28-01-2022 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) / Official Government Gazette Released on 28-01-2022

February 06, 2022

28-01-2022 அன்று வெளியான அரச வர்த்தமானியை தமிழ், ஆங்கிலம், சிங்களம் ஆகிய மொழிகளில் இங்கு தருகிறோம். இதில் பல முக்கிய அறிவித்தல்கள் காணப்படுகின்றன. கீழே உள்ள உரிய லிங்கைக் கிளிக் செய்து உரிய மொழியில் முழுமையாகப் பார்வையிடுக. 
 
தமிழில் பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க. 
 
ஆங்கிலத்தில் பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க. 
 
சிங்களத்தில் பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க. 
 
முன்னைய வர்த்தமானி அறிவித்தலுக்கு செல்ல...
28-01-2022 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) / Official Government Gazette Released on 28-01-2022 28-01-2022 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) / Official Government Gazette Released on 28-01-2022 Reviewed by Irumbu Thirai News on February 06, 2022 Rating: 5

21-01-2022 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) / Official Government Gazette Released on 21-01-2022

February 06, 2022

21-01-2022 அன்று வெளியான அரச வர்த்தமானியை தமிழ், ஆங்கிலம், சிங்களம் ஆகிய மொழிகளில் இங்கு தருகிறோம். 
 
இதில் பல முக்கிய அறிவித்தல்கள் காணப்படுகின்றன. கீழே உள்ள உரிய லிங்கைக் கிளிக் செய்து உரிய மொழியில் முழுமையாகப் பார்வையிடுக. 
 
தமிழில் பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க. 
 
ஆங்கிலத்தில் பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க.
 
சிங்களத்தில் பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க.

முன்னைய வர்த்தமானி அறிவித்தலுக்கு செல்ல...
21-01-2022 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) / Official Government Gazette Released on 21-01-2022 21-01-2022 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) / Official Government Gazette Released on 21-01-2022 Reviewed by Irumbu Thirai News on February 06, 2022 Rating: 5

31.01.2022 அன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்ட தீர்மானங்கள்

February 06, 2022

31.01.2022 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது எடுக்கப்பட்ட தீர்மானங்களை இங்கு தருகிறோம். 
 
இதில், பல முக்கிய தீர்மானங்கள் அடங்கியுள்ளன. 
 
இதன் முழு வடிவத்தைப் பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க. 
 
முன்னைய அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்களைப் பார்வையிட...
31.01.2022 அன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்ட தீர்மானங்கள் 31.01.2022 அன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்ட தீர்மானங்கள் Reviewed by Irumbu Thirai News on February 06, 2022 Rating: 5

24.01.2022 அன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்ட தீர்மானங்கள்

February 06, 2022

24.01.2022 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது எடுக்கப்பட்ட தீர்மானங்களை இங்கு தருகிறோம். 
 
இதில், பல முக்கிய தீர்மானங்கள் அடங்கியுள்ளன. 
 
இதன் முழு வடிவத்தைப் பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க.
24.01.2022 அன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்ட தீர்மானங்கள் 24.01.2022 அன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்ட தீர்மானங்கள் Reviewed by Irumbu Thirai News on February 06, 2022 Rating: 5

அதிபர் ஆசிரியர் சங்கங்களின் கோரிக்கையை நிறைவேற்றிய கல்வி அமைச்சு! சகல பாடசாலைகளுக்கும் விடுமுறை என அறிவிப்பு! (அறிவித்தல் இணைப்பு)

February 02, 2022

உயர்தர பரீட்சை நடைபெறும் காலப்பகுதியில் ஆரம்பப்பிரிவு தவிர்ந்த ஏனைய தரங்களுக்கு விடுமுறை வழங்க அரசு ஏற்கனவே தீர்மானித்தது. 
 
ஆனால் ஆரம்பப்பிரிவை மாத்திரம் நடத்துவது பல்வேறு நடைமுறை சிக்கல்களை ஏற்படுத்தும் என சுட்டிக்காட்டி அதிபர் ஆசிரியர் சங்கங்கள் கல்வி அமைச்சரிடமும் கல்வி அமைச்சின் செயலாளரிடமும் இதுதொடர்பில் கோரிக்கைகளை முன்வைத்து ஆரம்ப பிரிவுக்கும் விடுமுறை வழங்குமாறு வேண்டுகோள் விடுத்தன. 
 
இந்நிலையில் கல்வி அமைச்சின் ஊடக செயலாளரின் கையொப்பத்துடன் இன்று வெளியான விசேட அறிவித்தலின் படி உயர்தரப் பரீட்சை நடைபெறும் காலப்பகுதியில் சகல பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
இந்த விஷேட அறிவித்தலின் படி, உயர்தரப் பரீட்சை நடைபெறுவதை முன்னிட்டு அரச மற்றும் அரச அனுமதி பெற்ற தனியார் பாடசாலைகளின் சகல தரங்களுக்கும் பெப்ரவரி மாதம் 7ம் திகதி முதல் விடுமுறை வழங்கப்பட்டு மீண்டும் மார்ச் மாதம் 7ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
இதேவேளை நேற்றைய தினம் கண்டியில் நடைபெற்ற இலங்கை ஆசிரியர் சங்கத்தின் கண்டி மாவட்டத்திற்கான வருடாந்த பொதுக் கூட்டத்தின் போது உரையாற்றிய இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின், 
 
ஆரம்ப பிரிவை மாத்திரம் நடத்துவது பல்வேறு சிக்கல்களை உருவாக்கும் என்பதால் ஆரம்ப பிரிவுக்கும் விடுமுறை வழங்குமாறு கல்வி அமைச்சரிடமும் கல்வி அமைச்சின் செயலாளரிடமும் தமது சங்கம் கோரிக்கைகளை முன் வைத்ததாக அவர் தெரிவித்தார்.
 
விடுமுறை வழங்குவது தொடர்பில் கல்வி அமைச்சின் விசேட அறிவித்தலை கீழே காணலாம்.
 

 
அதிபர் ஆசிரியர் சங்கங்களின் கோரிக்கையை நிறைவேற்றிய கல்வி அமைச்சு! சகல பாடசாலைகளுக்கும் விடுமுறை என அறிவிப்பு! (அறிவித்தல் இணைப்பு) அதிபர் ஆசிரியர் சங்கங்களின் கோரிக்கையை நிறைவேற்றிய கல்வி அமைச்சு! சகல பாடசாலைகளுக்கும் விடுமுறை என அறிவிப்பு! (அறிவித்தல் இணைப்பு) Reviewed by Irumbu Thirai News on February 02, 2022 Rating: 5

மட்டக்களப்பு தேசிய கல்வியற் கல்லூரி மாணவர்களுக்கு சுகயீன விடுமுறை!

January 29, 2022

மட்டக்களப்பு தேசிய கல்வியற் கல்லூரி மாணவர்களுக்கு சுகயீன விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அதன் பீடாதிபதி M.I.M. NAWAS தெரிவித்துள்ளார். 
 
தற்போதைய நிலையில் கொரோனா பரவலைக் கருத்திற்கொண்டு மாணவர்களின் பாதுகாப்பை மையப்படுத்தி இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். 
 
எனவே ஆசிரிய மாணவர்களின் மற்றும் பெற்றோரின் விருப்பத்திற்கு அமைய கல்லூரியிலிருந்து வெளியேறலாம் என அவர் மேலும் தெரிவித்தார்.
மட்டக்களப்பு தேசிய கல்வியற் கல்லூரி மாணவர்களுக்கு சுகயீன விடுமுறை! மட்டக்களப்பு தேசிய கல்வியற் கல்லூரி மாணவர்களுக்கு சுகயீன விடுமுறை! Reviewed by Irumbu Thirai News on January 29, 2022 Rating: 5

அதிபர் ஆசிரியரின் சம்பள அதிகரிப்புக்கு இணையாக தமது சம்பளமும் அதிகரிக்கப்பட வேண்டும்: போராட்டத்தை ஆரம்பித்த கல்வி நிர்வாக சேவை சங்கம்!

January 26, 2022

அதிபர், ஆசிரியர்களின் சம்பள அதிகரிப்புக்கு இணையாக தமது சம்பளமும் அதிகரிக்கப்பட வேண்டுமென இலங்கை கல்வி நிர்வாக சேவை சங்கத்தினால் இன்று தொழிற்சங்க நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 
 
இன்றைய தினம் சுகயீன விடுமுறை மூலம் தமது தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பித்துள்ளனர். இன்றைய தினம் ஆரம்பிக்கப்பட்ட இந்த தொழிற்சங்க நடவடிக்கையை மேலும் கடுமையாக்குவதா இல்லையா என்பது தொடர்பான தீர்மானம் இன்று மாலை தொழிற்சங்க அங்கத்தவர்களுடன் இடம்பெறும் கலந்துரையாடலின் போது தீர்மானிக்கப்படும் என அந்த சங்கத்தின் செயலாளர் நீல் அத்துகோரல தெரிவித்துள்ளார்.
அதிபர் ஆசிரியரின் சம்பள அதிகரிப்புக்கு இணையாக தமது சம்பளமும் அதிகரிக்கப்பட வேண்டும்: போராட்டத்தை ஆரம்பித்த கல்வி நிர்வாக சேவை சங்கம்! அதிபர் ஆசிரியரின் சம்பள அதிகரிப்புக்கு இணையாக தமது சம்பளமும் அதிகரிக்கப்பட வேண்டும்: போராட்டத்தை ஆரம்பித்த கல்வி நிர்வாக சேவை சங்கம்! Reviewed by Irumbu Thirai News on January 26, 2022 Rating: 5

ஆசிரியர் சங்கத்தின் ஆர்ப்பாட்டம்! ஒரு வாரத்திற்குள் தீர்வு தருவதாக உறுதிமொழி!

January 24, 2022

நீண்ட காலமாக மத்திய மாகான ஆசிரிய உதவியாளர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கப்படாமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்றைய தினம்(24) ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து ஜனாதிபதி செயலக உயர் அதிகாரிகள் மற்றும் நிதி அமைச்சின் உயர் அதிகாரிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதன் பிறகு ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின்,

இந்தப் பிரச்சினையை ஒரு வாரத்திற்குள் தீர்ப்பதாக அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர். மத்திய மாகாண ஆளுனரின் கவனமின்மையினாலே இந்த பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதுமட்டுமல்லாமல் உதவி ஆசிரியர்களின் நியமனத்திற்காக நிதியமைச்சிலிருந்து வழங்கப்பட்ட நிதி மீண்டும் திருப்பி அனுப்பப்பட்டுள்ளது.  மத்திய மாகாணத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்களும் இந்த விடயத்தில் கவனம் இல்லாமல் இருக்கின்றனர் என அவர் தெரிவித்தார்.

ஆசிரியர் சங்கத்தின் ஆர்ப்பாட்டம்! ஒரு வாரத்திற்குள் தீர்வு தருவதாக உறுதிமொழி! ஆசிரியர் சங்கத்தின் ஆர்ப்பாட்டம்! ஒரு வாரத்திற்குள் தீர்வு தருவதாக உறுதிமொழி! Reviewed by Irumbu Thirai News on January 24, 2022 Rating: 5

புலமைப்பரிசில் வினாத்தாள்கள் ஏற்கனவே வெளியானதா?

January 24, 2022

கடந்த வருடம்(2021) நடைபெறவிருந்த தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை கொரோனா பரவல் காரணமாக பலதடவை பிற்போடப்பட்டு கடந்த சனிக்கிழமைதான் (22) நடைபெற்றது. 
 
இந்நிலையில் நடைபெற்ற பரீட்சை தொடர்பில் பல குற்றச்சாட்டுகள் வெளிவரும் நிலையில் பரீட்சை வினாத்தாள் வழங்கப்படுவதற்கு முன்பாகவே வினாத்தாள் வெளியானதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. 
 
இது தொடர்பில் கருத்து தெரிவித்த பரீட்சைகள் ஆணையாளர் L.M.D. தர்மசேன அவர்கள், 
 
பரீட்சை தினத்திற்கு முன்பாகவே வினாத்தாள் வெளியானதாக கூறப்படும் தகவல்களில் எவ்வித உண்மையும் இல்லை என தெரிவித்துள்ளார். 
 
வினாத்தாள்கள் மாணவர்களிடம் கையளிக்கப்பட்ட பின்னர் அவற்றுள் சில நிழல்படம் எடுக்கப்பட்டு சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்டுள்ளன. இதுதான் நடந்துள்ளது. இதனால் பரீட்சைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார். 
 
இதேவேளை குறித்த வினாத்தாள்கள் திருத்தும் பணிகள் எதிர்வரும் 31 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
புலமைப்பரிசில் வினாத்தாள்கள் ஏற்கனவே வெளியானதா? புலமைப்பரிசில் வினாத்தாள்கள் ஏற்கனவே வெளியானதா? Reviewed by Irumbu Thirai News on January 24, 2022 Rating: 5

புலமைப்பரிசில் பரீட்சையில் நடைபெற்ற குளறுபடிகள்! மூன்று மட்டங்களில் விசாரணை!!

January 24, 2022

கொரோனா காரணமாக பல்வேறு சந்தர்ப்பங்களில் பிற்போடப்பட்ட 2021ம் வருடத்திற்குரிய புலமைப்பரிசில் பரீட்சை நேற்று முன்தினம்(22) நடைபெற்றது. 
 
உரிய நேரத்திற்கு வினாத்தாள்கள் தரப்படவில்லை என்றும் அதன் காரணமாக விடையளிக்க போதுமான நேரம் இல்லை என்றும் குறித்த சில பரீட்சை நிலையங்களில் பரீட்சை எழுதிய மாணவர்கள் முறைப்பாடு தெரிவித்துள்ளனர். 
 
இது தொடர்பில் நேற்று(23) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது பரீட்சைகள் ஆணையாளர் L.M.D. தர்மசேன இவ்வாறு தெரிவித்தார்... 
 
இது தொடர்பில் மூன்று மட்டங்களில் விசாரணைகளை நடத்துமாறு கௌரவ அமைச்சர் என்னிடம் அறிவுறுத்தி உள்ளார். 
 
வலயக்கல்வி காரியாலய மட்டத்தில் ஒன்றும் மாகாண கல்வி அமைச்சு மட்டத்தில் ஒன்றும் பரீட்சைத் திணைக்கள மட்டத்தில் ஒன்றும் நடத்தப்படவுள்ளது. 
 
விடைத்தாள்களை பொறுப்பேற்கும் மத்திய நிலையத்திற்கு சென்று குறிப்பிட்ட விடைத்தாள்களை மாத்திரம் வேறாக்கும்படி அறிவுறுத்தல் வழங்கியுள்ளேன். இதேவேளை இது தொடர்பான விசாரணைகளின் ஆரம்ப இடைக்கால அறிக்கையை அனுப்பி வைக்கும்படி வலயக்கல்வி காரியாலயங்களுக்கு கூறியுள்ளோம். 
 
நாளை அல்லது நாளை மறுதினம் எமது குழுவொன்று குறிப்பிட்ட பாடசாலைகளுக்குச் சென்று சம்பந்தப்பட்ட மாணவர்கள், பெற்றோர்களிடம் சாட்சியங்களை பெற்று இது தொடர்பான இறுதி அறிக்கை தயாரித்து பெறுபேறுகள் வெளியிடுவதற்கு முன்னர் மாணவர்கள் பக்கத்தில் எடுக்கவேண்டிய தீர்மானங்களை நாம் எடுப்போம். 
 
தாய் தந்தையருக்கு சொல்கிறோம் நீங்கள் இந்த விடயங்கள் தொடர்பில் பிள்ளைகளிடம் அடிக்கடி கதைத்து கவலைகளை உண்டாக்காமல் அவர்களை சந்தோஷமாக இருக்க விடுங்கள். இந்த விடயத்தை எம்மிடம் பொறுப்பு தாருங்கள் நாம் அதை சரியாக செய்கிறோம். 
 
குறிப்பாக செயலாளர் என்னிடம் கூறினார்... இதன்பிறகு வினாப்பத்திரங்கள் வழங்கப்படும் பொழுது அதை வீடியோ எடுப்பதற்கு ஏற்பாடுகள் செய்ய வேண்டுமென கூறினார் என்று பரீட்சைகள் ஆணையாளர் தெரிவித்தார்.
புலமைப்பரிசில் பரீட்சையில் நடைபெற்ற குளறுபடிகள்! மூன்று மட்டங்களில் விசாரணை!! புலமைப்பரிசில் பரீட்சையில் நடைபெற்ற குளறுபடிகள்! மூன்று மட்டங்களில் விசாரணை!! Reviewed by Irumbu Thirai News on January 24, 2022 Rating: 5

பரீட்சை சான்றிதழ்களை வழங்கும் ஒருநாள் சேவை இடைநிறுத்தம்!

January 22, 2022

பரீட்சை சான்றிதழ்களை ஒரு நாள் சேவை மூலம் வழங்கும் நடவடிக்கை எதிர்வரும் திங்கட்கிழமை(24) முதல் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. 
 
பிப்ரவரி மாதம் ஆரம்பமாகும் உயர்தரப் பரீட்சைக்காக அதிகளவு பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட உள்ள காரணத்தினாலேயே இது தற்காலிகமாக இடைநிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
எவ்வாறாயினும் சான்றிதழ்களை பெறுவதற்காக இணையத்தின் மூலமாக அல்லது மின்னஞ்சல் மூலமாக விண்ணப்பிக்கலாம். அவ்வாறு விண்ணப்பித்தவர்களுக்கு உரிய சான்றிதழ்கள் வெளிவிவகார அமைச்சுக்கோ அல்லது விண்ணப்பதாரியின் தனிப்பட்ட முகவரிக்கோ விரைவு தபால் மூலம் அனுப்பி வைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பரீட்சை சான்றிதழ்களை வழங்கும் ஒருநாள் சேவை இடைநிறுத்தம்! பரீட்சை சான்றிதழ்களை வழங்கும் ஒருநாள் சேவை இடைநிறுத்தம்! Reviewed by Irumbu Thirai News on January 22, 2022 Rating: 5

கொரோனா தொற்றுக்குள்ளானவர்களுக்காக அமைக்கப்பட்ட பரீட்சை நிலையங்கள்..

January 20, 2022

நாளை மறுதினம் நடைபெறும் புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான விவரங்களை பரீட்சைகள் ஆணையாளர் L.M.D. தர்மசேன தெரிவித்துள்ளார். 
 
வழமைக்கு மாற்றமாக ஞாயிற்றுக்கிழமை அல்லாமல் சனிக்கிழமை இம்முறை பரீட்சை நடைபெறுகிறது. 
 
முதலாவது வினாப்பத்திரம் காலை 9:30 மணியிலிருந்து 10:30 வரை நடைபெறும். இரண்டாவது வினாப்பத்திரம் காலை 11 மணியிலிருந்து 12:15 மணி வரை நடைபெறும். 
 
இம்முறை 2943 பரீட்சை நிலையங்களில் மொத்தம் 340,508 பரீட்சார்த்திகள் பரிட்சைக்கு தோற்றுகின்றனர். 
 
மேலும் கொரோனா தொற்றுக்குள்ளான மாணவர்களுக்காக 108 பிரத்தியேக பரீட்சை நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளன என அவர் தெரிவித்தார்.
கொரோனா தொற்றுக்குள்ளானவர்களுக்காக அமைக்கப்பட்ட பரீட்சை நிலையங்கள்.. கொரோனா தொற்றுக்குள்ளானவர்களுக்காக அமைக்கப்பட்ட பரீட்சை நிலையங்கள்.. Reviewed by Irumbu Thirai News on January 20, 2022 Rating: 5

புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களின் பெற்றோர்களுக்கு பரீட்சை ஆணையாளரின் அறிவுறுத்தல்கள்

January 20, 2022

நாளை மறுதினம்(22) புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கும் அவர்களின் பெற்றோர்களுக்கும் முக்கியமான அறிவுறுத்தல்களை பரீட்சைகள் ஆணையாளர் L.M.D. தர்மசேன வழங்கியுள்ளார். 
 
இன்று கொழும்பில் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இந்த அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார். 
 
அவர் தெரிவித்ததாவது, 
 
பரீட்சை நெருங்கும் இந்த தருணத்தில் மாணவர்கள் மனதளவில் பாதிக்கப்படும் வகையிலோ அவர்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தும் வகையிலோ பெற்றோர்கள் நடந்து கொள்ளக்கூடாது. 
 
முக்கியமாக 190 க்கும் அதிகமான புள்ளிகளை பெற வேண்டுமென மாணவர்களுக்கு அழுத்தம் பிரயோகிக்க கூடாது. 
 
மேலும் பரீட்சை தினம் அன்று காலை வேளை அதிகமாக உண்ணக் கொடுக்க வேண்டாம். அவ்வாறு அதிகமாக உண்ணக் கொடுக்கும் பட்சத்தில் மாணவர்கள் உரிய முறையில் பரீட்சை எழுத முடியாமல் நித்திரை அல்லது வயிற்று வலி உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க நேரிடலாம். 
 
அதேவேளை தண்ணீர் போத்தல், அடிமட்டம், பென்சில், தொற்று நீக்கி திரவம் (Sanitizer) உள்ளிட்ட முக்கியமான பொருட்களை கட்டாயம் கொடுத்து அனுப்ப வேண்டும். அவ்வாறு செய்யாத பட்சத்தில் பரீட்சை மேற்பார்வையாளரிடம் கூறி வேறு மாணவர்களிடமிருந்து அந்தப் பொருட்களை பெறும் போது நேரம் வீணாவதோடு தேவையற்ற அசௌகரியங்களும் ஏற்படலாம். 
 
மேலும் சகலரும் உரிய சுகாதார விதிமுறைகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களின் பெற்றோர்களுக்கு பரீட்சை ஆணையாளரின் அறிவுறுத்தல்கள் புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களின் பெற்றோர்களுக்கு பரீட்சை ஆணையாளரின் அறிவுறுத்தல்கள் Reviewed by Irumbu Thirai News on January 20, 2022 Rating: 5
Powered by Blogger.