கொரோனா தொற்றுக்குள்ளானவர்களுக்காக அமைக்கப்பட்ட பரீட்சை நிலையங்கள்..

January 20, 2022

நாளை மறுதினம் நடைபெறும் புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான விவரங்களை பரீட்சைகள் ஆணையாளர் L.M.D. தர்மசேன தெரிவித்துள்ளார். 
 
வழமைக்கு மாற்றமாக ஞாயிற்றுக்கிழமை அல்லாமல் சனிக்கிழமை இம்முறை பரீட்சை நடைபெறுகிறது. 
 
முதலாவது வினாப்பத்திரம் காலை 9:30 மணியிலிருந்து 10:30 வரை நடைபெறும். இரண்டாவது வினாப்பத்திரம் காலை 11 மணியிலிருந்து 12:15 மணி வரை நடைபெறும். 
 
இம்முறை 2943 பரீட்சை நிலையங்களில் மொத்தம் 340,508 பரீட்சார்த்திகள் பரிட்சைக்கு தோற்றுகின்றனர். 
 
மேலும் கொரோனா தொற்றுக்குள்ளான மாணவர்களுக்காக 108 பிரத்தியேக பரீட்சை நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளன என அவர் தெரிவித்தார்.
கொரோனா தொற்றுக்குள்ளானவர்களுக்காக அமைக்கப்பட்ட பரீட்சை நிலையங்கள்.. கொரோனா தொற்றுக்குள்ளானவர்களுக்காக அமைக்கப்பட்ட பரீட்சை நிலையங்கள்.. Reviewed by Irumbu Thirai News on January 20, 2022 Rating: 5

புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களின் பெற்றோர்களுக்கு பரீட்சை ஆணையாளரின் அறிவுறுத்தல்கள்

January 20, 2022

நாளை மறுதினம்(22) புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கும் அவர்களின் பெற்றோர்களுக்கும் முக்கியமான அறிவுறுத்தல்களை பரீட்சைகள் ஆணையாளர் L.M.D. தர்மசேன வழங்கியுள்ளார். 
 
இன்று கொழும்பில் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இந்த அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார். 
 
அவர் தெரிவித்ததாவது, 
 
பரீட்சை நெருங்கும் இந்த தருணத்தில் மாணவர்கள் மனதளவில் பாதிக்கப்படும் வகையிலோ அவர்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தும் வகையிலோ பெற்றோர்கள் நடந்து கொள்ளக்கூடாது. 
 
முக்கியமாக 190 க்கும் அதிகமான புள்ளிகளை பெற வேண்டுமென மாணவர்களுக்கு அழுத்தம் பிரயோகிக்க கூடாது. 
 
மேலும் பரீட்சை தினம் அன்று காலை வேளை அதிகமாக உண்ணக் கொடுக்க வேண்டாம். அவ்வாறு அதிகமாக உண்ணக் கொடுக்கும் பட்சத்தில் மாணவர்கள் உரிய முறையில் பரீட்சை எழுத முடியாமல் நித்திரை அல்லது வயிற்று வலி உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க நேரிடலாம். 
 
அதேவேளை தண்ணீர் போத்தல், அடிமட்டம், பென்சில், தொற்று நீக்கி திரவம் (Sanitizer) உள்ளிட்ட முக்கியமான பொருட்களை கட்டாயம் கொடுத்து அனுப்ப வேண்டும். அவ்வாறு செய்யாத பட்சத்தில் பரீட்சை மேற்பார்வையாளரிடம் கூறி வேறு மாணவர்களிடமிருந்து அந்தப் பொருட்களை பெறும் போது நேரம் வீணாவதோடு தேவையற்ற அசௌகரியங்களும் ஏற்படலாம். 
 
மேலும் சகலரும் உரிய சுகாதார விதிமுறைகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களின் பெற்றோர்களுக்கு பரீட்சை ஆணையாளரின் அறிவுறுத்தல்கள் புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களின் பெற்றோர்களுக்கு பரீட்சை ஆணையாளரின் அறிவுறுத்தல்கள் Reviewed by Irumbu Thirai News on January 20, 2022 Rating: 5

ஆசிரியர்களுக்கு 5000 ரூபா கொடுப்பனவு இல்லையா?

January 20, 2022

அரச ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுவோர் அனைவருக்கும் 5000 ரூபா கொடுப்பனவு ஜனவரி முதல் வழங்கப்படும் என நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச கடந்த 2ம் திகதியும் அறிவித்திருந்தார். 
 
இந்நிலையில் அம்பாறை வலயக்கல்வி பணிமனை வெளியிட்டுள்ள அறிவிப்பில் ஆசிரியர்களுக்கு 5000 ரூபா கொடுப்பனவு இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
18/1/2022 கிழக்கு மாகாண கல்வித் திணைக்களத்தில் நடைபெற்ற கணக்காளர்களுக்கான கூட்டத்தின் போது இந்த விடயம் தெரியப்படுத்தபட்டதாக அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
எனவே சம்பளப் பட்டியலில் 5000 ரூபா காட்டப்பட்டு இருந்தாலும் அதை வழங்க முடியாத நிலை காணப்படுவதாகவும் அம்பாறை வலயக்கல்விப் பணிமனை கணக்காளரால் வெளியிடப்பட்ட அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர்களுக்கு 5000 ரூபா கொடுப்பனவு இல்லையா? ஆசிரியர்களுக்கு 5000 ரூபா கொடுப்பனவு இல்லையா? Reviewed by Irumbu Thirai News on January 20, 2022 Rating: 5

ஜப்பானில் வேலைவாய்ப்பு: புதிய இணையதள பக்கத்தை அறிமுகம் செய்த அரசாங்கம்!

January 19, 2022

ஜப்பானில் வேலைவாய்ப்பு தொடர்பான தகவல்களை வழங்கவும் அதற்காக விண்ணப்பிக்கவும் புதிய இணையதள பக்கம் அரசினால் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. 
 
இது தொடர்பான நிகழ்வு நேற்றைய தினம் இடம்பெற்றது. இந்நிகழ்வில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு ராஜாங்க அமைச்சர் பியங்கர ஜயரத்ன மற்றும் இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் ஆகியோர் கலந்து கொண்டனர். 
 
குறித்த இணைய பக்கத்திற்கு செல்ல கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க.
ஜப்பானில் வேலைவாய்ப்பு: புதிய இணையதள பக்கத்தை அறிமுகம் செய்த அரசாங்கம்! ஜப்பானில் வேலைவாய்ப்பு: புதிய இணையதள பக்கத்தை அறிமுகம் செய்த அரசாங்கம்! Reviewed by Irumbu Thirai News on January 19, 2022 Rating: 5

இணைய வழியில் கற்பித்தாலும் சட்ட நடவடிக்கை!

January 19, 2022

நடைபெறவுள்ள பரீட்சைகளை முன்னிட்டு அதற்குரிய கருத்தரங்குகள் மேலதிக வகுப்புக்கள் போன்றவற்றுக்கு தடை விதிக்கப்பட்ட பின்னர் இணைய வழியில் கற்பித்தல் நடவடிக்கையில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் L.M.D. தர்மசேன தெரிவித்துள்ளார். 
 
தடையை மீறி இணைய வழியில் கருத்தரங்குகள் மேலதிக வகுப்புக்கள் நடத்தப்படுவதாக தமக்கு முறைப்பாடு கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 
 
புலமைப்பரிசில் பரீட்சை இம்மாதம் 22ஆம் திகதி நடைபெறுவதை முன்னிட்டு நேற்று நள்ளிரவு முதல் மேலதிக வகுப்புக்கள் கருத்தரங்குகள் உட்பட அது தொடர்பான சகல விடயங்களுக்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. 
 
இதேவேளை பெப்ரவரி 7 ஆம் திகதி ஆரம்பமாகும் உயர்தரப் பரீட்சையை முன்னிட்டு பெப்ரவரி முதலாம் திகதி நள்ளிரவு முதல் மேலதிக வகுப்புக்கள் கருத்தரங்குகள் உட்பட மாதிரி வினாப்பத்திரங்களை வெளியிடல் அச்சிடல் போன்ற சகல விடயங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இணைய வழியில் கற்பித்தாலும் சட்ட நடவடிக்கை! இணைய வழியில் கற்பித்தாலும் சட்ட நடவடிக்கை! Reviewed by Irumbu Thirai News on January 19, 2022 Rating: 5

ஒரே பாடசாலையைச் சேர்ந்த 15 பேருக்கு கொரோனா!

January 18, 2022

ஒரே பாடசாலையைச் சேர்ந்த மாணவர்கள், ஆசிரியர்கள் உட்பட 15 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 
 
ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட கினிகத்தேனை பிரதேச பாடசாலை ஒன்றிலேயே இவ்வாறு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
 
இதனைத் தொடர்ந்து குறித்த வகுப்புகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதோடு தொற்று நீக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. மேலும் உயிர் குமிழி (Bio Bubble) முறைமையின் கீழ் கற்றல் நடவடிக்கைகளை முன்னெடுக்க சுகாதார தரப்பு ஆலோசனை வழங்கியுள்ளது.
ஒரே பாடசாலையைச் சேர்ந்த 15 பேருக்கு கொரோனா! ஒரே பாடசாலையைச் சேர்ந்த 15 பேருக்கு கொரோனா! Reviewed by Irumbu Thirai News on January 18, 2022 Rating: 5

சகல ஏற்பாடுகளும் பூர்த்தி: - பரீட்சைத் திணைக்களம்

January 18, 2022

கடந்த வருடத்திற்குரிய தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையை இம்மாதம் 22ஆம் திகதி சுகாதார வழிமுறைகளுக்கு அமைவாக நடத்துவதற்குரிய சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. 
 
இம்முறை இந்த பரீட்சைக்காக 496 இணைப்பு நிலையங்களும் 2,943 பரீட்சை நிலையங்களும் உருவாக்கப்பட்டுள்ளன. இம்முறை 340,508 மாணவர்கள் பரிட்சைக்கு தோற்றுகின்றனர். 
 
மேலும் மாணவர்கள் உட்பட சகலரும் சுகாதார நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என பரீட்சைகள் ஆணையாளர் L.M.D. தர்மசேன தெரிவித்துள்ளார்.
சகல ஏற்பாடுகளும் பூர்த்தி: - பரீட்சைத் திணைக்களம் சகல ஏற்பாடுகளும் பூர்த்தி: -  பரீட்சைத் திணைக்களம் Reviewed by Irumbu Thirai News on January 18, 2022 Rating: 5

13-01-2022 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) / Official Government Gazette Released on 13-01-2022

January 15, 2022

Official Government Gazette Released on 13-01-2022. 
 
13-01-2022 அன்று வெளியான அரச வர்த்தமானியை தமிழ், ஆங்கிலம், சிங்களம் ஆகிய மொழிகளில் இங்கு தருகிறோம். இதில் பல முக்கிய அறிவித்தல்கள் காணப்படுகின்றன. கீழே உள்ள உரிய லிங்கைக் கிளிக் செய்து உரிய மொழியில் முழுமையாகப் பார்வையிடுக. 
 
தமிழில் பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க. 
 
ஆங்கிலத்தில் பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க. 
 
சிங்களத்தில் பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க. 
 
முன்னைய வர்த்தமானி அறிவித்தலுக்கு செல்ல...
13-01-2022 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) / Official Government Gazette Released on 13-01-2022 13-01-2022 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) / Official Government Gazette Released on 13-01-2022 Reviewed by Irumbu Thirai News on January 15, 2022 Rating: 5

புலமைப்பரிசில் மற்றும் உயர்தர பரீட்சை தொடர்பில் பரீட்சை திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு!

January 15, 2022

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை மற்றும் உயர்தர பரீட்சை தொடர்பில் இலங்கை பரீட்சைகள் திணைக்களம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

அதாவது தரம் 5 புலமைப்பரிசில் தொடர்பிலான கருத்தரங்குகள் மேலதிக வகுப்புகள் என்பவை எதிர்வரும் 
 
18 ஆம் திகதி நள்ளிரவு முதல் தடை செய்யப்படுவதாக திணைக்களம் அறிவித்துள்ளது. 
 
அதேபோல் உயர்தரப் பரீட்சைக்குரிய கருத்தரங்குகள் மேலதிக வகுப்புக்கள் என்பவற்றை நடாத்த எதிர்வரும் பெப்ரவரி முதலாம் திகதி நள்ளிரவு முதல் தடை விதிக்கப்படுவதாக தெரிவித்துள்ளது.
புலமைப்பரிசில் மற்றும் உயர்தர பரீட்சை தொடர்பில் பரீட்சை திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு! புலமைப்பரிசில் மற்றும் உயர்தர பரீட்சை தொடர்பில் பரீட்சை  திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு! Reviewed by Irumbu Thirai News on January 15, 2022 Rating: 5

தடுப்பூசி போடாதவர்களைக் கைது செய்யும் நாடு

January 15, 2022

கொரோனா பரவலானது பெரும்பாலும் எல்லா நாடுகளினதும் இயல்பு நிலையை பாதித்துள்ளது. 
 
இந்நிலையில் பிலிப்பைன்ஸ் நாட்டிலும் கொரோனா தீவிரமடைந்துள்ளது. இதை கட்டுப்படுத்துவதற்காக அந்நாட்டு அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. 
 
தடுப்பூசி செலுத்தும் பணிகளை மும்முரமாக செய்துவரும் அரசாங்கம் தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு எச்சரிக்கையும் விடுத்துள்ளது. 
 
இது தொடர்பில் பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி டொடி ரிஹோ டுடர்டி புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 
 
அதாவது தடுப்பூசி செலுத்தாதவர்கள் வீட்டை விட்டு வெளியே 

வரக்கூடாது அவ்வாறு வெளியேறும் பட்சத்தில் கைது செய்யப்படுவார்கள் என்று அறிவித்துள்ளார். 
 
இந்த அறிவித்தலின் படி செயற்படுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவும் பிறப்பித்துள்ளார். எனவே அதிகாரிகள் தற்போது தடுப்பூசி செலுத்தாதவர்கள் தொடர்பான விபரங்களை மும்முரமாக திரட்டி வருகின்றனர். 
 
இதேவேளை தடுப்பூசி செலுத்தாதவர்கள் பொதுப் போக்குவரத்தை பயன்படுத்த கூடாது என்ற விடயம் ஏற்கனவே அமுலில் இருந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

தடுப்பூசி போடாதவர்களைக் கைது செய்யும் நாடு தடுப்பூசி போடாதவர்களைக் கைது செய்யும் நாடு Reviewed by Irumbu Thirai News on January 15, 2022 Rating: 5

அதிபர், ஆசிரியர், ஆசிரிய ஆலோசகர் சேவை தொடர்பில் வெளியானது விசேட வர்த்தமானி (மும்மொழிகளிலும் வர்த்தமானி இணைப்பு)

January 15, 2022

இலங்கை அதிபர் சேவை, இலங்கை ஆசிரியர் சேவை, இலங்கை ஆசிரியர் ஆலோசகர் சேவை என்பவற்றை அகப்படுத்தப்பட்ட சேவையாக பிரகடனப்படுத்தி விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. 
 
2262/45 இலக்கம் கொண்ட குறித்த விசேட வர்த்தமானி 13-01-2022 திகதியிடப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. 

கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேராவின் கையொப்பத்துடன் வெளியான இந்த வர்த்தமானியானது 2021 ஆகஸ்ட் 30ஆம் திகதி முதல் அமுலுக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
ஆங்கில வர்த்தமானியை பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க. 
 
சிங்கள வர்த்தமானியை பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க. 
 
தமிழ் வர்த்தமானியை பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க.
அதிபர், ஆசிரியர், ஆசிரிய ஆலோசகர் சேவை தொடர்பில் வெளியானது விசேட வர்த்தமானி (மும்மொழிகளிலும் வர்த்தமானி இணைப்பு) அதிபர், ஆசிரியர், ஆசிரிய ஆலோசகர் சேவை தொடர்பில் வெளியானது விசேட வர்த்தமானி (மும்மொழிகளிலும் வர்த்தமானி இணைப்பு) Reviewed by Irumbu Thirai News on January 15, 2022 Rating: 5

07-01-2022 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) / Official Government Gazette Released on 07-01-2022

January 15, 2022

Official Government Gazette Released on 07-01-2022. 
 
07-01-2022 அன்று வெளியான அரச வர்த்தமானியை தமிழ், ஆங்கிலம், சிங்களம் ஆகிய மொழிகளில் இங்கு தருகிறோம். இதில் பல முக்கிய அறிவித்தல்கள் காணப்படுகின்றன. கீழே உள்ள உரிய லிங்கைக் கிளிக் செய்து உரிய மொழியில் முழுமையாகப் பார்வையிடுக. 
 
தமிழில் பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க. 
 
ஆங்கிலத்தில் பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க. 
 
சிங்களத்தில் பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க. 
 
 
முன்னைய வர்த்தமானி அறிவித்தலுக்கு செல்ல...
07-01-2022 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) / Official Government Gazette Released on 07-01-2022 07-01-2022 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) / Official Government Gazette Released on 07-01-2022 Reviewed by Irumbu Thirai News on January 15, 2022 Rating: 5

5000 ரூபா மேலதிக கொடுப்பணவிற்கான சுற்றறிக்கை வெளியானது (சுற்றறிக்கை இணைப்பு)

January 13, 2022

அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு மேலதிகமாக வழங்கப்படும் 5,000 ரூபாய்க்கான சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. 
 
குறித்த சுற்றறிக்கையை கீழே காணலாம்.
 

5000 ரூபா மேலதிக கொடுப்பணவிற்கான சுற்றறிக்கை வெளியானது (சுற்றறிக்கை இணைப்பு) 5000 ரூபா மேலதிக கொடுப்பணவிற்கான சுற்றறிக்கை வெளியானது (சுற்றறிக்கை இணைப்பு)  Reviewed by Irumbu Thirai News on January 13, 2022 Rating: 5
Powered by Blogger.