ஆசிரியர்களுக்கு 5000 ரூபா கொடுப்பனவு இல்லையா?
Irumbu Thirai News
January 20, 2022
அரச ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுவோர் அனைவருக்கும் 5000 ரூபா கொடுப்பனவு ஜனவரி முதல் வழங்கப்படும் என நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச கடந்த 2ம் திகதியும் அறிவித்திருந்தார்.
இந்நிலையில் அம்பாறை வலயக்கல்வி பணிமனை வெளியிட்டுள்ள அறிவிப்பில் ஆசிரியர்களுக்கு 5000 ரூபா கொடுப்பனவு இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
18/1/2022 கிழக்கு மாகாண கல்வித் திணைக்களத்தில் நடைபெற்ற கணக்காளர்களுக்கான கூட்டத்தின் போது இந்த விடயம் தெரியப்படுத்தபட்டதாக அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே சம்பளப் பட்டியலில் 5000 ரூபா காட்டப்பட்டு இருந்தாலும் அதை வழங்க முடியாத நிலை காணப்படுவதாகவும் அம்பாறை வலயக்கல்விப் பணிமனை கணக்காளரால் வெளியிடப்பட்ட அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர்களுக்கு 5000 ரூபா கொடுப்பனவு இல்லையா?
Reviewed by Irumbu Thirai News
on
January 20, 2022
Rating: