தவணை பரீட்சைகளை நடத்துவது தொடர்பில் கல்வி அமைச்சின் அறிவிப்பு
Irumbu Thirai News
March 20, 2022
காகிதம் மற்றும் ஏனைய மூலப் பொருட்களுக்கு நாட்டில் நிலவும் தட்டுப்பாடு காரணமாக பாடசாலைகளில் தவணை பரீட்சைகளை நடத்த முடியாத சூழ்நிலை காணப்படுவதாக வெளியான தகவல்கள் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டதாக கல்வியமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.
வடமத்திய, வடமேல், சப்ரகமுவ, ஊவா, கிழக்கு மாகாணங்களில் அவ்வாறான பற்றாக்குறையான நிலை இல்லை என மாகாண கல்விப் பணிப்பாளர்கள் தமக்கு அறிவித்ததாக கல்வியமைச்சின் செயலாளர் குறிப்பிட்டார்.
இதேவேளை காகிதங்களை கொள்வனவு செய்வதில் ஏதாவது பிரச்சினைகள் ஏற்படும் சந்தர்ப்பத்தில் இந்திய கடன் வசதியின் கீழ் குறித்த பிரச்சினையை தீர்ப்பதற்கு ஜனாதிபதி செயலாளர் காமினி செனரத் இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
எனவே இம்முறை பாடசாலைகளில் நடத்த திட்டமிடப்பட்டுள்ள தவணைப் பரீட்சைகளில் பிற்போட அவசியமில்லை என கல்வியமைச்சின் செயலாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
தவணை பரீட்சைகளை நடத்துவது தொடர்பில் கல்வி அமைச்சின் அறிவிப்பு
Reviewed by Irumbu Thirai News
on
March 20, 2022
Rating: