனை சமர்ப்பிப்பதற்காக பாதுகாப்பாக வைத்துக் கொள்ளவும். அச்சுப்பிரதி திணைக்களத்திற்கு அனுப்ப தேவையில்லை. 
 
  • பாடசாலையிலிருந்து விலகி இடுகை பத்திரத்தை பெற்றுக்கொண்ட விண்ணப்பதாரிகள் மாத்திரமே இப்பரீட்சைக்கு தனிப்பட்ட பரீட்சார்த்திகளாக விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள் ஆவர். பாடசாலையில் கற்றுக்கொண்டே தனிப்பட்ட பரீட்சார்த்தியாக விண்ணப்பிப்பது முற்றாகத் தடைசெய்யப்பட்டுள்ளது. அவ்வாறு தோற்றுவது கண்டறியப்படின் பரீட்சை பெறுபேறு ரத்து செய்யப்படுவதுடன் எதிர்காலத்தில் பரீட்சைக்கு தோற்றுவதும் தடை செய்யப்படும். 
 
  • விண்ணப்பங்களை பரீட்சைத் திணைக்களத்தின் இணையதளத்தின் மூலமோ அல்லது Exams SRI LANKA என்ற App மூலமோ சமர்ப்பிக்கலாம். 

  • தேசிய அடையாள அட்டை இல்லாதவர்கள் தாய் அல்லது தந்தை அல்லது பாதுகாவலரின் தேசிய அடையாள அட்டையை பயன்படுத்தி பதிவு செய்து கொள்ள முடியும். 
 
  • பரீட்சார்த்திகள் பரீட்சைக்கு விண்ணப்ப படிவங்களை சமர்ப்பித்த பின்னர் எக்காரணத்திற்காகவேனும் விண்ணப்பித்த பரீட்சை நிலையமோ ஊடக மொழியோ அல்லது பாடங்களோ பின்னர் மாற்றம் செய்யப்படமாட்டாது. எனவே தங்களின் விண்ணப்ப படிவத்தை சரியாக பூர்த்தி செய்ய வேண்டும். 
 
  • கட்டணங்களை தபால் நிலையத்திலோ அல்லது Credit/ Debit அட்டைகள் மூலமோ செலுத்தலாம். 

  • கட்டண விபரம்: 
01 பாடம் -         ரூபா: 100.00 
02 பாடங்கள் -  ரூபா: 150.00 
03 பாடங்கள் -  ரூபா: 200.00 
04 பாடங்கள் -  ரூபா: 250.00 
05 பாடங்கள் -  ரூபா: 300.00 
06 - 09 பாடங்கள் -  ரூபா: 350.00 
  • 2022-01-20 ம் திகதி நள்ளிரவு 12 மணிக்கு பின்னர் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியாது. 
Online விண்ணப்பத்திற்கு செல்ல கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க. 
 
பரீட்சைக்கு விண்ணப்பித்தல் தொடர்பான பத்திரிகை அறிவித்தலை கீழே காணலாம்.

 

 
க.பொ.த. (சா.தர) விண்ணப்பம் - 2021 (Online விண்ணப்பம் மற்றும் முழு விபரம் இணைப்பு) க.பொ.த. (சா.தர) விண்ணப்பம் - 2021 (Online விண்ணப்பம் மற்றும் முழு விபரம் இணைப்பு) Reviewed by Irumbu Thirai News on December 19, 2021 Rating: 5

பரீட்சைகள் திட்டமிட்டபடி நடைபெறும்: காத்திருப்பு இடைவெளி நீக்கப்படும் - கல்வி அமைச்சர்

December 19, 2021

இந்த வருடத்திற்கான புலமைப் பரிசில் பரீட்சை, சாதாரண தரப் பரீட்சை மற்றும் உயர்தர பரீட்சைகள் என்பன திட்டமிட்டபடி நடைபெறும். அதில் எவ்வித மாற்றமும் இல்லை என கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார். 
 
