நிரந்தர நியமனத்திற்காக கல்வியமைச்சுக்கு அழைக்கப்பட்ட பட்டதாரி பயிலுனர்கள்
Irumbu Thirai News
January 10, 2022
தேசிய கல்வியற் கல்லூரிகள், ஆசிரியர் கல்லூரிகள், ஆசிரிய மத்திய நிலையங்கள் மற்றும் தேசிய பாடசாலைகளில் பயிற்சி பெற்று 2022-01-03 ம் திகதி தொடக்கம் நிரந்தர நியமனம் பெற்ற கல்வி அமைச்சின் கீழ் நிலைப்படுத்தப்பட்ட பட்டதாரிகள்/ டிப்ளோமோதாரர்கள் தமது நிரந்தர நியமனக் கடிதத்தை
பெற்றுக் கொள்வதற்காக கல்வியமைச்சிற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
மேலும் தேசிய அடையாள அட்டை மற்றும் 2021-12-31 வரை பயிற்சி பெற்றதை உறுதிப்படுத்துவதற்காக தாபன பொறுப்பாளரின் கடிதம் என்பவற்றுடன் வருகை தரவேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
பயிற்சி பெற்ற மாவட்டங்களும் அவர்கள் கல்வியமைச்சிற்கு செல்ல வேண்டிய தினம் என்பவற்றைக் கீழே காணலாம்.
தேசிய பாடசாலைகளின் பட்டியலைக் கீழே காணலாம்.
நிரந்தர நியமனத்திற்காக கல்வியமைச்சுக்கு அழைக்கப்பட்ட பட்டதாரி பயிலுனர்கள்
Reviewed by Irumbu Thirai News
on
January 10, 2022
Rating: