மத்திய மாகாண ஆசிரிய உதவியாளர் நியமனம் தொடர்பில் நிதியமைச்சின் அறிவிப்பு!
Irumbu Thirai News
February 09, 2022
மத்திய மாகாண ஆசிரிய உதவியாளர் நியமனம் தொடர்பாக நிதியமைச்சு மத்திய மாகாண பிரதம செயலாளருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.
அதாவது குறித்த நியமனம் தொடர்பில் பிறகு அவதானம் செலுத்துமாறு அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே இதன் காரணமாக குறித்த நியமனம் மேலும் தாமதமாகும் நிலைமை காணப்படுகிறது.
இது தொடர்பில் மத்திய மாகாண பிரதம செயலாளர் காமினி ராஜரத்ன தெரிவிக்கையில்,
ஆசிரிய உதவியாளர்களுக்கான நியமனம் வழங்குவதில் சிக்கல் இல்லை என்றபோதும் நிதியமைச்சின் குறித்த அறிவித்ததால் நியமனத்தை வழங்க முடியாத நிலை காணப்படுவதாக அவர் தெரிவித்தார்.
இது தொடர்பில் மத்திய மாகாண ஆளுநர் லலித் யூ கமகே தெரிவிக்கையில்,
அரச சேவைக்கு இந்த வருடம் புதிய ஆட்சேர்ப்பு மேற்கொள்ளப்படமாட்டாது என சுற்றுநிறுபம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. எனவே இதை மீறி நியமனம் வழங்க முடியாத நிலை காணப்படுகிறது என தெரிவித்தார்.
மத்திய மாகாண ஆசிரிய உதவியாளர் நியமனம் தொடர்பில் நிதியமைச்சின் அறிவிப்பு!
Reviewed by Irumbu Thirai News
on
February 09, 2022
Rating: