கொரோனா வைரஸின் ஆயுட்காலம் தொடர்பில் வெளியான ஆய்வு!

February 10, 2022

கொரோனா வைரஸ் ஆரம்பமானதிலிருந்து அதன் ஒவ்வொரு பிரிவுகள் மற்றும் அதன் தன்மைகள் ஆயுட்காலம் போன்ற பல விடயங்கள் பல்வேறு மட்டங்களில் ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன. 
 
எனவே அந்த வகையில் அண்மையில் வெளியான ஆய்வு ஒன்று தொடர்பாக சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார். 
 
அதாவது கொரோனா பாதிப்புக்குள்ளான ஒருவரின் உடலில் 05 நாட்களுக்கு மட்டுமே வைரஸ் தொழிற்பாட்டில் இருக்கும் என இது தொடர்பாக அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் முடிவு தெரிவிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸின் ஆயுட்காலம் தொடர்பில் வெளியான ஆய்வு! கொரோனா வைரஸின் ஆயுட்காலம் தொடர்பில் வெளியான ஆய்வு! Reviewed by Irumbu Thirai News on February 10, 2022 Rating: 5

Vacancies (Sabaragamuwa University of Sri Lanka)

February 10, 2022

Vacancies (Sabaragamuwa University of Sri Lanka) 
 
Posts
Systems Engineer 
Senior Lecturer 
Temporary Assistant Lecturer 
Career Guidance Counselor 
 
Closing date: 02-03-2022.

 Source: Sunday Observer.
 
Vacancies (Sabaragamuwa University of Sri Lanka) Vacancies (Sabaragamuwa University of Sri Lanka) Reviewed by Irumbu Thirai News on February 10, 2022 Rating: 5

Chinese Language Courses (University of Colombo)

February 10, 2022

University of Colombo. 
Faculty of Arts. 
Confucius Institute. 
 
Applications are called for Chinese language courses. 
 
Courses
Chinese language for beginners. 
Elemantry Chinese language. 
Intermediate Chinese language - 1 
Intermediate Chinese language - 11 
Advanced Chinese language - 1 
Spoken Chinese language for beginners. 
Intermediate Chinese language. 
 
Medium: English. 
 
Period: 60 Hrs. 
 
Course fee: 20,000/- 
 
Mode: Online 
 
Closing date: 21-02-2022.

 
Chinese Language Courses (University of Colombo) Chinese Language Courses (University of Colombo) Reviewed by Irumbu Thirai News on February 10, 2022 Rating: 5

பரீட்சை திணைக்களத்தால் 2022 மார்ச் மாதம் நடத்தப்படும் பரீட்சைகள் (மும்மொழிகளிலும்)

February 09, 2022

பரீட்சை திணைக்களத்தால் 2022 மார்ச் மாதம் நடத்தப்படும் பரீட்சைகளுக்கான நாட்காட்டியை பரீட்சைத் திணைக்களம் வெளியிட்டுள்ளது. 
 
அரச கரும மொழித் தேர்ச்சி எழுத்துப் பரீட்சை உட்பட 08 வகையான பரீட்சைகள் மார்ச் மாதத்தில் நடாத்த திட்டமிடப்பட்டுள்ளன. 
 
குறித்த நாட்காட்டியை மும்மொழிகளிலும் இங்கே காணலாம். 

பரீட்சை திணைக்களத்தால் 2022 மார்ச் மாதம் நடத்தப்படும் பரீட்சைகள் (மும்மொழிகளிலும்) பரீட்சை திணைக்களத்தால் 2022 மார்ச் மாதம் நடத்தப்படும் பரீட்சைகள் (மும்மொழிகளிலும்) Reviewed by Irumbu Thirai News on February 09, 2022 Rating: 5

மத்திய மாகாண ஆசிரிய உதவியாளர் நியமனம் தொடர்பில் நிதியமைச்சின் அறிவிப்பு!

February 09, 2022
மத்திய மாகாண ஆசிரிய உதவியாளர் நியமனம் தொடர்பாக நிதியமைச்சு மத்திய மாகாண பிரதம செயலாளருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. 
 
அதாவது குறித்த நியமனம் தொடர்பில் பிறகு அவதானம் செலுத்துமாறு அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. 
 
எனவே இதன் காரணமாக குறித்த நியமனம் மேலும் தாமதமாகும் நிலைமை காணப்படுகிறது. 
 
இது தொடர்பில் மத்திய மாகாண பிரதம செயலாளர் காமினி ராஜரத்ன தெரிவிக்கையில், 
 
ஆசிரிய உதவியாளர்களுக்கான நியமனம் வழங்குவதில் சிக்கல் இல்லை என்றபோதும் நிதியமைச்சின் குறித்த அறிவித்ததால் நியமனத்தை வழங்க முடியாத நிலை காணப்படுவதாக அவர் தெரிவித்தார். 
 
இது தொடர்பில் மத்திய மாகாண ஆளுநர் லலித் யூ கமகே தெரிவிக்கையில், 
 
அரச சேவைக்கு இந்த வருடம் புதிய ஆட்சேர்ப்பு மேற்கொள்ளப்படமாட்டாது என சுற்றுநிறுபம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. எனவே இதை மீறி நியமனம் வழங்க முடியாத நிலை காணப்படுகிறது என தெரிவித்தார்.
மத்திய மாகாண ஆசிரிய உதவியாளர் நியமனம் தொடர்பில் நிதியமைச்சின் அறிவிப்பு! மத்திய மாகாண ஆசிரிய உதவியாளர் நியமனம் தொடர்பில் நிதியமைச்சின் அறிவிப்பு! Reviewed by Irumbu Thirai News on February 09, 2022 Rating: 5

அம்பானியை பின்தள்ளி ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரரான நபர்!

February 09, 2022

ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரராக இதுவரை இருந்துவந்த இந்தியாவைச் சேர்ந்த முகேஷ் அம்பானியை பின்தள்ளி அதே நாட்டைச் சேர்ந்த கௌதம் அதானி என்பவர்  அந்த இடத்திற்கு முன்னேறியுள்ளார். 
 

Bloomberg தரப்படுத்தலில் அடிப்படையில் ஆசியாவின் பணக்காரர்கள் பட்டியலில் கவுதம் அதானி முதல் இடத்தை பிடித்துள்ளார். இவரது சொத்து மதிப்பு 88.5 பில்லியன் அமெரிக்க டொலர்களாக கணக்கிடப்பட்டுள்ளது.

 

இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்ட ரிலையன்ஸ் நிறுவன தலைவர் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 87.9 பில்லியன் டொலர்களாகும்.

 

துறைமுகம், பசுமை எரிசக்தி, சுரங்கம் உட்பட பல வர்த்தக குழுமங்களை வைத்துள்ள அதானி, கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்திலும் முதலீடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

அம்பானியை பின்தள்ளி ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரரான நபர்! அம்பானியை பின்தள்ளி ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரரான நபர்! Reviewed by Irumbu Thirai News on February 09, 2022 Rating: 5

மின்னல் படைத்த உலக சாதனை!

February 08, 2022

மின்னலின் நீளம் மற்றும் அதன் கால அளவுகளை கண்டறிய பயன்படுத்தப்படும் தொழில்நுட்பமானது அண்மைய ஆண்டுகளில் வியத்தகு முறையில் முன்னேற்றம் கண்டுள்ளதாக ஐ.நா. வானிலை மற்றும் காலநிலை அதிகாரி ராண்டால் செர்வனி தெரிவித்துள்ளார். 
 
அந்தவகையில் கடந்த 2020ஆம் வருடம் ஏப்ரல் மாதம் 29ஆம் திகதி அமெரிக்காவின் தெற்கு பகுதியில் வெளிப்பட்ட மின்னலானது புதிய உலக சாதனை படைத்திருப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் உலக வானிலை அமைப்பு தெரிவித்துள்ளது. 
 
அதாவது இந்த மின்னலானது இங்கிலாந்தின் லண்டன் நகரிலிருந்து ஜெர்மனியின் ஹாம்பர்க் நகரம் வரையான தூரத்திற்கு சமமானது என அளவிடப்பட்டுள்ளது. அதாவது 770 கிலோ மீட்டர் தூரம் வரை இது வானில் தெரிந்துள்ளது. 
 
இந்த நீளமானது 2018-10-31 அன்று பிரேசிலில் பதிவான மின்னலின் தூரத்தை விட 60 கிலோமீட்டர் அதிகமானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின்னல் படைத்த உலக சாதனை! மின்னல் படைத்த உலக சாதனை! Reviewed by Irumbu Thirai News on February 08, 2022 Rating: 5

சா. தர பரீட்சை விண்ணப்பம் தொடர்பான அறிவித்தல்!

February 08, 2022

2021 ம் வருடத்திற்குரிய சா. தர பரீட்சைக்காக விண்ணப்பிக்க கூடிய காலப்பகுதி மேலும் நீடிக்கப்பட்டுள்ளது. 
 
விண்ணப்பதாரர்களின் நலன் கருதி இம்மாதம் 17ஆம் திகதி வரை விண்ணப்ப காலம் நீடிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
சா. தர பரீட்சை விண்ணப்பம் தொடர்பான அறிவித்தல்! சா. தர பரீட்சை விண்ணப்பம் தொடர்பான அறிவித்தல்! Reviewed by Irumbu Thirai News on February 08, 2022 Rating: 5

Master of Business Administration - MBA (Rajarata University of Sri Lanka)

February 08, 2022

Rajarata university of Sri Lanka. 
Faculty of Management Studies 
Course: Master of Business Administration 
Medium: English.
Lectures: Sundays only.
Closing date: 18-03-2022.

