பட்டதாரி பயிலுனர்களை நிரந்தரமாக்கும் நடைமுறையும் அவர்களுக்கான கொடுப்பனவுகளும் (சுற்றறிக்கை இணைப்பு)
Irumbu Thirai News
January 05, 2022
பட்டதாரி பயிலுனர்களை நிரந்தர அடிப்படையில் நியமித்தல் தொடர்பான சுற்றறிக்கை கடிதம் அரச சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது.
அதாவது ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட 51,682 பட்டதாரிகள் ஏற்கனவே பல்வேறு அரசாங்க நிறுவனங்களில் பயிற்சி பெற்று வருகிறார்கள். அந்தப் பயிலுனர்களில் ஒரு வருட பயிற்சியை பூர்த்தி செய்த பட்டதாரி பயிலுனர்கள் 2022-1-3 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக
இணைந்த சேவைக்கும் மாகாண அரச சேவையின் நிரந்தர சேவைக்கும் நியமிப்பதற்கும் ஒரு வருட பயிற்சியை பூர்த்தி செய்திராத பட்டதாரி பயிலுனர்களை 2022-04-01 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் அபிவிருத்தி உத்தியோகத்தர் நிரந்தர சேவைக்கு நியமிக்கும் வரையில் 2022-01-03 ஆம் திகதி முதல் நிரந்தரமாக புதிய பயிற்சி நிலையங்களில் இணைப்பதற்கும் 2021-09-13 ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டிருந்தது.
அதற்கமைய தற்போது நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
ஒவ்வொருவருக்கும் இணைக்கப்பட்டுள்ள சேவை நிலையங்களை 2022-1-7 ஆம் திகதி முதல்
இந்த அமைச்சின் MISCO மென்பொருளில் பிரவேசித்து அறிந்துகொள்ளலாம்.
சகல பயிலுனர்களும் அவர்கள் வதியும் மாவட்டத்தில் அல்லது மாகாணத்தினுள்ளேயே சேவையில் இணைக்கப்பட்டுள்ளனர்.
பாடசாலைகளில் பயிற்சி பெற்றவர்கள் தொடர்ந்தும்
பாடசாலைகளிலேயே தற்காலிகமாக வைத்திருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சம்பளங்கள் மற்றும் கொடுப்பனவுகளை வழங்குவதற்கான நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. (மாதாந்த மொத்த சம்பளம் 41,000 ரூபா எனவும் அறிய முடிகிறது)
குறித்த சுற்றறிக்கை கடிதத்தின் முழு வடிவத்தை கீழே காணலாம்.
பட்டதாரி பயிலுனர்களை நிரந்தரமாக்கும் நடைமுறையும் அவர்களுக்கான கொடுப்பனவுகளும் (சுற்றறிக்கை இணைப்பு)
Reviewed by Irumbu Thirai News
on
January 05, 2022
Rating: