5000 ரூபா மேலதிக கொடுப்பணவிற்கான சுற்றறிக்கை வெளியானது (சுற்றறிக்கை இணைப்பு)

January 13, 2022

அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு மேலதிகமாக வழங்கப்படும் 5,000 ரூபாய்க்கான சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. 
 
குறித்த சுற்றறிக்கையை கீழே காணலாம்.
 

5000 ரூபா மேலதிக கொடுப்பணவிற்கான சுற்றறிக்கை வெளியானது (சுற்றறிக்கை இணைப்பு) 5000 ரூபா மேலதிக கொடுப்பணவிற்கான சுற்றறிக்கை வெளியானது (சுற்றறிக்கை இணைப்பு)  Reviewed by Irumbu Thirai News on January 13, 2022 Rating: 5

கல்வியியற் கல்லூரிகளை ஆரம்பிக்கும் திகதி அறிவிப்பு!

January 13, 2022

கொரோனா பரவல் காரணமாக கல்வியியற் கல்லூரி நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டதுடன் சில கல்வியற்கல்லூரி கொரோனா தொடர்பான நடவடிக்கைகளுக்கும் அரசாங்கத்தினால் பயன்படுத்தப்பட்டன. 
 
இந்நிலையில் கல்வியற் கல்லூரிகளை மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்குமாறு கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன நேற்று(12) அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்திருந்தார். 
 
அந்த வகையில் நாளை மறுதினம்(15) கல்வியற் கல்லூரிகளை ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன் 18ஆம் திகதி முதல் 

கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. 
 
நீண்ட இடைவெளிக்கு பின்னர் கல்வியியல் கல்லூரிகள் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கல்வியியற் கல்லூரிகளை ஆரம்பிக்கும் திகதி அறிவிப்பு! கல்வியியற் கல்லூரிகளை ஆரம்பிக்கும் திகதி அறிவிப்பு! Reviewed by Irumbu Thirai News on January 13, 2022 Rating: 5

10.01.2022 அன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்ட தீர்மானங்கள்

January 11, 2022

10.01.2022 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது எடுக்கப்பட்ட தீர்மானங்களை இங்கு தருகிறோம். 
 
இதில், பல முக்கிய தீர்மானங்கள் அடங்கியுள்ளன. 
 
இதன் முழு வடிவத்தைப் பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க. 
 
முன்னைய அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்களைப் பார்வையிட...
10.01.2022 அன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்ட தீர்மானங்கள் 10.01.2022 அன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்ட தீர்மானங்கள் Reviewed by Irumbu Thirai News on January 11, 2022 Rating: 5

உ. தர பௌதீகவியல் பாடத்தில் பிரயோக பரிசோதனையை அகற்றுதல் (சுற்றுநிருபம் இணைப்பு)

January 11, 2022

உ. தர பௌதீகவியல் பாட பரிந்துரையில் பாதரசம் பயன்படுத்தும் பிரயோக பரிசோதனையை அகற்றல் தொடர்பான கல்வியமைச்சின் 21/2021 இலக்கம் கொண்ட சுற்றறிக்கையை இங்கு தருகிறோம். 
 
இதன் பிரகாரம் குறித்த பாடத்திற்கான பரீட்சை 2023 முதல் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
குறித்த சுற்றுநிருபத்தைக் கீழே காணலாம்.

உ. தர பௌதீகவியல் பாடத்தில் பிரயோக பரிசோதனையை அகற்றுதல் (சுற்றுநிருபம் இணைப்பு) உ. தர பௌதீகவியல் பாடத்தில் பிரயோக பரிசோதனையை அகற்றுதல் (சுற்றுநிருபம் இணைப்பு) Reviewed by Irumbu Thirai News on January 11, 2022 Rating: 5

இலங்கை திறந்த பல்கலைக்கழக LLB தெரிவுப் பரீட்சையின் ஆங்கில பாடத்தை மீண்டும் நடாத்துவது தொடர்பான அறிவித்தல்!

January 11, 2022

இலங்கை திறந்த பல்கலைக்கழக LLB தெரிவுப் பரீட்சையின் ஆங்கில பாடத்தை மீண்டும் நடாத்துவது தொடர்பான அறிவித்தலை பரீட்சைத் திணைக்களம் வெளியிட்டுள்ளது. இது மீண்டும் 05-02-2022 அன்று நடாத்த திட்டமிடப்பட்டுள்ளது. 
 
குறித்த அறிவித்தலை கீழே காணலாம்.

இலங்கை திறந்த பல்கலைக்கழக LLB தெரிவுப் பரீட்சையின் ஆங்கில பாடத்தை மீண்டும் நடாத்துவது தொடர்பான அறிவித்தல்! இலங்கை திறந்த பல்கலைக்கழக LLB தெரிவுப் பரீட்சையின் ஆங்கில பாடத்தை மீண்டும் நடாத்துவது தொடர்பான அறிவித்தல்! Reviewed by Irumbu Thirai News on January 11, 2022 Rating: 5

நிரந்தர நியமனத்திற்காக கல்வியமைச்சுக்கு அழைக்கப்பட்ட பட்டதாரி பயிலுனர்கள்

January 10, 2022

தேசிய கல்வியற் கல்லூரிகள், ஆசிரியர் கல்லூரிகள், ஆசிரிய மத்திய நிலையங்கள் மற்றும் தேசிய பாடசாலைகளில் பயிற்சி பெற்று 2022-01-03 ம் திகதி தொடக்கம் நிரந்தர நியமனம் பெற்ற கல்வி அமைச்சின் கீழ் நிலைப்படுத்தப்பட்ட பட்டதாரிகள்/ டிப்ளோமோதாரர்கள் தமது நிரந்தர நியமனக் கடிதத்தை 

பெற்றுக் கொள்வதற்காக கல்வியமைச்சிற்கு அழைக்கப்பட்டுள்ளனர். 
 
மேலும் தேசிய அடையாள அட்டை மற்றும் 2021-12-31 வரை பயிற்சி பெற்றதை உறுதிப்படுத்துவதற்காக தாபன பொறுப்பாளரின் கடிதம் என்பவற்றுடன் வருகை தரவேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. 
 
பயிற்சி பெற்ற மாவட்டங்களும் அவர்கள் கல்வியமைச்சிற்கு செல்ல வேண்டிய தினம் என்பவற்றைக் கீழே காணலாம்.
 
தேசிய பாடசாலைகளின் பட்டியலைக் கீழே காணலாம்.


நிரந்தர நியமனத்திற்காக கல்வியமைச்சுக்கு அழைக்கப்பட்ட பட்டதாரி பயிலுனர்கள் நிரந்தர நியமனத்திற்காக கல்வியமைச்சுக்கு அழைக்கப்பட்ட பட்டதாரி பயிலுனர்கள் Reviewed by Irumbu Thirai News on January 10, 2022 Rating: 5

Online Application: Marking Examiners FOR G.C.E. (A/L) - 2021 (2022)

January 10, 2022

G.C.E. A/L Examination – 2021(2022) 
Application for of Marking Examiners & Chief Marking Examiners 
 
உயர்தரப் பரீட்சை 2021 (2022) மற்றும் பிரதம பரீட்சகர்களுக்கான விண்ணப்ப படிவங்களை நிகழ்நிலையில் ஏற்றுக்கொள்வது தொடர்பான அறிவித்தலை இலங்கை பரீட்சைத் திணைக்களம் வெளியிட்டுள்ளது. 
 
Closing date: 20-01-2022. 
 
Click the link below for video guidance: 

 
Click the link below for technical instructions. 
 
Click the link below for  instructions for chief examiners:
 
Click the link below for online application:

Click the link below for PDF application:
 

 
 
 
 
 
 
 
 
 
Online Application: Marking Examiners FOR G.C.E. (A/L) - 2021 (2022) Online Application: Marking Examiners FOR G.C.E. (A/L) - 2021 (2022) Reviewed by Irumbu Thirai News on January 10, 2022 Rating: 5

பரீட்சைகள் ஒத்திவைக்கப்படுமா? - கல்வி அமைச்சின் செயலாளர்

January 09, 2022

கொரோனா பரவல் காரணமாக கடந்த வருடம் நடைபெறவிருந்த சாதாரணதர, உயர்தரம் மற்றும் புலமைப் பரிசில் பரீட்சைகள் என்பன இந்த வருடத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன. 
 
இந்நிலையில் இந்த பரீட்சைகள் மீண்டும் 

ஒத்தி வைக்கப்பட மாட்டாது எனவும் குறித்த திகதியில் சகல பரீட்சைகளும் நடைபெறும் எனவும் கல்வியமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார். 
 
குறித்த பரிட்சைகள் மேலும் தாமதமடைந்தால் பெரும்பாலான மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
பரீட்சைகள் ஒத்திவைக்கப்படுமா? - கல்வி அமைச்சின் செயலாளர் பரீட்சைகள் ஒத்திவைக்கப்படுமா? - கல்வி அமைச்சின் செயலாளர் Reviewed by Irumbu Thirai News on January 09, 2022 Rating: 5

பரீட்சை திணைக்களத்தால் 2022 பெப்ரவரி மாதம் நடத்தப்படும் பரீட்சைகள் (மும்மொழிகளிலும்)

January 08, 2022

பரீட்சை திணைக்களத்தால் 2022 பெப்ரவரி மாதம் நடத்தப்படும் பரீட்சைகளுக்கான நாட்காட்டியை பரீட்சைத் திணைக்களம் வெளியிட்டுள்ளது. இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் சட்டமாணி பட்டடப்படிப்பிற்கான தெரிவுப் பரீட்சையின் 2ம் கட்டம் உட்பட 08 வகையான பரீட்சைகள் பெப்ரவரி மாதத்தில் நடாத்த திட்டமிடப்பட்டுள்ளன. 
 
குறித்த நாட்காட்டியை மும்மொழிகளிலும் இங்கே காணலாம்.
 
பரீட்சை திணைக்களத்தால் 2022 பெப்ரவரி மாதம் நடத்தப்படும் பரீட்சைகள் (மும்மொழிகளிலும்) பரீட்சை திணைக்களத்தால் 2022 பெப்ரவரி மாதம் நடத்தப்படும் பரீட்சைகள் (மும்மொழிகளிலும்) Reviewed by Irumbu Thirai News on January 08, 2022 Rating: 5

அடுத்த வருடம் முதல் உயர்தர பரீட்சையில் புதிய பாடம்!

January 06, 2022

அடுத்த வருடம் (2023) முதல் நடைபெறும் உயர்தரப் பரீட்சையில் 

கொரிய மொழியும் ஒரு பாடமாக இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் ஜி எல் பீரிஸ் தெரிவித்துள்ளார். 
 
தென்கொரியாவுக்கு விஜயம் செய்த அமைச்சர் அங்கு பிரதி பிரதமரும் கல்வி அமைச்சருமான யூ யூன் ஹையை தலைநகர் சியோலில் சந்தித்தவேளை இதனை தெரிவித்துள்ளார். 
 
இதன்போது தென்கொரியாவில் பணிபுரியும் 22,000 இலங்கையர்கள் தொடர்பில் கருத்து தெரிவித்த அமைச்சர் ஜி எல் பீரிஸ், கொரிய மொழி கற்கைகள் 

இலங்கையில் பிரபல்யம் அடைந்து வருவதை சுட்டிக்காட்டினார். பதிலளித்த பிரதிப் பிரதமர், இலங்கையின் தொழில்சார் கல்வி மற்றும் பயிற்சிகளுக்கு உதவி வழங்குவது தொடர்பில் கொரியா பரிசீலிக்கும் என தெரிவித்தார்.
அடுத்த வருடம் முதல் உயர்தர பரீட்சையில் புதிய பாடம்! அடுத்த வருடம் முதல் உயர்தர பரீட்சையில் புதிய பாடம்! Reviewed by Irumbu Thirai News on January 06, 2022 Rating: 5

மத்திய மாகாணம்: 4,545 பேரில் 2,616 பேர் பாடசாலைகளுக்கு...

January 06, 2022

பட்டதாரி பயிலுனர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. 
 
இதில் மத்திய மாகாணத்தில் 4545 பேருக்கு நிரந்தர நியமனம் வழங்கும் நிகழ்வு மாகாண ஆளுநர் லலித் யூ கமகேயின் தலைமையில் மத்திய மாகாண சபை கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. 

குறித்த 4,545 பேரில் 2,616 பேர் பாடசாலைகளுக்கே நியமனம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. 
 
இதேவேளை பட்டதாரி பயிலுனர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்குவது தொடர்பாக பொது நிர்வாக அமைச்சினால் வெளியிடப்பட்ட சுற்றறிக்கையில், பட்டதாரி பயிலுனர்களாக பாடசாலைகளில் பயிற்சி பெற்றவர்கள் பாடசாலைகளுக்கே நியமிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 
 
பொது நிர்வாக அமைச்சினால் வெளியிடப்பட்ட சுற்றறிக்கைக்கு செல்ல இங்கே கிளிக் செய்க...
மத்திய மாகாணம்: 4,545 பேரில் 2,616 பேர் பாடசாலைகளுக்கு... மத்திய மாகாணம்: 4,545 பேரில் 2,616 பேர் பாடசாலைகளுக்கு... Reviewed by Irumbu Thirai News on January 06, 2022 Rating: 5

பட்டதாரி பயிலுனர்களை நிரந்தரமாக்கும் நடைமுறையும் அவர்களுக்கான கொடுப்பனவுகளும் (சுற்றறிக்கை இணைப்பு)

January 05, 2022

பட்டதாரி பயிலுனர்களை நிரந்தர அடிப்படையில் நியமித்தல் தொடர்பான சுற்றறிக்கை கடிதம் அரச சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது. 
 
அதாவது ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட 51,682 பட்டதாரிகள் ஏற்கனவே பல்வேறு அரசாங்க நிறுவனங்களில் பயிற்சி பெற்று வருகிறார்கள். அந்தப் பயிலுனர்களில் ஒரு வருட பயிற்சியை பூர்த்தி செய்த பட்டதாரி பயிலுனர்கள் 2022-1-3 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக 

இணைந்த சேவைக்கும் மாகாண அரச சேவையின் நிரந்தர சேவைக்கும் நியமிப்பதற்கும் ஒரு வருட பயிற்சியை பூர்த்தி செய்திராத பட்டதாரி பயிலுனர்களை 2022-04-01 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் அபிவிருத்தி உத்தியோகத்தர் நிரந்தர சேவைக்கு நியமிக்கும் வரையில் 2022-01-03 ஆம் திகதி முதல் நிரந்தரமாக புதிய பயிற்சி நிலையங்களில் இணைப்பதற்கும் 2021-09-13 ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டிருந்தது. 
 
அதற்கமைய தற்போது நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. ஒவ்வொருவருக்கும் இணைக்கப்பட்டுள்ள சேவை நிலையங்களை 2022-1-7 ஆம் திகதி முதல் 

இந்த அமைச்சின் MISCO மென்பொருளில் பிரவேசித்து அறிந்துகொள்ளலாம். 
 
சகல பயிலுனர்களும் அவர்கள் வதியும் மாவட்டத்தில் அல்லது மாகாணத்தினுள்ளேயே சேவையில் இணைக்கப்பட்டுள்ளனர். 
 
பாடசாலைகளில் பயிற்சி பெற்றவர்கள் தொடர்ந்தும் 

பாடசாலைகளிலேயே தற்காலிகமாக வைத்திருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 
 
சம்பளங்கள் மற்றும் கொடுப்பனவுகளை வழங்குவதற்கான நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. (மாதாந்த மொத்த சம்பளம் 41,000 ரூபா எனவும் அறிய முடிகிறது) 
 
குறித்த சுற்றறிக்கை கடிதத்தின் முழு வடிவத்தை கீழே காணலாம்.

பட்டதாரி பயிலுனர்களை நிரந்தரமாக்கும் நடைமுறையும் அவர்களுக்கான கொடுப்பனவுகளும் (சுற்றறிக்கை இணைப்பு) பட்டதாரி பயிலுனர்களை நிரந்தரமாக்கும் நடைமுறையும் அவர்களுக்கான கொடுப்பனவுகளும் (சுற்றறிக்கை இணைப்பு) Reviewed by Irumbu Thirai News on January 05, 2022 Rating: 5

அதிபர், ஆசிரியர், ஆசிரிய ஆலோசகர்களின் புதிய சம்பள விபரம் (சுற்றறிக்கை இணைப்பு)

January 05, 2022
 

ஆசிரியர்-அதிபர் சம்பள முரண்பாட்டை நீக்குவது தொடர்பாக 2021-8-30 மற்றும் 2022-1-3 ஆம் திகதிகளில் இடம்பெற்ற அமைச்சரவை கூட்டங்களின் போது மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களின் பிரகாரம் இலங்கை அதிபர் சேவை, இலங்கை ஆசிரியர் ஆலோசகர் சேவை மற்றும் இலங்கை ஆசிரியர் சேவைக்கான புதிய சம்பள அளவு திட்டங்கள் தொடர்பான சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. 
 
03/2016(1V) என்ற இலக்கம் கொண்ட இந்த அரசாங்க நிர்வாக சுற்றறிக்கையை பொது சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு இன்றைய தினம் (5) வெளியிட்டுள்ளது. 
 
இந்த சுற்றறிக்கையின் ஏற்பாடுகள் 2022-1-1 ஆம் திகதி முதல் அமல்படுத்தப்படும். தேசிய சம்பள ஆணைக்குழு மற்றும் நிதி அமைச்சின் இணக்கப்பாட்டுடன் இந்த சுற்றறிக்கை வெளியிடப்படுவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
குறித்த சுற்றறிக்கையை கீழே காணலாம்.

அதிபர், ஆசிரியர், ஆசிரிய ஆலோசகர்களின் புதிய சம்பள விபரம் (சுற்றறிக்கை இணைப்பு) அதிபர், ஆசிரியர், ஆசிரிய ஆலோசகர்களின் புதிய சம்பள விபரம் (சுற்றறிக்கை இணைப்பு) Reviewed by Irumbu Thirai News on January 05, 2022 Rating: 5
Powered by Blogger.