 Source: Sunday Observer.
Master of Business Administration - MBA (Rajarata University of Sri Lanka) Master of Business Administration - MBA (Rajarata University of Sri Lanka) Reviewed by Irumbu Thirai News on February 08, 2022 Rating: 5

Postgraduate Diploma in Japanese Language (University of Kelaniya)

February 08, 2022

University of Kelaniya. 
Faculty of graduate studies. 
Postgraduate diploma in Japanese language - 2022 
 
Medium: Japanese. 
 
Fee: 100,000/- 
 
Duration: 15 Months. 
 
Application Issuing Period: 07/2/2022 - 25/2/2022. 
 
Closing date: 05-03-2022.


 Source: Sunday Observer
Postgraduate Diploma in Japanese Language (University of Kelaniya) Postgraduate Diploma in Japanese Language (University of Kelaniya) Reviewed by Irumbu Thirai News on February 08, 2022 Rating: 5

07.02.2022 அன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்ட தீர்மானங்கள்

February 08, 2022

07.02.2022 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது எடுக்கப்பட்ட தீர்மானங்களை இங்கு தருகிறோம். இதில், பல முக்கிய தீர்மானங்கள் அடங்கியுள்ளன. 
 
இதன் முழு வடிவத்தைப் பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க. 
 
முன்னைய அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்களைப் பார்வையிட...
07.02.2022 அன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்ட தீர்மானங்கள் 07.02.2022 அன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்ட தீர்மானங்கள் Reviewed by Irumbu Thirai News on February 08, 2022 Rating: 5

நோய் நிலைமை காணப்பட்டால் உரிய பரீட்சை நிலையத்துக்கு அனுப்ப வேண்டாம்!

February 08, 2022

இம்முறை உயர்தரப் பரீட்சை எழுதும் மாணவர்கள் யாருக்காவது நோய் நிலைமைகள் காணப்பட்டால் அவர்கள் அவர்களுக்கு உரித்தான பரீட்சை நிலையங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என பரீட்சைகள் ஆணையாளர் L.M.D. தர்மசேன தெரிவித்துள்ளார். 
 
இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில்,
 
தொற்றுறுதியானவர்களுடன் தொடர்புடையவர்கள் மற்றும் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் பரீட்சை நிலையங்களுக்கு செல்லலாம். ஆனால் தொற்றுறுதியானவர்கள் வைத்தியசாலையில் அமைக்கப்பட்டுள்ள விஷேட பரீட்சை நிலையத்திற்கே செல்ல வேண்டும் என அவர் தெரிவித்தார். 
 
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
நோய் நிலைமை காணப்பட்டால் உரிய பரீட்சை நிலையத்துக்கு அனுப்ப வேண்டாம்! நோய் நிலைமை காணப்பட்டால் உரிய பரீட்சை நிலையத்துக்கு அனுப்ப வேண்டாம்! Reviewed by Irumbu Thirai News on February 08, 2022 Rating: 5

அதிபர் நியமனம்! ஜனாதிபதியின் விஷேட உத்தரவு!!

February 08, 2022

தேசிய பாடசாலைகளுக்கான அதிபர்களை நியமிக்கும் விடயம் தொடர்பாக ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஸ விஷேட உத்தரவை பிறப்பித்துள்ளார். 
 
இந்த நியமனம் தொடர்பில் விண்ணப்பதாரரிடமிருந்து அழுத்தங்கள் ஏதாவது வந்துள்ளதா என ஆராய்ந்து பார்க்குமாறு கல்வியமைச்சின் செயலாளருக்கு உத்தரவிட்டுள்ளார். 
 
அதாவது அதிபர் நியமனம் தொடர்பாக நடாத்தப்படும் நேர்முகப்பரீட்சை அல்லது அதன் பின்னரான வேறு ஏதாவது தேர்வுகள் தொடர்பாக பொதுச்சேவைகள் ஆணைக்குழுவிற்கோ அல்லது கல்விச்சேவை ஆணைக்குழுவிற்கோ அழுத்தங்கள் ஏதாவது பிரயோகிக்கப்பட்டுள்ளதா என ஆராய்ந்து பார்க்க ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
அதிபர் நியமனம்! ஜனாதிபதியின் விஷேட உத்தரவு!! அதிபர் நியமனம்! ஜனாதிபதியின் விஷேட உத்தரவு!! Reviewed by Irumbu Thirai News on February 08, 2022 Rating: 5
Powered by Blogger.