நேற்று(18) அவிசாவளையில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 
 
உயர்தர பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்பட்டதிலிருந்து
பல்கலைக்கழகம் செல்லும் வரை சுமார் 10 மாதங்களுக்கும் மேலாக காத்திருக்கின்றனர். எனவே இந்த காத்திருப்பு காலமும் நீக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.
பரீட்சைகள் திட்டமிட்டபடி நடைபெறும்: காத்திருப்பு இடைவெளி நீக்கப்படும் - கல்வி அமைச்சர் பரீட்சைகள் திட்டமிட்டபடி நடைபெறும்: காத்திருப்பு இடைவெளி நீக்கப்படும் - கல்வி அமைச்சர் Reviewed by Irumbu Thirai News on December 19, 2021 Rating: 5

13.12.2021 அன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்ட தீர்மானங்கள்

December 18, 2021

13.12.2021 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது எடுக்கப்பட்ட தீர்மானங்களை இங்கு தருகிறோம். 
 
இதில், பல முக்கிய தீர்மானங்கள் அடங்கியுள்ளன. 
 
இதன் முழு வடிவத்தைப் பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க. 
13.12.2021 அன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்ட தீர்மானங்கள் 13.12.2021 அன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்ட தீர்மானங்கள் Reviewed by Irumbu Thirai News on December 18, 2021 Rating: 5

10-12-2021 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) / Official Government Gazette Released on 10-12-2021

December 18, 2021

Official Government Gazette Released on 10-12-2021. 
 
10-12-2021 அன்று வெளியான அரச வர்த்தமானியை தமிழ், ஆங்கிலம், சிங்களம் ஆகிய மொழிகளில் இங்கு தருகிறோம். 
 
இதில் பல முக்கிய அறிவித்தல்கள் காணப்படுகின்றன. கீழே உள்ள உரிய லிங்கைக் கிளிக் செய்து உரிய மொழியில் முழுமையாகப் பார்வையிடுக. 
 
தமிழில் பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க. 
 
ஆங்கிலத்தில் பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க. 
 
சிங்களத்தில் பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க. 
 
முன்னைய வர்த்தமானி அறிவித்தலுக்கு செல்ல...
10-12-2021 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) / Official Government Gazette Released on 10-12-2021 10-12-2021 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) / Official Government Gazette Released on 10-12-2021 Reviewed by Irumbu Thirai News on December 18, 2021 Rating: 5

பூஸ்டர் தடுப்பூசி தொடர்பில் வெளியான ஆய்வு!

December 18, 2021

தற்போது ஓமிக்ரோன் திரிபு வேகமாக பரவி வருகின்றது. விசேடமாக ஐரோப்பாவில் இதன் தீவிரம் அதிகரித்திருக்கின்றது. 
 
இந்நிலையில் பூஸ்டர் (செயலூக்கி) தடுப்பூசி தொடர்பான ஆய்வு ஒன்றை பிரித்தானியா ஆய்வுக் குழு வெளியிட்டுள்ளது. 
 
அதாவது ஓமிக்ரோன் திரிபினால் ஏற்படக்கூடிய 

சுமார் 85 சதவீதமான தீவிர நோய் நிலைமைகளை இந்த பூஸ்டர் தடுப்பூசி தடுக்கும் என அந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. எனவே இந்த செயலூக்கி தடுப்பூசி காரணமாக ஓமிக்ரோன் தொற்றாளர்கள் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படுவது பாரிய அளவு குறைவடைந்துள்ளதாகவும் அந்த ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
பூஸ்டர் தடுப்பூசி தொடர்பில் வெளியான ஆய்வு! பூஸ்டர் தடுப்பூசி தொடர்பில் வெளியான ஆய்வு! Reviewed by Irumbu Thirai News on December 18, 2021 Rating: 5

போலியான இடமாற்ற விண்ணப்பம் தொடர்பில் கல்வியமைச்சின் அறிவிப்பு!

December 12, 2021

தேசிய பாடசாலை ஆசிரியர் இடமாற்ற விண்ணப்பம் தொடர்பிலான அறிவித்தல் ஒன்றை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது. 
 
அந்த வகையில், தேசிய பாடசாலை ஆசிரியர் இடமாற்ற விண்ணப்பம் என்ற பெயரில் போலியான விண்ணப்பம் ஒன்று தற்போது 

சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருவதாகவும் அந்த விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கல்வி அமைச்சுக்கு அனுப்ப வேண்டாம் எனவும் கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
இது தொடர்பான உத்தியோகபூர்வ விண்ணப்பபடிவம் அதிபர்கள் மூலமாக எதிர்வரும் நாட்களில் அனுப்பி வைக்கப்படும் எனவும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
இது தொடர்பில் வெளியிடப்பட்ட அறிக்கையை கீழே காணலாம்.

 
போலியான இடமாற்ற விண்ணப்பம் தொடர்பில் கல்வியமைச்சின் அறிவிப்பு! போலியான இடமாற்ற விண்ணப்பம் தொடர்பில் கல்வியமைச்சின் அறிவிப்பு! Reviewed by Irumbu Thirai News on December 12, 2021 Rating: 5

பல்கலைக்கழகங்களை மீள திறப்பது தொடர்பில் எடுக்கப்பட்ட தீர்மானம்!

December 12, 2021

பல்கலைக்கழகங்களை மீள திறப்பது தொடர்பான தீர்மானத்தை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க அறிவித்துள்ளார். 
 
அதாவது தற்போதைய புதிய கொரோனா வைரஸ் பிறழ்வினால் (ஓமிக்ரோன்) 

பாதிப்பு ஏற்படாவிட்டால் சகல பல்கலைக்கழகங்களையும் எதிர்வரும் ஜனவரி மாதம் கல்வி நடவடிக்கைகளுக்காக மீள திறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். 
 
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது, 
 
சில பல்கலைக்கழகங்களில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கி இருக்கிறார்கள். எனவே அவர்கள் எல்லோரையும் அழைக்கும் பட்சத்தில் மாணவர்கள் மற்றும் விரிவுரையாளர்கள் இடையே கொரோனா பரவும் அச்சம் நிலவுகிறது. எனவே தற்போதைய வைரஸ் திரிபு பாதிப்பை ஏற்படுத்தாவிட்டால் எதிர்வரும் ஜனவரியில் பல்கலைக்கழகங்கள் ஆரம்பிக்கப்படும். எவ்வாறாயினும் தற்போதைய நிலையில் 25 வீதமான மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்கு அழைக்கப்பட்டுள்ளனர் என அவர் மேலும் தெரிவித்தார்.

பல்கலைக்கழகங்களை மீள திறப்பது தொடர்பில் எடுக்கப்பட்ட தீர்மானம்! பல்கலைக்கழகங்களை மீள திறப்பது தொடர்பில் எடுக்கப்பட்ட தீர்மானம்! Reviewed by Irumbu Thirai News on December 12, 2021 Rating: 5

ஓமிக்ரோனிடமிருந்து பாதுகாப்பு பெறும் வழியைக் கண்டுபிடித்தது இஸ்ரேல்!

December 12, 2021
 

தற்போது வேகமாக பரவி வருகின்ற ஓமிக்ரோன் வைரஸ் திரிபிலிருந்து பாதுகாப்பு பெறும் வழியை இஸ்ரேல் கண்டுபிடித்துள்ளது. 
 
அதாவது அமெரிக்க தயாரிப்பான பைஸர் தடுப்பூசியை மூன்று முறை பாவித்தால் ஓமிக்ரோன் வைரஸிடமிருந்து குறைந்தபட்ச பாதுகாப்பு கிடைக்கும் என இஸ்ரேலிய மருத்துவ ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். 
 
ஒமிக்ரோன் வைரஸ் தொடர்பில் கடந்த வாரம் வெளியான அறிக்கை ஒன்றில், 
 
பூஸ்டர் தடுப்பூசி செலுத்தினால் ஓமிக்ரோன் திரிபிலிருந்து முக்கிய பாதுகாப்பை பெறலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
 
தற்போது அந்த விடயத்தை இஸ்ரேல் மருத்துவ ஆய்வாளர்களின் இந்த புதிய கண்டுபிடிப்பு மேலும் உறுதிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஓமிக்ரோனிடமிருந்து பாதுகாப்பு பெறும் வழியைக் கண்டுபிடித்தது இஸ்ரேல்! ஓமிக்ரோனிடமிருந்து பாதுகாப்பு பெறும் வழியைக் கண்டுபிடித்தது இஸ்ரேல்! Reviewed by Irumbu Thirai News on December 12, 2021 Rating: 5

அதிபர் மற்றும் ஆசிரியர்களுக்கு உத்தியோகபூர்வ அடையாள அட்டை வழங்கல் (சுற்றுநிருபம் இணைப்பு)

December 11, 2021

அரச பாடசாலைகளின் கல்விசார் ஊழியர்களுக்கு உத்தியோகபூர்வ அடையாள அட்டையை பெற்றுக்கொடுத்தல் தொடர்பான 22/2021 இலக்கம் கொண்ட சுற்று நிருபத்தை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது. 
 
அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களின் கௌரவம் மற்றும் அடையாளத்தினை பாதுகாக்கும் வகையில் முக்கியமான முன்னெடுப்பாக நாட்டிலுள்ள சகல அரச பாடசாலைகளிலும் கடமையாற்றும் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு உத்தியோகபூர்வ அடையாள அட்டையை வழங்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. 

இதன் முதற்கட்டமாக இந்த வருடம் நடைபெற்ற ஆசிரியர் தின நிகழ்வின் போது சகல மாகாணங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் தேசிய பாடசாலை அதிபர்கள் மற்றும் ஒருசில ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டது. 
 
இரண்டாம் கட்டத்தில் தேசிய பாடசாலைகளில் எஞ்சிய அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வழங்கப்படுகிறது. 
 
இதற்கு அடுத்த கட்டமாகவே மாகாண பாடசாலைகளின் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வழங்கப்படும். அது மாகாண கல்விச் செயலாளர் அல்லது மாகாணக் கல்விப்பணிப்பாளர் மூலமாக நடைமுறைப்படுத்தப்படும். 
 
விண்ணப்பபடிவம் தொடர்பான தேவையான விபரங்கள் google படிவத்தின் மூலமாக மட்டுமே கல்வி அமைச்சுக்கு அனுப்பப்பட வேண்டும். 
 
புகைப்படம் அமைய வேண்டிய முறை: 

அளவு: கடவுச்சீட்டுக்குரிய அளவு.  
பின்புலம்: இள நீல நிறம். 
 
ஆடை: ஆண்கள் - கழுத்துப்பட்டியுடனான மேற்சட்டை. பெண்கள் - சேலை.  
 
முகம்: முழுமையாக நெற்றியும் மற்றும் இரு காதுகளும் தெரிய வேண்டும். 
 
ஒரு புகைப்படத்தை தகவல் படிவத்தில் கழராத வகையில் ஒட்டுவதோடு மற்றைய புகைப்படத்தை JPEG முறையில் Google விண்ணப்பத்தோடு இணைக்க வேண்டும். 
 
இது தொடர்பான சுற்று நிருபத்தை கீழே காணலாம்.
 



அதிபர் மற்றும் ஆசிரியர்களுக்கு உத்தியோகபூர்வ அடையாள அட்டை வழங்கல் (சுற்றுநிருபம் இணைப்பு) அதிபர் மற்றும் ஆசிரியர்களுக்கு உத்தியோகபூர்வ அடையாள அட்டை வழங்கல் (சுற்றுநிருபம் இணைப்பு) Reviewed by Irumbu Thirai News on December 11, 2021 Rating: 5

03-12-2021 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) / Official Government Gazette Released on 03-12-2021

December 11, 2021

Official Government Gazette Released on 03-12-2021. 
 
03-12-2021 அன்று வெளியான அரச வர்த்தமானியை தமிழ், ஆங்கிலம், சிங்களம் ஆகிய மொழிகளில் இங்கு தருகிறோம். 
 
இதில் பல முக்கிய அறிவித்தல்கள் காணப்படுகின்றன. கீழே உள்ள உரிய லிங்கைக் கிளிக் செய்து உரிய மொழியில் முழுமையாகப் பார்வையிடுக. 
 
தமிழில் பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க. 
 
ஆங்கிலத்தில் பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க. 
 
சிங்களத்தில் பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க. 
 
முன்னைய வர்த்தமானி அறிவித்தலுக்கு செல்ல...
03-12-2021 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) / Official Government Gazette Released on 03-12-2021 03-12-2021 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) / Official Government Gazette Released on 03-12-2021 Reviewed by Irumbu Thirai News on December 11, 2021 Rating: 5

பரீட்சை திணைக்களத்தால் 2022 ஜனவரி மாதம் நடத்தப்படும் பரீட்சைகள் (மும்மொழிகளிலும்)

December 11, 2021

பரீட்சை திணைக்களத்தால் 2022 ஜனவரி மாதம் நடத்தப்படும் பரீட்சைகளுக்கான நாட்காட்டியை பரீட்சைத் திணைக்களம் வெளியிட்டுள்ளது. 12 வகையான பரீட்சைகள் டிசம்பர் மாதத்தில் நடாத்த திட்டமிடப்பட்டுள்ளன. 
 
குறித்த நாட்காட்டியை மும்மொழிகளிலும் இங்கே காணலாம்.

பரீட்சை திணைக்களத்தால் 2022 ஜனவரி மாதம் நடத்தப்படும் பரீட்சைகள் (மும்மொழிகளிலும்) பரீட்சை திணைக்களத்தால் 2022 ஜனவரி மாதம் நடத்தப்படும் பரீட்சைகள் (மும்மொழிகளிலும்) Reviewed by Irumbu Thirai News on December 11, 2021 Rating: 5

மாணவர்களுக்கு தடுப்பூசி வழங்குவது தொடர்பில் கல்வி அமைச்சரின் அறிவிப்பு!

December 10, 2021

மாணவர்களுக்கு தடுப்பூசி வழங்குவது தொடர்பான விபரங்களை கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். 
 
அந்த வகையில் 16-19 வயதுக்குட்பட்டவர்களுக்கு இரண்டாவது தடுப்பூசியும் 12-15 வயதுக்குட்பட்டவர்களுக்கு முதலாவது தடுப்பூசியும் வழங்குவதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக 

அவர் தெரிவித்துள்ளார். 
 
மேலும் இவ்வாறு தடுப்பூசிகள் வழங்கப்படும் திகதிகள் விரைவில் அறிவிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
மாணவர்களுக்கு தடுப்பூசி வழங்குவது தொடர்பில் கல்வி அமைச்சரின் அறிவிப்பு! மாணவர்களுக்கு தடுப்பூசி வழங்குவது தொடர்பில் கல்வி அமைச்சரின் அறிவிப்பு! Reviewed by Irumbu Thirai News on December 10, 2021 Rating: 5

நீடிக்கப்பட்டது பல்கலைக்கழக மாணவர்களின் பதிவு!

December 10, 2021

2020 உயர் தரத்திற்கு தோற்றி பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர்களை பதிவு செய்யும் நடவடிக்கை நீடிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 
 
அந்த வகையில் இன்றுடன் நிறைவடையவிருந்த பதிவு செய்யும் நடவடிக்கை 

இம்மாதம் 16ஆம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீடிக்கப்பட்டது பல்கலைக்கழக மாணவர்களின் பதிவு! நீடிக்கப்பட்டது பல்கலைக்கழக மாணவர்களின் பதிவு! Reviewed by Irumbu Thirai News on December 10, 2021 Rating: 5
Powered by Blogger.